Sunday, February 22, 2009

சிங்கள பைலாவும், சிகிரிய ஓவியமும்!




நேற்று சனிக்கிழமை எனக்கு ஒரு மறக்கமுடியாத நாள். எனது கம்பஸ்சில் Electrical Engineering படிக்கும் அனைவரும் சேர்ந்து சென்ற சுற்றுலா அந்த நாளை அப்படி மாற்றிவிட்டது. நேற்று அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாலும், எனது வீடு கம்பஸ்சிலிருந்து தொலைவில் இருந்ததாலும் முதன்நாள் வெள்ளிக்கிழமை இரவு எனது சிங்கள நண்பர்களோடு தங்கவேண்டி ஏற்பட்டது. அன்றுதான் கொழும்பின்மீது விமானக் குண்டுவீச்சு நடாத்தப்பட்டது. முதலில் குண்டுவீசப் பட்டதாக செய்தி வெளியானபோது அவர்கள் என்னை முறைக்கவும் இல்லை, பின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது என்னை ஏழனமாகப் பார்த்துச் சிரிக்கவும் இல்லை. நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது.


திட்டமிட்டபடி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டோம். பஸ்சில் கும்மாளத்திற்குக் குறைவில்லை. அவர்களின் பைலா இசையுடனான சிங்களப் பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தார்கள். அவற்றை trip களில் கண்டிப்பாக ரசிக்க முடியும். தமிழ்ப் பாடல்களைப் பாடும் பொறுப்பு என்னுடையது. எனது அறிவிற்கு ஒருசில பைலா இசையுடன் பாடக்கூடிய தமிழ்ப் பாடல்களே நினைவிற்கு வந்தன. அதனால் வேறு வழியில்லாமல் எனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்களை பைலா இசைக்கு இசைக்கலவை செய்து பாடவேண்டி ஏற்பட்டது. தமிழ் இசையமைப்பாளர்கள் மன்னிப்பார்களாக.

காலை உணவிற்காக ஒரு நண்பனின் விட்டில் இறங்கினோம். அதத வீடு எனச் சொல்வதை விட ஒரு காடு எனச் சொல்லலாம். வீட்டைச்சுற்றி ஒரே மரங்கள். அத்தனையும் பயன்தரு மரங்கள். தனது வீட்டில் இல்லாத, இலங்கைப் பழ மரமு ஒன்றைச் சொல்லும்படி சவால் விட்டான். கொஞ்சம் கஸ்டம்தான். அங்கே மரத்திற்கு மேலும் ஒரு மர வீட்டை அமைத்திருந்தார்கள். அருமையாக இருந்தது.


அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 1 மணியளவில் சிகிரியாவைச் சென்றடைந்தோம். அங்கே மதிய உணவை முடித்துவிட்டு, மலை ஏறத் தயாரானோம். மலை அடிவாரத்துக்குச் செல்ல ஏறத்தாழ 1 Km தூரம் நடந்து செல்ல வேண்டும். இருபுறமும் அடர்காடு. மலை அடிவாரத்திற்குச் செல்வதற்கு பிரவேசக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அகழிகளைக் கடந்து உள்ளே நுளைகிறோம் 9. அது சிகிரியாவை ஆண்ட காசியப்ப மன்னனின்(அந்தக் காலத்தில் இந்த அகழியைக் கடக்கத்தான் எத்தனை போர்கள்?) அரண்மனைத்தோட்டம். சிதைந்துகிடந்த அக் கட்டடங்களைக் கடந்து மலையில் ஏறத் தயாரானோம். அது படுத்திருக்கும் சிங்கத்தின் வடிவிலான மலை. சிங்கத்தின் கால்களிற்கிடையாற் செல்லும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினோம். அங்கே குளவிகளின் தொல்லை அதிகம். ஒலியெழுப்பல் குளவிகளைச் சீண்டிவிடும் என்ற வாசகம் ஆங்காங்கே கணப்படுகின்றது. ஆளுயரக் குளவிக் கூட்டைப் பார்த்த நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.




மேலே ஏறிச்சென்று பாடப்புத்தகங்களில் மட்டுமே நான் பார்த்த சிகிரிய ஓவியங்களை நேரில் பார்த்தேன். படித்த காலத்தில் அவை மீது ஒரு ஈர்ப்பு எனக்கு இருந்தது. பின் லியனாடோ டாவின்சியின்லெடாபோன்ற ஓவியங்களைப் பார்த்த பிறகு அது குறைந்துவிட்டது. படத்தைப் பார்த்து ஏதாவது புரிந்துகொள்ளுங்கள்.





பின் மலை உச்சியைச் சென்றடைந்தோம். அங்கேதான் காசியப்ப மன்னனின் அரண்மனை இருந்ததாம். இப்போது சிதைவுகள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன. அந்தக் கால அரன்மனைப் பெண்கள் குளிக்கும் தடாகம் அப்படியே இருக்கின்றது. அங்கிருந்த காசியப்ப மன்னனின் அரியாசனத்தில் அமர்ந்த போது…… ….. ஒரு மன்னனின் பெருமிதம் என்னிடம்.





மலையாலே இறங்கி அடுத்ததாக தம்புள்ள விகாரையைச் சென்றடைந்தோம். மலையைக் குடைந்து விகாரை அமைத்திருந்தார்கள். ஆனால் அதை அடைய சிறிது தூரம் மலையில் ஏறித்தான் செல்ல வேண்டும். போகும் வழியில் குரங்குகளின் தொல்லை அதிகம். போவோர் வருவோர் கொண்டுவரும் பூக்களைப் பறிப்பதுதான் அவற்றின் பொழுதுபோக்கு.







அந்த விகாரையின் நடுவில் ஒரு பாத்திரம். அதில் மலை இடுக்குகளினூடு கசிந்துவரும் நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறது. வருடம் முழுவதும் அது மாறா வீதத்தில் சொட்டுமாம். எல்லாம் அதிசயம்தான்.













அங்கிருந்து இறங்கிவரும்போது இலங்கையின் பெரிய சமாதிநிலைப் புத்தர் சிலையையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. Golden Temple என அது இருக்கும் விகாரை அழைக்கப்படுகிறது. அந்தப் புத்தர்சிலை, தாதுகோபம் என்பன தங்க நிறத்தில் மின்னுகின்றன.









அங்கிருந்து புறப்படும்போது நன்றாக இருட்டிவிட்டது. இரவு 10 மணியளவில் இரவு உணவிற்காக பஸ்சை நிறுத்தியபோது, இறங்கி வீதியோரத்தில் போட்டோம் ஒரு இசைநடனக் கச்சேரி, அந்த இரவில் அயலில் இருந்தோருக்கு நான் கடவுள் படத்தில் ஆர்யா இரவில் உடுக்கை அடித்த அதே Effect ஏற்பட்டிருக்கும். இரவு உணவை அருகிலிருந்த கடையில் முடித்துவிட்டு, இரவு 12.30 மணியளவில் வந்து சேர்ந்தோம். அந்த 20 மணி நேரமும் அனைவரும் புறப்படும் போதிருந்த அதே உற்சாகத்தோடும், பாட்டுக்களோடும் பயணித்தது அருமை, மறக்கவே முடியாதது!.

3 comments:

Ramanan Sharma on February 22, 2009 at 6:29 PM said...

Its a great pleasure to see you blog buddy!
Keep up the good work!!
-- Ramanan

Pranavan on February 22, 2009 at 7:19 PM said...

நீ சொல்லும் விடயத்தை மிக அழகாககச் சொல்கிறாய். அதனால் வாசிப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது!!!

Subankan on February 23, 2009 at 5:32 PM said...

Thanks for both

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy