Friday, December 11, 2009

பதிவுலக கிசுகிசுக்கள்


இலங்கையின் பதிவர் சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருப்பதால் அதற்கான ஆயத்தங்களில் பதிவர்கள் மும்முரமாகிவிட்டார்கள். இவர்களை இரகசியமாமக் கண்காணித்ததில் கிடைத்த நம்பந்தகுந்த தகவல்கள் இவை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சென்ற பதிவர் சந்திப்பில் தான் சொன்ன மொக்கை ஜோக்குக்கே பலரும் சிரித்ததால் இம்முறையும் ஜோக் சொல்லவென ஆனந்தவிகடன், குமுதம், இருக்கிறம், ப்ளேபோய் போன்ற பத்திரிகைகளை மந்திப்பதிவர் படித்துவருவதாக அவரது கீர்த்தி அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

கடல்கடந்து இருக்கும் பெண் பதிவரிடம் அடிக்கடி நோண்டி ஆகும் போண்டிப்பதிவர் இம்முறை பத்து ரூபாய்க்காக லோக்கலிலும் வம்பிழுத்துவிட்டதால் கவர்ச்சிப் பதிவரின் பின்னால் பதுங்கியிருக்க முடிவெடுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர் சந்திப்புக்கு வருவோர் தன்னிடம் கேட்கப்போகும் கேள்வியை முன்னரே ஊகித்துவிட்ட பிரபல பதிவர் ஒருவர் எல்லாம் காற்றுச் செய்த கயமை என்று அறிக்கை விட்டுள்ளாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சமுதாயப்பொறுப்புடன் எழுதும் குட்டிப்பதிவர், பதிவர் சந்திப்புக்கு அனைவரும் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு பயபக்தியுடனேயே வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தன் சிகையலங்காரத்தால் இம்முறை அதிக ரசிகர்கள் தன்பக்கம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம் பெட்டிப்பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தியாவிலிருந்து உச்சந்தலையில் குடுமியுடன் ஒருவர் வருவதாக்க் கிடைத்த தகவலை அடுத்து, வகுப்பு என டிவிட்டரில் அறிக்கை விடுத்துவிட்டு மாயமாகிவிட்டாராம் படம் காட்டும் பதிவர் ஒருவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவர்கள் தலைக்கு நூறு ரூபாய் இட்டே பதிவர் சந்திப்பை சிறப்பாக நடாத்த உள்ளதால், அதற்கு ஐந்தொகை தயார்செய்து, அது IAS இற்கு உட்படுகிறதா என ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம் பங்கு பிரித்து சந்தையில் போடும் பதிவர்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அண்மையில் அனானியிடம் அடிவாங்கிய பதிவர் ஒருவர் பதிவர் சந்திப்பை டிவிட்டரில் நடாத்துவது தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறாராம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இவற்றையெல்லாம் நேரடியாகப் பார்ப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும், போட்டிகளில் வெல்வதற்கும் நீங்களும் வருகிறீர்கள் தானே? எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டுமணிக்கு கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு?


22 comments:

Unknown on December 11, 2009 at 4:32 PM said...

ஹா ஹா...

நல்ல பதிவு....

பதிவர் சந்திப்புக்கு நல்ல விளம்பரமாகவும் இது அமையும்.
உங்கள் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் திறமையை பாராட்டுகிறேன்.

--
இப்படிக்கு :
திருந்திவிட்ட அப்பாவிப்பதிவர் கனககோபி

Mathuvathanan Mounasamy / cowboymathu on December 11, 2009 at 4:39 PM said...

நோக்கமும் நிறைவேறுகிறது.. பதிவும் சுவாரசியமாக இருக்கிறது.

இது பதிவு.. (அதுக்காண்டி முதல் எழுதினதெல்லாம் இல்லையெண்டில்லை)

:))

வால்பையன் on December 11, 2009 at 4:44 PM said...

தமிழ்நாட்டில் மார்கழி 13 திங்கள்கிழமை!?

ஆதிரை on December 11, 2009 at 5:03 PM said...

கனககோபி,
உந்தக் கவர்ச்சியானவர் யாரென்று மட்டும் எனக்கு விளங்கவில்லை.

தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் பிளீஸ்....

ஆதிரை on December 11, 2009 at 5:03 PM said...

இதைச் சொல்ல மறந்திட்டன்.
நல்ல பதிவு சுபாங்கன்

Unknown on December 11, 2009 at 5:07 PM said...

//ஆதிரை said...
கனககோபி,
உந்தக் கவர்ச்சியானவர் யாரென்று மட்டும் எனக்கு விளங்கவில்லை.

தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும் பிளீஸ்.... //

நான் ஒருபதிவுக்கு ஒரு பின்னூட்டம் தான் போடுவன்.
அடுத்த பதிவில விளக்கம் தாறன். :P

Anonymous said...

cracked my head............. well written subanki........... :P:P:P

Anonymous said...

//நான் ஒருபதிவுக்கு ஒரு பின்னூட்டம் தான் போடுவன்.
அடுத்த பதிவில விளக்கம் தாறன். :P//

நீ நிறைய போட்டுட்டாய் போண்டியின்ட பதிவுக்கு......... மரியாதையா ஓடிப்போ...... ச்சூய்........

புல்லட் on December 11, 2009 at 5:32 PM said...

அடேய் மொள்ளமாரி.. நானெங்கடா நோண்டியாகிறென்.. நான் நாசூக்கா அடித்துவிட்டு செல்ல அது கிடந்து லபோ திபோ என்று கசிப்படித்த காட்டுப்பன்னி போல குளறிக்கொண்டிருக்கும். அதையிட்டு யாரும் நோண்டியாவார்களா? சேச்சே..

நல்ல நகைச்சுவைப்பதிவு சுபாங்கா.. சந்திப்போம்..

KANA VARO on December 11, 2009 at 5:46 PM said...

ha ha ha....

நல்ல பதிவு.

நான் போனதடவை போல சைலன்டாவே வந்து போயிடுறன்.

Anonymous said...

//நான் நாசூக்கா அடித்துவிட்டு செல்ல அது கிடந்து லபோ திபோ என்று கசிப்படித்த காட்டுப்பன்னி போல குளறிக்கொண்டிருக்கும். அதையிட்டு யாரும் நோண்டியாவார்களா? சேச்சே..//

தேவாங்கு........... போய் துலை......... வாயில சனியனே பேயே நாயே என்டு இன்னும் நிறைய வருது............................ நான் யாரையும் இப்படி அன்பா திட்டுவதில்லை... உன்னைத் தவிர.. என்ன அன்பு.. என்னே அன்பு....

யோ வொய்ஸ் (யோகா) on December 11, 2009 at 5:55 PM said...

நல்ல பதிவு சுபாங்கன், அந்த பெட்டி பதிவரும் சந்திப்பிற்கு வராரோ?

கலையரசன் on December 11, 2009 at 6:32 PM said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...............

Atchuthan Srirangan on December 11, 2009 at 6:35 PM said...

இப்போது International Accounting Standards Board (IASB) கவனத்தில் கொள்ளப்படும்.

ஹா...ஹா...ஹா...ஹா...

நல்ல பதிவு நண்பா..

thiyaa on December 11, 2009 at 7:31 PM said...

நல்லாயிருக்குங்க

Bavan on December 11, 2009 at 7:44 PM said...

///உச்சந்தலையில் குடுமியுடன் ஒருவர் வருவதாக்க் கிடைத்த தகவலை அடுத்து, வகுப்பு என டிவிட்டரில் அறிக்கை விடுத்துவிட்டு மாயமாகிவிட்டாராம் படம் காட்டும் பதிவர் ஒருவர்///

(உச்சந்தலையில் குடுமியுடன்)
யாரவர் ?....

///சென்ற பதிவர் சந்திப்பில் தான் சொன்ன மொக்கை ஜோக்குக்கே பலரும் சிரித்ததால் இம்முறையும் ஜோக் சொல்லவென ஆனந்தவிகடன், குமுதம், இருக்கிறம், ப்ளேபோய் போன்ற பத்திரிகைகளை மந்திப்பதிவர் படித்துவருவதாக அவரது கீர்த்தி அறிந்தோர் தெரிவிக்கின்றனர்////

ரொம்ப கஸ்ட்டப்பட வேண்டாம்...
இம்முறை காமடி பீசு சுபாங்கன் அண்ணா(சூப்பரான HAIR CUTக்காக), அவர பக்கத்தில வச்சிருந்தாலே நீங்க ஜோக் சொல்லாமயே எல்லாரும் சிரிப்பாங்க..ஹிஹி

இன்று பதிவர் கும்மல் தினமோ
3 கும்மல் பதிவு வந்திருக்கு..ஹிஹி

பதிவு அருமை...:)

Admin on December 11, 2009 at 8:55 PM said...

நல்ல பதிவு... அது யாரப்பா இவங்கெல்லாம்.

வந்தியத்தேவன் on December 11, 2009 at 10:24 PM said...

சந்திப்பு பற்றிய சிறந்த விளம்பரம் இதுதான்.

balavasakan on December 12, 2009 at 8:40 AM said...

தன் சிகையலங்காரத்தால் இம்முறை அதிக ரசிகர்கள் தன்பக்கம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறாராம்...

ஆகா...ஆகா...

வாழ்த்துக்கள் சுபாங்கன்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி on December 12, 2009 at 3:24 PM said...

Great ya will meet 2rw :)

ARV Loshan on December 12, 2009 at 7:33 PM said...

ஆகா அருமை..
பெட்டிக்குள்ள ஒரு பேரணியே நடத்திட்டீங்க..
தலை முடி ஒரு மாதிரி இருந்தாலும் உள்ளே விஷயம் இருக்கு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.. ;)

//திருந்திவிட்ட அப்பாவிப்பதிவர் கனககோபி
//

master piece :)

Subankan on December 16, 2009 at 4:50 PM said...

தனித்தனியேரபதிலளிக்க ஆணிகள் இடங்கொடுக்கவில்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy