Tuesday, June 23, 2009

ஒரு நல்லசெய்தி, ஒரு கெட்டசெய்தி

11 comments
விடுமுறையில் வீடுசெல்வதால் ஐந்தறைப்பெட்டி தற்காலிகமாக மூடப்படுகிறது.



ஊரிலுள்ள இணைய வசதியினைப்பொறுத்து விரைவில் மீண்டும் திறக்கப்படும்.


Saturday, June 20, 2009

தன்னைத் தானே சார்ச் செய்யும் செல்போன் ஆராய்ச்சியில்!!!

11 comments
Wireless Electricity பற்றிய ஆராய்ச்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. Nokia நிறுவனம் இது தொடர்பான தனது ஆராய்சிகள் ஓரளவு வெற்றிபெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.


இது கையடக்கத்தொலைபேசி, தொலைக்காட்சி, அன்ரனாக்கள் முதலியவற்றிலிருந்து பிறப்பிக்கப்படும் மின்காந்த அலையைக்கொண்டு மின்சாரம் தயாரிப்பதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. 5 milliwatts அளவுள்ள மின்சாரத்தை தற்போது தயாரிக்க முடிவதாக அது தெரிவித்துள்ளது. 50 milliwatts அளவுள்ள மின்சாரத்தைத் தயாரிப்பதே தமது இலக்கு என்றும், அந்த மின்சாரம் ஒரு செல்போன் பேட்டரியை சார்ச் செய்யப் போதுமானது எனவும் கூறியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் வெற்றிபெற்றால் செல்போன்கள் தம்மைத் தாமே சார்ச் செய்துகொள்ளும் எனவும், மின்சாரம் தேவையில்லை எனவும் அது தெரிவித்துள்ளது.


எதிர்காலத்தில்??!!!
Wireless Electricity தொடர்பாக அறிந்துகொள்ள எனது இந்தப் பதிவைப் பாருங்கள்.


Monday, June 15, 2009

மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!

36 comments
பரீட்சைக்குத் தயாராகும் மாணவன் ஒருவன் ஒவ்வொரு காலத்திலும் பாடும் சிச்சுவேசன் சாங்ஸ் இவை. சில இடங்களில் சில பாடல் வரிகளை மாற்றியுள்ளேன். எல்லாம் ஒரு அனுபவம்தான்.
  • செமிஸ்டர் ஆரம்பத்தில்..




காலேஜூக்குப் போவோம், கட்டடிக்க மாட்டோம்…

  • பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..


கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….
  • பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..


ஊருசனம் தூங்கிருச்சு, ஊத காத்தும் அடிச்சிரிச்சு, பாவிப்பய தூங்கலியே, படிப்பும் இன்னும் முடியலியே.
  • பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..


நாடகம்விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...
  • பரீட்சையின் போது…


ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.


  • பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..


பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு..

  • இறுதியில்..


வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்


Friday, June 12, 2009

அடிச்சது ஷாக் 600V, கந்தசாமி, இன்ன பிற..

10 comments
எனக்கு கம்பஸ்சில எக்ஸாம் நடந்துட்டிருக்கு. வழக்கம்போல நம்ம வண்டியும் குப்பியில ஓடிட்டிருக்கு. ( குப்பி தெரியாதவர்கள் இங்கே போய்ப் பார்த்துக்கொள்ளவும்) . இன்னிக்கு ரொம்ப நல்ல சாப்ஜக்ட். ஏன்னா கொஸ்டீன் எல்லாம் நல்லாப் புரியும். ஆன்சர்தான் பண்ண முடியாது. நண்பன் ஒருத்தன் சொன்னான் “ மச்சான், ஆன்சர் தெரியலீன்னா ஏதோ தெரியறத எழுதிடுவம், ரெண்டு மார்க்சாவது போடாமலா மோயிடுவான் ” ஏதோ புதுசாக் கண்டுபிடிச்ச மாதிரி. “ அடப்பாவி, இதத்தாண்டா ரெண்டு வருசமா எல்லா எக்சாம்லயும் பண்ணிட்டிருக்கேன்!!!”

*******************************

இதுவும் கம்பஸ் மேட்டர்தான். Power System சம்பந்தமான ஒரு ப்ராக்டிகல். நான் கனெக்சன் கொடுத்து முடிக்கிறதுக்குள்ள ஒரு படுபாவிப்பய Switch  ஆன் பண்ணிட்டான். சும்மா இல்ல, 600V. எந்தப் பிறப்பில யாருக்குச் செஞ்ச புண்ணியமோ, உயிருக்கு வந்தது தலையோட போய்ட்டுது. நாலு நாள் தலைவலி உயிர எடுத்துது. ஆனா பாவம். அந்த இன்ஸ்ருமன்ட்தான் வடிவேலு மாதிரி வாயாலயும் மூக்காலயும் புகைய விட்டுட்டு அடங்கிடுச்சு.

********************************

எக்ஸாம்கிறதால வேள்டு கப் கிரிக்கட் பாக்கவே முடியல. இன்னிவரைக்கும் ஒரு மேட்ச் கூடப் பாக்கல. ஆமா, ஆஸ்திரேலியாவ அடிச்சுத் துரத்திட்டாங்களாமே நம்மாளுங்க, உண்மையா? எப்படியோ, பைனலுக்கு முதல் எக்ஸாம் முடிஞ்சுடும். அப்பாடா…

**********************************

 பதிவு திருடற விசயம் ரொம்ப சூடாப் போயிட்டிருக்கு. என்னோட பதிவு ஒன்றையும் சுட்டுட்டாங்க. முதல்ல கொஞ்சம் கோபம் வந்தது. அப்புறமா, அட நம்ம பதிவையும் சுடறாங்களேன்னு சந்தோசப்பட்டேன். நேற்று இந்த விசயத்துல இங்க கும்மி அடிச்சிட்டிருந்தேன். நண்பர் சித்து  ஏதோ ஒரு கோடை சேத்துட்டா யாராலயும் காப்பி பண்ண முடியாதுன்னார். அப்படி செய்தா பின்னூட்டம் இடுறவங்களுக்கு எரிச்சலா இருக்காதா? எவனோ ஒருத்தனுக்காக நம்ம நண்பர்களை ஏன் கஸ்டப்படுத்தணும்?

********************************


கந்தசாமி பாடல்கள் நெட்டில டவுன்லோட் பண்ணிக் கேட்டேன். அயனுக்கு அப்புறம் எல்லாப் பாடல்களுமே பிடிச்சிருக்கறது இதிலதான். விக்ரமுக்கும் படம் லேட்டாவுறதுக்கும் என்னதான் ஒற்றுமையோ? ஸ்டில்சைப் பாக்கிறப்பல்லாம் என்னவோ பண்ணுது. படத்துக்காக வெயிட்டிங்…

Tuesday, June 9, 2009

Google vs. Bing போட்டி பாக்கலாம் வாங்க!!!

15 comments

Microsoft நிறுவனம் தனது புதிய தேடுபொறியான Bing இனை அறிமுகப்படுத்தியதிலிருந்து Googleஆ இல்லை Bingஆ சிறந்தது என்ற விவாதம் சூடு கிளப்பிக்கொண்டு இருக்கிறது. சரி, இதை எப்படித் தீர்மானிப்பது? உண்மையான நிலையை அறிய Michael Kordahi என்பவர் BlindSearch என்ற ஒரு தேடுதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தளத்தில் ஒரு குறிப்பிட்ட விடயத்தைத் தேடுமாறு நீங்கள் பணிக்கலாம். அதற்கான மறுமொழி மூன்று வெவ்வேறு Column களில் தெரிகின்றது. அதில் ஒரு Column Google இனுடைய மறுமொழியாகவும் அடுத்தது Bing இனுடையதாகவும், மூன்றாவது Yahoo இனுடையதாகவும் இருக்கும். எந்த Column எதற்குரியது என்பது மறைக்கப்பட்டு, உங்களை ஓட்டளிக்குமாறு கேட்கப்படுகிறது. நீங்கள் ஓட்டளித்த பின்னரே அவை எந்தத் தேடுபொறிக்குரியது என்ற தகவல் காண்பிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஓட்டளித்த விகிதமும் காண்பிக்கப்படுகின்றது (இப்போது அதை நீக்கிவிட்டார்கள்).


அத்துடன் இந்த Column களின் ஒழுங்கு ஒவ்வொரு தடவையும் மாறுவதால் நீங்கள் ஓட்டளித்த தேடுபொறி எது என்பது அதன்பின்னர்தான் உங்களுக்குத் தெரியும். இதனால் கிடைக்கும் Result நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். இதுவரை கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில்

Google  -  45%
Bing  -  32%
Yahoo  -  23%

ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. இங்கே சென்று அதனை நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதி முடிவு என்னவென்றுதான் பார்த்துவிடுவோமே!!!

Monday, June 8, 2009

இப்படியெல்லாம் இருந்தது தெரியுமா?

29 comments

எனது சிறுவயதில்(இப்பவும் ஒண்டும் வயசாகிடல) நான் மிகவும் ரசித்துப் பார்த்த சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திப் பார்க்கும் முயற்சி இது. நிச்சயம் உங்களையும் இவை கவர்ந்திருக்கும். ஒரு ஒற்றுமை, இவையெல்லாம் தூர்தர்சனின் நிகழ்ச்சிகள்!


ஒலியும் ஒளியும்


இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதோர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இது பிரபல்யம். நிச்சயமாக இந்தத் தலைப்பில் ஒரு தொடர்பதிவு ஆரம்பித்தால் அனைவரது பதிவிலும் இது இடம்பெறும். இப்போதெல்லாம் படத்திற்கு நடுவே பாட்டு வந்தாலே வெறுப்பாக இருக்கிறது. (தம்மடிக்கும் பழக்கம் இல்லாததால் எழுந்தும் போக முடியாது). ரசிப்புத்தன்மை எப்படியெல்லாம் மாறுகிறது இல்லையா?


சக்திமான்


எனது சிறுவயது றோல்மாடல் இவர்தான். அப்போதெல்லாம் கார்ட்டூன் சானல்கள் என்றால் என்னவென்றே தெரியாது. சக்திமான் சும்மா சுழன்றுவந்து செய்யும் சாகசங்கள் பற்றி அப்போதெல்லாம் அதிகமாக விவாதிப்போம். ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பானதாக ஞாபகம். ஒருமுறை அதே நேரத்தில் டியூசன் வைக்கப்போய் ஆசிரியர் எங்களிடம் வாங்கிய சாபங்கள் அத்தனையும் பலித்திருந்தால் இப்போது அவர் நரகத்தில்தான் இருந்திருப்பார். அந்த வகுப்பிற்குக் கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டது தனிக்கதை.



சுராக்


வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு நடந்ததாக ஞாபகம். நான் முதன்முதல் பார்த்த துப்பறியும் தொடர். ஒவ்வொரு தடவையும் உண்மையைக் கண்டறிய ஹீரோ கையாளும் உத்தி வித்தியாசமாக இருக்கும். அதன் பிறகு துப்பறியும் கதைகள், படங்கள் என அனைத்தையும் நான் ரசிக்க சுராக்தான் பிள்ளையார்சுழி போட்டது. இதைப் பத்தி மணிக்குப் பார்ப்பதற்காக விழித்திருக்க நாங்கள் செய்யும் முன்முயற்சிகள் பற்றி தனிப் பதிவே இடலாம். பகலில் விசேச நித்திரை. பின் ஐந்து நிமிடத்திற்கொருதரம் முகம்கழுவி… அது ஒரு காலம். இப்போதெல்லாம் இரவு பன்னிரண்டு மணியெல்லாம் ஒன்றுமே இல்லாதது போல கடக்கின்றது.


6.55 இற்கு வரும் ஐந்து நிமிடக் காமெடி


தினமும் இரவு 6.55 இற்கு ஐந்து நிமிடங்கள் நகைச்சுவைக் காட்சிகள் காண்பிப்பார்கள். அதைப் பார்ப்பதற்காகவே விசேடமாக வீட்டில் T.V ஆன் செய்யப்படும். இப்போதோ நகைச்சுவைக்கே பல சானல்கள். எல்லாவற்றிலும் அரைச்ச மாவ அரைப்போமா என்று கிட்டத்தட்ட நகைச்சுவைக் காட்சிகள் மனப்பாடமே ஆகிவிட்டது.


ஜெய் ஹனுமான்




சிறுவயதில் பாட்டிசொல்லிக் கேட்ட கதைகளை டீவியில் காட்டினால் யாருக்குத்தான் பிடிக்காது? அப்போது இது சிறுவர்கள் மத்தியில் மட்டுமல்ல, பெரியவர்கள் மத்தியிலும் ஏகப் பிரபல்யம். இவற்றைப் பார்க்கும்போது கடவுள்மேல் பக்தி அதிகரிப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது கோயிலுக்குச் செல்வதே வருடத்தில் பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு என்ற கதையாக ஆகிவிட்டது.

Friday, June 5, 2009

ஒரு பிரபல பதிவருக்கு இன்று …

35 comments

இலங்கையின் முன்னணி அறிவிப்பாளர், பதிவர் லோஷன் அண்ணாவிற்கு இன்று பிறந்தநாள். நானெல்லாம் அவர் குரலுக்கு ரசிகன். நான் மட்டுமா? இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலானோர் அவர் குரலின் ரசிகர்கள். இலங்கையின் சிறந்த தமிழ் அறிவிப்பாளராக கருத்துக்கணிப்பில் தெரிவானவர் என்று அவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பதிவுலகிலும் அவரைப்பற்றி நான் கூறத்தேவையில்லை. எனக்கோ அவர் பதிவுலகின் துரோணாச்சாரியார். பிளாக் என்றால் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என நினைத்திருந்த எனக்கு அவரது பிளாக்தான் அறிமுகமான முதல் தமிழ் பிளாக். நான் தமிழ்மணம், தமிழிஷ் பற்றி அறிந்துகொண்டதே அவரது பிளாக் மூலம்தான். 


அவரை நான் தொலைவிலேயே கண்டிருக்கிறேன். மின்னஞ்சல் தொடர்புகள் மட்டுமே அவரோடு எனக்கு.  இலங்கையில்தானே இருக்கிறேன். என்றாவது சந்தித்துவிட மாட்டேனா? போகட்டும்.

லோஷன் அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!


Thursday, June 4, 2009

அறிமுகமாகிவிட்டது Google Squared - புதிய தேடுபொறி

12 comments

 

எனது முன்னய பதிவொன்றில் Google Squared எனும் புதிய தேடுபொறி விரைவில் அறிமுகமாகவிருப்பதாகக் கூறியிருந்தேன். அது இப்போது அறிமுகமாகிவிட்டது. Microsoft இன் Bing அறிமுகமான சிறிது நாட்களிலேயே கூகுல் இதனை அறிமுகப்படுத்தியது, இரண்டுக்குமான போட்டியின் உச்சத்தைக் காட்டுகிறது.

 


Google Squared  ஆனது Microsoft இன் Bing எவ்வாறு தகவல்களைப் பட்டியலிடுகிறதோ, ஏறத்தாள அதேமுறையில் பட்டியலிடுகிறது. அல்லது அதைவிட ஒருபடி மேல் என்றுகூடச் சொல்லலாம். Google Squared ஆனது நாம் தேடும் தகவலினை தொகுத்து, மிகவும் தெளிவாக அதுபற்றிய விளக்கம், சம்பந்தப்பட்ட படம், அதன் செயற்பாடுகள் என அனைத்துத் தேவையான விடயங்களையும் பட்டியலிடுகிறது. அது மட்டுமல்லாது இவ்வாறு பட்டியலிடும் விடயங்கள் நாம் தேடும் விடயத்துக்கேற்ப மாறுபடுகிறது. அந்தந்த விடயங்களில் எது மிக முக்கியமோ, அதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது.  எமக்கு வேறு விடயங்களும் அதில் தேவை என்றால் நாமாக இன்னுமொரு வரியைச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

 



உதாரணமாக நான் தேடிய planets என்ற பதத்திற்கு படத்தில் காட்டியதுபோல முடிவுகள் கிடைக்கின்றன. ஒரு வரியில் இருக்கும் முடிவுகள் அனைத்தும் ஒரு தளத்திற்கே சொந்தமானவை அல்ல, அவை பாவனையாளர்களின் முன்னய தெரிவுகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தே தெரிகின்றன.

 

உதாரணத்திற்கு நான் தேடிய planets என்பதற்கு வந்த Earth என்ற முடிவில் படம் ஒரு தளத்திலிருந்தும், விளக்கம் இன்னொரு தளத்திலிருந்தும் கிடைக்கின்றது. உங்களுக்கு அந்தப் படம் வேண்டுமானால் படத்தில் கிளிக்கி அந்தப் படம் உள்ள தளத்திற்குச் செல்லலாம். அது வேறொரு Tap இலேயே திறக்கும். விளக்கத்தை இன்னொரு Tap இல் திறந்துகொள்ளலாம். படமும் விளக்கமும் அதிகமானோரால் விரும்பப்பட்டதாக இருப்பதால் உங்களுக்கு சிறந்ததே கிடைக்கும். இங்கே சென்று Google Squared இனை பரிசோதித்துப் பாருங்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக இது நாம் மிகவும் பழகிய கூகுலின் முறை.  கூகுலில் தேடும் முறை எமக்கு பழகியதாகையால் இதிலும் இலகுவாக இருக்கும். அத்துடன் இவ்வாறு தகவல்களை தொகுத்துத் தருவதால் மாணவர்களுக்கு இது மிக உதவியானதொரு முறை. சாதாரணமாக தேடி தேவையானதை எடுப்பதற்கு போதும் போதுமென்றாகிவிடும். இதிலே விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதால் தேவையற்ற தளங்களுக்குள் போய் நேரத்தை வீண்டிப்பது தவிர்க்கப்படும்.

 

 

கூகுலின் இந்த அதிரடியால் Microsoft இன் Bing  இணையச் சந்தையைப் பிடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கப்போகிறது.


Tuesday, June 2, 2009

சரக்கு…

18 comments


இது படத்தில இருக்கிற சரக்கு பத்தி இல்லீங்க, ஆளாளுக்கு காக்டெயில், சக்கர பொங்கல், அவியல், சட்டினி, சாம்பார் என்று எழுதுறாங்க. நாமளும் நம்மால முடிஞ்சத பாக்காமேன்னுட்டு …

முதல்ல ஒரு கவலை..



ப்ளாக் எழுதறவங்கள்ள ரொம்ப பிரபலமா இருக்கிறவங்க எல்லாம் குடும்ப இஸ்திரிகள், நம்ம கார்க்கி அண்ணாவைத் தவிர. சரி, நாமளும் பிரபலமாகணும்னா மேரேச் பண்ணறதுதான் ஒரே வழின்னுட்டு நம்ம பேஸ்புக்கிட்ட போயி கேட்டேன், எப்பப்பா நமக்குக் கண்ணாளம்னு, படுபாவிப்பய, முப்பத்தேழு வயசிலன்னுட்டான். இப்பதாங்க நமக்கு 22 ஆவுது

**********************************************

ஒரு ஜோக்


சரக்குன்னு போட்டுட்டு சரக்கு காமெடி இல்லாட்டா எப்படி?

ஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான். ஏறினவன் சும்மா இருக்கல, ஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான். அதப் பாத்த ஒரு வயசான அம்மா. இவனைப்பாத்து இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொருக்கத்துக்குத்தான் போவே அப்டீன்னாங்க. அதக் கேட்டு பதறிப்போயி தலய உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான், அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா?

**********************************

ஒரு டவுட்


இடயில கொஞ்ச நாள் எழுத மனசே வரல. சரி, என்ன பண்ணறதுன்னு யோசிச்சு, ரொம்ப யோசிக்கத் தேவையில்லாத ரெக்னிகல் மேட்டர்சா எழுதத் தொடங்கினன். அதுக்கப்புறம்தான் நம்ம பக்கமும் கொஞ்சம் கூட்டம் வருது. நம்மகிட்டயும் ரெக்னிகல் மேட்டர்ஸ் நிறைய ஸ்டாக் இருக்கு. ஆனா வெறும் ரெக்னிகல் மேட்டர்ஸ் மட்டும் எழுதுறதில எனக்கு விருப்பம் இல்ல. இப்ப என்ன பண்ணறது? நீங்களே சொல்லுங்க.

**************************************************
ஒரு படம்

ஒரு பார்ல இருந்த நேட்டீஸ் போர்டு




************************************

கடசியா ஒரு கவுஜ

சாதிகள் இல்லையடி பாப்பா..
பள்ளியில் பாடம்
அட்மிசன் போமிலே(Form)
தனியே அதற்கொரு காலம்(column)


Monday, June 1, 2009

மென்பொருளின் துணையின்றி Youtubeஇல் வீடியோ தரவிறக்க..

19 comments

Youtubeஇல் வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். சில வேளைகளில் அவற்றைத் தரவிறக்கி வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். அதற்கு கணினியில் அதற்கான மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் Youtubeஇல் இருந்து வீடியோ தரவிறக்கிக்கொள்ள முடியாது.

ஆனால் அதற்காக சில தளங்கள் உள்ளன. அவற்றில் சென்று நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனைக் கொடுத்தால் நேரடியாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

முதலில் KissYouTube என்ற தளத்தைப் பார்ப்போம்.

இதிலே வீடியோ தரவிறக்குவது மிகமிகச் சுலபம். உதாரணமாக நீங்கள்

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

என்ற வீடியோவைப் பார்க்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துவிடுகிறது. அதை தரவிறக்கிக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.  அதற்கு உங்கள் உலவியின் Address Bar இல் உள்ள மேலே குறிப்பிட்ட URL இல் Youtube என்ற பகுதிக்கு முன்னால் kiss என்ற பதத்தைச் சேர்த்துவிட்டால் போதும்.
http://www.kissyoutube.com/watch?v=CCYRkC40KDQ



அந்த வீடியோவை தரவிறக்குவதற்கான பட்டன் வந்துவிடும். இலகுவாக தரவிறக்கிக்கொள்ளலாம்.  இதில் FLV Movie File ஆகவே வீடியோ கிடைக்கின்றது. இங்கே சென்று அதை இயக்குவதற்கான மென்பொருளை இறக்கிக்கொள்ளலாம்.

இரண்டாவது தளம் Vixy.net


இந்தத் தளத்தின் சிறப்பு இதில் நீங்கள் Youtube விடியோவை உங்களுக்குப் பிடித்த Format இல் தரவிறக்கிக்கொள்ள முடிவதுதான்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் URL இனை இந்தப் பெட்டியில் இட்டபின் அந்த வீடியோ எந்த Format இல் வேண்டுமோ, அதை கீளேயுள்ள பெட்டியில் தெரிவுசெய்தபின் தரவிறக்கிக் கொள்ளலாம்.
Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy