Tuesday, July 14, 2009

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google



Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.


இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.


இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்.

12 comments:

ஆ! இதழ்கள் on July 14, 2009 at 7:49 PM said...

you could have added the google chrome OS, which will be available free soon.

Praveenkumar on July 14, 2009 at 8:36 PM said...

சிறப்பான கட்டுரை.
மைக்ரோசாப்ட் 2010-ஐ வரவேற்று ஆவலுடன் காத்திருக்கி்றேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி

Admin on July 14, 2009 at 8:38 PM said...

நல்லதொரு பதிவு...

மைக்ரோசாப்ட் 2010-ஐ ஆவலோடு காத்திருப்போம்....

Subankan on July 14, 2009 at 8:39 PM said...

@ ஆ! இதழ்கள்

i mentioned that also.

Subankan on July 14, 2009 at 8:39 PM said...

@ பிரவின் குமார்

நன்றி

Subankan on July 14, 2009 at 8:40 PM said...

@ சந்ரு

நன்றி, உங்கள் தொடர்பதிவு தயாராகின்றது. விரைவில் இடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Admin on July 14, 2009 at 9:00 PM said...

விரைவில் வந்தால் சரிதான்...

Suresh Kumar on July 15, 2009 at 9:52 AM said...

நன்றி நல்ல பதிவு

ARV Loshan on July 15, 2009 at 11:14 AM said...

useful one..
சிறப்பான கட்டுரை.
நல்ல பதிவு

ஆ! இதழ்கள் on July 15, 2009 at 5:33 PM said...

i mentioned that also.//

பார்த்தேன்.. ஆனா இலவசம் ... ஓபன் சோர்ஸ் என்பதெல்லாம் இல்லையல்லவா? அத சொல்ல வந்தேன்..

MS காசு பாத்தே பழக்கப்பட்ட கம்பெனி சும்மா தர மனசு வராது. என்ன உள்குத்து வக்கிராங்கியனு பாப்போம்.

நல்ல கட்டுரை.

Subankan on July 15, 2009 at 8:49 PM said...

Suresh Kumar

LOSHAN

நன்றி

Subankan on July 15, 2009 at 8:54 PM said...

@ ஆ! இதழ்கள்

நான் Office 2010 இனைப் பற்றியே எழுதவேண்டும் என நினைத்திருந்ததால் அதைக் குறிப்பிடவில்லை.

//MS காசு பாத்தே பழக்கப்பட்ட கம்பெனி சும்மா தர மனசு வராது. என்ன உள்குத்து வக்கிராங்கியனு பாப்போம்.
//

என்னத்த வக்கிறது, பழைய பாக்கி தீரும்மட்டும் ஓடவேண்டியதுதான்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy