Tuesday, June 2, 2009

சரக்கு…
இது படத்தில இருக்கிற சரக்கு பத்தி இல்லீங்க, ஆளாளுக்கு காக்டெயில், சக்கர பொங்கல், அவியல், சட்டினி, சாம்பார் என்று எழுதுறாங்க. நாமளும் நம்மால முடிஞ்சத பாக்காமேன்னுட்டு …

முதல்ல ஒரு கவலை..ப்ளாக் எழுதறவங்கள்ள ரொம்ப பிரபலமா இருக்கிறவங்க எல்லாம் குடும்ப இஸ்திரிகள், நம்ம கார்க்கி அண்ணாவைத் தவிர. சரி, நாமளும் பிரபலமாகணும்னா மேரேச் பண்ணறதுதான் ஒரே வழின்னுட்டு நம்ம பேஸ்புக்கிட்ட போயி கேட்டேன், எப்பப்பா நமக்குக் கண்ணாளம்னு, படுபாவிப்பய, முப்பத்தேழு வயசிலன்னுட்டான். இப்பதாங்க நமக்கு 22 ஆவுது

**********************************************

ஒரு ஜோக்


சரக்குன்னு போட்டுட்டு சரக்கு காமெடி இல்லாட்டா எப்படி?

ஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான். ஏறினவன் சும்மா இருக்கல, ஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான். அதப் பாத்த ஒரு வயசான அம்மா. இவனைப்பாத்து இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொருக்கத்துக்குத்தான் போவே அப்டீன்னாங்க. அதக் கேட்டு பதறிப்போயி தலய உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான், அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா?

**********************************

ஒரு டவுட்


இடயில கொஞ்ச நாள் எழுத மனசே வரல. சரி, என்ன பண்ணறதுன்னு யோசிச்சு, ரொம்ப யோசிக்கத் தேவையில்லாத ரெக்னிகல் மேட்டர்சா எழுதத் தொடங்கினன். அதுக்கப்புறம்தான் நம்ம பக்கமும் கொஞ்சம் கூட்டம் வருது. நம்மகிட்டயும் ரெக்னிகல் மேட்டர்ஸ் நிறைய ஸ்டாக் இருக்கு. ஆனா வெறும் ரெக்னிகல் மேட்டர்ஸ் மட்டும் எழுதுறதில எனக்கு விருப்பம் இல்ல. இப்ப என்ன பண்ணறது? நீங்களே சொல்லுங்க.

**************************************************
ஒரு படம்

ஒரு பார்ல இருந்த நேட்டீஸ் போர்டு
************************************

கடசியா ஒரு கவுஜ

சாதிகள் இல்லையடி பாப்பா..
பள்ளியில் பாடம்
அட்மிசன் போமிலே(Form)
தனியே அதற்கொரு காலம்(column)


18 comments:

Anonymous said...

//ப்ளாக் எழுதறவங்கள்ள ரொம்ப பிரபலமா இருக்கிறவங்க எல்லாம் குடும்ப இஸ்திரிகள், நம்ம கார்க்கி அண்ணாவைத் தவிர. சரி, நாமளும் பிரபலமாகணும்னா மேரேச் பண்ணறதுதான் ஒரே வழின்னுட்டு நம்ம பேஸ்புக்கிட்ட போயி கேட்டேன், எப்பப்பா நமக்குக் கண்ணாளம்னு, படுபாவிப்பய, முப்பத்தேழு வயசிலன்னுட்டான். இப்பதாங்க நமக்கு 22 ஆவுது//

அதுக்கெல்லாம் போன பிறப்பில புண்ணியம் பண்ணியிருக்கணும் பாஸ்

Suresh on June 2, 2009 at 4:59 PM said...

சூப்பர் அந்த சரக்கா அவ்

//நம்ம கார்க்கி அண்ணாவைத் தவிர.//

தீர விசாரிக்காம முடிவுக்கு வராதிங்க ;0

//நம்ம பேஸ்புக்கிட்ட போயி கேட்டேன், எப்பப்பா நமக்குக் கண்ணாளம்னு, படுபாவிப்பய, முப்பத்தேழு வயசிலன்னுட்டான். இப்பதாங்க நமக்கு 22 ஆவுது/

கிளி சோசித்தையிடம் கேட்டு இருந்தா 23னு சொல்லி இருப்பாரு

நீங்க கேட்டது பேஸ் புக் ;) அதான் அவங்க ஊரு ஏத்த மாதிரி சொல்லிட்டான்..

இதுக்கு ஒரு கதை இருக்கு...

வேணாம் விடு அது உனக்கே தெரிந்து இருக்கும் ;)

Suresh on June 2, 2009 at 5:00 PM said...

ஜோக் சூப்பர் சிரிப்பு வந்தது..

டெக்கினில் மட்டுமமெழுதாம ஜாலி காமெடி கவிதை மொக்கைனு எழுது

Suresh on June 2, 2009 at 5:01 PM said...

கவுஜ கருத்து சூப்பர்

போதுவா எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லை ஆனாலும் உங்க சரக்கு சூப்பர்

Subankan on June 2, 2009 at 5:18 PM said...

@ Anonymous

ரொம்ப சொகமோ உங்களுக்கு?

Subankan on June 2, 2009 at 5:21 PM said...

@ Suresh

என்னடா ஒரு பின்னூட்டத்தைக் கூடக் காணமேன்னு பாத்தேன். ஒரே ஆழு வந்து புயலா அடிச்சுட்டுப் போய்ட்டீங்களே, நீங்க ரொம்ப நல்லவரு.. அவ்வ்வ்

Subankan on June 2, 2009 at 5:23 PM said...

@ Suresh

//தீர விசாரிக்காம முடிவுக்கு வராதிங்க ;0//

ஓ மேட்டர் அப்படியா?

//கிளி சோசித்தையிடம் கேட்டு இருந்தா 23னு சொல்லி இருப்பாரு

நீங்க கேட்டது பேஸ் புக் ;) அதான் அவங்க ஊரு ஏத்த மாதிரி சொல்லிட்டான்..

இதுக்கு ஒரு கதை இருக்கு...

வேணாம் விடு அது உனக்கே தெரிந்து இருக்கும் ;)//

:-)))

Subankan on June 2, 2009 at 5:24 PM said...

// Suresh said...
கவுஜ கருத்து சூப்பர்

போதுவா எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லை ஆனாலும் உங்க சரக்கு சூப்பர்//

நன்றி தல

Anonymous said...

நாமளும் சரக்கு பார்கலாம்-னு வந்தேன்!
இதுதான் உங்க சரக்கா!
அப்போ இனி மாச மாசம் சரக்கு வருமா??

Subankan on June 2, 2009 at 11:32 PM said...

@ கவின்

இது சும்மா முதல் முயற்சி

வழிப்போக்கன் on June 3, 2009 at 12:49 PM said...

நல்லாருக்கு எல்லாமே...
37 வயசுக்கு இன்னும் 15 வருடம் தானே???...22வருடம் பொறுத்த உங்களுக்கு 15 வருடம் பொறுப்பது என்ன பெரிய கஷ்ட்டமா??
:)))

Subankan on June 3, 2009 at 1:15 PM said...

@ வழிப்போக்கன்

இப்பத்தானே உங்களுக்கு 17. 22 வர்றப்ப தானாப் புரியும்.

ப்ரியமுடன் வசந்த் on June 3, 2009 at 1:22 PM said...

//சாதிகள் இல்லையடி பாப்பா..
பள்ளியில் பாடம்
அட்மிசன் போமிலே(Form)
தனியே அதற்கொரு காலம்(column)//

நல்ல கவிதை........சுபா.......

Subankan on June 3, 2009 at 2:08 PM said...

@ பிரியமுடன்.........வசந்த்

நன்றி

Sinthu on June 3, 2009 at 3:23 PM said...

Nice post subankan anna,
Do that quiz again and do the first question carefully.
U know my result is age 19. I have passed that year.. Therefore, no need to worry..
Best of Luck.

Subankan on June 3, 2009 at 3:30 PM said...

@ Sinthu

அடப் போங்க சிந்து, இப்படி 37 வர வைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். :-)

என்ன கொடும சார் on June 4, 2009 at 11:48 AM said...

BBC RADIO விற்பனைக்கு!

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தெரிந்த வானொலி எது? சந்தேகம் இல்லாமல் BBC தான். மேலும் வாசிக்க ...

http://eksaar.blogspot.com/2009/06/bbc-radio.html

ஸ்ரீதர்ரங்கராஜ் on June 4, 2009 at 12:08 PM said...

நோடீஸ் போர்டு சரியான காமெடி.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy