Saturday, March 27, 2010

நல்லாப் போடுறாங்கப்பா பின்னூட்டம்

27 comments

 

 

DISC

 

A said…

மீ த பஸ்ட்டு

B said…

நான்தான் முதலாவதா?

B said…

வட போச்சே :(

C said…

அட, பதிவு போட்டாச்சா? இருங்க படிச்சுட்டு வந்துடறேன்

D said…

ரசித்தேன் :)

C said…

கலக்கல் பதிவு சுபாங்கன்

E said…

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது

F said…

இண்டைக்கு கொஞ்சம் பிசி. நாளைக்கு வந்து படிக்கிறேன்

G said…

எனது வரவைப் பதிவுசெய்கிறேன்

H said…

:))))

I said…

:)))))))))))

J said…

:))))))))))))))))))))))

K said…

//J said…

:))))))))))))))))))))))//

றிப்பீட்டு

L said…

உங்கள் பதிவிலுள்ள எலுத்துப் பிலைகலைத் திருத்திக்கொள்ளவும்

M said…

உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி

N said…

ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை..

O said…

தமிழ்ப் பதிவர்களுக்கான புதிய திரட்டி சிங்களம்3125. இப்போது ஓட்டுப்பட்டை வசதியுடன். எமது திரட்டியில் இணைத்து உங்கள் ட்றாபிக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

P said…

சூப்பரு

Q said…

அடங்கமாட்டீங்களா?

R said…

நல்ல பதிவு. எனது இந்தப்பதிவையும் படித்துப்பாருங்கள்

http://nondi.blogspot.com/2010/03/blog-post_22.html

S said…

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?

T said…

தகவலுக்கு நன்றி

U said…

ப்ளாக்க கண்டுபிடிச்சவன் தூக்கு போட்டுக்க போறான்.
என்ன எழுதுறது ஏது எழுதுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு.

V said…

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நான் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

W said…

கலக்கல்

X said…

oem car audio ford taurus [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html]beststuff fuel car dvd ipod vacation[/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html car audio systems integrated ford falcon
auto audio capasiters [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] muscle car dvd drag racing http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html d mercedes benz reviews auto extended warranty car audio and
beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html]car audio subwoofers auto cheap insurance[/url] beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html beststuff fuel car dvd ipod vacation

Y said…

கங்கோன், மேலேயுள்ள பின்னூட்டத்தை தமிழில் மொழிபெயர்க்க முடியுமா?

Kangon||கங்கோன் said…

மூல_உபகரண_உற்பத்தியாளர்_மகிழூந்து ஒலி ford ரிஷபம் [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html] சிறந்தபொருட்கள் எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை [/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html மகிழூந்து ஒலி அமைப்புக்கள் முழுமையாக்கப்பட்ட ford வல்லூறு
தானியங்கி ஒலி கொள்ளவிகள் [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] தசை மகிழூந்து டிவிடி இழு வாகன ஓட்டம் http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html மெர்சிற்றிஸ் பென்ஸ் மதிப்பாய்வு தானிங்கி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மகிழூந்து ஒலி மற்றும் சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html] மகிழூந்து ஒலி கப் வூபர்ஸ் தானியங்கி மலிவான காப்புறுதி [/url] சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை

Y said…

அட அட அட, நன்றி கங்கோன்

Z said…

எங்கியோ.....போயிட்டீங்க...

 

அடப்போங்கப்பா, இங்கிலீசில இதுக்குமேல எழுத்துக்களே இல்லை.

Monday, March 22, 2010

ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ

27 comments

24820_376509536085_564766085_4313635_4976919_n

ஹலோ, நான் சுபாங்கன் பேசறேன். பதிவர் பவன் கொழும்புக்கு வந்திருக்கிறார். நாளைக்கு 5 மணிக்கு கோல்ஃபேசில சந்திக்கலாமா?
எந்த பவன்?
எரியாத சுவடிகள் பவன்.
தெரியலயே
திருகோணமலையில இருந்து எழுதுவார்
ம்ஹூம்
ஃபோட்டோ காமன்ட்ஸ் பவன்
ஓ அவரா, சரி நான் வந்துடறேன்

****************************

வேறு ஒரு விடயமாக மது அண்ணாவிற்கு அழைப்பெடுத்தபோது பவன் வந்திருப்பதையும் தெரிவித்தேன். உடனே  அவர் கேட்ட கேள்வி பவனுடன் சந்திப்பு வைக்கலாமா? மெரினா பீச்சில் சந்திக்கும் இந்தியப்பதிவர்களின் பாதிப்பால் நான் கேட்டது அப்ப கோல்ஃபேசில சந்திக்கலாமா?

****************************

பதிவர் சந்திப்புகளில் பதிவர்களிடம் வாங்கிவைத்திருந்த சில தொலைபேசி இலக்கங்கள் தொலைபேசியில் எனது அதிமேதாவித்தனத்தைக் காண்பிக்க முயன்றபோது தொலைந்திருந்தன. ஆதிரை அண்ணா, மது அண்ணா, மற்றும் கோபியின் உதவியுடனேயே பலரது இலக்கங்களைப் பெற்று அழைக்க முடிந்தது. இலக்கம் கிடைத்த சிலரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறான சிக்கல்களைத் தவிர்க்க இனிமேல் இவ்வாறான குட்டிச் சத்திப்புகளையும் குழுமத்தினூடேயே அறிவிப்பது என நேற்றே யோசனை தெரிவிக்கப்பட்டது.

****************************

கடலின் இரைச்சலும், சனக்கூட்டமும் சிறிது அதிகமாகவே இருந்தாலும், சந்திப்பு கலகலப்பாகவே இருந்தது. இவ்வாறான பொது இடங்களில் வழமையான பாணியிலான பதிவர் சந்திப்புகளை நடத்தமுடியாவிட்டாலும் கூட, இப்படியான நட்புரீதியான சந்திப்புகளுக்கு பொது இடங்கள் பொருத்தமானவை என்றே நினைக்கின்றேன். காரணம், இப்படியான இடங்களில்தான் ஏழு மணிக்குப் பின்னரும்கூட பேசிக்கொண்டிருக்கலாமே!

****************************

நேற்றய பதிவின் நாயகன் பதிவர் புல்லட்தான். வந்தவுடனேயே எறிபோலுக்கு என்ன இங்கிலீஸ் எண்டு தொடங்கி, அதற்கு விடையையும் சொல்லிக் கலகலப்பாக்கினார். பபிள்கம்மை மிதித்து நடனமாடினார். கோவேறு கழுதையைப்பார்த்து கலவரமானார். இறுதியில் நாங்கள் தொடக்கிய ஒரு தலைப்பைப்பற்றிப் பேசப்பேச அவர் முகத்தில் ஆயிரம் வால்ட் பிரகாசம்.

****************************

இலங்கைப் பதிவுலக சூறாவளி வரோ தனது பதிவில் சந்திப்பு பற்றி ஏறக்குறைய அத்தனையையுமே எழுதி முடித்துவிட்டதால் இங்கே போய் ஏனய விடயங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

****************************

நாங்கள் அடிக்கடி நடாத்தும் கும்மிகளில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு சந்திப்பாகத்தான் இருந்தது. பேசிய விடயங்களும் அப்படித்தான். சோ, ப்ளீஸ், சீரியசா எடுக்காதைங்கோ.

Wednesday, March 17, 2010

மன்னிப்பாயா…

39 comments
 
Vinnai11
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மன்னிப்பாயா – இந்தப் பாடலை இதுவரை எத்தனைதடவை கேட்டிருப்பேன் என்பதற்கு என்னிடம் பதிலே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம், பாடல் முடிந்ததும் திரும்பவும் கேட்கவேண்டும் போன்ற எண்ணம், காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசை எல்லாமுமாகச் சேர்ந்து என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறது.

ஸ்ரேயா ஹோஷலின் காந்தக்குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து, தொடரும் புல்லாங்குழல் இசையில் என்னை முழுவதுமாக பாடலினுள்ளேயே இழுத்துப்போட்டுவிடுகிறது. அதன்பின் மொத்தப்பாடலுமே அமைதியான ஒரு ஆற்றின் ஓட்டம். நடுவில் உறுத்தாமல் வந்துபோகும் திருக்குறள் வரிகள் பாடலின் ஹைலைட்.
 thr
பாடல் படமாக்கப்பட்ட விதம்கூட மனதைத் தொட்டுவிடுகிறது. பௌர்னமி இரவில், கேரள ஆற்றில் அமைதியாக நகரும் படகிலிருத்தவாறே பாடிக்கொண்டு நகரும் காட்சிகள் மனதைவிட்டு நகரமறுக்கின்றன. ஆனாலும் இவற்றையெல்லாம் விட என்னைக் கவர்ந்திழுப்பது கவிதாயினி தாமரையின் வரிகள்தான். படத்தின் ஒட்டுமொத்தக் கருவையும், காதலையும் ஒரே பாடலுக்குள் புகுத்தியிருக்கிறார் அவர்.

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

காதலியைப்பிரிந்த சோகம், அதில் ஒரு சுகம். காதுகளைக்கடந்து ஊடுருவுகின்றன வரிகள், இசைப்புயலின் குரலில். இந்தவரி இப்படி என்றால் அடுத்த வரியோ
 
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

காதலின் ஈர்ப்புக்கு, கும்மிருட்டில் தொலைவில் தெரியும் வெளிச்சத்தை நோக்கி எங்களை அறியாமலேயே செல்லும் இயல்பை ஒப்பிட்டிருப்பது, இதைவிட சிறப்பாக ஒப்பிடமுடியுமா என்ன?

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி

நேசத்தையும், பிரிவையும் ஒருங்கே சேமிக்கும் வரிகள். வரிகளே ஒரு கதையைச் சொல்லிவிடுகின்றன.

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

பாடலை முதன்முதலில் கேட்கும்போதே என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. காதலின் வலியின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் இல்லையா?

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

இந்த வரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? வாழ்க்கையின் கடந்தகாலங்களைக் கிளறிவிடுகிறதா? வரிகளே ஒரு கதை சொல்கிறதா? என்னிடமோ விபரிக்க வார்த்தைகளே இல்லை.

அமைதியாக ஒருமுறை கேட்டுப்பாருங்களேன்!

Friday, March 5, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

29 comments


காதலை தேடிக்கிட்டு போக முடியாது…
அது நிலைக்கணும்… அதுவா நடக்கணும்…
நம்மள போட்டு தாக்கணும்… தலைகீழ போட்டு திருப்பணும்…
எப்பவுமே கூடவே இருக்கணும்…
அதான் ட்ரூ லவ்…
அது எனக்கு நடந்தது!…
 81_thumbzoom
கேரள ஆற்றின் ஓட்டத்தோடு ஆரம்பிக்கும் படம், அதே அருவியின் ஓட்டத்தைப்போலான A. R. ரஹ்மானின் இசையின் பலத்தோடும் அழகான, யதார்த்தமான, எவரையும் உறுத்தாதவிதத்திலான கூடல், ஊடல் காட்சிகளினூடும் ஒரு மென்மையான காதலையும் சொல்லிவிட்டுப் போகிறது.

நீண்டநாட்களுக்குப்பிறகு சிறந்த ஒரு படத்தைப் பார்த்த திருப்தியும், படம் முடிந்தபிறகு எழுந்துசெல்ல மனமில்லாமல் அடுத்த காட்சியையும் இருந்து பார்த்துவிடலாமோ என்ற எண்ணமும் இந்தப்படத்துக்குத்தான் ஏற்பட்டது. எந்த சமரசமும் செய்துகொள்ளத் தேவையில்லாத காட்சிகளும், சிம்புவையும், த்ரிஷாவையும் தாண்டித் தெரியும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களும், இயல்பாக நகரும் கேமராவும் எந்த இடத்திலும் உறுத்தாமல் படத்தோடு எம்மையும் அழைத்துச் செல்கிறது.

கார்த்திக் அவசரப்பட்டுத் தன் காதலை ஜெஸ்ஸியிடம் சொல்லிவிடும் இடத்தின் யதார்த்தமாகட்டும், ஜெஸ்ஸி தனக்குள் இருக்கும் காதலை தன்னை அறியாமலேயே ரயில்ப் பயணத்தில் வெளிப்பட்டுத்தும் அழகாகட்டும், காதலையும், குடும்பத்தையும் வைத்துக்கொண்டு குழம்பும் யதார்த்தமாகட்டும், தனது ஒட்டுமொத்தக் காதலையும் கார்த்திக் தனது முகத்திலேயே காட்டிவிடுவதாகட்டும் என ஒவ்வொரு காட்சிகளும் எம் உணர்வுகளையும் சேர்த்தே தூக்கிக்கொண்டு நகர்கின்றன.
 60771063_10042009_8
இசைப்புயலின் இசையில் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட பாடல்கள் படமாக்கப்பட்ட விதத்தில் மனதில் முழுவதுமாக வியாபித்திருக்கின்றது. கூடவே காட்சிகளோடு ஒன்றிப்போகும் பின்னணி இசை இன்னமும் காதுகளில் இழையோடிக்கொண்டிருக்கின்றது.

படத்தின் கதையூடே இழையோடும் மென்மையான நகைச்சுவைகளும், காட்சிகளுக்கேற்ற சுருக்கமான வசனங்களுமாக படம் நகர்வது ரசிக்கவைக்கிறது. குறிப்பாக இந்த உலகத்தில எத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியினைக் காதலிக்க வேண்டும் என அடிக்கடி கார்த்திக் கேட்பதும் பின்னர் ஜெஸ்ஸி கார்திக்கிடம் அதே கேள்வியைக் கேட்பதும் அழகு.

படத்தில் அழகாகத் தெரியும் ஜெஸ்ஸியும், சிம்புவாகவே தெரியாத கார்த்திக்கும், அவர்களின் அலட்டலில்லாதத நடிப்பும், யதார்த்தமான காட்சிகளுமாக மென்மையான ஒரு காதலை எங்கள் இதயங்களில் இருத்திவிட்டுச் செல்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா.

விண்ணைத்தாண்டி வருவாயா – என்னைத் தாக்கிவிட்டது.

Monday, March 1, 2010

போலிகளின் புகலிடமாகும் யாழ்ப்பாணம்

15 comments

 

blog-jaffna-library-dsc_0053 

சென்ற வார இறுதியில் என் சொந்த ஊரான யாழ்ப்பாணம் சென்றுவரும் வாய்ப்புக் கிடைத்தது. யாழிற்கான A9 வீதியினூடான போக்குவரத்துகள் சீராக்கப்பட்டபின்னர் எனது முதலாவது பயணம் அது. அதன்போது அங்கே கேள்விப்பட சம்பவங்களாலான பதிவே இது.

 palmyrah_palm_trees

கடந்த பல வருடங்களாக அதிகரித்த விலைகளாலும், தட்டுப்பாடுகளாலும், தடைகளாலும் அவதிப்பட்டுவந்த யாழ் மக்கள் இப்போது மலிந்துள்ள பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள வியாபாரிகளும் தமது பார்வையை யாழ் நோக்கித் திருப்பியுள்ளர். இதெல்லாம் கொஞ்சம் பழைய கதைதான்.

 

கடந்த பல வருடங்களாகவே யாழ் வியாபாரிகளிடம் மட்டுமே யாழ் மக்கள் பழகி வந்துள்ளனர். யாழில் நிலவிய தட்டுப்பாட்டு நிலைமையால் அங்குள்ள வியாபாரிகளைச் சார்ந்திருக்கவேண்டிய நிலைமையே வாடிக்கையாளர்களுக்கு இருந்தது. சந்தையை வியாபாரிகளே ஆதிக்கம் செலுத்தும் தன்மை காணப்பட்டது. இப்போது புதிதாக அங்கு புறப்பட்டிருக்கும் தென்னிலங்கை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை அணுகும் விதமும், அவர்களது பேச்சும் அங்குள்ளவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம். இந்த அணுகுமுறையால் கவரப்படும் மக்களை இலகுவில் ஏமாற்றி பணத்தைக் கறந்துவிடுகின்றனர் இவர்கள். மேலும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பொருட்களும் யாழ் கடைகளில் தாராளமாகக் கிடக்கின்றன.

 61

இது தொடர்பாக அங்கே நான் கேள்விப்பட்ட மூன்று வெவ்வேறு விதமான அடிப்படையைக் கொண்ட உண்மைச் சம்பவங்களை உதாரணங்களாகத் தருகிறேன்.

 

  • இலங்கையின் பிரபல நிறுவனமொன்றின் பெயர்தாங்கிய பதாதையுடன் வாகனமொன்றில் வீடுவீடாக இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்தவாறு வந்த ஒரு குழுவினரின் பேச்சில் மயங்கி எனக்குத் தெரிந்த ஒருவர் வாங்கியது 10,000 /- பெறுமதியான, உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு ஃபிளென்டர். இரண்டாவதுநாளே அது பழுதடைந்துவிட, ஒரு வருட உத்தரவாதம் இருப்பதாகவும், ஏதாவது பிரச்சினையென்றால் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் கூறி ஒரு தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துவிட்டு சென்ற அவர்களுக்குத் தொடர்புகொண்டால் அந்த இலக்கம் அகராதியிலேயே கிடையாது என்று பதில் வந்தது.

 

  • இரண்டாவது சம்பவம் எனது அயலவர்களுக்கு நடந்தது. தம்மிடம் சிறந்த ஒட்டு இன மரக்கன்றுகள் இருப்பதாகவும், தம்மிடம் முற்பணம் செலுத்தினால் ஒரு வாரத்தினுள் மரக்கன்றுகளைக் கொண்டுவந்து தருவதாகக் கூறி, ஒரு கன்றுக்கு 200/- வரை பணம் பெற்றுக்கொண்டு சென்ற கூட்டத்தினர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் வரவே இல்லை.

 

  • மூன்றாவது சம்பவம் எனக்கே நடந்தது. யாழில் ஒரு கடையில் RED BULL வாங்கிக் குடித்தபோது அதனுள் இருந்தது வெறும் சீனி கரைத்தது போன்ற சுவையுடைய ஒரு திராவகம்.

 

பல சந்தைகளில் இது ஒன்றும் புதிதல்ல என்றபோதும், யாழில் பல நிறுவனங்களும் அறிமுக விலையாக குறைந்த விலைக்கு பொருட்களை சந்தைப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான போலிகளின் ஊடுருவலை இனம்காண்பதற்கு போதிய விழிப்புணர்வு அல்லது அனுபவம் இருந்தாலன்றி சாத்தியமில்லை.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy