Tuesday, March 10, 2009

21.12.2012 இல் உலகம் அழியப்போகிறதாம்!


முதலில் இதைப்பற்றி நண்பன் ஒருவன் Campus இன் மதியநேர அரட்டையின்போது சொன்னபோதுதான் அறிந்தேன். பின் தொடர்ந்துவந்த நாட்களிலும் அவன் இதைப்பற்றிப் பேசுவதும், அதைத் தொடர்ந்து வரும் விவாதங்களுமாக இருந்ததே தவிர நாங்கள் யாரும் அதைக் கணக்கிலும் எடுக்கவில்லை. நம்பவும் இல்லை. நேற்றுத்தான் Campus இன் Assignment ஒன்றுக்காக சில கோப்புக்களைப் பதிவிறக்கம் செய்யக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டு Facebook இல் மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் அவனின் Profile picture இனைப் பார்த்தேன். அதை Doom Day 2012 என மாற்றிவிட்டிருந்தான். சரி என்னதான் வருகிறது எனப் பார்ப்போமே என Google இல் Doom Day 2012 எனத் தேட முனைந்தேன்.


அவனது Profile picture.

ஏதோ ஒருசில முடிவுகளை எதிர்பார்த்த எனக்கோ ஆச்சரியம். இருந்து அத்தனையும் பார்த்திருந்தால் இன்னும் முடிந்திருக்காது. இந்த விடயத்தை நம்புகிறவர்கள் ஒருபுறமும், நம்பாதவர்கள் மறுபுறமுமாக போட்டுப் புரட்டி எடுத்திருந்தார்கள். சில Website களில் 21.12.2012 இற்கான Countdown வேறு.Youtube இலும் வேறு Video க்கள் மிரட்டுகின்றன. எப்படித்தான் அவ்வளவு அறுதியாக உலகம் அழியப்போவதாகக் கூறுகின்றார்கள்?

இதற்கு முதலாவது ஆதாரமாக மாயனின் கலண்டரைக் குறிப்பிடுகிறார்கள். இது கி.மு.3113ம் ஆண்டு தொடங்கப்பட்டதாம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் இன்றய விஞ்ஞான முறையினாற் கண்டறியப் பட்டவற்றோடு 94% ஒத்துப் போகிறதாம். அத்துடன் நாம் இன்று பயன்படுத்தும் நேரத்திற்கும், மாயனின் கலண்டரிலுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் 30 செக்கன் மட்டும்தானாம். அந்தக் கலண்டரின் இறுதித் திகதி 21.12.2012 ஆம். நீண்ட கால ஓட்டமுடைய கலண்டர் உலகத்தின் அழிவினோடுதான் முடிவடைகிறது என்கிறார்கள்.

இரண்டாவதாக இயற்கையில் எல்லாமே ஒரு வட்டப் பாதையிற்றான் நடக்கின்றதாம். சூரியன் காலும் சக்தியும் அப்படித்தான். 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் சூரியன் பூமியை நோக்கி அதிக சக்தியைக் காலப் போகிறதாம். அது செயற்கைக்கோள்கள் அனைத்தையுமே செயலிளக்கச் செய்யும் அளவிற்கு வலிமையாக இருக்குமாம் என்கிறார்கள் வானியல் நிபுனர்கள்.

மூன்றாவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பூமி தோன்றிய விதத்தைக் கண்டறியப் பரிசோதனை ஒன்று செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்பட்டு அதிவேகமாக மூலக் கூறுகளை மோதவிடப் போகிறார்கள். இது புவியின் உட்கட்டமைப்பையே பாதித்து புவியை அழிக்கும் அளவிற்கு சக்தியை வெளிவிடும் என பல விஞ்ஞானிகள் தெரிவித்துவருகின்றனர்.இதுவும் 2012 இன் பிற்பகுதியிலேயே நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நான்காவதாக பைபிளில் 2012ம் ஆண்டை Year of Armageddon எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடக்கப்போகும் ஆண்டு என கூறப்பட்டுள்ளது. சில சீன சமய நூல்களிலும், எகிப்தியரின் நூல்களிலும் கூட இதைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதாம்.

ஐந்தாவதாக உலகின் மிகப்பெரிய எரிமலையான அமரிக்காவின் Yellowstone தேசியபூங்கா அமைந்துள்ள எரிமலை 650,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்குமாம். அடுத்த வெடிப்பு 2012ம் ஆண்டாக இருக்கலாம் என்கிறார்கள். இது இப்போதே சாம்பலைக் கக்கத் தொடங்கிவிட்டதாம்.


எரிமலையின் வெப்பத்தால் வற்றிவரும் Yellowstone தேசியபூங்காவிலுள்ள ஏரி

ஆறாவதாக எண்கணிதவியலாளர்களின் கணிப்பின்படி 2012ம் ஆண்டு பாரிய மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாகவும், பாரிய உயிர்ச் சேதங்கள் தவிர்க்கமுடியாதது எனவும் கூறுகின்றனர்.

ஏழாவதாக புவியைச் சுற்றிக் காந்தப்புலம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அது புவியின் வட – தென் முனைவுகட்கிடையே உள்ளது. ஒவ்வொரு 750,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இம்முனைவுகள் இடம்மாற்றிக் கொள்ளும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 750,000ம் ஆண்டைக் கடந்து இன்றோடு 30,000 ஆண்டுகள் ஆகியும் அது நிகழவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இம் முனைவுகள் 20 – 30 km இனால் நகர்கின்றதாம். அத்துடன் நகரும் வேகமும் அதிகரித்து வருகின்றதாம். இவ்வாறு ஒரு எல்லையைத் தாண்டி நகரும்பொது புவியின் காந்தப்புலம் முற்றாக அற்றுப் போவதோடு அது மீள உருவாக 100 ஆண்டுகள் வரைகூட அகலாமாம். இவ்வாறு காந்தப்புலம் அற்றுப்போனால் கழியூதாக் கதிர்கள் (UV) இலகுவில் ஊடுருவி தோல் வியாதிகளை ஏற்படுத்துவதுடன் அதை மாற்றுவதும் கடினமாக இருக்குமாம். அத்துடன் காந்தப்புலம் இல்லாதவிடத்து ரேடியோ அலைத் தொடர்பாடலும் செயலிழக்குமாம்.

இதைப்பற்றி நாசா விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? 2012ம் ஆண்டு டிசம்பரில் பூமி, சூரியன் மற்றும் நமது பால்வீதியின் மையமான கரும்புள்ளி ஆகியன ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் வருகிறதாம். அப்போது பூமியின் காலயிலையில் பாரிய மாற்றம் நிகழுமாம். இந்த மாற்றம் எந்த அளவிற்கு இருக்கும் என எதிர்வு கூற முடியாதுள்ளதாம். அத்துடன் பூமியின் பௌதிகக் கட்டமைப்பே மாறலாம் என்கிறார்கள்.


நாசா வெளியிட்ட அந்தக் கருந்துளையின் புகைப்படம்.

இவை அனைத்தும் நான் இணையத்திற் சுட்டவை. எதற்குமே இணைப்புக் கொடுக்கவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் Doom day 2012 என Google இல் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறுதான் 2000ஆம் ஆண்டும் உலகம் அழியப் போகிறது என்றார்கள். இப்போது 2012. இதுவரை மனிதன் எதிர்வுகூறிய எந்த ஒரு இயற்கை அழிவும் நடந்ததும் இல்லை, நடந்த சுனாமி போன்ற இயற்கை அழிவுகளை மனிதன் எதிர்வு கூறவும் இல்லை.

இதை நம்பாதவர்கள் என்பக்கம் நில்லுங்கள். நம்புபவர்களில் ஆத்திகர்கள் கடவுள்மீதும், நாத்திகர்கள், நீங்கள் நம்பும் மனிதர்களாகிய விஞ்ஞானிகள் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாத போது 2012 எல்லாம் எதற்கு? எதுவாக இருந்தாலும் 2012 இல் தெரிந்துவிடப் போகிறது இல்லையா?

25 comments:

Anonymous said...

Whatever happens I hope U won't be able 2 control land,angels&gold ..which means People won't stabilize themselves..In such situation Rapid Climatic Changes ll worsen the situation..Anyhow we have 2 prepare 4 everything 2 survive DoomsDAY..Its a challenge!!!

Ungalranga on March 10, 2009 at 4:31 PM said...

வீண்வதந்திகளை நம்பாதீர்.
அத்தனை எதிர்ப்புகளையும் சமாளிக்கும் சக்தி நமக்கு உண்டு.
உங்களை நம்புங்கள்,பிறகு கடவுளை நம்புங்கள்.
2012ல் எதுவும் ஆகப்போவதில்லை.

Anonymous said...

ஆமாம் பூமியில் நிகழும் அநியாயங்களுக்கும் அநீதிகளுக்கும்
அதர்மங்களுக்கும் பூமி என்றோ ஒரு நாள் அழிய போகிறது பாருங்கள்

RAMASUBRAMANIA SHARMA on March 10, 2009 at 10:57 PM said...

பதிவு அருமை...இது 100% உண்மையா...!!!...என்பது தெரியவில்லய்...ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு...நம் கடமையை செய்வோம்...

ஊர்சுற்றி on March 10, 2009 at 11:53 PM said...

//மூன்றாவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பூமி தோன்றிய விதத்தைக் கண்டறியப் பரிசோதனை ஒன்று செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்பட்டு அதிவேகமாக மூலக் கூறுகளை மோதவிடப் போகிறார்கள். இது புவியின் உட்கட்டமைப்பையே பாதித்து புவியை அழிக்கும் அளவிற்கு சக்தியை வெளிவிடும் என பல விஞ்ஞானிகள் தெரிவித்துவருகின்றனர்.இதுவும் 2012 இன் பிற்பகுதியிலேயே நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.//

இந்த LHC சோதனை இந்த ஆண்டு இறுதிவாக்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2012 அல்ல.

அப்புறம், பைபிளில் எங்கேயும் 2012 பற்றி சொன்னதாகத் தெரியவில்லை.

Subankan on March 11, 2009 at 8:32 AM said...

//ஊர் சுற்றி said...

//மூன்றாவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பூமி தோன்றிய விதத்தைக் கண்டறியப் பரிசோதனை ஒன்று செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக பூமிக்கடியில் சுரங்கம் தோண்டப்பட்டு அதிவேகமாக மூலக் கூறுகளை மோதவிடப் போகிறார்கள். இது புவியின் உட்கட்டமைப்பையே பாதித்து புவியை அழிக்கும் அளவிற்கு சக்தியை வெளிவிடும் என பல விஞ்ஞானிகள் தெரிவித்துவருகின்றனர்.இதுவும் 2012 இன் பிற்பகுதியிலேயே நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.//

இந்த LHC சோதனை இந்த ஆண்டு இறுதிவாக்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2012 அல்ல.//

அது இந்த ஆண்டு தொடங்கினாலும் 2012 இல் தான் நிகழ்த்தப்பட உள்ளது.


// அப்புறம், பைபிளில் எங்கேயும் 2012 பற்றி சொன்னதாகத் தெரியவில்லை.
//

நான் பைபிள் படிக்கவில்லை. இணையத்திற் தான் அப்படி இருந்தது.

Ramanan Sharma on March 11, 2009 at 8:54 AM said...

This is a crap, don't believe in it :)

கிருஷ்ணா on March 11, 2009 at 9:20 AM said...

இதேபோலத்தான் 2012ம் ஆண்டளவில் அடுத்த உலகப்போர் இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் மையப்படுத்தி வெடிக்கும் என்று யாரோ ஒரு தீர்க்கதரிசி சொன்னதாக அண்மையில் படித்தேன். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியா வருமோ???

Subankan on March 11, 2009 at 1:02 PM said...

//இதேபோலத்தான் 2012ம் ஆண்டளவில் அடுத்த உலகப்போர் இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் மையப்படுத்தி வெடிக்கும் என்று யாரோ ஒரு தீர்க்கதரிசி சொன்னதாக அண்மையில் படித்தேன். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியா வருமோ???//

அவரும் அதே கூட்டல் கழித்தலில் தான் சொல்லியிருப்பார்

Mohan on March 11, 2009 at 1:09 PM said...

நல்லா கிளப்புராங்கப்பா பீதிய!

ஸ்ரீதர்ரங்கராஜ் on March 11, 2009 at 1:55 PM said...

நல்ல பதிவு .வித்தியாசமான கருத்து ,எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

Subankan on March 11, 2009 at 2:09 PM said...

// எழுத்துப் பிழைகளையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும். //

முடிந்தவரை தவிர்த்திருக்கிறேன். தமிழ் தட்டச்சு இன்னும் சிக்குகிறது.எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Anonymous said...

"இதை நம்பாதவர்கள் என்பக்கம் நில்லுங்கள். நம்புபவர்களில் ஆத்திகர்கள் கடவுள்மீதும், நாத்திகர்கள், நீங்கள் நம்பும் மனிதர்களாகிய விஞ்ஞானிகள் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாத போது 2012 எல்லாம் எதற்கு? எதுவாக இருந்தாலும் 2012 இல் தெரிந்துவிடப் போகிறது இல்லையா?"
இது நல்லா இருக்கிதே அண்ணா..

Aharmus on March 13, 2009 at 8:14 PM said...

Hi Subankan Anna!

Thanks for the threatening info.
You have brought up an unbelievable fact with many proofs which persuade me to believe though many people are against to this. As the “end of the world in 2000” is a foreshadow of the Tsunami, this can occur in 2012 or even after that, because we, human, are driving the extinction of the earth by our terrific activities and there are many incredible incidents are happening in the space sporadically and the earth has been facing numerous phenomenon. The facts you have given in comments make your blog even interesting. Keep up your great work!
-Hamshi

(May I post the translation of this blog in my blog, http://climatesurprise.wordpress.com, if you can allow me to do so?)

Subankan on March 13, 2009 at 8:36 PM said...

Thanks Hamshi, and of cause, you can publish it in your blog. And let me know after you publish it.

Aharmus on March 18, 2009 at 7:55 PM said...

Hi Anna!
I did publish the post about Doom Day 2012. I just want you to go through it.

Thanks

Hamshi

Subankan on March 20, 2009 at 1:52 PM said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் on April 16, 2009 at 6:17 AM said...

2012 - இதுபற்றி வாசித்திருக்கிறேன். நீங்கள் தொகுப்பாக அளித்திருப்பது பல தகவல்களை உள்ளடக்கி இருக்கிறது.

பூமியும் உயிரினங்களும் தோன்றுவதற்கு என்ன காரணம் இல்லையோ, அழிவதற்கும் என்ன காரணம் இருக்க முடியும் ? வெறும் இயக்கத்தின் செயல் மட்டுமே. கண்டுபிடிப்பெல்லாம் வீணாப் போகுதே என்பது மட்டும் தான் மனித இனத்தின் கவலையாக இருக்கும்.
:)

Unknown on August 19, 2009 at 7:04 AM said...

//"21.12.2012 இல் உலகம் அழியப்போகிறதாம்!"//
கேக்க்வே சந்தோஷமா இருக்கு

ஊர்சுற்றி on September 12, 2009 at 12:41 PM said...

//நாசா வெளியிட்ட அந்தக் கருந்துளையின் புகைப்படம்.//

என்று நீங்கள் கொடுத்திருப்பது நிச்சயமாய் ஒரு கருந்துளையாக இருக்கமுடியாது! கருந்துளையைப் கலர்க்லரா புகைப்படம் எடுக்க முடியாது.
நீங்கள் கொடுத்திருக்கும் படம் 'நெபுலா' வகையைச் சேர்ந்தது. இவை நட்சத்திரங்களின் ஆரம்பகட்டம் என பொதுவாக சொல்லுவார்கள்.

அந்த 7 காரணங்களையும் அழகாக தமிழில் எழுதியது நன்றாக இருந்தது.

ஊர்சுற்றி on September 12, 2009 at 12:45 PM said...

எனது முதல் பின்னூட்டம் இந்த இடுகையில் வெளியிட்டபோது, இந்த விசயத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேன். இப்போது படித்துப்பார்த்தால் தெரிகிறது.
அப்புறம் என்னுடைய பதிவை எழுதும்போது உங்களுடைய இந்த இடுகையை வாசித்ததை சுத்தமாக மறந்துவிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.

Unknown on October 15, 2009 at 9:07 PM said...

what a stupid thing is this? these are all rumours...

Unknown on November 14, 2009 at 1:28 PM said...

anyway every beginning has an end...whatever may be we ll face later....instead of doing this everyone in this world are confusing about this matter....lets leave and enjoy each and every second of our daily life.....

Narmu said...

anyway "Every beginning has an end" i believe in this quote...so anyway watever happens we ll take it in the same way...instead of doing this everyone in this world are confusing about this matter.....just leave off and enjoy each and every moment in our daily life.......

Anonymous said...

A friend of mine mentioned 2012 last night to me and it's the first I heard about it so I jumped on here out of curiosity. I think it's kind of sick and sounds like a bunch of skeptical jargon.
I choose to live every day like it is the last because let's be real, WHO THE HELL KNOWS what is going to happen or when it's your time to go on. The past is history, the future is a mystery and now is a gift, thats why it's called the present. It's not healthy to sit around and trip out about when you will die. Stop wasting your time you have now.
[url=http://2012earth.net/global_economic_crisis_2012.html
]mayan predicted
[/url] - some truth about 2012

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy