Monday, February 23, 2009

ஆஸ்கரை வென்றார் ரஹ்மான்; சந்தோசங்கள் சில, சங்கடங்கள் சில!சினிமா உலகில் அதியுயர் விருதான, அனைவராலும் எதிர்பார்க்கப்படும்ஆஸ்கர் விருது, இம்முறை எமக்கெல்லாம் மேலும் ஒரு விசேசமாக A. R. ரஹ்மானும் போட்டியில், அதுவும் முன்னணியில் இருந்ததால் எம்மவர்மத்தியில் பரபரப்புக் கூடிவிட்டது. ஒன்றல்ல, இரண்டு விருதுகளைத்தட்டிச்சென்று விட்டார்.

A. R. ரஹ்மான் ஒரு தமிழர் என்பதே எம்மையெல்லாம் பெருமைகொள்ளச்செய்கின்ற ஒரு விசயம். அவர் முதன்முதல் அறிமுகமானது ஒருதமிழ்ப் படத்தில். இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு, பெருமைப்பட? அதுவும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழிலே கூறி விருதைப்பெற்றுக் கொண்டபோது தமிழர்கள் அனைவருக்கும் நிச்சயமாகப்புல்லரித்திருக்கும். ஆங்கில மேடையில் ஒலித்த இன்னுமொரு தமிழ்க்குரல். நடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், ஆஸ்கர் விருது ஒருஅமெரிக்கத்தரம் என்று. அந்த அமெரிக்கத்தரத்தையே அடைந்துவிட்டார் ஒருதமிழர்! நிச்சயமாக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விடயம்தான்.

என்னைப் பொறுத்தவரை நான் A. R. ரஹ்மானின் ஒரு வெறியன் என்றேசொல்லலாம். அவர் இசையமைத்த அத்தனை தமிழ்ப் பாடல்களையும் சேமித்துவைத்துள்ளேன். ஏழு கழுதை வயதாகியும் இன்னும் அவரது பாடல்கள்தான்எனக்குத் தாலாட்டு. அவரது மெல்லிய இசை இழையோடும் மெலடிப்பாடல்களாக இருந்தாலும் சரி, இல்லை சிவமணியின் ட்றம் இசை அதிரும்அதிரடியான பாடல்களாக இருந்தாலும் சரி, அத்தனையும் ரசிக்கலாம். உண்மையான திறமைக்கு மதிப்பு எப்போதும் உண்டு என இந்தவிருதின்மூலம் உணர்த்திவிட்டார்.


மறுபுறம் பார்த்தால், A. R. ரஹ்மான் வேறு மொழிகளில் பிரபலமாகத்தொடங்கியபின் அவர் இசையமைக்கும் தமிழ்ப் படங்கள் குறையத் தொடங்கின. அவர் முக்கியமாக ஹிந்திப் படங்களில் தனது கவனத்தைச் செலுத்தியதால்அண்மைக் காலங்களில் வருடத்திற்கு ஓரிரு தமிழ்ப் படங்கள் மட்டுமே இவரதுஇசையில் வெளியாகி வந்தது.

இப்போது ஆஸ்கரும் கிடைத்துவிட்டது. இந்த விருதானது Holliwood உலகின்கதவுகளை அவருக்கு அகலத் திறந்து விட்டிருக்கும். இனி அத்திபூத்தாற்போல்தான் அவரது தமிழ்ப் படங்கள் இருக்கும். அவரோ இனி உலகசினிமாவின் சொத்து. அவருக்கு டாலர்கள்தான் இனி உழைப்பு. உலகத்தவருக்கு எல்லாம் இனி அவர் பெயரால் ஆங்கில இசை மழை பொழியப்போகிறது. ஆனால் தமிழ்? அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

அவரது ரசிகர்களான நாமெல்லாம் இனி அவரது தமிழ் இசைக்காகத் தவம் கிடக்கவேண்டியதுதான். ஆங்கிலப் படங்களின் முடிவில் எழுத்துக்களின் ஓட்டத்தில், ஏதாவது ஒரு வரியில், கறுப்புப் பின்னணியில், வெள்ளை எழுத்தில் இருக்கும்அவரது பெயருக்குக் கைதட்டி, விசில் அடித்துப் பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். நானும் இனி ஆங்கிலத் தாலாட்டுக் கேட்கப் பழகிக்கொள்ளவேண்டியதுதான். என்னதான் நடந்தாலும் அவர் எம்மவர். காத்திருப்போம், எப்போதாவது வரும் அவரது தமிழ்ப் படத்திற்காக!

11 comments:

Anonymous said...

நாமும் அவர் இசையமைக்கும் ஆங்கிலப் பாடல்களை கேட்க பழகிக்கொள்வோம். இசைக்கு மொழி ஒரு தடையில்லையே! நம் தமிழர் ஹாலிவுட்டை கலக்கும் போது நமக்கு பெருமைதானே. காற்றுக்கு வேலியில்லை, இசைப்புயலின் இசைக்கு மொழியில்லை..

புருனோ Bruno on February 23, 2009 at 5:51 PM said...

//அவரது ரசிகர்களான நாமெல்லாம் இனி அவரது தமிழ் இசைக்காகத் தவம் கிடக்கவேண்டியதுதான். ஆங்கிலப் படங்களின் முடிவில் எழுத்துக்களின் ஓட்டத்தில், ஏதாவது ஒரு வரியில், கறுப்புப் பின்னணியில், வெள்ளை எழுத்தில் இருக்கும்அவரது பெயருக்குக் கைதட்டி, விசில் அடித்துப் பெருமைப் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். நானும் இனி ஆங்கிலத் தாலாட்டுக் கேட்கப் பழகிக்கொள்ளவேண்டியதுதான்//

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் ... பார்க்கலாம்...

எல்லாம் இறைவன் செயல்

Maximum India on February 23, 2009 at 6:13 PM said...

// நம் தமிழர் ஹாலிவுட்டை கலக்கும் போது நமக்கு பெருமைதானே. காற்றுக்கு வேலியில்லை, இசைப்புயலின் இசைக்கு மொழியில்லை..//

வழிமொழிகிறேன்

பதிவு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

வேத்தியன் on February 24, 2009 at 10:10 AM said...

சரியாக சொன்னீர்கள் சுபாங்கன்...
என்ன இருந்தாலும் அவர் எங்களின் சொத்து...
வருடத்துக்கு ஒரு தமிழ் படம் வந்தாலும் அது கலக்கலாகத்தான் இருக்கும்...

சி தயாளன் on February 24, 2009 at 5:31 PM said...

ரகுமான் மேலும் சிகரங்கள் தொடட்டும்..:-)

Sinthu on March 13, 2009 at 6:28 PM said...

நம்மவரில் ஒருவர் எம்முள் இருந்தால் சந்தோசம் தானே, இல்லையா?

Subankan on March 14, 2009 at 9:49 AM said...

நிச்ச‍யமாக‌

Anonymous said...

nice post.

Anonymous said...

கவலைப் படவேண்டம் சீக்கிரமே ஓரங்கட்டப்பட்டு, ரிட்டயர் ஆகும் போது அவருக்கு கை கொடுக்கப்போவது தமிழ் படவுலகம் தான்.

Anonymous said...

Good riddance.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy