Monday, October 26, 2009

சரக்கு வித் சைடிஸ் – 26.10.09

இருக்கிறம் சஞ்சிகையினர் வலைப்பதிவர் மற்றும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை எதிர்வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மீண்டும் சந்திக்கவிரும்பும் பதிவுலக சொந்தங்கள் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தமது வரவை 0113150836 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது irukiram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தமது வரவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

எனது முதலாவது பதிவர் சந்திப்பாக இது அமையப்போகிறது. வாருங்கள், வரும் திங்கட்கிழமை சந்திக்கலாம்.

-----XXX-----

கடந்த சனிக்கிழமை இரவு உணவை எடுத்தவாறே தொலைக்காட்சியில் மேய்ந்துகொண்டிருந்தபோது சக்தி தொலைக்காட்சியில் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சி நடந்நுகொண்டிருந்ததை தற்செயலாகக் காணக்கிடைத்தது. துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் அடித்துவிட்டது போல மேக்கப்புடன் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருந்தார். அவர் பாடி முடித்ததும் அந்த அறிவிப்பாளர் காற்றைக் கையால் விசிறியவாறே கதைக்கத் தொடங்க எனக்கோ அடக்கமுடியாமல் கெக்கே பெக்கே என்று சிரிப்புத்தான் வந்தது. இறுதியில் வாயில் வைத்த புட்டு புரைக்கேறி மூக்கால் வெளியில் வந்தவுடன் சேனலை மாற்றிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அந்த அறிவிப்பாளர் சக்தி சுப்பர்ஸ்டார் நிகழ்ச்சிக்கென்றே பிரத்தியோகமாக வந்தவராம். சிறந்த காமெடி நிகழ்ச்சி பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக சக்தி சுப்பர்ஸ்டார் பார்க்கலாம். வரும் பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல.

-----XXX-----சிலருக்குச் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லை. அந்த வரிசையில் எனக்கு Chak de India. நேற்றும் மூன்றாவது தடவையாக  படம் பார்த்தேன். ஏனோ எத்தனைமுறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்கவேண்டும் போலவே இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதலே இயக்குனர் கதையோடு எம்மையும் ஒன்றச்செய்துவிடுகிறார். தமிழில் இப்படியொரு படம் – கஸ்டம்தான்.

-----XXX-----நேற்று மாலை யாழ்தேவி திரட்டியை மேய்ந்துகொண்டிருந்தபோதுதான் இது கண்ணில் பட்டது. இலங்கைப் பதிவர் சந்திப்பு தொடர்பான லோஷன் அண்ணாவின் பதிவிற்கு மொத்தம் 35 நெகடிவ் ஓட்டு குத்தியிருந்தார்கள். நெகடிவ் ஓட்டு குத்துமளவிற்கு அந்தப் பதிவில் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக ஒருவரோ, இல்லை குழுவோதான் செய்திருக்க வேண்டும். யாழ்தேவியில் டைனமிக் IP வைத்திருப்பவர்கள் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலுக் குத்தலாம் என்ற குறைபாடு நிலவுகிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டுத்தான் என்பதை உறுதிப்படுத்த யாழ்தேவி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

-----XXX-----

கனவுக்கன்னி, கஜினியுடன் காணாமல் போனாலும் இன்னும் பிசின் மாதிரி மனதில் இருக்கும் அசினுக்கு இன்று பிறந்தநாள்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அசின்

-----XXX-----


ம்ஹும்.. இவங்களுக்கும் நிச்சயம் ஆயிடுச்சாம் :-(((


22 comments:

ஜெட்லி... on October 26, 2009 at 9:29 AM said...

chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி பார்த்தாச்சு...

சுபாங்கன், அசின் படம்
வேறு போடலாமே... இப்போது போட்டிருப்பது fake படம்.

maruthamooran on October 26, 2009 at 10:09 AM said...

அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒருமுறை கலந்துகட்டி பதிவிடுகிறீர்களே… யார் தங்களின் குரு வந்தியரா, யோ.வாய்ஸ் யோகாவா?

சக்தே இந்தியா நான் 5 தடவைகளுக்கு மேல் பார்த்தாகி விட்டது. படம் வந்த புதிலில் என்னால் எழுதப்பட்ட விமர்சனத்தின் தொடுப்பு இங்கே…

http://maruthamuraan.blogspot.com/2007/10/blog-post.html


தாங்கள் இட்டிருப்பது ஷில்பா செட்டியின் படமல்ல. இது அவரது தங்கை ஷமீதா செட்டியினுடையது. மாத்திவிடுங்கப்பா.

வந்தியத்தேவன் on October 26, 2009 at 10:42 AM said...

தங்கத் தலைவி அசினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அடிக்கடி தமிழ் நாட்டுப்பக்கமும் வாங்க அசின்.

sanjeevan on October 26, 2009 at 11:17 AM said...

chak de india enakkum romba pidikkum
ellaappukalum saruh khan ikke.

enna ippidi padam poddu asinai avamaanappaduththeeddeenga

enakkum pathivaraaka ithu thaan muthal sanththippu
vaasakaraaka senrirunththeen

nalla pathivu
keep it up

Unknown on October 26, 2009 at 3:30 PM said...

//துருப்பிடித்த இரும்புக்கு Anti – cross பெயின்ட் அடித்துவிட்டது போல மேக்கப்புடன் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருந்தார்.//

haha.... U beauty Subankan (anna)!
haha....

U r correct about Shakthi suoer star.
Heis triyng something, but it's irritating...

Prapa on October 26, 2009 at 4:01 PM said...

உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

Subankan on October 26, 2009 at 5:49 PM said...

@ ஜெட்லி

//chak de படம் நான் இதுவரை பத்து வாட்டி பார்த்தாச்சு...//

அப்ப நான்தான் குறைவாப் பாத்திருக்கிறனோ?

//சுபாங்கன், அசின் படம்
வேறு போடலாமே... இப்போது போட்டிருப்பது fake படம்//

மாத்தியாச்சு :))

Subankan on October 26, 2009 at 5:51 PM said...

@ மருதமூரான்

//அடடா சுபாங்கன் தாங்களும் வாரம் ஒருமுறை கலந்துகட்டி பதிவிடுகிறீர்களே… யார் தங்களின் குரு வந்தியரா, யோ.வாய்ஸ் யோகாவா?//

எல்லாம் மூத்த பதிவர்தான் :p

//சக்தே இந்தியா நான் 5 தடவைகளுக்கு மேல் பார்த்தாகி விட்டது. படம் வந்த புதிலில் என்னால் எழுதப்பட்ட விமர்சனத்தின் தொடுப்பு இங்கே…

http://maruthamuraan.blogspot.com/2007/10/blog-post.html//

படித்தேன். படம் வெளிவந்த காலத்தில் நான் பதிவெழுத்த் தொடங்கவில்லை.

//தாங்கள் இட்டிருப்பது ஷில்பா செட்டியின் படமல்ல. இது அவரது தங்கை ஷமீதா செட்டியினுடையது. மாத்திவிடுங்கப்பா//

மாத்தியாச்சு. இண்டைக்கு எனக்கென்ன படத்தில கண்டமோ?

Subankan on October 26, 2009 at 5:52 PM said...

@ வந்தியத்தேவன்

ரசிகர்மன்றம் தொடங்கிடுவமா?

Subankan on October 26, 2009 at 5:56 PM said...

@ sanjeevan

//chak de india enakkum romba pidikkum
ellaappukalum saruh khan ikke.//

same blood

// enna ippidi padam poddu asinai avamaanappaduththeeddeenga//

பொறுமை, பொறுமை. அதான் மாத்தியாச்சுல்ல?

//enakkum pathivaraaka ithu thaan muthal sanththippu
vaasakaraaka senrirunththeen//

எனக்கு அதுவும் இல்லை, இதுதான் முதலாவது.

நன்றி

Subankan on October 26, 2009 at 5:58 PM said...

@ கனககோபி

நன்றி கோபி, same blood :))

Subankan on October 26, 2009 at 5:58 PM said...

@ பிரபா

கோச்சுக்காதீங்க, வந்துடறேன்.

வந்தியத்தேவன் on October 26, 2009 at 7:54 PM said...

இருக்கிறம் சந்திப்பில் உங்களைச் சந்திக்கலாம். மற்றும்படி இந்தச் சந்திப்பில் எந்த விவாதமும் நடைபெறாது என நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன.

தயவு செய்து சனி ஞாயிறுகளில் விஷப் பரீட்சை செய்யாதீர்கள். வேறு தொலைக்காட்சிக்கு மாற்றுங்கள் இல்லையென்றால் அந்த நேரம் நல்ல நித்திரை கொள்ளுங்கள், அல்லது நல்ல விடயங்களை வாசியுங்கள். இந்த நிகழ்ச்சியால் விரைவில் இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போல் தெரிகின்றது.

சக்தே இந்தியா நானும் லிபேர்ட்டியில் பார்த்தேன் அருமையான படம் பல தடவைகள் பார்க்கலாம். தமிழில் இப்படியான படங்கள் ஏனோ வருவதில்லை எவரும் ரீமேக் செய்வதுமில்லை.

யாழ்தேவி திரட்டிப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இதனை அவர்கள் சீர்செய்யவில்லையென்றால் பலர் உந்த மைனஸ் அடிக்கும் சிறுவர்களிற்காக யாழ்தேவியில் இருந்து விலகிவிடுவார்கள்.

அசின் என்றைக்கும் என் மனதில் ஒட்டிய பிசின் தான்.

ஷில்பா ஷெட்டிக்கு வயது அதிகரித்துவிட்டது.

ARV Loshan on October 26, 2009 at 9:21 PM said...

தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்னு தெரியுது..

சக் தே இந்தியா எனக்குப் பிடித்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு முறை கேஸ் தான்.. எனினும் இயக்குனரின் முயற்சி அபாரம்.

முதலில் நான் பொருட்படுத்தாவிட்டாலும்ஆரோ செய்யும் விஷம வேலை என்பதனால் சற்று எரிச்சலும் ஏற்பட்டது.
யாழ்தேவி குழுவினரால் பொறுப்பான நடவடிக்கை எடுப்பது முடியாது என்பதனால் அவர்களின் பதிவுப் பட்டையை என் தளத்திலிருந்து கழற்றிவிட்டேன்.
இது பற்றி ஏதாவது எழுதவேண்டும் போலிருக்கு.. பார்க்கலாம்..


அசின் நம்ம செல்லம் இல்லையா?

ஷில்பா ஆண்டி இப்போ தான் மணமுடிக்கிராரா? யார் அங்கிள்?

வந்தியத்தேவன் on October 26, 2009 at 10:23 PM said...

எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கின்றார்கள், அந்தப் புண்ணியவான்களுக்கு எல்லாம் நல்லவையே கிடைக்கட்டும்

Subankan on October 26, 2009 at 10:45 PM said...

@ வந்தியத்தேவன்

//இருக்கிறம் சந்திப்பில் உங்களைச் சந்திக்கலாம். மற்றும்படி இந்தச் சந்திப்பில் எந்த விவாதமும் நடைபெறாது என நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன//

நிச்சயமாக, சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தால் சரிதான்.

//தயவு செய்து சனி ஞாயிறுகளில் விஷப் பரீட்சை செய்யாதீர்கள். வேறு தொலைக்காட்சிக்கு மாற்றுங்கள் இல்லையென்றால் அந்த நேரம் நல்ல நித்திரை கொள்ளுங்கள், அல்லது நல்ல விடயங்களை வாசியுங்கள். இந்த நிகழ்ச்சியால் விரைவில் இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போல் தெரிகின்றது//

நான் தொலைக்காட்சி பார்ப்பதே குறைவு. அன்று வீட்டில் பேச்சுத்துணைக்கு யாரும் இல்லாத்தால்தான் வந்தது வினை.

//சக்தே இந்தியா நானும் லிபேர்ட்டியில் பார்த்தேன் அருமையான படம் பல தடவைகள் பார்க்கலாம். தமிழில் இப்படியான படங்கள் ஏனோ வருவதில்லை எவரும் ரீமேக் செய்வதுமில்லை.//

சக்தே இந்தியா ரீமேக் செய்யப்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.

//யாழ்தேவி திரட்டிப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இதனை அவர்கள் சீர்செய்யவில்லையென்றால் பலர் உந்த மைனஸ் அடிக்கும் சிறுவர்களிற்காக யாழ்தேவியில் இருந்து விலகிவிடுவார்கள்//

நன்றி. நிச்சயமாகச் செய்யவேண்டியது.

//ஷில்பா ஷெட்டிக்கு வயது அதிகரித்துவிட்டது//

அது அதிகரிக்கத்தானே செய்யும்

Subankan on October 26, 2009 at 10:49 PM said...

@ LOSHAN
//
தலைப்பே ஒருவித கிக்.. ;)
வருவீங்கன்னு தெரியுது..//

வருவேன்

//
முதலில் நான் பொருட்படுத்தாவிட்டாலும்ஆரோ செய்யும் விஷம வேலை என்பதனால் சற்று எரிச்சலும் ஏற்பட்டது.
யாழ்தேவி குழுவினரால் பொறுப்பான நடவடிக்கை எடுப்பது முடியாது என்பதனால் அவர்களின் பதிவுப் பட்டையை என் தளத்திலிருந்து கழற்றிவிட்டேன்.//

இதைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றனவே

//
அசின் நம்ம செல்லம் இல்லையா? //

அதான் தெரியுமே!

//ஷில்பா ஆண்டி இப்போ தான் மணமுடிக்கிராரா? யார் அங்கிள்?//

யாரோ ஒரு பாவப்பட தொழிலதிபர்தான் (வழக்கம்போல!) அவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறார்களாம்.

Subankan on October 26, 2009 at 10:50 PM said...

@ வந்தியத்தேவன்

//எனக்கும் யாரோ 35 மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கின்றார்கள், அந்தப் புண்ணியவான்களுக்கு எல்லாம் நல்லவையே கிடைக்கட்டும்//

இந்தப் பதிவுக்கு இப்போதுதான் மூன்று. நான் இன்னும் வளரவேண்டுமோ?

Anonymous said...

சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்

Subankan on October 26, 2009 at 11:01 PM said...

// Anonymous said...
சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்//

நல்லா இருங்கப்பு

யோ வொய்ஸ் (யோகா) on October 27, 2009 at 1:41 PM said...

பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.

என்னது ஷில்பாவுக்கு இப்பதான் கல்யாணமா? நாங்க சின்ன வகுப்பு படிக்கயில அவங்க படம் பார்த்திருக்கிறோம். இன்னும் கட்டலையா?

அசினக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Subankan on October 27, 2009 at 8:11 PM said...

@ யோ வாய்ஸ் (யோகா)
//
பதிவர் சந்திப்பில் சந்திப்போம்.//

நிச்சயமாக

//என்னது ஷில்பாவுக்கு இப்பதான் கல்யாணமா? நாங்க சின்ன வகுப்பு படிக்கயில அவங்க படம் பார்த்திருக்கிறோம். இன்னும் கட்டலையா? //

:))

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy