Friday, March 6, 2009

கம்பி (வயர்) இல்லா மின்பாய்ச்சல்; திருட்டுத்தனமாக மின்னைப் பெறுவோருக்கு ஆப்பு!

16 comments




கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது.

60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.



வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம்கிறது தெரியும். நாங்க போடுற சத்தத்தோட அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இயற்கையா இருக்கிற அதிர்வெண்ணும் சமமா வாறப்ப இது நடக்கும். இத இங்கிலீசில Resonance எண்டு சொல்லுவாங்கள். இதத்தான் இங்கயும் பயன்படுத்துறாங்கள்.


இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக்கிறாங்கள். அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றதை மின்னோட தொடுத்து சுவத்திலயும் பொருத்தியிருக்காங்க. அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்யுது. அந்த அதிர்வெண்ணும், மின்சாதனத்துல இருக்கிற செப்புச் சுருளோட அதிர்வெண்ணும் சமமா வாறப்ப இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாயுது. இது Mobile phone சார்ச் பண்ணுறதுக்கும், Laptop, Robot க்கும் ரொம்ப உதவியா இருக்குமுன்னு சொல்றாங்க.



எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம். ஆனா இதுக்கு ரொம்பக் காலம் எடுக்கும். ரொம்பத் தூரத்துக்கு மின்னைப் பாயப்பண்ணுறதுக்கு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கணும்.

இதுல இன்னும் ஆராயப்பட வேண்டிய பிரச்சினைகளும் இருக்கு. அவை என்னண்ணா, உயர்வலுக் கொண்ட மின்னிற்கு இது சாத்தியப்படுமான்னு தெரியல. அதோட மின்னை இப்படிக் காத்துல பரவ விடுறதால மனிசனுக்கு ஏதாவது பிரச்சனை வருமான்னும் தெரியல.

இதுல கவலையான ஒரு விசயமும் இருக்கு. அது என்னண்ணா கம்பியில்லாத் தொழில்நுட்பத்திற்கு இலகுவா பாதுகாப்புக்கான கடவுச்சொல்( Password) பாவிக்க முடியும். அதனால திருட்டுத்தனமா மின்சாரத்தைப் பெறுவோருக்கு ஆப்புத்தான். அடுத்தவனோட சம்சாரத்தையும்சரி, மின்சாரத்தையும்சரி, திருட்டுத்தனமா எடுத்தவன் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது! ( என்ன பண்ணுறது?? அதுவா வருது!!!).

இதில எனக்கு இன்னுமொரு கவலையும் இருக்கு. Electrical Engineering படிச்சிட்டு வேலை கிடைக்காட்டா Wiring சரி செய்வமுன்னு பாத்தா அதுக்கும் விடமாட்டாங்க போல.


Wednesday, March 4, 2009

அரசியலாக்கப்பட்ட விளையாட்டு – கிரிக்கெட்

1 comments


இலங்கையில் அரசியலும் கிரிக்கெட்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இரு துறைகள் என்றே சொல்லுமளவிற்கு இரண்டிற்கும் இடையிலான உறவுகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட் ஆனது அரசியலுக்கு பெரிதும் உதவியாகவே இருந்துவருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிகள் அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இலங்கையிலுள்ள ஏனயோருக்கு வயிற்றில் புளியையே கரைக்கும். ஏனெனில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் எந்த ஒரு பாரிய வெற்றியைத் தொடர்ந்தும் பொருட்களின் விலை உயர்வு இருக்கும். அது இந்த வெற்றியின் மூலம் மறைக்கப்பட்டும் விடும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு, அதன் தலைமைத்துவம் போன்றவற்றில் அரசியல் சில வேளைகளில் தனது கைவரிசையைக் காட்டிவிடும். இதனால் வீரர்களின் திறமைக்கு அளிக்கப்படும் மதிப்புக் குறைவு எனக் கூறிவிட முடியாவிட்டாலும், அதன் தாக்கத்தை பல தடவைகளில் உணரமுடியும்.

இங்கே கிரிக்கெட் வீரர்களுக்கு வளங்கப்படும் மரியாதையும் மிகமிக அதிகம். ஒரு வீரர் பிரகாசிக்கத் தொடங்கியவுடனேயே இலங்கையிலுள்ள பிரபல நிறுவனங்கள் பலவற்றின் விளம்பரங்கள் பலவற்றில் சிரிக்கத் தொடங்கிவிடுவார். அவை அவரது ஒவ்வொரு அசைவுகளுக்கும் பாராட்டுத் தெரிவிப்பதுபோல தமது விளம்பரங்களை பிரபலமாக்கிவிடும். இந்தியாவிலும் இது இருந்தாலும், அங்கே விளம்பரங்களில் நடிகர்கள் பிடித்துக்கொண்ட இடத்தையும் இங்கே கிரிக்கெட் விட்டுவைக்கவில்லை.

இலங்கையில் உள்ளோரில் கிரிக்கெட் ரசிகர்களின் சதவீதம் பாரிக்கும் மேல். கிரிக்கெட் என்றால் அனைத்தையும் விட்டுவிட்டு அதனுடனே மூழ்கிவிடுவோர் பலர். எனது கம்பஸ்சிலும் கிரிக்கெட் போட்டிகளின் போது Lecture Hall இனை விட canteen இலுள்ள TV முன் இருப்போர் அதிகம். Lecture Hall இலும் கையடக்கத் தொலைபேசிமூலம் பலர் ஓட்ட விபரங்களோடு இணைந்திருப்பர்.


இந்த அரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று இலங்கை கிரிக்கெட் அணிமீது பாகிஸ்தானில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையருக்கு துப்பாக்கிச் சூடு ஒன்றும் புதிதல்ல என்றாலும் அது கிரிக்கெட் அணிமீது நடாத்தப்பட்டதும், ஆறு வீரர்கள் காயமுற்றதும் உலகிற்கே புதிது.

இதற்கு விளையாட்டு காரணமல்ல ஏனெனில் பாகிஸ்தான் அணி ஒன்றும் மோசமாக விளையாடவில்லை. இலங்கை அரசியல் பாகிஸ்தானில் எதிரொலிக்கச் சாத்தியமில்லை. எனவே இதற்குப் பாகிஸ்தான் அரசியலே காரணமென ஊகிக்கலாம். அங்கே வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என இந்தியக் கிரிக்கெட் அணி கூறிவந்ததை இது உறுதிப்படுத்திவிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இது சோதனைக்காலம். இனி எந்த ஒரு அணியும் பாகிஸ்தான் செல்லத் தயங்கும். இது அதனது வருமானத்தைப் பாதிக்கும்.

பாகிஸ்தானிடம் இலங்கை விரும்பி வாங்கும் ஒன்றாலேயே, பாகிஸ்தானிலேயே வைத்து வாங்கிக்கட்டுவோம் என இலங்கை கனவிலும் நினைத்திருக்காது.



Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy