Sunday, February 15, 2009

எனது நேற்றய காதலர்தினக் கொண்டாட்டம்!
உங்கள்ள ரொம்பப்பேர் மாதிரி நானும் நேற்றய காதலர் தினத்தை ரொம்ப ஆவலா எதிர்பாத்திருந்தனான். ஒரு மாதத்திற்கு முன்னாடியே அதுக்கான ஆயத்தங்களைத் தொடங்கிட்டன். ஆனா நான் ரெடியானது என்ட காதலியோட காதலர்தினத்தைக் கொண்டாடவோ, இல்லைன்னா என்ட காதலைச் சோல்லவொ இல்லை. அந்தக் கொடுப்பனவுதான் எங்களுக்கு இல்லையே, ஆனா எந்தப் பிறவியில யாருக்குச் செய்த புண்ணியமோ, என்ட Friends ரொம்பப்பேர் லவ் பண்றாங்க. அவங்களோட Treat க்குத்தான் ரெடி பண்ணின்னான். இத வாசிச்சுட்டு எழுதுறவன் ஒரு பிச்சைக்காரப் பயல் எண்டு கட்டம் கட்டியிருப்பீங்களெண்டு தெரியும். ஆனா Slum dog millioner, நான் கடவுள் படங்களப் பாத்து பிச்சைக்காரர் மேலையும் ஒரு Soft side வந்திருக்கும் எண்டபடியால் பறவாயில்லை.

எங்கட Set இல ஒரு மூணு பேர் ‘செட்டிலாகாம’ இருந்தனாங்கள். அதில ஒருத்தனும் நேற்று செட்டிலாயிட்டான். மத்த ரெண்டு பேரில நானும் ஒருத்தன். . . . . ம்.. அடுத்த Valentines day க்காவது முயற்சிபண்ணிப் பாப்பம் ( வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும்).

உலகத்துண்ட பொருளாதார நிலை காரணமாகவும், அவங்க ரொம்ப பிசியானதாலயும் எங்க Set இல இருக்கிற
‘செட்டிலானவங்க’ எல்லாம் ஒண்ணா சேர்ந்து Treat தர்றதுண்ணு முடிவு பண்ணிட்டாங்க. அதிலயும் ஒருத்தன் Love பண்ணின பிறகு தன்னோட செலவே Double ஆயிட்டுது எண்டு புலம்பிக் காசு போடல, படுபாவி, அதோட அருமை அவனுக்குத் தெரியல. கழுதைக்குத் தெரியுமா ……


Party க்கு Set இல எல்லாரும் வந்திருந்தாங்க. ஆனா தனியாத்தான். எங்க ரெண்டுபேரோட வயித்தெரிச்சலை ஏன் கொட்டிக்குவான் எண்டுதான் கூட்டிட்டு வரலியாம். சொன்னாங்க. ஆனா உண்மையான காரணம் எங்களுக்கில்ல தெரியும், படுபாவிங்க.

Party முடிஞ்சதுதான் தாமதம் எல்லாரும் எங்கள விட்டுட்டு Escape ஆயிட்டாங்க. அதுசரி, ஊரில எண்டா ஒழுங்கை வாசல்ல காவல் நிக்க ஒருத்தன் தேவை. இங்க நாம எதுக்கு.

எல்லாம் முடிய நான் எனக்குள்ள சொல்லிக்கொண்டது “எங்களுக்கும் காலம் வரும்”.

9 comments:

Anonymous said...

கவலைப்படாதே,,சகோதரா...சரக்குகள் எதுவும் நிரந்தரமில்லை....;
கப்பல்கள் எதுவும் கரைசேரமுடியாது.....;
காதல் ஓடையில் புனிதப்படகினில் பயணிக்கலாம்....;
பொங்கிறவனுக்கு வீட்டுப்போங்கல்...;
விடுப்பு பார்க்கிறவனுக்கு ஊரேல்லாம் பொங்கலோ பொங்கல் !!!

Pranavan on February 15, 2009 at 9:54 PM said...

ஆமான்டா.... நமக்கும் காலம் வரும்!!!
அப்ப நாம காட்டுவோம், treatநா என்னன்னு.....
lolz

Subankan on February 16, 2009 at 8:22 AM said...

யாருப்பா அது அனானி? ஆனா நல்ல ஒரு கருத்து

Subankan on February 16, 2009 at 8:23 AM said...

பிரணவன், உங்களுக்குமா?

ARV Loshan on February 16, 2009 at 3:08 PM said...

ரொம்பத் தான் பீலிங் எண்டு விளங்குது.. தம்பி.. வேணாம் சொல்லீட்டன்.. கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்டு குழிக்குள்ள விழுந்திராதேயும். ;)

Subankan on February 16, 2009 at 3:18 PM said...

//LOSHAN said...

ரொம்பத் தான் பீலிங் எண்டு விளங்குது.. தம்பி.. வேணாம் சொல்லீட்டன்.. கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்டு குழிக்குள்ள விழுந்திராதேயும். ;)//
எல்லாம் ஒரு ஆசை தான் அண்ணா, போகப் போக சரிவரும்.
( இப்ப அப்பாண்ட காசில இல்ல வண்டி ஓடுது! )

Sinthu on March 13, 2009 at 7:05 PM said...

"அடுத்த Valentines day க்காவது முயற்சிபண்ணிப் பாப்பம் "
வாழ்த்துக்கள்....

Subankan on March 14, 2009 at 9:48 AM said...

நன்றி சிந்து

Aharmus on March 19, 2009 at 5:44 PM said...

Best of Luck Anna!
Treat பங்களாதேசுக்கும் அனுப்ப வரபோகுது. "அதிலயும் ஒருத்தன் Love பண்ணின பிறகு தன்னோட செலவே Double ஆயிட்டுது எண்டு புலம்பிக் காசு போடல, படுபாவி, அதோட அருமை அவனுக்குத் தெரியல. "அதை நீங்க நம்புறீங்களா?
Lolz!

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy