அண்மையில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டார், உங்களுக்கு எப்போதும் இல்லாத சமூக அக்கறை பதிவெழுதத் தொடங்கியவுடன் மாத்திரம் எங்கிருந்து வந்துவிடுகிறது என்று. அதற்கு நான் எங்கிருந்து வந்தாலென்ன, நல்ல விடயம்தானே என்றேன். விடாத அவர் அதெப்படி எல்லாப் பதிவர்களுக்கும் சொல்லி வைத்தாற்போல வருகிறது? அடுத்தவர்களிடமிருந்து உங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் ஆயுதம்தான் இது என்றார். இதற்கு நான் கொடுத்த பதிலைப் பிறகு தருகின்றேன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
**********
பின்னூட்டம் இடப்படும்போது தானியங்கிமுறையில் இடப்படும் Spam பின்னூட்டங்களை தடுப்பதற்காகவே Word Verification பயன்படுகின்றது. தமிழ்ப் பதிவுகளில் Spam பின்னூட்டங்கள் பெரிதாக வருவதில்லை என்பதாலும், Word Verification படிப்பவர்களை எரிச்சற்படுத்தும் என்பதாலும் யாரும் அதை செயற்படுத்துவதில்லை.
ஆனால் அண்மைக்காலமாக எனக்கு அப்படியான Spam பின்னூடங்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் வருகின்றன. ஒரு நிறுவனத்தின் விளம்பரத்துக்காகவே அது இடப்படுகிறது. (அந்த நிறுவனத்திற்கும் தமிழ் பதிவுலகிற்கும் எந்த சம்பந்தமுமில்லை) பின்னூட்டங்களை மட்டுறுத்தி வைத்திருப்பதனால் அவற்றை வெளியிடுவதில்லை. பின்னூட்டங்களை மட்டுறுத்தாத பதிவர்கள் இது தொடர்பாக கொஞ்சம் அவதானமாக இருங்கள். இல்லாவிட்டால் பதிவுகளை அவை குப்பையாக்கிவிடும்.
**********
இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது மின் அகராதி ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் ஆகிய இருவழிகளிலும் தேடிக்கொள்ளலாம் என்பதால் எனக்கு அதிகம் பயன்படுகிறது. உங்களுக்கும் பயன்படலாம். பார்வையிட இங்கே சொடுக்கவும்.
**********
பரீட்சை முடிவடைந்த்தால் DVD யில் ஈரம் படம் பார்க்கக் கிடைத்தது. வித்தியாசமான கதைக்கரு. படம் இறுதிவரை சுவாரசியம் குறையாமல் இருந்தது சிறப்பு. காதலையும் ஹீரோயிசத்தையும் தவிர்த்து வரும் படங்களை தமிழ் சினிமாவில் தாராளமாக வரவேற்கலாம் - இறுதிவரை பார்க்கமுடிந்தால்!
**********
பேராண்மை திரைப்படமும் இப்போதுதான் பார்க்கக்கிடைத்தது. அருமையான கதை. ஆனால் ஆரம்பத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், சாதி வெறிக் காட்சிகளும் – ஒரு துளி விஷம். தவிர்த்திருக்கலாம். ஆனால் மேலே கூறிய காரணத்துக்காகவே இதைப் பாராட்டலாம்.
**********
இதற்கு வார்த்தைகள் தேவையா?