Thursday, August 19, 2010

அன்புள்ள சந்தியா


 

4508101812_9d460d7731_b

கொழும்பிலிருந்து விலகும் அந்த நெடுச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்துக்கும் சற்று அதிகமாகச் சீறிக்கொண்டிருந்த அந்தக் காரைச் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பெண் என்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். காருக்குள் ராபின் திக்கிலின் செக்ஸ் தெராஃபி  கரைந்துகொண்டிருக்க, நெற்றிக்கு மேலாக கண்ணாடியைக் கவிழ்த்துவிட்டபடி காரை ஓட்டிக்கொண்டிருந்த சந்தியாவின் விரல்கள் ஸ்டியரிங்கில் தாளம்போட்டுக்கொண்டிருக்க, பற்களுக்குள் பபிள்கம் ஒன்று நசுங்கிக்கொண்டிருந்தது. அவளைப்பற்றி அதிகம் வர்ணிக்கத் தேவையில்லை. இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டு தனது இருபதுகளையே இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பொதுவாக என்ன விடயங்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்களோ, அவை எல்லாமே இருந்தது அவளிடம்.

இவை எல்லாம் நடந்துகொண்டிருந்த கணத்தில் நான் ஒரு அரைச்சொகுசுப் பேருந்தில் அவள் செல்லும் அதே பாதையில் சென்றுகொண்டிருந்தேன். கையில் சுஜாதாவிக் கடவுள்
“தற்போது எக்ஸ்டென்டட் சூப்பர் கிராவிட்டி என்று ஒன்று கொண்டுவந்திருக்கிறார்கள். அதை விளக்க ‘கிராவிட்டான்’, ‘க்ளுவான்’ போன்ற கற்பனைத் துகள்களை… “
என்று ஏதோ தெளிவாக்க முயன்று, தெளிவாகக் குழப்பிக்கொண்டிருக்க பக்கத்து சீட்டில் இருந்தவர் ஆரம்பித்தார்.
‘தம்பி’ நிமிர்ந்து பார்த்தேன்.
‘நேரம் என்ன?’ சொன்னேன்.
‘நிறைய வாசிப்பீங்களோ?, எத்தினையாம் நம்பர்?’
‘2’
‘ரண்டாம் நம்பர்க் காரர்தான் இப்படி ஏதாவது தேடிக்கொண்டே இருப்பாங்கள். என்ன சந்தேகப்புத்தி கொஞ்சம் கூட. ஏழாம் நம்பர்ப் பெட்டையாப் பாத்துக் கட்டுங்கோ தம்பி, அப்பதான் சந்தோஷமா இருக்கலாம்’
ஒரு புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு, ஜன்னலுக்கால் பார்வையைத் திருப்பியபோதுதான் அவளை எனது பஸ்சிற்குப் பக்கத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தபோது முதன்முதலில் தரிசித்தேன். பஸ்சிலிருந்தான பார்வைக்கோணம் காருக்குளிருந்த அவளைத் தெளிவாகக் காண்பிக்க, அடிவயிற்றில் பட்டாம்பூச்சி, தலைக்குமேல் பல்ப் என்று அத்தனை சகுனங்களும் சரியாக இருக்க இவள்தான் அந்த ஏழாம் நம்பராக இருக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொண்டபோது, பச்சை எரிந்து வாகனங்கள் வெவ்வேறு வேகங்களில் விரையத்தொடங்கியிருந்தன.

ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டு பஸ் பயண விதிகளின்படி இறங்குவதற்கு சிறிது நேரமே இருக்கையில் சரியாக எழுந்திருந்தேன். வெளியில் மழை பெய்துகொண்டிருக்க பஸ் ஹப்புத்தளையை அண்மித்துக்கொண்டிருந்த இருள் கவ்வத்தொடங்கியிருந்த மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று பஸ்சின் முன்னால் பெரிய சத்தமொன்று கேட்க, டிரைவர் பஸ்சை வலப்பக்கமாகத் திருப்பி, அவசரமாக பிரேக் போட்டு, மலைச்சுவற்றோடு உராய்ந்தபடி நிறுத்த கண்ணாடி உடைந்து சிதறியதில் எனக்குமேலும் துகள்கள் கொட்ட, பின்னாலிருந்த பெண் வீலிட்டாள்.

இறங்கிச்சென்று பார்த்தபோது பஸ்சுடன் முட்டியும் முட்டாமலுமாக மேலிருந்து உருண்டு விழுந்த ஒரு பெரிய பாறாங்கல் சமத்தாக வீற்றிருந்தது. அந்தப் பாதையில் மேலும் பல இடங்களில் மண்சரிவு என்பதை சற்று நேரங்களுக்கெல்லாம் வந்த தொலைபேசிக் குறுஞ்செய்தி உறுதிசெய்ய, சிறுவயதிலிருந்தே நன்று பழகியிருந்த இறப்பர்த்தோட்டங்களுக்குள்ளாக இறங்கி வீதியை ஒட்டியபடி வீட்டை நோக்கி நனைந்தவாறே நடக்க ஆரம்பித்த சிறிது தூரத்தில் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்
‘எக்ஸியூஸ்மி’ என்றது.
‘யெஸ்’ என்றவாறே திரும்பினேன். சிறிது தூரத்தில் அவள், அதே அவள் முழுவதுமாக நனைந்தபடி ஒடிவந்துகொண்டிருக்க, ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால் மனது பிரௌணியின் இயக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்க, தற்செயலாகத் திறந்துவிட்ட ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில் சிலையாகி, கனவா நனவா எனச் சுயசோதனை செய்துகொண்டு, சிலமுறை எச்சில் விழுங்கி, எனக்கே எனக்காக ஒருமுறை மூச்சுவிட முயன்று தோற்றுக்கொண்டிருக்க அருகில் வந்து
“லேண்ட் ஸ்லாப்பில் கார் மாட்டிட்டுது. நாளைக்குத்தான் எடுக்கலாம். இரவு தங்கறதுக்கு நல்ல ஹோட்டல் பக்கத்தில எங்கயாவது இருக்குமா?’ என்றாள்.

அவளைக்கூட்டிக்கொண்டு தங்குமிடம் தேடித்திரிந்ததில் நன்றாகக் கழைத்துவிட்டிருக்க, குளிர் வேறு உடம்பைக் குத்திக்கொண்டிருந்தது. அருகிலிருந்த ஹோட்டல்கள் எல்லாம் மண்சரிவின் புண்ணியத்தில் நிறைந்து வருமானம் பார்த்துக்கொண்டிருக்க, எஞ்சியிருந்த இரண்டாம்தர ஹோட்டல்களில் ஒரு பெண்ணாக அவள் தனியே தங்குவது சாத்தியப்படாது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
‘தெரிஞ்சவங்க வீடு ஏதாவது இருந்தாலும் பரவாயில்லை. அங்க தங்கிக்கலாம். அவங்களுக்கு நான் பே பண்ணிடறேன்’ என்று அவளே ஆரம்பித்தாள்.
‘உங்களுக்குப் பிரச்சினை இல்லேன்னா எங்க வீட்டுக்கும் வரலாம். அம்மாவும், தங்கச்சியும் இருக்கிறாங்கள்’ என்றதற்கு அவள் தலையை ஆட்டியபோது மனம் துள்ளிக்குதிக்க, ஏதோ ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் பெண் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைத்தாள்.

வீட்டாரின் சந்தேகப்பார்வையைத் தீர்த்து, சம்பிரதாயபூர்வ அறிமுகங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே தங்கையுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவள் பாடத்திலிருந்த ஏதோ ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைத்தாள். அம்மாவின் சாம்பாரை ர(ரு)சித்தாள். எமிலி டிக்கின்ஸன் கவிதைகளோடு வைரமுத்து கவிதைகளையும் ரசிப்பதாகச் சொன்னாள். தமிழில் பிடித்த எழுத்தாளர் சுஜாதா என்றும், தமிழில் அவரைத்தாண்டி அதிகம் வாசிப்பதில்லை என்றாள். மறுநாள் விதியில் கற்கள் ஒதுக்கப்பட்டு காரை வீட்டுக்கு எடுத்துவந்தபோது பலமுறை நன்றிசொன்னாள். தொலைபேசி இலக்கத்தைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றபோது மனதில் தைரியத்தை வரவளைத்துக்கொண்டு அவளது பிறந்ததினத்தைக் கேட்டுக்கொண்டேன்
ஏப்ரல் 7, 198*.

- தொடரலாம்.

23 comments:

கன்கொன் || Kangon on August 19, 2010 at 8:42 AM said...

-தொடரலாம் //

தொடரணும்...
ஆமா....

எண்டாலும் இந்தச் சிறுகதையை(அனுபவத்த) சாருவா எழுதினார்? ;-)

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... ;-)

(திகதி மட்டும் பிழை. ஏப்ரல் 7, 2010. திருத்திவிடவும். )

ம.தி.சுதா on August 19, 2010 at 9:52 AM said...

//..இலட்சங்களில் சம்பாதித்துக்கொண்டு தனது இருபதுகளையே இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் பொதுவாக...// கட்டாயம் தொடரணும் காத்திருக்கிறேன்... ஆனால் ஒன்று உதைக்கிறது சுபா.. 198* என்ன அர்த்தம்... எல்லாம் சரி 1987 ற்கு முன் இல்லாட்டி சரி ... பின்னர் கடைசியில் கரைச்சல் படுவோம்.

Prapa on August 19, 2010 at 9:54 AM said...

அருமை ராசா........... அருமை,,, . ரெண்டாம் நம்பர் காரனுகள் அபிடிதானாம், எனக்கும் சொல்லுவாங்க..

anuthinan on August 19, 2010 at 10:00 AM said...

கட்டாயமாக தொடரவும்!!

உண்மை கதைகள் எப்போதுமே ரசிக்க தக்கவை:P

S.M.S.ரமேஷ் on August 19, 2010 at 10:17 AM said...

சிறந்த ஆரம்பம்!மையமாக ரசிக்க ஆரம்பித்தேன்!தொடருங்கள், சம இடைவெளியில்!!நீண்ட இடைவெளி வேண்டாமே!என்ன நான் சொல்லுறது!

Bavan on August 19, 2010 at 10:18 AM said...

நான் 7ம் நம்பர் அப்ப எனக்கு 2ம் நம்பரில பாக்கோணுமோ? #சந்தேகம்..:P

தொடருங்க.. கடைசியில் டேட் ஒஃப் பேர்த் கலக்கல்ஸ்..;)

கன்கொன் || Kangon on August 19, 2010 at 10:22 AM said...

// Bavan said...

நான் 7ம் நம்பர் அப்ப எனக்கு 2ம் நம்பரில பாக்கோணுமோ? #சந்தேகம்..:P //

சொ.செ.சூ..... :D

டண்டணக்கா டணக்குணக்கா...
இனிப் பார்க்கத் தேவையில்ல பவன், குரே பார்க்கில தான் தெரிஞ்சிற்றுதே 7ம் இலக்கம் ஒத்துப்போனது... ;-)

Jana on August 19, 2010 at 12:56 PM said...

//அதே அவள் முழுவதுமாக நனைந்தபடி ஒடிவந்துகொண்டிருக்க, ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால் மனது பிரௌணியின் இயக்கத்துக்குப் போய்க்கொண்டிருக்க, //

பாடசாலை உயர்தரத்தில் பாடங்கள் சிலவே உங்கள் மனதில் கவிதைகளாக வேறு உவமைகள் கண்டதை ரசித்தேன்.
கதையின் சம்பவங்கள் வாசகர்களின் கற்பனைகளில் தொடரலாம். இந்தக்கதை இவ்வளவுதான். ஏனென்றால் மிக ஆனந்தமான மனநிலையில், சோவென்று பெய்யும் தொடர்மழையில் சிலித்துக்கொண்டே நினைவது போன்றது இந்தக்கதை.
ஒருமுறை நனைந்தாலே போதும்.

தர்ஷன் on August 19, 2010 at 1:17 PM said...

//ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவள் அங்கங்களின் எளிமையிசை இயக்கத்தால்//

நான் A/L செய்தக் காலத்தில் பின்புறத்தை ஒரு விதமாய் ஆட்டி நடக்கும் ஒரு பெண்ணுக்கு SHM என்றுதான் பெயர் வைத்திருந்தோம்.

கதை நன்றாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) on August 19, 2010 at 5:32 PM said...

கலக்கல் சுபாங்ஸ், எழுத்து நடை மிகவும் அருமையாக இருக்கிறது.

தெமாடருங்கள்

ARV Loshan on August 19, 2010 at 11:13 PM said...

வாவ்.. :) இளமையாக ரசித்தேன்..
சுஜாதா அடிக்கடி சுபாங்கனில் எட்டிப் பார்க்கிறார்..

இடம் மட்டும் மாறிவிட்டதோ?
அடிக்கடி வெளியூர்ப்பயணம் இதமாக இருக்கக் காரணம் இது தானோ?

பிறந்த திகதி ;)
ஆனால் எண்பதுகளின் முற்பாதியாக இருந்தால் ஆப்பு தான்.. ;)

ARV Loshan on August 19, 2010 at 11:14 PM said...

என்னாது பவன் ஏழாம் இலக்கமா? எங்கேயோ உதைக்குதே?
நாம் இருப்பது இலங்கையில் தானே?

Simple Harmonic Motion.. ;)
rewinding back to ALs..
Not only subjects but also SUBJECTS..

Kiruthigan on August 20, 2010 at 12:16 AM said...

தொடரலாம்...
:-)
வாழ்த்துக்கள்..

சம்பவம் அருமை...
நடந்தவற்றை மனக்கண்முன் அப்படியே கொண்டுவந்துவிட்டீர்கள்..
அந்த பெண் முஸ்லீமா?

வந்தியத்தேவன் on August 20, 2010 at 2:00 PM said...

ஹாஹா கலக்கல் நடையும் கதையும் சுபாங்கன் சுஜாங்கன் ஆகுகின்றார். (நன்றி லோஷன்).
80களில் என்றால் எனக்குத் தான் பொருத்தம் ஹிஹிஹி. ஆனால் எனக்கு 2 நம்பர்காரர்கள் பொருந்தாது. (பவன் கவனிக்க)

சிம்பிள் ஹார்மோனி மோசன் எங்கை எல்லாம் பயன்படுத்துகின்றார்கள்.

ஆதிரை on August 20, 2010 at 2:21 PM said...

அருமை...

அடுத்த பாகத்துக்காக காத்திருப்பு!!!

Mathuvathanan Mounasamy / cowboymathu on August 20, 2010 at 2:34 PM said...

சுபாங்கு,

இறுதிவரை வாசிக்கவைக்கும் எழுத்து நடை, சுவாரசியம்... இது தொடரவேண்டிய அவசியமுமில்லை. சம்பவம் அப்படியே மனத்திரையில் விரிகிறது.

டிலான் on August 20, 2010 at 8:55 PM said...

நல்ல கதை சுபாங்கன். "கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா இருக்கு"

ஜெகதீபன் on August 20, 2010 at 9:25 PM said...

"Not only subjects but also SUBJECTS.."

:P

பால்குடி on August 20, 2010 at 10:57 PM said...

அருமையான, இளமையான நடையில் எழுதியிருக்கிறீர். தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

Pradeep on August 21, 2010 at 11:52 AM said...

மிக அருமையான ஒரு எழுத்து நடை. வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி on August 22, 2010 at 1:42 PM said...

ரொம்ப நல்லா இருக்குங்க, தொடர்ந்து சொல்லுங்க

Vijayakanth on August 22, 2010 at 11:16 PM said...

KANNA 2VATHU LADDU THINNA AASAIYAA

ரவி on December 28, 2010 at 5:33 AM said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy