Thursday, February 19, 2009

வாங்க பழகலாம் – 3 - இல்லையென்று சொல்லுங்கள்!

5 comments



என்னைக்கேட்டால் உலகத்திலயே ரொம்பக் கஸ்டமான வார்த்தை ‘இல்லை’ என்றுதான் சொல்லுவேன். ஒருத்தற்ற முகத்தைப்பார்த்து அந்த வார்த்தையைச் சொல்லும் தைரியம் எங்கள்ள ரொம்பப் பேருக்குக் கிடையாது. அடுத்தவன் என்ன நினைப்பானோ எங்கிற பயம்தான் காரணம். எல்லாருக்கும் தான் நல்லா இருக்கிறத விட, அடுத்தவன்கிட்ட நல்ல பெயர் வாங்குறதுதான் முக்கியமாக் கிடக்கு. தான் நல்ல பேர் வாங்குறது சுயநலம் எண்டா, அடுத்தவன்கிட்ட நல்ல பெயர் வாங்குறதுக்காக நடிக்கிறதும் சுயநலம்தான்.

உங்ககிட்ட நீங்களே கேட்டுப்பாருங்க. அடுத்தவங்க கிட்ட, அவங்க முகத்துக்கு நேராப்பாத்து ‘முடியாது’ங்கிற வார்த்தையை உங்களால சொல்ல முடியுமா? ரொம்பப் பேருக்கு முடியாது. அதனாலயே நாம எங்க சுயத்தை இழக்கிறோம்ன்னுதான் சொல்லணும். அப்படிச் செய்யிறதால நாம எங்க வேலையையும் முடிக்க முடியாம, அடுத்தவங்க கேட்ட வேலையிலயும் கவனம் செலுத்த முடியாப் போயிடும். இதனால உங்களுக்கும் நஸ்டம், அவங்களுக்கும் நஸ்டம். அதுக்குப் பதிலா உங்களால முடியாதுன்னு கூறி, அதுக்கான காரணத்தையும் சொல்லிட்டாப் புரிஞ்சுக்குவாங்க. முக்கியமா இந்தப்பண்பு தொழில்ல உயர்மட்டத்தில இருக்கிறவங்களுக்குத் தேவை.

ஒரு உதாரணத்தை எடுத்துக்குவம். ஒரு லீவு நாள்ள நீங்க வீட்டில இருக்கீங்க. அன்னிக்கு வீட்ல ஒரு முக்கியமான வேலை செய்யணுமுன்னு நினைச்சிட்டிருக்கீங்க. அந்த நேரம், உங்க நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட வந்து, ட்டிறஸ் செலக்ட் பண்ணணும், என்கூடக் கடைக்கு வாரியான்னு கேக்குறான். நீங்களும் ஆமான்னு சொல்லி, அவன்கூடப் போறீங்கன்னு வச்சுக்கங்க. உங்க நினைப்புப் பூரா நீங்க வீட்டில செய்ய வேண்டிய வேலை மேலயே இருக்கும். அதனால நண்பன்கூட ஒழுங்காச் சேர்ந்து ட்டிறஸ் செலக்ட் பண்ணவும் முடியாது. உங்க வீட்டு வேலையும் முடியாது. இதுக்குப் பதிலா, நீங்க ‘இல்லை மச்சான், இன்னிக்கு எனக்கு வீட்டில முக்கியமான வேலை இருக்கு. இன்னிக்கு விட்டா, இனி டைம் கிடைக்காது. இப்ப வர முடியாது. வேணும்னா ஈவிணிங் போகலாம்’ன்னு சொல்லிப்பாருங்க. அவங்களும் புரிஞ்சுப்பாங்க. உங்க வேலையும் முடியும். அதுக்காக எல்லா நேரமும் இல்லைன்னு சொல்லணுமுன்னு இல்லை. ஆனா, இல்லைன்னு சொல்லவேண்டிய இடத்துல ஆமான்னு சொல்லாதீங்க. என்ன புரிஞ்சுதா? இல்லைன்னா, இல்லைன்னு சொல்லிடுங்க.


Sunday, February 15, 2009

எனது நேற்றய காதலர்தினக் கொண்டாட்டம்!

9 comments


உங்கள்ள ரொம்பப்பேர் மாதிரி நானும் நேற்றய காதலர் தினத்தை ரொம்ப ஆவலா எதிர்பாத்திருந்தனான். ஒரு மாதத்திற்கு முன்னாடியே அதுக்கான ஆயத்தங்களைத் தொடங்கிட்டன். ஆனா நான் ரெடியானது என்ட காதலியோட காதலர்தினத்தைக் கொண்டாடவோ, இல்லைன்னா என்ட காதலைச் சோல்லவொ இல்லை. அந்தக் கொடுப்பனவுதான் எங்களுக்கு இல்லையே, ஆனா எந்தப் பிறவியில யாருக்குச் செய்த புண்ணியமோ, என்ட Friends ரொம்பப்பேர் லவ் பண்றாங்க. அவங்களோட Treat க்குத்தான் ரெடி பண்ணின்னான். இத வாசிச்சுட்டு எழுதுறவன் ஒரு பிச்சைக்காரப் பயல் எண்டு கட்டம் கட்டியிருப்பீங்களெண்டு தெரியும். ஆனா Slum dog millioner, நான் கடவுள் படங்களப் பாத்து பிச்சைக்காரர் மேலையும் ஒரு Soft side வந்திருக்கும் எண்டபடியால் பறவாயில்லை.

எங்கட Set இல ஒரு மூணு பேர் ‘செட்டிலாகாம’ இருந்தனாங்கள். அதில ஒருத்தனும் நேற்று செட்டிலாயிட்டான். மத்த ரெண்டு பேரில நானும் ஒருத்தன். . . . . ம்.. அடுத்த Valentines day க்காவது முயற்சிபண்ணிப் பாப்பம் ( வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்).

உலகத்துண்ட பொருளாதார நிலை காரணமாகவும், அவங்க ரொம்ப பிசியானதாலயும் எங்க Set இல இருக்கிற
‘செட்டிலானவங்க’ எல்லாம் ஒண்ணா சேர்ந்து Treat தர்றதுண்ணு முடிவு பண்ணிட்டாங்க. அதிலயும் ஒருத்தன் Love பண்ணின பிறகு தன்னோட செலவே Double ஆயிட்டுது எண்டு புலம்பிக் காசு போடல, படுபாவி, அதோட அருமை அவனுக்குத் தெரியல. கழுதைக்குத் தெரியுமா ……


Party க்கு Set இல எல்லாரும் வந்திருந்தாங்க. ஆனா தனியாத்தான். எங்க ரெண்டுபேரோட வயித்தெரிச்சலை ஏன் கொட்டிக்குவான் எண்டுதான் கூட்டிட்டு வரலியாம். சொன்னாங்க. ஆனா உண்மையான காரணம் எங்களுக்கில்ல தெரியும், படுபாவிங்க.

Party முடிஞ்சதுதான் தாமதம் எல்லாரும் எங்கள விட்டுட்டு Escape ஆயிட்டாங்க. அதுசரி, ஊரில எண்டா ஒழுங்கை வாசல்ல காவல் நிக்க ஒருத்தன் தேவை. இங்க நாம எதுக்கு.

எல்லாம் முடிய நான் எனக்குள்ள சொல்லிக்கொண்டது “எங்களுக்கும் காலம் வரும்”.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy