Friday, February 13, 2009

வாங்க பழகலாம் – 2



எனது முன்னய ‘வாங்க பழகலாம்’ இல நாங்கள் இன்னொருவரை முதலில் சந்திக்கும்போது அவரை எவ்வாறு அணுகலாம், எவ்வாறு அவரது நம்பிக்கையைப்பெறலாம் எங்கிறது பற்றியெல்லாம் ரெண்டு அமரிக்காக்காரங்க சொன்னதை எழுதியிருந்தேன். இன்னிக்கு இதில அடுத்தவங்க செயல்களுக்ககு நாங்க எப்படி React பண்ணலாம் எண்டு பார்ப்போம்.

பொதுவா மனிதனின்ட குணங்களை 3 வகையாப் பிரிக்கிறாங்க.




  • வலுச்சண்டைக்குப் போறவங்க (Aggressive)

  • அடங்கிப் போறவங்க ( Passive )

  • பிரச்சினையை சுமூகமா முடிக்கிறவங்க ( Assertive )

    ஒரு உதாரணத்திற்கு அரிசி வாங்கக் கியூவில நிக்கிறத எடுத்துக்கங்க. அப்ப ஒருத்தன் கியூவை மதிக்காம முன்னாடி போறான். அவன்கூட சண்டைக்குப் போவாங்க இதில முதலாவது வகைக்காரங்க. நிண்ற இடத்தில நிண்டு புலம்பி, வாய்க்கு வந்ததை எல்லாம் ஏசுறவங்க ரெண்டாவது வகைக்காரங்க. முன்னாடி போய், அவங்கிட்ட “ இதோ பாருப்பா, நாம கியூவில நிக்கிறப்ப நீ இப்படி முன்னாடி போறியே, உனக்கு ஏதாவது அவசர வேலை இருந்தாலும் நீ எங்ககிட்ட சொல்லிட்டுப் போகணும். இல்லண்ணா, கியூவில வரணும் ” எண்டு யார் மனசும் புண்படாமப் பேசுறவங்க மூணாவது வகைக்காரங்க.

    இந்த மூணாவது வகைக்காரங்க ஒரு Positive approach இருக்கிறவங்களா இருப்பாங்க. யாரோட மனசும் நோகாம சூழ்நிலைக்குப் பொருத்தமா முடிவேடுத்து நடப்பாங்க. நல்லது, கெட்டதை தெரிஞ்சு நடப்பாங்க. இவங்க பொதுவா மூணு விசயத்தைக் கடைப்பிடிப்பாங்க.


  • உனக்கு எது தேவைப்படுதோ, அது அடுத்தவங்களுக்கும் தேவைப்படும்!


  • உனக்கு இருக்குற உரிமைகள் அடுத்தவங்களுக்கும் இருக்கும்!


  • நீ ஒரு விசயத்தில் பங்குபெற வேண்டுமானால், அடுத்தவங்களும் அப்படியே!

    இப்படிச் செய்யிறதுக்கு மூணு விசயத்தைச் செய்தாலே போதுமானது, அவை


  • அடுத்தவங்க சொல்லுறதக் கவனமாக் கேளுங்க


  • உங்க கருத்தையும் அவங்களுக்கு விளங்குற மாதிரிச் சொல்லுங்க


  • உங்களுக்குச் சரி எண்டு படுறதைத் துணிவாச் செய்யுங்க

    ஆனா இப்படி மூணாவது வகையைக் கடைப்பிடிக்கிறதுக்கும் தடயாச் சில விசயங்களும் இருக்கு. அவை என்னண்ணா,


  • நம்மளோட கலாச்சாரம்


  • ஆண், பெண் வேறுபாட்டு மனப்பாண்மை


  • அடிப்படை மனிசனோட இயல்புகள்

    இவையெல்லாம் எங்கட ரத்தத்திலயே ஊறின விசயங்கள். இவற்றை உடச்சிட்டு வெளியில வாறது கொஞ்சம் கஸ்டம்தான். ஆனா முயற்சி பண்ணினா முடியாத்து ஒண்ணுமில்லை.

    இதையெல்லாம் ஒரு Summary யாச் சொல்லணுமுன்னா, முதலாவது வகைக்காரங்க தாங்களும் தோத்து மத்தவங்க மனசையும் தோத்துடுவாங்க. ரெண்டாவது வகைக்காரங்க தாங்க தோத்துடுவாங்க, ஆனா அடுத்தவங்க மனசை வென்றிடுவாங்க. மூணாவது வகைக்காரங்க தாங்களும் வென்று அடுத்தவங்க மனசையும் வென்றிடுவாங்க.

    இப்ப சொல்லுங்க, நீங்க எந்த வகையா இருக்க விரும்புறீங்க?

6 comments:

கார்த்தி on February 13, 2009 at 12:20 PM said...

தம்பி நான் வலுச்சண்டைக்குப் போறவங்க (Aggressive) வகையா இருக்க விரும்பிறன்.

வித்தியாசமான ஆக்கங்கள் வாழ்த்துக்கள்.
ஒரு Advice நீங்க புது பதிவுகளை இடும்போது FBல் Post பண்ணலாமே. எல்லாருக்கும் அப்ப நீங்க புதுசா போட்டது தெரியும்.

Subankan on February 14, 2009 at 12:44 PM said...

sure

Subankan on February 14, 2009 at 12:44 PM said...

Danx amma

Ganeshananth on February 14, 2009 at 3:16 PM said...

நீயா எழுதினாய் ? நல்லாய் இருக்கே ..

Subankan on February 15, 2009 at 12:07 PM said...

ஏன்? நம்பலையா?

Sinthu on March 13, 2009 at 7:25 PM said...

எனக்கு உபயோகமாக இருக்கிறது. நன்றி..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy