Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Thursday, January 6, 2011

இசைப்புயலின் முத்துக்கள் மூன்று

14 comments

 

ar-rahman-oscar

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்

அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்

என் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது

 

வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்

அந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்

 

புது வெள்ளை மழை – ரோஜா

இசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.

 

Friday, December 24, 2010

ம்…..

8 comments

Wednesday, March 17, 2010

மன்னிப்பாயா…

39 comments
 
Vinnai11
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மன்னிப்பாயா – இந்தப் பாடலை இதுவரை எத்தனைதடவை கேட்டிருப்பேன் என்பதற்கு என்னிடம் பதிலே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம், பாடல் முடிந்ததும் திரும்பவும் கேட்கவேண்டும் போன்ற எண்ணம், காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசை எல்லாமுமாகச் சேர்ந்து என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறது.

ஸ்ரேயா ஹோஷலின் காந்தக்குரலில் சலனமில்லாமல் ஆரம்பித்து, தொடரும் புல்லாங்குழல் இசையில் என்னை முழுவதுமாக பாடலினுள்ளேயே இழுத்துப்போட்டுவிடுகிறது. அதன்பின் மொத்தப்பாடலுமே அமைதியான ஒரு ஆற்றின் ஓட்டம். நடுவில் உறுத்தாமல் வந்துபோகும் திருக்குறள் வரிகள் பாடலின் ஹைலைட்.
 thr
பாடல் படமாக்கப்பட்ட விதம்கூட மனதைத் தொட்டுவிடுகிறது. பௌர்னமி இரவில், கேரள ஆற்றில் அமைதியாக நகரும் படகிலிருத்தவாறே பாடிக்கொண்டு நகரும் காட்சிகள் மனதைவிட்டு நகரமறுக்கின்றன. ஆனாலும் இவற்றையெல்லாம் விட என்னைக் கவர்ந்திழுப்பது கவிதாயினி தாமரையின் வரிகள்தான். படத்தின் ஒட்டுமொத்தக் கருவையும், காதலையும் ஒரே பாடலுக்குள் புகுத்தியிருக்கிறார் அவர்.

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

காதலியைப்பிரிந்த சோகம், அதில் ஒரு சுகம். காதுகளைக்கடந்து ஊடுருவுகின்றன வரிகள், இசைப்புயலின் குரலில். இந்தவரி இப்படி என்றால் அடுத்த வரியோ
 
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

காதலின் ஈர்ப்புக்கு, கும்மிருட்டில் தொலைவில் தெரியும் வெளிச்சத்தை நோக்கி எங்களை அறியாமலேயே செல்லும் இயல்பை ஒப்பிட்டிருப்பது, இதைவிட சிறப்பாக ஒப்பிடமுடியுமா என்ன?

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயா காணல் நீர் போலே தோன்றி

நேசத்தையும், பிரிவையும் ஒருங்கே சேமிக்கும் வரிகள். வரிகளே ஒரு கதையைச் சொல்லிவிடுகின்றன.

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

பாடலை முதன்முதலில் கேட்கும்போதே என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. காதலின் வலியின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் இல்லையா?

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

இந்த வரிகளை எவ்வாறு விபரிப்பது? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது? வாழ்க்கையின் கடந்தகாலங்களைக் கிளறிவிடுகிறதா? வரிகளே ஒரு கதை சொல்கிறதா? என்னிடமோ விபரிக்க வார்த்தைகளே இல்லை.

அமைதியாக ஒருமுறை கேட்டுப்பாருங்களேன்!

Tuesday, December 8, 2009

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல!

41 comments




சில பாடல்களைக் கேட்கும்போது எங்களை இருந்த இடத்திலிருந்து இன்னுமொரு உலகத்திற்குத் தூக்கிச்சென்றுவிடும். எமக்குள்ளும் இயக்குனர்கள் உருவாகியது போல பாடலின் வரிகள் மனதில் காட்சிகளாக விரியும். பாடலை மீண்டுக் மீண்டும் கேட்கவேண்டும் போல இருக்கும். அனுபவித்திருக்கிறீர்களா?

அப்படியாக நான் அனுபவித்த ஒரு பாடல் சர்வம் படத்தின் சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

பாடலின் ஆரம்ப இசையே பாடலைக் கண்ணைமூடி ரசிக்கவைத்துவிடுகிறது.

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!

காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும், பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும், பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்.

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

இந்த வரிகளைக் கேட்கும்போது இனம்புரியாத ஒரு உணர்வு. ஆற்றில் சலனமில்லாது ஓடும் நீரின் நடுவில் தத்தளிக்கும் சிறு எறும்பின் உணர்வு. ஆழ்மனத்து அமைதியை ஒருமுறை தட்டிப்பார்க்கிறது.

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அற்புதமாகக் காதலின் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறது வரிகள். பிரிவின் வலியும் அதனூடே காதலியை உணர்வதும் அழகு.

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

இந்த வரிகளும், அதைத் தொடரும் இசையும் கண்ணை மூடிக் கேட்டால் ஒரு வித்தியாசமான உணர்வுக்குத் தள்ளப்படுகிறேன். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு. அற்புதமான வரிகள். அதற்கேற்ற இசை.

உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

காதலின் உணர்வுகள். வேறென்ன சொல்ல?

அமைதியான நேரத்தில் நீங்களும் கேட்டுப்பாருங்கள். எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.



Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy