Wednesday, December 31, 2008

நல் நட்பு

0 comments














அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அடுத்ததுதான் ஆண்டவன்
அவனுக்கும் நேரமில்லை
அதற்குத்தான் ஒரு நண்பன்

கூடப்பிறந்தது சகோதரம்
கூடியதால் பிறந்தது குழந்தை
கூப்பிட்டால் வருவாள் மனைவி
கூடவே வருவான், அவன்தான் நண்பன்

தீயவற்றை எனக்குச் சுட்டி
நல்லவற்றுக்குத் தோள் தட்டி
நியாய அநியாயங்களைக் காட்டி
விளக்கி நிற்பான் நல் நண்பன்

நாள் முழுதும் இருந்து- கதை
ஆயிரம்தான் பேசினாலும்- நண்பன்
பிரியும் நேரத் தோள் தட்டு
நாலாயிரம் கதை பேசும்

நட்பாகப் பழகுகிறார்
நாகரிக அப்பாமார்
Generation gapஐ இங்கு
நட்புத்தான் நிறைக்குதென்று

நடைமுறை உலகத்தில்
நட்புத்தான் குறைந்துபோச்சு
நட்புக்கும் இணயத்தை
நாடவேண்டிய நிலையாச்சு

நட்புக்கு உயிரையே
கொடுத்தான் கர்ணன் பாரதத்தில்
உன் நட்புக்கு நீ அப்படியா
கேட்டுப்பார் உன் அகத்தில்.

பின்விட்டு ஜோடியின் முறுவல்களும் முன்வீட்டு முந்தானை விலகல்களும்

0 comments
அடுத்தவர் வீட்டில் என்ன
நடக்குது என்று பார்க்க
ஆவலாய் நிற்கும் நங்கை
ஆங்காங்கே இருக்கின்றார்

வேலைக்காரியை விட்டு
வேவுபார்த்த காலம் போய்
தானே களமிறங்கி
தகவல்கள் திரட்டுகிறார்

தன் வீட்டுத் தகவல்களை
லாக்கருக்குள் பூட்டிவிட்டு
அடுத்த வீட்டு வேலிக்கருகே
அவசரமாய் ஒதுங்குகிறார்

காலையில் கணவருடன்
கத்திச் சண்டை போடும் புவனா
மாலையில் குழைவதை
மகிழ்ச்சியோடு பார்க்கின்றார்

மனதைப் பறிகோடுத்த
மங்கையவள் காதலனை
மறைவிடத்தில் சந்திப்பதை
மறைந்திருந்து பார்க்கின்றார்

பின்னேரப் பொதுக்கூட்டத்தில்
எடுத்தியம்ப வசதியாக
அடுத்தவீட்டுத் தகவல்களை
ஆவலுடன் சேர்க்கின்றார்

தன் வீட்டுத் தகவல்கள்
வேலியைத் தாண்டாதென்ற
தவறான கணிப்பினிலே
தாண்டவமும் ஆடுகின்றார்

அடுத்த வீட்டுத் தகவல்களை
ஆவலாய்ச் சேர்ப்பவர்க்குத் தெரியாது
அந்த வீட்டு விமலாவிற்கும்
அதுதான் வேலையென்று.


தலைப்பைப் பார்த்துவிட்டு வேறு ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்து வாசித்தால் நான் பொறுப்பல்ல.

Sunday, December 28, 2008

இரண்டாயிரத்து ஏழரை + அரை

0 comments
இறந்தவரைப் பற்றிப்
புறங்கூறலாகாது - ஆனால்
அறங்கூற உனக்கு ஒரு
அருகதையும் கிடையாது

பிறந்த அன்றே ஆரம்பித்தாய்
ஆலயத்துப் படுகொலையில்
பக்தாத்திலும் அன்றே
பல உயிரைப் பறித்தெடுத்தாய்

இயற்கைச் சீற்றங்களில்
உனக்கோ பல பெயர்கள்
நர்கிஸாம் பெங்ஷெனாம்
நம் நாட்டில் நிஷாவாம்
















அமரிக்கப்
பொருளாதாரம்
ஆட்டித்தான் காட்டிவிட்டாய்
அதிபருக்குச் செருப்படியும்
அதனுடனே சேர்த்து விட்டாய்

தீவிர வாத்ததில் - நீ
திருவிளையாடல் காட்டிவிட்டாய்
பக்தாத்தில், பாகிஸ்தானில் - ஏன்
மும்பயிலும் முடித்துவிட்டாய்











ஏகாதிபத்தியத்தை

ஏறிட்டும் பார்க்காத நீ
நம் நாட்டிற்கு மட்டுமென்ன
நல்லதா செய்துவிட்டாய்

காற்றைவிட எல்லாம் இங்கே
காசுக்காய்க் காத்திருக்க
பல்குழல் மழையினிலே
பலரங்கே படுத்துறங்க

ஈழரையாய்ப் பிறந்திருந்தால்
ஏற்றுக் கொண்டிருப்போம்
ஏன் பிறந்தாய் நீ இங்கே
எட்டாவது வருடமாக.

நான் ஒரு நல்ல பிள்ளை

1 comments
நாகரீக உலகத்தில்
யாருமே சொற் கேட்பதில்லை

காதல் கிறக்கத்தில் கைகள்
கட்டிளம் கன்னியரில் கண்கள்
கண்டதையும் சுவைக்கும் நாக்கு
கதறலையும் விரும்பும் காது
கெட்ட மணத்தையும் வெறுக்காத மூக்கு

நான் என்ன செய்ய
ஆனால்
நான் ஒரு நல்ல பிள்ளை

Thursday, December 25, 2008

பஸ் பிரயாணங்கள்

0 comments
எப்போது பார்த்தாலும்
வித்தியாசம் காட்டும்
என்றும் இனிக்கும்
சாலை ஓரங்கள்

ஏறியவுடனே என்னைப்பார்த்து
"முன்னே வா" எனக்கூறும், ஆனால்
மீதிச் சில்லறையில் எரிச்சலூட்டும்
நடத்துனன்

வீதி விபத்தைத் தடுப்பதற்கோ
இல்லை வீடு செல்லத் திரணியற்றோ
சைக்கிளையும் முந்த விடும்
சாமர்த்திய ஓட்டுணன்

கூட வரும் பயணிகளைப் பார்க்கயில்
சில சமயம் ஆதங்கங்கள்
பல சமயம் மனதில்
பூகம்பங்கள்

தனிமையில் பயணிக்கையில்
தானும் கூட வரும்
என்னுடைய phone இலுள்ள
Radio & Music player

எல்லாவற்றுக்கும் மேலாக
தனிமையில் நானிருக்க
ஏளனமாய் எனைப் பார்க்கும்
பக்கத்து சீட்

Wednesday, December 24, 2008

எனது LOVER!

2 comments
அப்பா மகன்
அண்ணன் தம்பி
கணவன் மனைவி
அனைவரும் friends ஆய்
அற்புத உலகம்.

தெரியாததை சொல்லித்தர
தெரிந்ததை விட்டு செல்ல
ஆக்கங்களை ஆள்ளி எடுக்கும்
அற்புத ஆசானாய் Notes.

எப்படி இருப்பானென்று
எதுவுமே தெரியாத
ஓராம் வகுப்பு எதிர் பெஞ்ச்
இன்று என் friend list இல் .

நேரில் சொல்ல முடியாததை
சுவற்றில் எழுதிப் பார்க்கும்
அனாகரீக கலாச்சாரம்
அதுதான் wall.

அடுத்தவனின் நிலயினை..
புகைப்படத்தின் ஆழகினை..
சுட்டியும் குட்டியும் காட்டும்
ஆழகிய comments.

நான் என்ன செய்கிறேன் என்று
அனைவர்க்கும் சொல்ல
செய்த வேலையை விட்டுவிட்டு
நான் எழுதும் Status.

என்னையும் கவிஞனாக்கி
கனவிலும் நினைக்க வைக்கும்
என் இனிய காதலி
அவள் தான் Face book!

Campus வாழ்க்கை....

0 comments
கஷ்டப்பட்டு படித்துத்தான்
Campus க்கு வந்துவிட்டால்
இனிஎன்ன உன் வாழ்க்கை
குப்பியிலே ஓடிவிடும்

உன்னுடைய lecture
Timetable என்னவென்று
இன்னும் தேயாத
Stone bench கள் பல அறியும்

உன்னுடைய கையோப்பம்
உன் நண்பன் நன்கறிவான்
உனைவிட அழகாக
அவனுமதை இட்டிடுவான்

Canteen மேசைதான்
Course work எழுதுமிடம்
Stapler அடிப்பதற்கோ
Bookshop தான் ஒரே இடம்

practical class என்றால்
lab sheet கள் பல உண்டு
lab இனுள் மறைத்து செல்ல
பத்து ரூபா file உண்டு

Exam வருது என்றால்
library இல் தெரிந்து விடும்
பத்து மணி மட்டும் அங்கே
பகலாய் பல்ப் எரியும்

Examஇல் marks எடுக்க
குப்பியிலே மார்க்கமுண்டு
குத்தி நீயும் விட்டாயென்றல்
A+ தான் உனக்கு!

Wednesday, December 17, 2008

Autograph

0 comments
பள்ளிப் பருவத்தின்- பழைய
செல்லரித்த பக்கத்தின்- இன்னும்
சிதையா நினைவுகள்...

குட்டி போடுமென்று
ஒற்றை மயிற்சென்றை
பாடப்புத்தகத்தில் பதுக்கிய நாட்கள்

பக்கத்துச் சீட்டு நண்பன்
பாத்தடிக்கக்கூடாதென்று- File coverஆல்
மடித்து மறைத்தெழுதிய நினைவுகள்

பகிர்ந்துண்ணும் பழக்கம்
பழகாத நாட்களில்
பறித்தெடுத்த நண்பனை
பார்த்திகழ்ந்த தருணங்கள்

பாலர் வகுப்புத்தாண்டி
பள்ளிக்கு வந்தபின்னர்
பார்ப்பதற்காய் ஏங்கிய
மகளிர் கல்லூரிகள்

விளையாட்டுப் போட்டிப் பயிற்சிக்காய்
விரைந்தோடி வரச்சொல்ல
குட்டிச் சுவர் தாண்டிக்
குதித்தோடிய சாகசங்கள்

வகுப்பறைப் பாடத்தை
பாதியில் விட்டு விட்டு
A/L day class இற்கு
எழுந்தோடிய நாட்கள்

எல்லாவற்றையும் இன்று
எண்ணிப் பார்க்கின்றேன்
ஏதோ ஒன்றை இழந்ததாய் உணர்ந்து..

Thursday, December 11, 2008

முதல் பார்வை

0 comments
கானகத்தில் கள்வரை கண்டபோதும்
காட்ஸில்லா படத்தில் பிணத்தின்
கைகள் நீண்டபோதும், இல்லாத இதயத்
துடிப்பை உணர்ந்தேன்- உன்னை
முதன் முதல் பார்த்த பொது!

Monday, December 1, 2008

யாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட சூராவளியின் பதிவுகள் !

0 comments
50 வருடங்களின் பின் நடந்த இயற்கை அனர்த்தம்!























Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy