யுத்தம் விட்டுச்சென்ற
கந்தகக் குழிக்குள்ளும்
எட்டிப்பார்க்கிறது ஈரம்..!
முன்பனி இரவு
பிச்சைக்காரன் தட்டில்
ஒடுங்கி விழுகிறது
ஒற்றைத்துளி..!
கனவுகளற்ற உறக்கத்தின்
கடைசிக் கணத்தின்பின்...
ஐயோ கொல்லாதே..!
தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' !
பறித்துக்கொண்டு பறக்கிறது.
எக்கணமும் வெடிக்கலாம்
சிறுவனின் உலகம்!
அரைத்தூக்கச் சிரிப்பில்
அம்மாவுக்கும் தெரிகிறது
குழந்தையின் கனவு!
20 comments:
கவிதைகள் ஆழமானவையாக இருக்கின்றன
மிக மிக அருமையான வரிகள் சுபா...
பதிவை வாசித்து முடித்த பின் வந்த முக்கிய கேள்வி.. படங்களைப்பார்த்துக் கவிதைகள் வந்தனவா ..
அல்லது கவிதைகளுக்காகப் படங்கள் தேடினீர்களா என்பதே...
சிறுவனின் உலகமும், மரங்களைத் தறிக்காதீரும் நெஞ்சைத் தொட்டவை.
கவிதைகளும் அதற்க்கு பொருத்தமான படங்களும் கலக்கல்.
// தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' ! //
மிகவும் பிடித்துப் போன, மிகவும் இரசித்த ஒன்று.
சிலவேளை லோஷன் அண்ணாவின் பதிவை வாசித்துவிட்டு இங்குவந்ததால் வந்த உணர்வாகவும் இருக்கலாம். :-(
எளிமையாக, அழகான கவிதைகள்....
//தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' //
அதிகம் பிடித்து இருக்கிறது இந்த கவிதை!!!
அருமை
யதார்த்தமான வரிகள் தோழரே. உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எல்லாமே நன்றாகவே இருக்கின்றன! மரங்களை வெட்டாதீர் மிகவும் பிடித்துள்ளது!!
முதலாவதும் கடைசியும் நெகிழ்வு
இரண்டாவது அழகு
நான்காவது பஞ்ச்
அதற்கடுத்தது திகில் "The red balloon " படத்தை ஞாபகப்படுத்தியது
அருமை..நான் நினைக்கிறேன் படங்கள் பின்னர் கவிதை என்று!!
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். கவிதை, பின்னர்தான் படங்கள் :)
அருமை..:)
ரசித்தேன்..:)
படங்களுக்கேற்றால்போல் கவிதைகள்!! சூப்பர்.... தொடர்ந்தும் வரட்டும்!
ஆழமான கவிவரிகள்..!
சிறுவனின் உலகம் என்னை தொட்டுச் சென்றது..
நல்லாயிருக்கு எல்லாமே! கடைசிக்கவிதை மிகவும் கவர்கிறது என்னை!
//தறித்தெடுத்துச் சீவப்பட்ட
நீள்சதுர மரத்துண்டில்
'மரங்களை வெட்டாதீர்' !
//
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா ..
மரங்களை வெட்டாதீர் -- சிறந்த முரண் கவிதையாக உள்ளது.. சிறுவனின் உலகம், குழந்தையின் கனவு போன்றவையும் என்னை மிகவும் கவர்ந்தன...அழகான எழுத்தாக்கங்கள்.. உங்கள் இலக்கியப் புலமையை இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா சுபாங்கன்
unkal eluthukolkal erayvanal aasirvathikappaddavai..valththukal..
தமிழ்மணம் முதல் vote
Post a Comment