இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் ஒஸ்கார் தமிழன், இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். இசைப்புயலின் இசையில் வந்து என்னால் அதிகமாகச் செவிமடுக்கப்பட்ட, அதிகமாக முணுமுணுக்கப்பட்ட, நான் விரும்பி ரசித்த மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயமாக இவை உங்களுக்கும் பிடித்தவையாகவே இருக்கும்
அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்
என் உற்சாகமான தருணங்களோடு உற்சாகமாகத் தொற்றிக்கொண்டுவிடும் பாடல் இது. இசைப்புயலின் குரலில் தாளம் போடவைக்கும் இந்தப்பாடலின் படத்தில் இடம்பெற்றதை விட மேடைக்கச்சேரிகளில் ப்ளேஸின் ராப் ஆரம்பத்துடன் பாடப்படும் இந்த வடிவம் என்னை இன்னும் அதிகமாகக் கவர்ந்திருக்கிறது
வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்
அந்த அரபிக்கடலோரம் பாடல் பாடிய அதே குரலில் இப்படியொரு மென்மையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலைத் தெரியச்சொன்னால் எனது தெரிவு இதுவாகத்தான் இருக்கும். காதுகளில் இழையோடி ஆழ்மனத்து அமைதியையே தட்டிப்பார்க்கும் இசையும் உறுத்தாத குரலுமாக என் பலநாள் தூக்கங்களைத் தழுவிக்கொண்ட சுகானுபவம் இந்தப்பாடல்
புது வெள்ளை மழை – ரோஜா
இசைப்புயலின் முதற் படத்திலிருக்கும் இந்தப்பாடல் இதுவரை நான் அதிக தடவைகள் கேட்ட பாடல்களில் நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும். சுஜாதா, உன்னிமேனன் குரல்களில் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும்போது அப்படியே வேறொரு உலகத்துக்குள் தூக்கிக்கொண்டுபோய் விடுவதைப்போன்ற ஒரு பரவசம் இந்தப்பாடலில். இதன் ஆரம்ப இசையும், அருமையான ஏற்ற இறக்கங்களுடனான ஹோரஸும் காதுகளில் கபடியாடுகையில் பல தடவைகள் என்னையறியாமலேயே கண்கலங்கியிருக்கிறேன். நிச்சயமாக ஒரு வித்தியாசமான உணர்வு அது.
14 comments:
உண்மையில் முத்துக்கள் தான் அவை.
"புதுவெள்ளை மழை" இசையாலேயே சூழலை உணர்த்திய உன்னதமான இசைக்கலைஞன் ரஹ்மான். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இறைவன் இவர் மூலம் மேலும் மேலும் புகழை சேர்துக்கொள்ளட்டுமே!!
சிறந்ததெரிவுகள்!
எனது ஒழுங்கு!
1 புது வெள்ளை மழை – ரோஜா
2 வெள்ளைப்பூக்கள் - கன்னத்தில் முத்தமிட்டால்
3 அந்த அரபிக்கடலோரம் – பம்பாய்
மிகவும் அருமையான தெரிவுகள் சுபாங்ஸ், தலைவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்னை எப்போதும் கவருமிசை. புதுவெள்ளையில் உருகி உருகிபோன காலம் நாட்கள் தித்திப்பு
பத்து வயசில் அந்த அரபிக்கடலோரம் பாடலுக்கு பிறகுதான் இசைப்புயலின் பாடல்களை பக்கத்து வீட்டு அண்ணாவிடம் கசட் கடன் வாங்கி கேட்க தொடங்கினேன். அன்றிலிருந்து என் இதயம் கவர்ந்த ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நல்ல தெரிவுகள். எனது முதல்3 பாடல்களில் புது வெள்ளை மழை பாடல் இருக்கிறது!
அநத அரபிக் கடலோரம் கேட்டுத்தான் ரஹ்மானைத் தெரிந்துகொண்டேன்.
மூன்றும் அருமையான பாடல்கள்..
மாப்பு எனது ரிங்கிங் டோன் புது வெள்ளைமழை பாடல் தெரியுமா..??? அருமையான ஒர இசைக் கோர்ப்பு அவருக்கு எனத பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
பாலவாசகன் அந்த கெசட்டை கொடுக்கலியா அவரு கே(கெ)ட்டாரு...
உங்களளவிற்கு என்னால் 3 பாடல்களைத் தனியே சொல்ல முடியுமோ தெரியாது, ஆனால் நான் அதிகமாகக் கேட்டவை ரஹ்மானின் பாடல்கள் தான்.
புது வெள்ளை மழை நிறைய முறை கேட்டிருப்பேன்....
"அந்த அரபிக் கடலோரம்" அடடா அப்படியே அந்த தொண்ணூறுகளுக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள்
வாழ்த்துக்கள் இசைப்புயலுக்கு
சின்ன சின்ன ஆசை-யைக் கணக்கிலேயே எடுத்துக்க வில்லையா? தமிழ் திரைபடப் பாடல்களில் இந்த அளவுக்கு வேறு எந்தப் பாடலையும் மக்கள் கொண்டாடவில்லை என்பது ஏன் கருத்து. தமிழில் வெளியானாலும், மற்ற எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு முழு இந்தியாவையும் கலக்கிய பாடல் இதுவல்லவா?
nice
Good One.. I love almost all his number.. But crazy about "Bombay" songs!
Post a Comment