Tuesday, March 31, 2009

அயன் கதையும், ஆபீஸ் காமெடியும்!முதல்ல நான் இணையத்தில படித்துச் சுவைத்த ஒரு காமெடியைப் பார்த்துவிட்டு அப்புறமா ‘அயன்’ கதைக்குப் போகலாம்.

அது ஒரு ஆபீஸ். மதிய நேர உணவுக்குப் பிறகு வழமையாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கிற அது அன்று பரபரப்பாகக் காணப்பட்டது. எல்லோரும் கூடிக்கூடிப் பேசுவதும், சத்தமாக விவாதிப்பதுமாக இருந்தது.

அந்த ஆபீசுக்குப் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் அங்கிருந்த சிரேஸ்ர உழியர் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டனர். அதற்கு அவர் அந்தக் கம்பனி Boss ஐ யாரோ கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க 10 கோடி கப்பமாகக் கேட்பதாகவும், இல்லாவிட்டால் அவரைப் பெற்றோல் ஊற்றி எரித்துவிடப் போவதாக மிரட்டுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் ஊழியர்கள் அனைவரும் தங்களால் முடிந்ததைக் கொடுத்துதவப் போகின்றோம். நீங்களும் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் என்றார்.

அதற்கு அவர்கள் நிச்சயமாக, சராசரியாக ஒருவரிடமிருந்து எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்றனர்.

அதற்கு அந்தச் சிரேஸ்ட ஊழியர், சராசரியாக ஒருவருக்கு ஒரு லீட்டர் என்றார்???!!!

எவ்வளவு கடுப்போடு இருந்திருக்கிறார்கள் பாருங்கள். இனி அயன் கதைக்குப் போகலாம்.கதை தொடங்குவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். ஒரு குழுவினர் பாறைகளை வெட்டி எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெட்டும் ஆயுதங்கள் எல்லாம் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் அவர்கள் கண்ணுக்கு அது படுகின்றது.

ஆம் அது அயன்! அயனேதான்!!. அங்கேதான் (உலகிற்கு) அறிமுகமாகின்றது ஆங்கிலத்தில் அயன் எனப்படும் இரும்பு.

ஸ்டாப் ஸ்டாப்…..

ஸாரி, நீங்கள் சூர்யா நடிச்ச அயன் கதையையா எதிர்பாத்தீங்க? நான் சொல்ல வந்தது இரும்பு கண்டுபிடிச்ச கதையை. அப்படி எதிர்பார்த்து வந்தவங்களுக்கு அட்வான்ஸ் ஏப்ரல் பூல்!!!

உங்களை மாதிரியே அடுத்தவங்களும் ………… ஆக வேண்டாமா? அப்படீன்னா ஒரு ஓட்டைப் போட்டுட்டுப் போக மறந்துடாதீங்க.

ஒரு ஒற்றுமை பாத்தீங்களா? எலக்சனிலையும் இப்படித்தான் ஓட்டைப் போட்டு அடுத்தவங்களையும் ஏமாத்தப்போறீங்க.


11 comments:

Anonymous said...

அடப் போங்கப்பா...

Anonymous said...

:)

Anonymous said...

mokka mokka! virutha mokka! konjam yosichu nakkala, azhaka, styla, nachunnu ethavathu pannungappa! kadasila sonnathukkaka kissadikka kilampitathinga!

சென்ஷி on March 31, 2009 at 9:32 PM said...

:-))

Thusha said...

அண்ணா கவுத்துட்டிங்களே

Thusha
Bangladesh

கார்க்கிபவா on April 1, 2009 at 1:28 PM said...

அப்புறம் எதுக்கு சகா அயன் பட போஸ்டர்? :))))

Subankan on April 1, 2009 at 1:41 PM said...

Oh..... It's Hot ya...

Subankan on April 1, 2009 at 1:42 PM said...

// கார்க்கி said...

அப்புறம் எதுக்கு சகா அயன் பட போஸ்டர்? :))))//


அதுவா? ச்சும்ம்மா.

Bendz on April 1, 2009 at 6:59 PM said...

Nice office story.
Good laugh for your april fool :(
Nice blog and Keep it up.
:-)
Insurance

மங்களூர் சிவா on April 19, 2009 at 11:59 AM said...

இப்பிடி ஒரு மொக்கைய எதிர்பார்க்கலை நீ என் ஆளுடே!
நல்லா இரு. பெரிய ஆளா வருவ.

:)))

Subankan on April 19, 2009 at 12:02 PM said...

@ மங்களூர் சிவா

ரோம்ப நன்றிங்க

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy