Sunday, February 21, 2010
உண்மையின் விலை
Wednesday, February 10, 2010
ஹி ஹி ஹி கிரிக்கெட்
- பிடித்த கிரிக்கெட் வீரர்

சூப்பராப் பிடிச்சுட்டாரே
- பிடிக்காத கிரிக்கெட் வீரர்

சரியாப் பிடிக்கவே தெரியல இவருக்கு
- பிடித்த பந்துவீச்சாளர்

எம்மாம்பெரிய பந்துப்பா
- பிடிக்காத பந்துவீச்சாளர்

பாத்து, பாத்து, கவனம்
- பிடித்த துடுப்பாட்டவீரர்

என்னா அடி, என்னா அடி
- பிடிக்காத துடுப்பாட்டவீரர்

பேட்டைக்கூடச் சரியாப் பிடிக்கத் தெரியல இவருக்கு
- பிடித்த களத்தடுப்பாளர்

வாவ், சூப்பர்ப்பிடி
- பிடிக்காத களத்தடுப்பாளர்

பிடிக்கலயே
- சிறந்த ALL-Rounder


வாவ்
- பிடித்த நடுவர்

பிடிச்சுட்டாருப்பா
- பிடிக்காத நடுவர்

பின்னாடி பிடிக்கலயே
- பிடித்த அணித்தலைவர்

தலலலல
- பிடிக்காத அணித்தலைவர்

வட போச்சே
- சிறந்த opener

என்னாமா திறக்கறாரு
- சிறந்த TEST வீரர்

TEST எழுதுறாரப்பா
- கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்


இவருக்குத்தான் ஊண், உறக்கம் எல்லாமே கிரிக்கெட்
இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது
யோ, நில்லுங்கப்பா ஓடாதீங்க.
Saturday, February 6, 2010
அசல் திரைவிமர்சனம்
ஒரு இணை இயக்குனராக அஜித் அவதாரம் எடுத்திருக்கும் படம் அசல். தகப்பனாக வரும் அஜித்தின் இரண்டாவது தாரத்துக்குப் பிறந்தவர் ஹீரோ அஜித். தனது சொத்துக்களை அசல் வாரிசுகளுக்கு எழுதிவைக்காமல், அஜித்துக்கு எழுதிவைத்துவிட்டு தந்தை இறந்துவிட, தந்தையின் தோற்றத்தில் இருக்கும் அஜித்மீது ஏற்கனவே பொறாமையில் இருக்கும் அவரது தம்பிமாரால் வரும் பிரச்சினைகளைகளையும் அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதும்தான் கதை. ஆனால் அதையே கொஞ்சம் சுவாரசியத்தோடு சொல்வதில் வெற்றிபெற்றிருக்கிறார் சரண்.
அஜித், படம் முழுக்கவே அசத்துகிறார். அவரது பாடி லேங்க்விஜும், சிகார் பிடிக்கும் ஸ்டைலும், ஸ்டைலான நடையுமாகக் கலக்குகிறார். அவரது உடலுக்குப் பொருத்தமான காஸ்ட்யூம் மறைக்கவேண்டியவற்றை மறைத்து, அஜித்தை இன்னும் எடுப்பாகக் காட்டுகிறது. நடனம் வழமையான அஜித் பாணி. அவ்வளவாக ஆடாவிட்டாலும், அதுவும் வேண்டாமோ என்று தோன்றியது. சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகமும், கம்பீரமுமாக படம முழுவதையுமே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
பாவனா, இந்தப்படத்தோடு அப்படியே மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டார். அனியாயத்துக்கு அழகாக இருக்கிறார். அழகாக வெட்கப்படுகிறார், அவ்வப்போது கவர்ச்சி காட்டுகிறார், சூப்பராகச் சிரிக்கிறார், அப்படியே கடைசியில் அஜித்தைக் கைப்பிடித்தும் விடுகிறார். கலக்கலான ஒரு இன்னசன்ட் கதாபாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார் இவர்.
சமீரா ரெட்டி. அளவான ஆடைகளோடு அஜித்தை உரசிக்கொண்டே திரிந்தாலும் ஏனோ அவ்வளவாகக் கவரவில்லை. ஒட்டுமொத்த இடத்தையும் பாவனாவே எடுத்துக்கொண்டுவிட்டார். சமீரா, ஐ ஆம் சாரி.
யூகிசேது, சிரிக்கவைத்தாலும், சீரியசான நேரங்களில் கடுப்பைக் கிளப்புகிறார். இடைவேளைக்குப் பிறகு எற்படும் தொய்வுக்கு இவரது பாத்திரமும் காரணமாக இருக்கலாம். குறைத்திருக்கலாம், அல்லது தவிர்த்திருக்கலாம்.
பிரபு நட்புக்காக வந்திருப்பதாலோ என்னவோ இறுதியில் நண்பருக்காகக் கொஞ்சம் அடிவாங்கிவிட்டுப் போகிறார். அவ்வளவுதான். வேறு சொல்லும்படியாக எதுவும் செய்துவிடவில்லை.
படத்தின் ஒளிப்பதிவு அசத்துகிறது. மலேசியாவையும், பிரான்சையும் அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதிலும் ஆரம்பக்காட்சி படு அசத்தல். வேகமான சண்டைக்காட்சிகளும் கச்சிதமாகவே படமாக்கப்பட்டிருக்கின்றன.
இசை பரத்வாஜாமே? டைட்டிலில் மட்டும் தெரிந்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பாடல்களில் துஸ்யந்தா கலக்கல். இப்போது ‘டொட்டடொய்ங்’ம் பிடிக்கிறது – பாவனாவுக்காக.
கிளைமார்க்ஸ் காட்சி அக்மார்க் தமிழ்ப்படம். பலதடவை பார்த்தமாதிரி இருக்கிறது. இறுதியில் வந்த சண்டைக்காட்சிகூட முன்னயவற்றை விட சுமார். ஏனோவென்று முடிந்துவிடுகிறது.
மொத்த்ததில் அசல் – அஜித் – அசத்தல்.