Thursday, September 23, 2010

டைமன்ட் (சவால் சிறுகதை)


 

Gamini

கையிலிருந்த புகைப்படத்தை உற்றுப்பார்த்துவிட்டு புன்னகையுடன் மீண்டும் ஒருமுறை தலையை ஆட்டிக்கொண்டான் சிவா. அதிலே பூக்களின் பின்னணியில், மாலைச்சூரிய வெளிச்சத்தால் அங்கங்களும் கொஞ்சம் மஞ்சள் தொட்டுத் தெரிய, வெள்ளை நிற ஆடையில், ஃபேன்சி தோடுகள் சகிதமாக ‘சீஸ்’ சொல்லிச் சிரித்துக்கொண்டிருந்தாள் காமினி.

‘சூப்பரா இருக்கா பாஸ், ஆமா பெயர் என்ன சொன்னீங்க?’

‘காமினி’ இது பரந்தாமன்

‘என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க?’

‘அடேய், அது அவளோட ஒரிஜினல் பெயர்டா, சரி நீ கிளம்பு. நைட் 2.30க்கு லேன்டிங். ட்றஃபிக் இருக்காது. ஒன் அவர்ல இங்க வந்துடலாம். பொருள் பத்திரம்’

‘பயப்படாதீங்க பாஸ், பொண்ணும் பத்திரமா இருக்கும்’ சிரித்தபடியே காரைக் கிளப்பினான் சிவா.

-

பதினைந்து நிமிடத் தாமதத்துடன் ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி முரண்டுபிடித்துவிட்டு, மூன்றாவதுதடவை முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் வருகையை ஒற்றை வார்த்தையில் அறிவிப்புப்பலகை அறிவிக்க, ஒருவித பரபரப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சிவா. சிறிதுநேரத்திலேயே வெளிப்பட்ட காமினியைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமமிருக்கவில்லை அவனுக்கு.

‘ஹாய், ஐம் சிவா’ என்றவாறே கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொண்டான்.

‘காமினி’

‘ஐ நோ, நைஸ் நேம். ட்ராவல்ல ஒண்டும் பிரச்சினையில்லையே?’

‘இல்லை. போகலாமா?’

இடதுபக்கக் கதவால் காமினி பின் சீட்டில் ஏறிக்கொள்ள, சீட் பெல்ட்டை மாட்டியவாறே காரை எடுத்தான் சிவா.

‘U.K ல எங்க இருக்கிறீங்க?’

‘Uxbridge’

‘ஸ்டூடன்ஸ் விசாவா? என்னோட மாமாகூட அங்கதான் இருக்கார், பெயர் கூட வந்…’

‘சிவா, உங்க பருப்பு எங்கிட்ட வேகாது. பரந்தாமன் அங்கிள் உங்களைப்பற்றி முன்னாடியே எல்லாம் சொல்லிட்டார். So, கொஞ்சம் பேசாமப் போறீங்களா?’

கோபத்துடன் சிவா ஆக்சிலரேட்டரை மிதிக்க, அதிகம் வாகனநடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் சீறிப்பாய்ந்தது கார். சிறிதுதூரத்தில் குறுக்கே புகுந்த மோட்டார்சைக்கிள்காரனைக் காப்பாற்ற சிவா எடுத்துக்கொண்ட முயற்சியால் கார் கண்ணுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த இரும்பு மின்விளக்குக்கம்பத்தை 30 பாகையால் சரிக்க, அதே வேகத்தில் முன் சீட்டில் இடிபட்டு, மீண்டும் பின்னால் பிடரியில் அடிபட்டு பின்சீட்டிலேயே வலதுபக்கமாகச் சரிந்தாள் காமினி.

-

உடலில் ஆங்காங்கே வயர்கள் மாட்டப்பட்டு, கண்கள் சொருகிய நிலையில் சோர்ந்து கிடந்தாள் காமினி.

‘சீரியசா எதுவுமில்லை. நெத்தியிலதான் ஏழு ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ரத்தம் கொஞ்சம் அதிகமாப் போனத்தல மயங்கிட்டா. பிரடியில அடிபட்டதால மூச்சுவிட கொஞ்சம் கஸ்டப்பட்டா, இப்ப எல்லாம் நார்மல். கொஞ்ச நேரத்தில கண்ணு முழிச்சுடுவா’ அருகில் டாக்டர் ஒருவர் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மருத்துவமனையைவிட்டு வெளியேறி, பரந்தாமன் வீட்டைச் சென்றடைந்தாள்.

‘என்ன ஆச்சு காமினி? ஏன் இவ்வளவு லேட்? நெத்தியில என்ன காயம்?’ பார்த்ததுமே பதறிய பரந்தாமனிடம் நடந்ததை ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள் காமினி.

‘அப்ப சிவா?’

‘சீட் பெல்ட் மாட்டியிருந்ததால அவனுக்கு அவ்வளவா அடிபடல போல, ஆக்சிடன்ட் ஆனதுமே கார்லருந்து இறங்கி என்னோட ஹேன்ட்பேக்கையும் எடுத்துட்டு ஓடுறதைப பார்த்தேன். அதுக்கப்புறம் நான் மயங்கிட்டதால எதுவுமே தெரியல’

‘அதுசரி, நீ எதுக்கும்மா ஹாஸ்பிட்டல்ல இருந்து ஓடிவந்த? போலீஸ் கேஸ் வேற. சிக்கலாயிடும். வா போலீஸ் ஸ்ரேசனுக்குப் போய் இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிட்டு, உன் மத்த லக்கேஜசையும் வாங்கிட்டு வந்துடலாம்’

இவர்கள் வாசலால் வெளியேற, அதற்காகவே காத்திருந்தவன் போல குறுக்கே பாய்ந்து

‘ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை’ என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘த்சோ த்சோ த்சோ, பயந்துட்டியா?’ என்றவாறே துப்பாக்கியை எடுத்து இம்முறை பரந்தாமனின் நெற்றியில் வைத்தான்.

‘உன்னோட லக்கேஜில எனக்குத் தேவையான பொருள் ஒண்டு இருக்கு. மரியாதையா அதை எப்படியாவது போலீஸ்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திடு. ஏதாவது வம்பு பண்ணணும்னு நினைச்சா உன்னோட பரந்தாமன் அங்கிள் அந்தப் பரந்தாமன்கிட்டயே போகவேண்டியதுதான்’ என்றான் சிவா.

-

சில மணி நேரங்களில் லக்கேஜை எடுத்தவாறு உள்ளே நுளைந்த காமினி பரந்தாமனும், சிவாவும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நின்றாள்.

‘காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே’ என்று பாராட்டினார் பரந்தாமன்

‘டைமன்டா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் காமினி

‘என்னோட ப்ரண்ட் உன்கிட்ட தந்துவிட்ட பார்சல்ல டைமன்ட் இருக்கிற விசயம் உனக்குத் தெரியாது. அது இருக்கிற பாக் எண்டு நினைச்சுத்தான் சிவா உன்னோட ஹேன்ட்பேக்கை எடுத்துட்டு ஓடினான் என்கிறதும் உனக்குத் தெரியாது. கடைசியா நான் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தா அரஸ்ட் பண்ணிடுவாங்க என்கிறதால உன்னைத் தனியா அங்க அனுப்புறதுக்குப் போட்டதுதான் இந்த துப்பாக்கி ட்றாமா என்கிறதும் உனக்குத் தெரியாது’ என்றுவிட்டு அதிர்ந்து சிரித்தார் பரந்தாமன்.

‘இப்ப உங்களைக் கொண்ணுட்டு டயமன்டை நானே எடுத்துக்கப்போறேன் எண்டுற விசயம் உங்களுக்குத் தெரியாது பாஸ்’ என்றவாறே பரந்தாமன் தலையில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

‘வெரிகுட், ஆனா நான் போலீஸ் என்கிற விசயம் உங்கள் ரெண்டுபேருக்குமே தெரியாது’ என்றவாறே சிவாவின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாள் காமினி.

21 comments:

கன்கொன் || Kangon on September 23, 2010 at 11:04 PM said...

முதலில், வெற்றிபெற வாழ்த்துக்கள். :-)

உங்கள் பாணியில் சிறுகதை....
ஆனால் முன்பு வாசித்த சிறுகதைகளை விட இதில் நகைச்சுவையை சேர்த்து அருமையான அமைப்பில் வந்திருக்கிறது.

// என்ன பெயர் பாஸ் இது? ஏதோ Fontடொட பெயர் மாதிரி இருக்கு. கௌதம் மேனன் படங்களைப் பாத்தாவது நல்லதா ஒரு பெயர் வைக்கமாட்டீங்களா பாஸ் நீங்க //

:D :D :D


இறுதித் திருப்பம் எதிர்பாராதது....
வாழ்த்துக்கள்....

ம.தி.சுதா on September 24, 2010 at 12:01 AM said...

அடடா என்ன திருப்பு முனைகள் இதைத்தான் எபௌவ்ட் ரேண் என்பதா..? அருமை...அருமை...அருமை...

நீச்சல்காரன் on September 24, 2010 at 7:33 AM said...

கதை நன்றாகயுள்ளது வாழ்த்துக்கள்

பவள சங்கரி on September 24, 2010 at 8:10 AM said...

கதை நன்றாக இருக்கிறது. சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறீகள். வாழ்த்துக்கள்.......நிறைய எழுதுங்கள்.

vasu balaji on September 24, 2010 at 9:01 AM said...

ஆளாளுக்கு பின்றீங்க:)). நல்ல டெம்போ.

Jana on September 24, 2010 at 10:32 AM said...

கதை நல்லா இருக்கின்றது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

Bavan on September 24, 2010 at 10:35 AM said...

வாவ்.. கடைசித்திருப்பம் எதிர்பார்க்கவே இல்லை.. கலக்கல்..:)

வெற்றிபெற வாழ்த்துக்கள்..:D

*இயற்கை ராஜி* on September 24, 2010 at 2:54 PM said...

நல்ல கதை :-)

Karthik on September 24, 2010 at 4:28 PM said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். பரிசல் அண்ணா கதை படிச்சிருக்கணுமா இந்தக் கதை படிக்க?

sinmajan on September 24, 2010 at 9:10 PM said...

//ஓடுபாதையை இரண்டுமுறை முட்டி //முரண்டுபிடித்துவிட்டு, //மூன்றாவதுதடவை //முத்தமிட்டுக்கொண்ட ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்
என்று நீங்கள் ஆரம்பிக்கும்போதே நான் நினைத்திருக்கவில்லை..கதையும்
இரண்டு மூன்று திருப்பங்களோடு முட்டி முரண்டுபிடித்துத் தான் முடியும் என்று..
ரசனையான அதிரடித் திருப்பங்கள்..
ரசித்தேன்..

யோ வொய்ஸ் (யோகா) on September 24, 2010 at 9:32 PM said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சுபாங்கன், வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற பின்னர் பார்ட்டி வைப்பது சம்பந்தமாக பின்னர் தொடர்பு கொள்கிறேன்

Unknown on September 25, 2010 at 10:41 AM said...

70கள்ல வந்த தமிழ்சினிமா மாதிரி பயங்கர திருப்பு முனைகளா இருக்கு..

நல்லாருக்கு கதை..

வெற்றி பெற வாழ்த்துகள்.

anuthinan on September 25, 2010 at 2:09 PM said...

எதிர்பாராத திருப்பங்கள் நிறையவே கதையில் இருக்கின்றன அண்ணா!!


ரொம்பவே சுவாரசியமாக இருந்தது!!!

வந்தியத்தேவன் on September 25, 2010 at 3:13 PM said...

வாவ் சூப்பர் கலக்கல். நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.

Subankan on September 25, 2010 at 9:49 PM said...

@ கன்கொன் || Kangon

நன்றி பாஸ் :)

@ ம.தி.சுதா

நன்றி அண்ணா :)

@ நீச்சல்காரன்

நன்றி நண்பா :)

@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றி, முயற்சிசெய்கிறேன் :)

@ வானம்பாடிகள்

நன்றி சார் :)

Subankan on September 25, 2010 at 9:52 PM said...

@ Jana

நன்றி அண்ணா

@ Bavan

நன்றிடா

@ *இயற்கை ராஜி*

நன்றி நன்றி :)

@ Karthik

நன்றி தல, தேவையில்லை. விரும்பினாப் படிச்சுப்பாருங்க ;)

@ sinmajan

நன்றி நண்பா

Subankan on September 25, 2010 at 9:55 PM said...

@ யோ வொய்ஸ் (யோகா)

நன்றி அண்ணா, உங்களுக்கு அந்த சிரமம் இருக்காது என நம்புகிறேன் ;)

@ முகிலன்

நன்றி, அவ்வளவு ஓல்டாவா இருக்கு?

@ Anuthinan S

நன்றி அனு

@ வந்தியத்தேவன்

நன்றி மாம்ஸ்

balavasakan on September 26, 2010 at 8:56 AM said...

சூப்பர் சுபாங்கன்..

Subankan on September 27, 2010 at 9:12 PM said...

@ Balavasakan

நன்றி டாக்டர் :)

Kiruthigan on October 1, 2010 at 10:26 AM said...

பாஸ் பின்றீங்க...
இலங்கை தமிழ் புரிய வேண்டியவங்களுக்கு புரியுதோ இல்லையோ கதை A1.

aru(su)vai-raj on October 16, 2010 at 7:25 PM said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy