Friday, March 6, 2009

கம்பி (வயர்) இல்லா மின்பாய்ச்சல்; திருட்டுத்தனமாக மின்னைப் பெறுவோருக்கு ஆப்பு!


கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது.

60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம்கிறது தெரியும். நாங்க போடுற சத்தத்தோட அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இயற்கையா இருக்கிற அதிர்வெண்ணும் சமமா வாறப்ப இது நடக்கும். இத இங்கிலீசில Resonance எண்டு சொல்லுவாங்கள். இதத்தான் இங்கயும் பயன்படுத்துறாங்கள்.


இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக்கிறாங்கள். அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றதை மின்னோட தொடுத்து சுவத்திலயும் பொருத்தியிருக்காங்க. அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்யுது. அந்த அதிர்வெண்ணும், மின்சாதனத்துல இருக்கிற செப்புச் சுருளோட அதிர்வெண்ணும் சமமா வாறப்ப இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாயுது. இது Mobile phone சார்ச் பண்ணுறதுக்கும், Laptop, Robot க்கும் ரொம்ப உதவியா இருக்குமுன்னு சொல்றாங்க.எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம். ஆனா இதுக்கு ரொம்பக் காலம் எடுக்கும். ரொம்பத் தூரத்துக்கு மின்னைப் பாயப்பண்ணுறதுக்கு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கணும்.

இதுல இன்னும் ஆராயப்பட வேண்டிய பிரச்சினைகளும் இருக்கு. அவை என்னண்ணா, உயர்வலுக் கொண்ட மின்னிற்கு இது சாத்தியப்படுமான்னு தெரியல. அதோட மின்னை இப்படிக் காத்துல பரவ விடுறதால மனிசனுக்கு ஏதாவது பிரச்சனை வருமான்னும் தெரியல.

இதுல கவலையான ஒரு விசயமும் இருக்கு. அது என்னண்ணா கம்பியில்லாத் தொழில்நுட்பத்திற்கு இலகுவா பாதுகாப்புக்கான கடவுச்சொல்( Password) பாவிக்க முடியும். அதனால திருட்டுத்தனமா மின்சாரத்தைப் பெறுவோருக்கு ஆப்புத்தான். அடுத்தவனோட சம்சாரத்தையும்சரி, மின்சாரத்தையும்சரி, திருட்டுத்தனமா எடுத்தவன் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது! ( என்ன பண்ணுறது?? அதுவா வருது!!!).

இதில எனக்கு இன்னுமொரு கவலையும் இருக்கு. Electrical Engineering படிச்சிட்டு வேலை கிடைக்காட்டா Wiring சரி செய்வமுன்னு பாத்தா அதுக்கும் விடமாட்டாங்க போல.


16 comments:

Anonymous said...

உங்க ஆராய்ச்சிகள் இங்கே வேண்டாம் anna.

Subankan on March 6, 2009 at 3:14 PM said...

ஆராய்ச்சிகள அல்ல, உண்மை !

சுபானு on March 6, 2009 at 5:38 PM said...

நல்ல பதிவு...
வாழ்த்துக்கள் சுபாங்கன் :)

சுபானு on March 6, 2009 at 5:41 PM said...

// Electrical Engineering படிச்சிட்டு வேலை கிடைக்காட்டா Wiring சரி செய்வமுன்னு பாத்தா அதுக்கும் விடமாட்டாங்க போல.

ஒவ்வொருக்கும் அவங்க அவங்க பிரச்சனைதான் முக்கியம் இல்லையா..

:)

Anonymous said...

useful message...

Karuthu Kandasamy on March 6, 2009 at 8:26 PM said...

Really ? (Nesammava ?)

Anonymous said...

This is proven in US, the researchers operated a laptop with wireless electricity (that’s how they r calling here). I saw this in TV news.

Anonymous said...

Tesler in U.S (who invented A.C current) proved it long before.

santhosh

யாத்ரீகன் on March 7, 2009 at 5:30 AM said...

interesting news.. now what happens when there's any other object with same frequency in the same area ?!

Subankan on March 7, 2009 at 12:23 PM said...

Yeah, he was over 200 years before. But now only they succeeded on it mr. Anonymous

Subankan on March 7, 2009 at 12:25 PM said...

These frequencies are affect only those copper coils and we can make control over that.

பட்டாம்பூச்சி on March 7, 2009 at 5:31 PM said...

தகவலுக்கு நன்றி.

Anonymous said...

Why Indian Tamil(not Jaffna)style in writing?

Subankan on March 8, 2009 at 7:24 AM said...

Because i've to encode my writing in a way most of my readers can able to decode it. I think that is a good practice in everything.

Sinthu on March 13, 2009 at 6:14 PM said...

"இதில எனக்கு இன்னுமொரு கவலையும் இருக்கு. Electrical Engineering படிச்சிட்டு வேலை கிடைக்காட்டா Wiring சரி செய்வமுன்னு பாத்தா அதுக்கும் விடமாட்டாங்க போல."
அதை எல்லாம் எங்கட நாடுகளுக்குக் கொண்டு வர நிறையா நாட்கள் ஆகுமே. அப்ப நீங்க கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லைத் தானே..

Tech Shankar on June 23, 2009 at 9:35 AM said...

s u p e r

//அடுத்தவனோட சம்சாரத்தையும்சரி, மின்சாரத்தையும்சரி, திருட்டுத்தனமா எடுத்தவன் நல்லா இருந்ததா சரித்திரமே கிடையாது! ( என்ன பண்ணுறது?? அதுவா வருது!!!).

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy