
இன்று
காதலின் நாள்
அன்றைக் காதவரைக்
கைகோர்த்து விட்டவனின்
கடைசி நாள்
இன்றைக் காதலரின்
இதயம் மறந்துவிட்ட - அவன்
இறுதிநாள்
இன்று
பூ வியாபாரிகட்கோ பொன்நாள்
காதலர் மனம்கவர்ந்த
களியாட்டக்கடைகட்கு நன்நாள்
பார்க்கிலோ பெஞ்களிற்குப்
பற்றாக்குறை ஆகும்நாள்
பீச்சின் வியாபாரிக்குச் சுண்டல்
மிஞ்சாத ஓர்நாள்
இன்று
கலாச்சாரக் காவலற்குக் கரிநாள்
காக்கிச் சட்டைக் காரருக்கோ
கடமை கூடும்நாள்
அப்பாமார் அடிவயிற்றை
அரிக்கும் நாள் - அவர்
பாக்கட்டின் பணத்தையும்
சேர்த்தே பறிக்கும்நாள்
இன்று
காதல் சோல்ல இருப்போர்க்குச்
சோதனைநாள் - அதைச்
சொல்லித் தோற்றவர்க்கோ
வேதனைநாள்
வென்று விட்டவரோ வெளியில்
'வேலையாய்' அலையும்நாள் - வெறும்
என்னைப் போன்றவர்க்கோ
எப்போதும்போல் ஓர்நாள்
2 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல்
சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி
பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை
எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன்
பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ்
வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
உங்களுக்குத் தான் நண்பர்களின் treat வரும் நாளாச்சே. அப்போ இது உங்களுக்கு ஓர் special ஆனா நாள் என்று சொல்லுங்கோ.
Post a Comment