Wednesday, February 16, 2011

‘குஞ்சு’ பவன்


 

163467_1693480051349_1068214480_1961912_6636538_n

ஃபோட்டோ கொமன்ட் பவன் என்று பதிவுலகில் பலராலும் அறியப்பட்டவர் பதிவர் பவன். அதன் பின்னர் இவரது உல்டா கவிதைகளுக்காக பப்புமுத்து என்றும் நாமாகரணம் செய்யப்பட்டாலும் சில பல காரணங்களுக்காக இவருக்கு வைக்கப்பட்ட குஞ்சு பவன் என்ற பெயரே பலருக்குப் பிடித்துப்போனது, நிலைத்தும்போனது.

மொத்தமாக மூன்று கையடக்கத் தொலைபேசிகளுக்குச் சொந்தக்காரர். எங்கு சென்றாலும் மூன்று தொலைபேசிகளையுமே பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு செல்லும் இவர் மூன்றிலிருந்தும் மிஸ்ட்கால் மட்டுமே கொடுப்பார் என்பது கூடுதல் தகவல்.

சிறந்த ஒரு வேகப்பந்துவீச்சாளர். இவர் பந்துவீசும் பாணியை வைத்தும், இவரது தோற்றத்தை வைத்தும் இந்திய வீரர் இசாந் சர்மாவுடன் இவரை ஒப்பிடுபவர்கள் பலர். அது தனக்கு அவமானம் என்று கருதுகிறார் இவர் ;)

60454_1566049705670_1068214480_1703407_2731663_n

வெயிலோ, இல்லை குளிரோ இவரது அறையில் எந்நேரமும் ஒரு உஷா ஃபேன் சுற்றிக்கொண்டே இருக்கும்.

அண்மையில் தனது உயர்கல்வியை ஆரம்பித்திருக்கும் இவர் பகிடிவதையில் பகிடி மட்டுமே இருப்பதால் அது இப்போதைக்கு முடிந்துவிடக்கூடாது என்று கோணேஸ்வரப் பெருமாளை வேண்டிக்கொள்கிறாராம். நாளொன்றுக்கு பத்துப் பாட்டு, நாற்பது சல்யூட்டு என இவரது ‘பகிடி’ லிஸ்ட் நீள்கிறது.

புதிதாகக் கல்லூரியில் கிடைத்திருக்கும் நண்பிகளிற்கு பல விடயங்களையும் கற்றுக்கொடுக்கும் முக்கிய சுமை காரணமாகவே அண்மைக்காலமாக இவர் பதிவுகளை குறைத்துக்கொண்டிருப்பதாக நேற்றய கும்மியில் அறிவித்திருக்கிறார்.

58156609

விரல்வித்தை நடிகரின் பரம விசிறி. விண்ணைத்தாண்டி வருவாயாவிற்குப் பிறகு தூக்கிவிட்ட காலரை இன்னமும் இறக்காமலேயே சுற்றித்திரிகிறார் இவர்.

இவரது கம்யூட்டர் முதல் கனவு வரை அத்தனை இடங்களிலுமே எமா வட்சன் மயம்தான்.

53068610

அண்மைக்காலமாக இளையராஜாவின் காதல் பாடல்களை அதிகம் ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். யார் செய்த மாயமோ?

முன்பின் தெரியாத பெண் ஒருவர் கடையொன்றில் வைத்து “’நீங்கள் பதிவர் பவன்தானே?” என்று கேட்டதை இன்னும் பிறவிப்பயனாக நினைத்து மகிழ்கிறார்.

சுஜாதாவின் எழுத்து, வைரமுத்துவின் கவி வரிகள் எறு நீளும் ரசனைக்குச் சொந்தக்கார்ரான இவரது எதிர்கால இலட்சியம் ஒரு கிராஃபிக் டிசைனராவது.

இன்று இவருக்கு 21வது பிறந்தநாள் :)

எங்கள் குஞ்சு பவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

3204099568_b7ea29805f

18 comments:

கன்கொன் || Kangon on February 16, 2011 at 12:07 AM said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பவன்....

கலக்குங்கோ....

நிரூஜா on February 16, 2011 at 12:10 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவன்

ப்ரியமுடன் வசந்த் on February 16, 2011 at 12:10 AM said...

Happy Birth Day dear..Bhavan..

ம.தி.சுதா on February 16, 2011 at 12:21 AM said...

வாழ்த்துக்கள் பவன்..

கோணமலை பெற்ற கோப்பெரும் குல மகனே
நீ வாழி உன் கொற்றம் வாழி உன் புளொக் வாழி
(எல்லாம் பிளாஸ்டிக் வாளி)

வந்தியத்தேவன் on February 16, 2011 at 12:37 AM said...

அன்புத் தம்பி பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுதர்ஷன் on February 16, 2011 at 1:08 AM said...

பதிவர் பவனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)

SShathiesh-சதீஷ். on February 16, 2011 at 1:30 AM said...

//சில பல காரணங்களுக்காக இவருக்கு வைக்கப்பட்ட குஞ்சு பவன் என்ற பெயரே பலருக்குப் பிடித்துப்போனது, நிலைத்தும்போனது//

I want to knw the reason....pls tel me sinna maamaa

SShathiesh-சதீஷ். on February 16, 2011 at 1:31 AM said...

:)

vasu balaji on February 16, 2011 at 5:44 AM said...

pavanukku vaazhthugal:)

கன்கொன் || Kangon on February 16, 2011 at 6:19 AM said...

என்ன கொடுமை, இந்தப் பதிவை இன்ட்லியில் நகைச்சுவைப் பிரிவுக்குள் சேர்த்திருக்கிறார் சுபாங்கன் அண்ணா...

பவனெனடா அவ்வளவு நக்கலா?

ஷஹன்ஷா on February 16, 2011 at 8:09 AM said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா................
வருங்காலம் உன் வசம்...கலக்குங்கோ...

ARV Loshan on February 16, 2011 at 8:24 AM said...

வாழ்த்துக்கள் குஞ்சு.. நான் உன் ஊரில் வைத்து உனக்கு வைத்த பெயரே நிலைத்துப் போனதில் அப்படி மகிழ்ச்சி..

அருமையான வாழ்த்துப் பதிவு சின்ன மாமா ;)

ஷஹன்ஷா on February 16, 2011 at 12:30 PM said...

////நான் உன் ஊரில் வைத்து உனக்கு வைத்த பெயரே நிலைத்துப் போனதில் அப்படி மகிழ்ச்சி..////

பெயர் வைக்கப்பட்டதன் பின்னணி....?

நிரூஜா on February 16, 2011 at 1:44 PM said...

// நான் உன் ஊரில் வைத்து உனக்கு வைத்த பெயரே நிலைத்துப் போனதில் அப்படி மகிழ்ச்சி..
தமிழகத்திலும் உங்களைப்போல் பெயர் வைப்பதில் சிறந்தவர் ஒருத்தர் இருக்கிறான் :ஓ

Bavan on February 17, 2011 at 10:03 AM said...

அடங்கொய்யால.. என்னை இப்ப வீட்டயும் குஞ்சு பவன் எண்டுதான் கூப்பிடுறாங்கள்..:(

வாழ்த்துக்களுக்கும், ஆப்புக்களுக்கும், டவுசர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்களுக்கும் ரொம்ப நன்றி..;)

பின்னூட்டத்தில் வாழ்த்திய, ஏற்கனவே கிழிந்த டவுசரை டர்ர்ர்ர்ராக்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..:D

பிளாஸ்டிக் வாளி அனுப்பி வைத்த சுடுசோறு அண்ணைக்கும் நன்றி..:P

@லோஷன் அண்ணே - நீங்களும் உங்கட அந்த ரெரர் நண்பரும் மட்டும் கையில மாட்டட்டும்.. தப்பி ஓடிருவன் எண்டு சொல்ல வந்தன்..:P

தர்ஷன் on February 17, 2011 at 10:47 AM said...

தம்பி பவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) on February 18, 2011 at 7:16 PM said...

குஞ்சுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சமுத்ரா on March 16, 2011 at 6:36 PM said...

ean indha kolai veri?:)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy