Friday, September 11, 2009

இன்னுமொரு சனிப்பெயற்சிகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடுமுறையில் வீடு சென்றிருந்தேன். அங்குள்ள இணைய இணைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத்தால் என்னால் பதிவிட முடியவில்லை. அந்த ஒருமாதத்தில் நானும் பதிவுலகமும்….

  • பதிவுலகின் எனது முதலாவது நண்பி சிந்துவை யாழில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  பதிவுலகால் இடம்பெற்ற எனது முதலாவது சந்திப்பு இது.  • இந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்தேவி திரட்டி என்னை நட்சத்திரமாக அறிவித்திருந்தது. அந்த வாய்ப்பை என்னால் பயன்படுத்திக்கொள்ளவே முடியாமல் போய்விட்டது.


  • இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இலங்கையின் முதலாவது பதிவர் சந்திப்பு இடம்பெற்றது. முதலில் வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் பின் யாழ் – கொழும்பு பயண இழுபறிகள் முடிவை மாற்றிவிட்டன.


  • சந்ரு அண்ணா எனக்கு அடுத்த அன்புப்பரிசையும் கொடுத்துவிட்டார். இன்னுமொரு விருது. Scrumptious Blog Award . அவருக்கு எனது நன்றிகள். அதை வேறு நாற்பது பேருக்குக் கொடுக்க வேண்டுமாம். ஸபா..


  • சக பதிவர்கள் பனையூரான், சுபானு இருவருமே என்னை நான் பதிவெழுதத் தொடங்கிய கதையை எழுதச்சொல்லி அழைத்துள்ளனர். கரும்பு தின்னக் கூலியா? தோ.. எழுதத் தொடங்கிட்டேனே!


  • கார்த்தி அண்ணா என்மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் என்னை பிரபல பதிவராக்கிந்தோடு மட்டும் நின்றுவிடாது எனது சில தணிக்கை செய்யப்பட்ட தகவல்களையும் வலையில் பரப்பிவிட்டதும் இதே காலத்தில்தான். அது இங்கே!


  • ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நானும் ஏமாந்து மற்ற சிலரையும் ஏமாறச்செய்த எனது மனதை உறுத்தும் ஒரு சம்பவம் அடுத்த பதிவில்.


16 comments:

சி தயாளன் on September 11, 2009 at 4:56 PM said...

வாங்கோ...welcome back...:-)

Admin on September 11, 2009 at 5:03 PM said...

சுபாங்கன் நான் எனது இடுகையில் நாற்பது பேருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று நகைச் சுவையாகத்தான் குறிப்பிட்டு இருக்கின்றேன். ஆனால் கொடுக்க வேண்டியது பத்துப்பேருக்குத்தான். பத்துப்பேர் அதிகம் என்று பலராலும் இன்று பேசப்படுகின்றது உண்மையும் அதுதான்.

நீங்கள் பத்துப் பேருக்குத்தான் கொடுக்க வேண்டும்

கார்த்தி on September 11, 2009 at 5:12 PM said...
This comment has been removed by the author.
கார்த்தி on September 11, 2009 at 5:13 PM said...

Congrats!!!
மீண்டும் தொடங்குங்கள் உங்கள் பயணத்தை!!!!

Sinthu on September 11, 2009 at 8:57 PM said...

"பதிவுலகின் எனது முதலாவது நண்பி சிந்துவை யாழில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பதிவுலகால் இடம்பெற்ற எனது முதலாவது சந்திப்பு இது. "
அடடா..... அது நட்பால் ஏற்பட்ட சந்திப்பு என்று தானே நினைத்தேன்............... பதிவுலகாலா?
பதிவுலக சந்திப்பு என்று சொல்ல மாட்டேன் என்று சொல்லிட்டு.. இப்படி வந்து மாட்டி விட்டிட்டீங்களே? காரணம் என்ன?
பதிவு அருமை..............
ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பீங்க போல....

நட்பது பேருக்கு விருது வழங்க வாழ்த்துக்கள்..

Subankan on September 11, 2009 at 9:50 PM said...

நன்றி ’டொன்’ லீ

நன்றி கார்த்தி

Subankan on September 11, 2009 at 9:57 PM said...

@ சந்ரு

அப்பாடா, ரொம்ப நாள் ஊரில இல்லையா, அதான் எனக்குத் தெரியல.

Subankan on September 11, 2009 at 10:00 PM said...

@ சிந்து

நட்பு ரீதியிலான சந்திப்பு என்றாலும் நட்பு ஏற்பட்டது பதிவுலகால்தானே?

//ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பீங்க போல....//

ஆமா, நீங்க எதைச் சொல்றீங்க?

Karthik on September 11, 2009 at 10:30 PM said...

வெல்கம் பேக்! :)

Subankan on September 11, 2009 at 11:32 PM said...

நன்றி கார்த்திக்

Unknown on September 12, 2009 at 2:40 PM said...

அது சரி விபத்திலல அகப்பட்டீர்களாமே?
இப்போது எப்படி???

சுபானு on September 12, 2009 at 8:33 PM said...

அப்ப திருப்பி வந்திட்டீங்க என்று சொல்லுங்க.. நல்வரவுடன்.. வாழ்த்துக்கள்

Subankan on September 12, 2009 at 9:28 PM said...

@ கனககோபி

இப்போது பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் டிங்கரிங், பெயின்டிங் வேலைகள் பாக்கியிருக்கிறது, எனக்குத்தான். நன்றி.

Subankan on September 12, 2009 at 9:29 PM said...

நன்றி சுபானு

ARV Loshan on September 17, 2009 at 2:00 PM said...

வாங்க சுபாங்கன்.. நல்ல அனுபவங்கள் தான்..
ஆனாலும் பதிவர் சந்திப்பு வாய்ப்பை இழந்துவிட்டீர்கள் ;) (கடுப்பாகுமே..)

Subankan on September 17, 2009 at 2:21 PM said...

// LOSHAN said...
வாங்க சுபாங்கன்.. நல்ல அனுபவங்கள் தான்.. //

இல்லாமழ

//ஆனாலும் பதிவர் சந்திப்பு வாய்ப்பை இழந்துவிட்டீர்கள் ;) //

சோ சாட்..

//(கடுப்பாகுமே..)//

பின்ன, நான் இல்லாதப்போ பதிவுபோட்ட புல்லட்மேலயும், அதை அரேஞ்ச் பண்ணின உங்கமேலயும்தான். சீக்கிரமா இன்னொன்று பண்ணுங்கப்பா...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy