Monday, July 26, 2010

போல..!

26 comments

 

3152260172_4298af3157

தேர்தல்

விதை விதைத்த‍வன் தெரியாமல்

வேர் நீர் நனைத்த‍வன் அறியாமல்

கல் எறிபவனுக்கெல்லாம் - தன்

காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது

மரம் - மக்கள்

வழங்கும் வாக்குப் போல..!

 

பெரிசு

 எரிந்து முடித்த‍வனின் அஸ்தி கரைத்து,

தாகத்து விலங்கின் நா தழுவி,

ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,

வழிப்போக்க‍ன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,

ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்

பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு

ஆக்க‍ப்ப‍டுகிறது தண்ணீர்

பெரிசு ஆக்க‍ப்ப‍டும் தாய்போல…‌!

 

மாற்ற‍ம்

ஆதி அடி மரத்தின் அருமை அறியாது

வெட்டி ஒட்டிவிட்ட‍ வெள்ளைப் பூவையே

பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்

சிவப்புச் செவ்வ‍ரத்தை..!

.

‘போல’ என்று போடும் உவமைக்கு

கடிவாளம் இடுகிறது - என்

கனத்த மனது…!!

Friday, July 23, 2010

முரளி!!!

18 comments

 

1st

 

2nd

 

3rd

 

4th

 

5th

 

LAST

Saturday, July 17, 2010

ம்…

17 comments

 

single-tree

குணம்

காவலர் வரிசைக்கும்

கள்வர்கள் கயமைக்கும்

புணர்வதற்காய்ப் போட்டிக்கும் – இன்னும்

இல்லாத காரணங்களையும் இறுக்கப் பிடித்தபடி

குரைத்துக்கொண்டுதான் இருக்கின்றன‌

இரவில் தெருநாய்கள்

 

தெளிவு

 

வேகமான பயணம்.

கூடவே ஓடுகிறது நிழல்..!

சற்றே தெளிவற்றுத்தான் தெரிகிறது

நிஜம்..!

 

கணக்கு

 

கூட்டலும் பெருக்கலும்

கணினிக்கு மாறிவிட்டபிறகும்

மனதிலேயேதான் நடக்கிறது

பிரித்தலும்! கழித்தலும்!!

 

எல்லை

 

ஒருகல் தொலைவில் இருக்கிறது

இன்னுமொரு கல்..!

ஏலவே…

வகுக்கப்பட்ட எல்லையில்

இதுதான் இறுதிக்கல்..!

Monday, July 12, 2010

பலித்த அருள்வாக்கும் பதிவர் லோஷனும்

15 comments

 

q

போல் ஒக்டோபசானந்தா. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழுவதுமே தனது துல்லியமான கணிப்புகளால் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்து உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்த மகான். மனித குலம் முழுவதற்கும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்துக் கொடுத்து, இறைஞானம் தந்தருளவெனவே அவதரித்திருக்கும் அவதார புருஷர். மனதைக் கொண்டும், அதன் தர்க்கங்கள், கருத்துகள், பழைய நம்பிக்கைகள் வாத பிரதிவாதங்களைக் கொண்டும் இவரைப் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து ஆராதிக்க வேண்டிய அதிசயம் இவர்.

எங்கள் போல் ஒக்டோபசானந்தாவின் உயிர் மூச்சு ஒன்றேதான். போட்டிகளின் முடிவுகளை முன்னரே கணித்துச்சொல்லி, அதன்மூலம் போட்டியின் விறுவிறுப்பு நேரத்தில் ஏற்படும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்ப்பதும், நகத்தைக் கடித்து அதனால் ஏற்படும் கிருமித்தொற்றைத் தவிர்ப்பதும், தனது பக்தர்களை நோயற்ற வாழ்வு வாழ வழிசமைப்பதும்தான்.

இதோ, போல் ஒக்டோபசானந்தாவின் அற்புதங்களுக்கு ஒருசோறு பதமாக பதிவர் லோஷனின் கடிதம்.

Untitled-1

என் பெயர் லோஷன். எனது விளையாட்டுப் பதிவுகளாலும், அது குறித்தான எதிர்வுகூறல்களாலும் பதிவுலகில் எனக்கென ஒரு தனித்துவமான முத்திரை பதித்தவன். எனது எதிர்வுகூறல்கள் எல்லாம் எதிர்மறையான முடிவையே தந்திருந்தாலும், எனது தொடர்ச்சியான வாசகர்களுக்கு அதுகுறித்துத் தெரிந்திருந்ததால் எனது வாடிக்கையாளர்களுக்கு குறையேதும் இருக்கவில்லை. இப்படியாக வெற்றிகரமான எனது எதிர்மறை எதிர்வுகூறல்களாக

  • இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் எனக்கூறி அதைத் தோல்வியடைய வைத்தது

 

  • ஆசியக்கோப்பையை இலங்கை கைப்பற்றும் எனக்கூறி இலங்கைக்கு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மரணஅடி வாங்கிக் கொடுத்தது

 

  • நட்வெஸ்ட் தொடரில் ஆசிக்கு ஆதரவளித்து, யாருமே எதிர்பார்க்காதவகையில் கோப்பையை ஆங்கில தேசத்துக்கு அள்ளி வழங்கியது

போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதே பாணியை தொடர்ந்தும் கால்பந்தாட்ட உரக்ககிண்ணப் போட்டிகளிலும் பயன்படுத்தி, காலிறுதி வரை கலக்கியே வந்திருக்கிறேன். அனைவருமே எதிர்பார்த்த ஆர்ஜென்டீனா அணிக்கு எனது அமோக ஆதரவை அள்ளி வழங்கி, காலிறுதியோடு அதையும் மோசமாகக் கலைத்தவனும் நான்தான் என்றுதான் கடைசிவரை எண்ணிக்கொண்டிருந்தேன்.

aa

அப்போதுதான் போல் ஒக்டோபசானந்தா சுவாமிகளைப்பற்றி எனக்கு அறியக்கிடைத்தது. அவரது உலகப்புகழோடு போட்டியிட்டு உலகப்புகழ் பெறுவதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது வலைப்பதிவுகளில் சுவாமிகள் ஆதரவளித்த அணிக்கே எனது ஆதரவையும் வெளிப்படையாக அறிவித்து, அவற்றைத் தோல்வியடையச் செய்ய நான் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்.

நேற்றய இறுதிப்போட்டியில் நான் ஆதரவளித்த ஸ்பெயின் அணியே நான் சற்றும் எதிர்பாராதவகையில் கோப்பையைத்தூக்கி, எனது பலகோடிக் கனவுக்கு ஆப்படித்தது. அப்போதுதான் போல் ஒக்டோபசானந்த சுவாமிகளின் மகிமையை உணர்ந்துகொண்டேன். எனது அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த போல் ஒக்டோபசானந்த சுவாமிகளுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.

இறுதியாக சுவாமிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்.

போல் ஒக்டோபசானந்தா அடிப்பொடி

LOSHAN
http://arvloshan.com/

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy