Tuesday, July 14, 2009

இரு பெரும் பிஸ்தாக்களின் யுத்தம் – Microsoft vs Google

12 comments

Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.


இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.


இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்.

Monday, July 13, 2009

மறுபடியும்…

5 comments

மூணு மாச லீவுன்னு சொல்லிட்டு முழுசா மூணு வாரம் முடியறதுக்குள்ளயே வாடா வெண்ணைன்னுட்டானுங்க கம்பஸ் காரங்க.  ஏறத்தாள 400 நாட்களிற்கப்புறம் ஊருக்குப்போன சந்தோசத்தையும், பெற்றோரை, நண்பர்களை, ஆசிரியர்களை சந்தித்த கணங்களை தனிப்பதிவாக இடும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை.

 நான் இறுதியாகச் சென்றபோதிருந்த சங்கக்கடைகளின் கியூக்களையும், கடை வாசங்களில் இரண்டுமடங்கு விலையுடனான விலைப்பட்டியலையும் இம்முறை காண முடியவில்லை என்பதால் சிறிய சநதோசம் என்றாலும் ஏறத்தாள யாழின் அடையாளமாகவே இருக்கும் அந்தக் கலாச்சாரமும் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள கல்வியாளர்களின் கருத்து, நேரில் கண்ட உண்மையும் கூட. கொடுக்கப்போகும் விலை அதிகம்தான் என்பது புரிகிறது.

இம்முறை கப்பலில் பயணித்தது வித்தியாசமான அனுபவம். அதைப்பற்றி மட்டும் ஒரு பதிவு விரைவில் வரும், கொஞ்சம் நகைச்சுவையாக. மொத்தத்தில் பில்லா அஜித் பாணியில் நான் சொல்ல வர்றது என்னண்ணா, I Am Back!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy