Saturday, July 25, 2009

சிங்கம் கிளம்பிருச்சுடோய்!

26 comments

பதிவர் செந்தழல் ரவி ஆரம்பித்துவைத்த இந்த விருது எனக்கு நண்பர் வெங்கிராஜா மூலம் கிடைத்தது. இருவருக்குமே நன்றிகள். நானும் இதை ஆறு பேருக்குக் கொடுக்கணுமே, யோசிச்சுப்பாத்தா ஏறத்தாள எனக்குத்தெரிந்த எல்லாப் பதிவர்களும் இதைப் பெற்று, கொடுத்து என ஏறத்தாள முடித்துவிட்டனர். முடிந்தவரை பெறாதவர்களாகப் பார்த்துக் கொடுத்திருக்கிறேன். அவங்க..

‘டொன்’ லீ

‘டொன்’ லீ யின் பதுங்குகுழி?!!!. நான் பதிவெழுதத் தொடங்குமுன்னரே இவரது பதிவுகளைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். நம்ம ஊர்க்காரர் வேற. இவரது தளத்தின் பெயரே வித்தியாசமாக கவர்ந்திழுக்கும். இப்போது அடிக்கடி எழுதாவிட்டாலும் சிங்கம் சிங்கம்தானே?

கார்த்திக்

வானவில்வீதி எழுதிவருபவர். ஒத்த வயசுக்காரங்க இல்ல? பிடிக்காமப் போகுமா? அண்மையில்தான் அறிமுகமானாலும் அதன்பின் இவரது அனைத்துப் பதிவுகளையுமே படித்துவிடுகிறேன்.

கார்த்தி

விடிவெள்ளி என்ற இவரது தளத்தின் எழுத்துக்கள் அதிகமாக அவரது அனுபவங்களைத் தாங்கி இருந்தாலும் அதை சுவாரசியமாகத் தொகுத்துத் தருவதில் வல்லவர்.

வழிப்போக்கன்

வழிப்போக்கன் என்ற பெயரிலேயே தளத்தையும் வைத்திருக்கும் இவர் ஒரு க. பொ. த உயர்தர மாணவன். பரீட்சைச் சுமையால் அவ்வப்போதே எழுதிவந்தாலும் அதற்குள்ளும் எழுதும் இவரத் ஆர்வத்துக்கே இந்த சல்யூட்!.


எனக்கு பதிவுலகில் அறிமுகமான முதல் தோழி. கவிதைகள் எழுதுவதில் கில்லாடி. இவருக்கு ஏற்கனவே இருது கிடைத்துவிட்டாலும் அந்த நட்புக்காக இந்த விருது.

ஆறாவது விருது

இந்த விருது பெறுபவரைப்பற்றி நான் எதுவும் கூறப் போவதில்லை. இவர் யார் என்பதனை அறிய இங்கே கிளிக்கினால் இங்கேயேதான் இருப்பீர்கள் என்பதால்….

இந்த ஒன்றையாவது நானே வச்சுக்கிறேனே ப்ளீஸ்…

Friday, July 24, 2009

எனக்கேன் இந்த வேண்டாத வேலை?

17 comments
நம் இருவரின் உறவையும்
ஒற்றை வார்த்தைக்குள்
பொதுவாக்கப் பார்க்கிறேன் நான்,
போ.. என்று விரட்டுகிறாய் நீ!ஆறரை நிமிடத்திலேயே
வந்திடாதத சுனாமி - உன்
அரைநொடி கிரகணத்தால்
வந்தே விட்டது எனக்குள்!உன் பக்தியால்
தினம் எனக்கு
அம்மன் தரிசனம்
பிள்ளையார் கோவிலில்!உன்
ஒற்றை ரூபாய் பெறும்
பிச்சைக்காரனாய்
ஆகிவிடுகிறேன் நானும்.
எனக்காயும் நிற்பாயா
அரை நிமிடம்?
நீ
எவ்வளவு புறக்கணித்தும்
எதைத்தான் நான்
தேடிக்கொண்டிருக்கிறேன் உன்பின்னால்?
ஒருவேளை உன்னால் தொலைத்துவிட்ட
என் செமஸ்டரையா?

Tuesday, July 21, 2009

கன்னிச்சதமும், முன்னமே கிடைத்த பரிசும்!

36 comments

இன்று எனது நூறாவது பதிவு. கம்பஸ்சில் தேடித்தமிழ் பேசவேண்டும் என்றிருந்த எனது நிலமை தமிழ்த் தளங்களை அதிகம் தேடவைத்தது. அப்போது அறிமுகமானதுதான் லோஷன் அண்ணாவின் ப்ளாக். அவரது எழுத்துக்களும், அவரது தளம் மூலமாக எனக்கு அறிமுகமான ஏனய பதிவர்களின் எழுத்துக்களும் என்னையும் எழுதத்தூண்டியது.

எனது எழுத்துக்களும், நான் எழுதிய விதமும் ஆரம்பத்தில் ஒரு மாதிரித்தான் இருந்தது. அப்போதெல்லாம் எனக்கு ஆலோசனை கூறித் திருத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். அடுத்து சந்ரு அண்ணாவைப்பற்றிக் கூறியே ஆகவேண்டும். என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து பதிவுலகில் எனக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த இவர் அதே வேகத்தில் பட்டாம்பூச்சி விருதையும் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.  மேலும் என்னைத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும், பின்னூட்டமிட்டும், ஓட்டளித்தும் உற்சாகமூட்டும் அனைவருக்கும் நன்றிகள்.

சந்ரு அண்ணா நான் எனது நூறாவது பதிவை அண்மிக்கும்போது கொடுத்த படாம்பூச்சி விருதை வலையுலக தர்மப்படி மேலும் மூன்று பேருக்குக் கொடுத்தாக வேண்டும்.

  • 1.   சுபானு (ஊஞ்சல்) – அவ்வப்போது எழுதினாலும் அழகாக எழுதும் இவரது அனைத்துப் பதிவுகளுமே எனக்குப் பிடிக்கும்.
  • 2.   சுகுமார் சுவாமிநாதன் (வலைமனை) – இவர் போட்டோ காமென்ட்ஸ் போடும் பதிவுகள் அத்தனையும் அசத்தல்.
  • 3.   கலையரசன் (வடலூரான்) – இவரது வித்தியாசமான பதிவுகள் அனைத்துமே என்னைக் கவர்ந்தவை.

அவ்வளவுதான். வேறென்ன? நம்மகிட்ட இருந்த பந்தைப் பாஸ் பண்ணியாச்சு. அசத்துங்க!

Monday, July 20, 2009

Transformers 2

4 commentsபார்ட் 1 தந்த தைரியத்தில் பார்ட் 2 பார்க்கப்போனால் ஏன்டா வந்தாய் என்று செருப்பால் அடித்தமாதிரி இருந்தது படம். படம் முழுவதும் ரோபோக்களின் பைட். இடையில் அவ்வப்போது கதாநாயகன், கதாநாயகி கூடி முத்தமிடுவதும், குத்துப்பாட்டு மட்டும் இருந்திருந்தால் நம்ம விஜய் படம் பார்த்த திருப்தியாவது கிடைத்திருக்கும். படத்தில் கதையென்று சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை. படம் முழுவதும் தகரத்தைப் போட்டு வெட்டுவதுபோல ஒரே சத்தம். முடியல.

படத்தின் அனிமேசனுக்கு ஒரு பெரிய சல்யூட்டே கொடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. உருண்டுவரும் போல்ஸ்கள் குட்டி ரோபோவாக எழுந்துநிற்பது, வானத்தில் இருந்துவரும் பந்து தண்ணீரில் யம்ப் பண்ணி, புலிவடிவ ரோபோவாக மாறி யம்ப்புவது என சொல்லிக்கொண்டே  போகலாம். ரோபோ அழுவது முதல், அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிலும் ஹீரோவுக்கு உதவும் அந்த பச்சை, மற்றும் சிகப்பு ( பெயர் வாயில நுளையலப்பா, தெரிஞ்சவங்க பின்னூட்டுங்க) ரோபோக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளில் அவை ஆண், பெண் ரோபோக்களோ என சந்தேகம் வருகிறது. பார்த்தால் உடலமைப்பும் அப்படியே. கிரேட்!. கிளைமார்க்சில் பிரமிட்டை உடைக்கும் ரோபோவை கீழேயிருந்து காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது.

முதல்பாகத்ததில் இறந்த வில்லன் ரோபோ மீண்டும் உயிர்பெறுவதும் நம்ம ஆப்டிமஸ் இறப்பதும், பின் ஹீரோ அவருக்கு உயிர் கொடுப்பதும் ரோபோக்களின் மூதாதயர்கள் மறைத்து வைத்திருக்கும் சூரியனை அழிக்கும் இயந்திரத்தை அழிப்பதும்தான் கதை. இறந்த ஹீரோ மறுபடியும் உயிர்பெறும் காட்சியில் லாஜிக் இருப்பதாகக் காட்டினாலும் நம்ம தமிழ்ப்பட ஞாபகம் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. மற்றபடி அந்த விறுவிறு நேரத்திலும் ஹீரோயின் ஓடிவரும் காட்சியில் பெரிய்ய்..ய ‘ம்ம்….’ தான் வருகிறது.


வசனங்களில் ஆங்கிலப்படத்திற்கே உரிய கெட்ட வாடை. சில இடங்களில் வசனங்கள் புல்லரிக்க வைக்கிறது, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. என்னைப் பொறுத்தவரை முன்னரே சொன்னதுபோல அப்படியே நம்ம விஜய் படம், பாட்டு மட்டும் மிஸ்ஸிங். அனிமேஷனுக்காக (மட்டும்) பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.

Thursday, July 16, 2009

ஞாபகங்கள்

17 comments
 நண்பர் சந்ரு என்னை, ஆரம்பப் பள்ளிப் பருவத்தைப் பற்றி எழுதச் செல்லி தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். எனக்கு இதுதான் முதலாவது தொடர்பதிவு. எனது இளமைக்காலத்தை மீண்டும் அசைபோட வைத்த அவருக்கு முதலில் நன்றிகள்.

எனது பாலர் வகுப்புக் கல்வி அப்பாவின் பணி நிமித்தம் ஏற்பட்ட இடமாற்றங்களினால் இரண்டு வருடங்களில் மூன்று வெவ்வேறு பாலர் பாடசாலைகளில் தொடர்ந்தது. அதனாலோ என்னவோ, அங்கு செல்வதிலோ, அந்த விளையாட்டுடன் கூடிய கற்றலிலோ மனது ஒட்டவில்லை. எப்போது பாடசாலை முடியும், வீடு செல்லலாம் என்பதே ஒரே குறிக்கோள். அது மட்டுமல்ல, பாடசாலை நடைபெறும் போதுகூட அம்மாவோ, இல்லை சித்தியோ அங்கே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் பாடும் சோலோவில் யாருமே படிக்க முடியாது.


இவ்வாறு மிக்க ஆர்வத்தோடு கற்ற என்னை ஆரம்பக் கல்விக்காக வட இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையில் (அப்போது அது கலவன் பாடசாலையாக இருந்து பின் மகளிர் பாடசாலை ஆக்கப்பட்டது) சேர்த்துவிட்டார்கள். இப்போது என்னை பாடசாலைக்கு கொண்டுபோய் விடும் வேலை பெரியப்பாவினுடையது. அவர் இப்போது எம்முடன் இல்லாதபோதும், இதை எழுதும்போது அவருடன் கூடவே பயணிப்பது போலவே இருக்கின்றது.

அதே வகுப்பில் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தியும் வந்து சேர்ந்தாள். அதுவரை சோலோ பாடிக்கொண்டிருந்த எனக்கு டூயட் பாடும் வாய்ப்பு இப்போது. எப்படியோ, கடனே என்று அந்த ஒரு வருடத்தையும் ஓட்டிவிட்டேன்.


அடுத்தவருடம் வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்த அப்பா நாடு திரும்பியதால் ஆண்டு இரண்டு முதல் சொந்த ஊரான கொக்குவிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் ஆண்டு இரண்டுக் கல்வியைத் தொடர்ந்தேன். அப்பாவின் வழிகாட்டலும், புதிய பாடசாலையின் சூழலும், என்னாலும் படிக்க முடியும் என்று எனக்கே தெரிவித்தது. ஆண்டு இரண்டில் கணித பாடத்தில் நான் எடுத்த நூறு மதிப்பெண்களுடன் எனக்கு கணித்ததின்பால் ஏற்பட்ட ஈர்ப்புத்தான் என்னை உயர்தர வகுப்பில் கணித பாடம் கற்கவும், பின் இன்றுவரை கணித்ததின்பால் ஏற்பட்ட ஈர்ப்புக்கும் காரணம் என்று நினைக்கின்றேன்.

ஆண்டு மூன்றில்தான் எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் கிடைத்தார். கௌரி டீச்சர். ஆசிரியர் என்றால் அடிப்பார் என்ற எனது நினைப்பை மாற்றியவர் அவர்தான்.  சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட பாராட்டுவார். அவரிடம் பாராட்டுப் பெறுவதற்காகவே ஏதோ படித்துக்கொண்டிருந்த நான் எனக்காகவும் படிக்கத் தொடங்கினேன். என்றுமே மறக்க முடியாத ஆசிரியர் அவர்.

ஆண்டு நான்கு. என்னடா இவன், ரோம்ப நாளா ஒரே ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கேனேன்னு யாருக்கோ போர் அடிச்சிரிச்சு போல, அதனால யாழ்ப்பாணத்துல போர் வெடிச்சிரிச்சு. ஆரம்பத்துல கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தொடங்கி, பின் இடம்பெயர்ந்து, சிறிதுகாலம் படிப்பு ஏதுமின்றி வெட்டியாக கிரிக்கெட் ஆடி, பின் இடம்பெயர்ந்து தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள சின்னத்தம்பி வித்தியாலயத்தில் சிறிதுகாலம் படித்து, பின் மீண்டும் கொக்குவில் வந்து வெட்டியாகத் திரிந்து, பின் மறுபடியும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் என்று பிட்டுப் பிட்டாகப் படித்தாலும் பிட் அடிக்காமல் பாஸ் பண்ணி ஆண்டு ஐந்திற்கு போய்விட்டேன்.

ஐந்தாம் ஆண்டில்தான் புலமைப் பரிசில் பரீட்சை.  இலங்கைப் பெற்றோர்களிற்கு பிள்ளை இதில் பாஸ் செய்வது கௌரவப் பிரச்சினையாகக் கருதப்படும். வகுப்பில் கற்பிக்கப்படும் பாடங்களுடன் சம்பந்தமே இல்லாமல் பொது அறிவு, IQ போன்றவற்றை பரீட்சிப்பதற்காக அரசாங்கத்தால் நடாத்தப்படும் பொதுப்பரீட்சை. எனக்கு ஐந்தாம் ஆண்டில் அடிக்கடி சுகவீனம் வந்து வேறு அல்லற்படுத்தியது. பாதி நாட்கள் பாடசாலைக்குப் போக முடியவில்லை. இதனால் பாடசாலைக் கல்வியை விட்டுவிட்டு, தனியே புலமைப்பரிசிற் பரீட்சைக்கு மட்டும் படித்து வந்தேன். இதனால் தவணைப் பரீட்சைகளில் வகுப்பில் இருபதிலிருந்து முப்பதாவது இடத்தையே பிடித்துவந்தேன். அப்போது வகுப்பாசிரியர் திருமதி பாலதயானந்தன் அவர்கள். ஆரம்பத்தில் அவரிடம் நிறையவே வாங்கிக் கட்டிக் கொண்டாலும், பின் எனது நிலை தெரிந்து அவர் தந்த ஆதரவு மறக்க முடியாது. இவ்வாறு புயலடித்த ஆண்டு ஐந்தின் புலமைப்பரிசிற் பரீட்சையில் பாடசாலையில் முதலிடமும், மாவட்டத்தில் மூன்றாவது இடமும் பெற்றதோடு என் ஆரம்பக் கல்வி இனிதே முடிவடைதது.

இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்Tuesday, July 14, 2009

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google

12 comments

Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.


இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.


இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்.

Monday, July 13, 2009

மறுபடியும்…

5 comments

மூணு மாச லீவுன்னு சொல்லிட்டு முழுசா மூணு வாரம் முடியறதுக்குள்ளயே வாடா வெண்ணைன்னுட்டானுங்க கம்பஸ் காரங்க.  ஏறத்தாள 400 நாட்களிற்கப்புறம் ஊருக்குப்போன சந்தோசத்தையும், பெற்றோரை, நண்பர்களை, ஆசிரியர்களை சந்தித்த கணங்களை தனிப்பதிவாக இடும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை.

 நான் இறுதியாகச் சென்றபோதிருந்த சங்கக்கடைகளின் கியூக்களையும், கடை வாசங்களில் இரண்டுமடங்கு விலையுடனான விலைப்பட்டியலையும் இம்முறை காண முடியவில்லை என்பதால் சிறிய சநதோசம் என்றாலும் ஏறத்தாள யாழின் அடையாளமாகவே இருக்கும் அந்தக் கலாச்சாரமும் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள கல்வியாளர்களின் கருத்து, நேரில் கண்ட உண்மையும் கூட. கொடுக்கப்போகும் விலை அதிகம்தான் என்பது புரிகிறது.

இம்முறை கப்பலில் பயணித்தது வித்தியாசமான அனுபவம். அதைப்பற்றி மட்டும் ஒரு பதிவு விரைவில் வரும், கொஞ்சம் நகைச்சுவையாக. மொத்தத்தில் பில்லா அஜித் பாணியில் நான் சொல்ல வர்றது என்னண்ணா, I Am Back!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy