Monday, June 1, 2009

மென்பொருளின் துணையின்றி Youtubeஇல் வீடியோ தரவிறக்க..



Youtubeஇல் வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். சில வேளைகளில் அவற்றைத் தரவிறக்கி வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு கணினியில் அதற்கான மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் Youtubeஇல் இருந்து வீடியோ தரவிறக்கிக்கொள்ள முடியாது.

ஆனால் அதற்காக சில தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனைக் கொடுத்தால் நேரடியாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

முதலில் KissYouTube என்ற தளத்தைப் பார்ப்போம்.

இதிலே வீடியோ தரவிறக்குவது மிகமிகச் சுலபம். உதாரணமாக நீங்கள்

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

என்ற வீடியோவைப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துவிடுகிறது. அதை தரவிறக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  அதற்கு உங்கள் உலவியின் Address Bar இல் உள்ள மேலே குறிப்பிட்ட URL இல் Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும்.
http://www.kissyoutube.com/watch?v=CCYRkC40KDQ



அந்த வீடியோவை தரவிறக்குவதற்கான பட்டன் வந்துவிடும். இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.  இதில் FLV Movie File ஆகவே வீடியோ கிடைக்கின்றது. இங்கே சென்று அதை இயக்குவதற்கான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம்.

இரண்டாவது தளம் Vixy.net


இந்தத் தளத்தின் சிறப்பு இதில் நீங்கள் Youtube விடியோவை உங்களுக்குப் பிடித்த Format இல் தரவிறக்கிக்கொள்ள முடிவதுதான்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனை இந்தப் பெட்டியில் இட்டபின் அந்த வீடியோ எந்த Format இல் வேண்டுமோ, அதை கீளேயுள்ள பெட்டியில் தெரிவுசெய்தபின் தரவிறக்கிக் கொள்ளலாம்.

19 comments:

Suresh Kumar on June 1, 2009 at 5:32 PM said...

அருமையான தகவல்கள் நன்றி

சூர்யா ௧ண்ணன் on June 1, 2009 at 5:42 PM said...

நல்ல தகவல் தலைவா!

எந்தவிதமான Streaming Video வாக இருந்தாலும் அதனை தரவிறக்கம் செய்ய

http://suryakannan.blogspot.com/2009/04/blog-post_08.html

வழிப்போக்கன் on June 1, 2009 at 6:28 PM said...

பகிர்விற்கு நன்றி..

Anonymous said...

//Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும். //

அதாவது Youtubeக்கு முன்னாடி கிஸ் அடிக்கணும். அப்படித்தானே?

:-)

Subankan on June 1, 2009 at 6:58 PM said...

Suresh Kumar

வழிப்போக்கன்

நன்றி

Subankan on June 1, 2009 at 6:59 PM said...

@ சூர்யா ௧ண்ணன்

நன்றி தல, உங்களுடையதைப் படித்தேன், அருமை.

Subankan on June 1, 2009 at 6:59 PM said...

// Anonymous said...
//Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும். //

அதாவது Youtubeக்கு முன்னாடி கிஸ் அடிக்கணும். அப்படித்தானே?

:-)//

:-)))

cherankrish on June 1, 2009 at 8:59 PM said...

புதிய வேஷன் றியல் பிளேயர் நிறுவப்பட்டிருந்தால் கூட இலகுவாக தரவிறக்கலாம்.நான் டொங்கிளின் மூலம் இணையத்தில் இருக்கும் போது யூடியூபில் ஸ்றீம் பண்ணுவதை விட றியல் பிளேயரின் மூலம் தரவிறக்கியபின்பு பார்ப்பது வேகமாக இருக்கிறது.டிஎஸ்எல் வைமக்ஸ்காரர்களுக்கு அந்தப்பிரச்சனை இல்லை

கலையரசன் on June 1, 2009 at 9:02 PM said...

அருமையான கட்டுரை..
நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!

Subankan on June 1, 2009 at 9:14 PM said...

@ cherankrish

உண்மைதான். ஆனால் இந்தமுறை றியல் பிளேயர் இல்லாத ப்ரவுசிங் சென்டர்களைப் பாவிப்பவர்களுக்கு உதவும்.

Subankan on June 1, 2009 at 9:15 PM said...

@ கலையரசன்

ஏன் பாஸ், நல்லாத்தானே போயிட்டிருக்கு? என்ன திடீரென்று?

நன்றி

Unknown on June 2, 2009 at 11:10 AM said...

ஆகா... கலக்குகிறீர்கள் போங்கள்...

என்ன கொடும சார் on June 2, 2009 at 11:52 AM said...

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இன்றைய பத்திரிகை – 4
இந்த நாளில் – 10
Jingles – 25
விளம்பரம் – 25
தலைப்பு – 1
பாடல்கள் - 30
நட்ஷத்திர பலன் - விரும்பினால்

செய்முறை...

மேலும் வாசிக்க கிளிக்குங்க
http://eksaar.blogspot.com/2009/06/fm-juice.html

வந்தியத்தேவன் on June 2, 2009 at 12:16 PM said...

சுபாங்கன் Vixy.net ல் சவுண்ட் வரவில்லை படம் வருகின்றது avi பார்மட்டில் நான் டவுண்லோட் செய்தேன் 3gp லும் சவுண்ட் வரவில்லை ஆராய்ந்து பதில் சொல்லவும்

Subankan on June 2, 2009 at 1:56 PM said...

@ கனககோபி

நன்றி நண்பா

Subankan on June 2, 2009 at 2:00 PM said...

@ வந்தியத்தேவன்

நானும் பார்த்தேன். முதலில் ஒன்று டவுன்லோட் செய்தேன். சவுண்ட் வரவில்லை. பின் வேறொன்று முயற்சித்தபோது சவுண்ட் வந்தது. அவர்களின் கொன்வேட்டரில் ஏதாவது பிழை இருக்கலாம். இது தொடர்பாக அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றும் அனுப்பிவிட்டேன். பார்க்கலாம். தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

Subankan on June 4, 2009 at 5:25 PM said...

@ kaipillai

டாங்ஸ்ங்க

Unknown on December 15, 2009 at 3:35 PM said...

eppidy adsense add ungalukku varuthu???

any special account?

Unknown on October 27, 2012 at 11:44 AM said...

thanks very useful . kept it up

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy