Sunday, March 8, 2009

Facebook வரமா? சாபமா?








Facebook ஆனது Social Network என்ற வகையறாவினுள் அடங்குகின்றது. அந்த வகையறாவினுள் அடங்கும் ஏனய வலைத்தளங்களை விட அதிக பாவனையாளர் கணக்குகளைக் கொண்டு முதலிடத்தை வகிக்கின்றது. இது 150 மில்லியன் பாவனையாளர் கணக்குகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் MySpace 130 மில்லியன் கணக்குகளோடு உள்ளது. Facebook இன் இந்த வெற்றிக்கு அதனுடைய User Friendly தன்மை காரணமாக இருக்கலாம். அத்துடன் அது பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக இறுக்கமான நடைமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அண்மையில் கூட அதன் Spam Users இருவருக்கு நீதிமன்றில் தண்டனை வாங்கிக் கொடுத்தது. ஏன், நான்கூட Copyrights உள்ள ஒரு Video இனை Facebook இல் Upload செய்ததற்காக ஒருமுறை எச்சரிக்கப்பட்டேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் எந்த இருவர் சந்தித்துக் கொண்டாலும் அவர்களது பேச்சில் Facebook கண்டிப்பாக இருக்கும் என அடித்துக் கூறக்கூடிய அளவிற்கு Facebook இன் பரம்பல் உள்ளது. அமரிக்க அதிபர் தேர்தலின்போது தற்போதய அதிபர் ஒபாமாவின் பிரசார உத்தியில் Facebook உம் ஒரு முக்கிய இடம் வகித்தது. எல்லா மட்டத்தினரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. Facebook இனுள் Login ஆனதுமே அதிலுள்ள விடயங்கள் எம்மை ஒரு Virtual World எனப்படும் ஒரு மாய உலகத்தினுள் இழுத்துச் சென்று விடுகின்றது. எமது எல்லாச் சிந்தனைகளையும் சிதறடித்து நேரம் போவது கூடத் தெரியாது அதனுடன் மூழ்கிக் கிடக்க வைத்துவிடும்.

எனவேதான் பல அலுவலகங்களில் இன்று அலுவலக நேரத்தில் Facebook பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டிருப்பதுடன் அதை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுத்துவருகின்றனர். இவ்வாறு நேரத்தையும் வீண்டிக்கும் Facebook இல் நல்ல விடயங்களும் செய்யமுடியும்.

முதலில் Facebook இல் நண்பர்களைத் தேர்வுசெய்வதில் அவதானமாக இருக்கவேண்டும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக கண்ணில் தட்டுப்படுவோரையெல்லாம் நண்பர்களாக்குவோர் பலர். சிலரோ பெண்களைத் தேடிப்பிடித்து நண்பர்களாக்குவர். அதை விடுத்து எம்மைப்போன்ற விடயங்களில் ஆர்வம் உள்ளோரையும், எமது துறையில் இருப்போரையும் நண்பர்களாக்கிக்கொண்டால் அவர்களிடமிருந்து எமக்குத் தெரியாத பல விடயங்களை அறியலாம். கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கலாம். Facebook இல் நிறையக் குழுக்கள் உள்ளன. அவற்றில் எமக்கு ஆர்வமுள்ள குழுக்களில் இணைந்துகொள்ளலாம். இவ்வாறான குழுக்களின் பக்கத்தில் Discussion Board எனும் பகுதி காணப்படும். இதில் உள்ள விடயங்களில் நாமும் சேர்ந்து அலசலாம். இல்லை, எமக்குத் தேவையான விடயங்களில் நாமே தலைப்பை உருவாக்கலாம். இதன்மூலம் தெளிவு பெறலாம்.

இதை விடுத்து வெறுமனே Chat பண்ணுவதற்கும், Games விளையாடுவதற்கும், Comments அடிப்பதற்கும், Status update செய்வதற்கும், நண்பர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் Facebook பயன்படுத்தினால் அது சாபமே. முடிந்தவரை வரமாகப் பாவிக்க முயலுங்கள்.

5 comments:

Subankan on March 9, 2009 at 8:42 AM said...

//Ramanan Satha said...

good post!//

Thanks Anna

Anonymous said...

"இதை விடுத்து வெறுமனே Chat பண்ணுவதற்கும், Games விளையாடுவதற்கும், Comments அடிப்பதற்கும், Status update செய்வதற்கும், நண்பர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் Facebook பயன்படுத்தினால் அது சாபமே. முடிந்தவரை வரமாகப் பாவிக்க முயலுங்கள்."

உண்மையாகவா? அப்படி என்ன சாபம் கிடைக்கும்?

Pranavan on April 27, 2009 at 5:49 PM said...

nice one machiii!

Subankan on April 27, 2009 at 5:52 PM said...

//
NPP said...
nice one machiii!//

thanks macho

சென்ஷி on May 26, 2009 at 7:11 PM said...

//sinthu on March 13, 2009 6:04 PM said...

"இதை விடுத்து வெறுமனே Chat பண்ணுவதற்கும், Games விளையாடுவதற்கும், Comments அடிப்பதற்கும், Status update செய்வதற்கும், நண்பர்களின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் Facebook பயன்படுத்தினால் அது சாபமே. முடிந்தவரை வரமாகப் பாவிக்க முயலுங்கள்."

உண்மையாகவா? அப்படி என்ன சாபம் கிடைக்கும்?
//

:-))

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy