Tuesday, June 9, 2009

Google vs. Bing போட்டி பாக்கலாம் வாங்க!!!



Microsoft நிறுவனம் தனது புதிய தேடுபொறியான Bing இனை அறிமுகப்படுத்தியதிலிருந்து Googleஆ இல்லை Bingஆ சிறந்தது என்ற விவாதம் சூடு கிளப்பிக்கொண்டு இருக்கிறது. சரி, இதை எப்படித் தீர்மானிப்பது? உண்மையான நிலையை அறிய Michael Kordahi என்பவர் BlindSearch என்ற ஒரு தேடுதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தத் தளத்தில் ஒரு குறிப்பிட்ட விடயத்தைத் தேடுமாறு நீங்கள் பணிக்கலாம். அதற்கான மறுமொழி மூன்று வெவ்வேறு Column களில் தெரிகின்றது. அதில் ஒரு Column Google இனுடைய மறுமொழியாகவும் அடுத்தது Bing இனுடையதாகவும், மூன்றாவது Yahoo இனுடையதாகவும் இருக்கும். எந்த Column எதற்குரியது என்பது மறைக்கப்பட்டு, உங்களை ஓட்டளிக்குமாறு கேட்கப்படுகிறது. நீங்கள் ஓட்டளித்த பின்னரே அவை எந்தத் தேடுபொறிக்குரியது என்ற தகவல் காண்பிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஓட்டளித்த விகிதமும் காண்பிக்கப்படுகின்றது (இப்போது அதை நீக்கிவிட்டார்கள்).


அத்துடன் இந்த Column களின் ஒழுங்கு ஒவ்வொரு தடவையும் மாறுவதால் நீங்கள் ஓட்டளித்த தேடுபொறி எது என்பது அதன்பின்னர்தான் உங்களுக்குத் தெரியும். இதனால் கிடைக்கும் Result நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். இதுவரை கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில்

Google  -  45%
Bing  -  32%
Yahoo  -  23%

ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. இங்கே சென்று அதனை நீங்களும் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதி முடிவு என்னவென்றுதான் பார்த்துவிடுவோமே!!!

15 comments:

சுபானு on June 9, 2009 at 10:06 PM said...

நல்ல தகவல்.. :)

கடைக்குட்டி on June 9, 2009 at 10:38 PM said...

சூப்பர் தல... :-)

வர வர நீங்களும் நெம்ப டெக்னிக்கலா மாறிட்டீங்க.. :-)

Subankan on June 10, 2009 at 9:12 AM said...

@ சுபானு

நன்றி

Subankan on June 10, 2009 at 9:14 AM said...

// கடைக்குட்டி said...
சூப்பர் தல... :-)//

நன்றி


//வர வர நீங்களும் நெம்ப டெக்னிக்கலா மாறிட்டீங்க.. :-)//

அப்படியெல்லாம் இல்லை, டென்னிகல் நமக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா விசயமும் வரும்.

சி தயாளன் on June 10, 2009 at 9:30 AM said...

:-)))

போக போக தான் தெரியும் Bing ன் நிலை என்ன என்று....

Subankan on June 10, 2009 at 11:24 AM said...

@ ’டொன்’ லீ

பார்க்கலாம். இப்போதே Bing ன் பல விடயங்கள் பிடிப்பதில்லை என பலர் கூறத் தொடங்கிவிட்டனர்.

सुREஷ் कुMAர் on June 10, 2009 at 12:14 PM said...

சூப்பர் பாஸ்..
நல்ல தகவல்..

வழிப்போக்கன் on June 10, 2009 at 2:22 PM said...

தகவலுக்கு நன்றி அண்ணா...

Subankan on June 10, 2009 at 4:09 PM said...

சுரேஷ் குமார்

வழிப்போக்கன்

நன்றி

MoHaN on June 10, 2009 at 7:32 PM said...

நல்ல பதிவு சுபாங்கன்!!! தெரிந்து கொண்டேன் !!!:)

Unknown on June 11, 2009 at 4:45 PM said...

நான் எப்பயுமே Google பக்கம் தான்...
ஏதோ சண்டய போட்டுக்கீட்டு ஏதாவது புதுசு புதுசா தாங்கப்பா...
இலவசமா தந்த பீனோல கூட ருசிச்சுக் குடிப்பம்... ;)

சும்மா on June 11, 2009 at 5:20 PM said...

You can enter the word you are using to search individually in each search engine and find which column is which!! and hence you can manipulate it. :)

Kalla ottu poduradhula dhaan enna oru sandhosham!!

Subankan on June 11, 2009 at 5:23 PM said...

MoHaN

கனககோபி

நன்றி

Subankan on June 11, 2009 at 5:24 PM said...

@ சும்மா

Hmmm..

ஒக்காந்து யோசிப்பீங்களோ?

//Kalla ottu poduradhula dhaan enna oru sandhosham!!//

வாஸ்தவம்தான்.

என்ன கொடும சார் on June 12, 2009 at 11:01 AM said...

லோசனுடன் ஒரு shopping அனுபவம்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy