Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, December 6, 2010

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட்

22 comments

336x2802

முஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.

இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.

இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.

அடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.

‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.

அடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.

அடுத்ததாக பதிவர் ஜனா

‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.

அடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது

‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.

அடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்

‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.

அடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.

‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.

அடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை

‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.

அடுத்து எழுந்த அனுதினன்

‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.

அடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்

‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,

‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ? இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.

Monday, July 12, 2010

பலித்த அருள்வாக்கும் பதிவர் லோஷனும்

15 comments

 

q

போல் ஒக்டோபசானந்தா. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழுவதுமே தனது துல்லியமான கணிப்புகளால் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்து உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்த மகான். மனித குலம் முழுவதற்கும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்துக் கொடுத்து, இறைஞானம் தந்தருளவெனவே அவதரித்திருக்கும் அவதார புருஷர். மனதைக் கொண்டும், அதன் தர்க்கங்கள், கருத்துகள், பழைய நம்பிக்கைகள் வாத பிரதிவாதங்களைக் கொண்டும் இவரைப் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து ஆராதிக்க வேண்டிய அதிசயம் இவர்.

எங்கள் போல் ஒக்டோபசானந்தாவின் உயிர் மூச்சு ஒன்றேதான். போட்டிகளின் முடிவுகளை முன்னரே கணித்துச்சொல்லி, அதன்மூலம் போட்டியின் விறுவிறுப்பு நேரத்தில் ஏற்படும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்ப்பதும், நகத்தைக் கடித்து அதனால் ஏற்படும் கிருமித்தொற்றைத் தவிர்ப்பதும், தனது பக்தர்களை நோயற்ற வாழ்வு வாழ வழிசமைப்பதும்தான்.

இதோ, போல் ஒக்டோபசானந்தாவின் அற்புதங்களுக்கு ஒருசோறு பதமாக பதிவர் லோஷனின் கடிதம்.

Untitled-1

என் பெயர் லோஷன். எனது விளையாட்டுப் பதிவுகளாலும், அது குறித்தான எதிர்வுகூறல்களாலும் பதிவுலகில் எனக்கென ஒரு தனித்துவமான முத்திரை பதித்தவன். எனது எதிர்வுகூறல்கள் எல்லாம் எதிர்மறையான முடிவையே தந்திருந்தாலும், எனது தொடர்ச்சியான வாசகர்களுக்கு அதுகுறித்துத் தெரிந்திருந்ததால் எனது வாடிக்கையாளர்களுக்கு குறையேதும் இருக்கவில்லை. இப்படியாக வெற்றிகரமான எனது எதிர்மறை எதிர்வுகூறல்களாக

  • இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் எனக்கூறி அதைத் தோல்வியடைய வைத்தது

 

  • ஆசியக்கோப்பையை இலங்கை கைப்பற்றும் எனக்கூறி இலங்கைக்கு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மரணஅடி வாங்கிக் கொடுத்தது

 

  • நட்வெஸ்ட் தொடரில் ஆசிக்கு ஆதரவளித்து, யாருமே எதிர்பார்க்காதவகையில் கோப்பையை ஆங்கில தேசத்துக்கு அள்ளி வழங்கியது

போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதே பாணியை தொடர்ந்தும் கால்பந்தாட்ட உரக்ககிண்ணப் போட்டிகளிலும் பயன்படுத்தி, காலிறுதி வரை கலக்கியே வந்திருக்கிறேன். அனைவருமே எதிர்பார்த்த ஆர்ஜென்டீனா அணிக்கு எனது அமோக ஆதரவை அள்ளி வழங்கி, காலிறுதியோடு அதையும் மோசமாகக் கலைத்தவனும் நான்தான் என்றுதான் கடைசிவரை எண்ணிக்கொண்டிருந்தேன்.

aa

அப்போதுதான் போல் ஒக்டோபசானந்தா சுவாமிகளைப்பற்றி எனக்கு அறியக்கிடைத்தது. அவரது உலகப்புகழோடு போட்டியிட்டு உலகப்புகழ் பெறுவதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது வலைப்பதிவுகளில் சுவாமிகள் ஆதரவளித்த அணிக்கே எனது ஆதரவையும் வெளிப்படையாக அறிவித்து, அவற்றைத் தோல்வியடையச் செய்ய நான் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்.

நேற்றய இறுதிப்போட்டியில் நான் ஆதரவளித்த ஸ்பெயின் அணியே நான் சற்றும் எதிர்பாராதவகையில் கோப்பையைத்தூக்கி, எனது பலகோடிக் கனவுக்கு ஆப்படித்தது. அப்போதுதான் போல் ஒக்டோபசானந்த சுவாமிகளின் மகிமையை உணர்ந்துகொண்டேன். எனது அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த போல் ஒக்டோபசானந்த சுவாமிகளுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.

இறுதியாக சுவாமிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்.

போல் ஒக்டோபசானந்தா அடிப்பொடி

LOSHAN
http://arvloshan.com/

Saturday, April 3, 2010

அரசியலில் பதிவர்கள்???

56 comments

 

 

வரப்போகும் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலையொட்டி சில பதிவர்கள் அரசியலில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களைப்பெற எமது உளவுப்பிரிவை உசுப்பிவிட்டதால் கிடைத்த பதிவர்களின் பதாகைகள் சில...

 

Vanthi 

 Athirai 

Mathu

 

Varo 

Kangon 

Yoga    

   Bavan

 Bullet

 Atchu 

Sathish 

Vasakan 

Loshan

Saturday, March 27, 2010

நல்லாப் போடுறாங்கப்பா பின்னூட்டம்

27 comments

 

 

DISC

 

A said…

மீ த பஸ்ட்டு

B said…

நான்தான் முதலாவதா?

B said…

வட போச்சே :(

C said…

அட, பதிவு போட்டாச்சா? இருங்க படிச்சுட்டு வந்துடறேன்

D said…

ரசித்தேன் :)

C said…

கலக்கல் பதிவு சுபாங்கன்

E said…

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது

F said…

இண்டைக்கு கொஞ்சம் பிசி. நாளைக்கு வந்து படிக்கிறேன்

G said…

எனது வரவைப் பதிவுசெய்கிறேன்

H said…

:))))

I said…

:)))))))))))

J said…

:))))))))))))))))))))))

K said…

//J said…

:))))))))))))))))))))))//

றிப்பீட்டு

L said…

உங்கள் பதிவிலுள்ள எலுத்துப் பிலைகலைத் திருத்திக்கொள்ளவும்

M said…

உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி

N said…

ஆகா ஆகா சுப்பர் ஓகோ சுப்பர்.
அருமை அருமை..

O said…

தமிழ்ப் பதிவர்களுக்கான புதிய திரட்டி சிங்களம்3125. இப்போது ஓட்டுப்பட்டை வசதியுடன். எமது திரட்டியில் இணைத்து உங்கள் ட்றாபிக்கை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

P said…

சூப்பரு

Q said…

அடங்கமாட்டீங்களா?

R said…

நல்ல பதிவு. எனது இந்தப்பதிவையும் படித்துப்பாருங்கள்

http://nondi.blogspot.com/2010/03/blog-post_22.html

S said…

உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?

T said…

தகவலுக்கு நன்றி

U said…

ப்ளாக்க கண்டுபிடிச்சவன் தூக்கு போட்டுக்க போறான்.
என்ன எழுதுறது ஏது எழுதுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு.

V said…

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நான் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

W said…

கலக்கல்

X said…

oem car audio ford taurus [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html]beststuff fuel car dvd ipod vacation[/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html car audio systems integrated ford falcon
auto audio capasiters [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] muscle car dvd drag racing http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html d mercedes benz reviews auto extended warranty car audio and
beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html]car audio subwoofers auto cheap insurance[/url] beststuff fuel car dvd ipod vacation houseboat lake powell http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html beststuff fuel car dvd ipod vacation

Y said…

கங்கோன், மேலேயுள்ள பின்னூட்டத்தை தமிழில் மொழிபெயர்க்க முடியுமா?

Kangon||கங்கோன் said…

மூல_உபகரண_உற்பத்தியாளர்_மகிழூந்து ஒலி ford ரிஷபம் [url=http://www.cardvdplanet.com/8-5-inch-flip-down-car-monitor-dvd-game-car0038--discount-price2.html] சிறந்தபொருட்கள் எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை [/url] car audio 1995 infiniti j30 http://www.cardvdplanet.com/4-3-inch-tft-touch-screen-dvd-player-car0077--discount-price68.html மகிழூந்து ஒலி அமைப்புக்கள் முழுமையாக்கப்பட்ட ford வல்லூறு
தானியங்கி ஒலி கொள்ளவிகள் [url=http://www.cardvdplanet.com/magoten-touch-screen-7-inch-2-din-tft-lcd--discount-price35.html]honda car audio code[/url] தசை மகிழூந்து டிவிடி இழு வாகன ஓட்டம் http://www.cardvdplanet.com/6-2-inch-tft-lcd-screen-2-din-dvd-player-usb--discount-price14.html மெர்சிற்றிஸ் பென்ஸ் மதிப்பாய்வு தானிங்கி நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மகிழூந்து ஒலி மற்றும் சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் [url=http://www.cardvdplanet.com/7-inch-touch-screen-build-in-gps-bluetooth-fold--discount-price101.html] மகிழூந்து ஒலி கப் வூபர்ஸ் தானியங்கி மலிவான காப்புறுதி [/url] சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை படகுவீடு ஏரி பவல் http://www.cardvdplanet.com/12-inch-desktop-tft-lcd-touchscreen-with-vga--discount-price85.html சிறந்த எரிபொருள் மகிழூந்து டிவிடி ஐபொட் விடுமுறை

Y said…

அட அட அட, நன்றி கங்கோன்

Z said…

எங்கியோ.....போயிட்டீங்க...

 

அடப்போங்கப்பா, இங்கிலீசில இதுக்குமேல எழுத்துக்களே இல்லை.

Wednesday, February 10, 2010

ஹி ஹி ஹி கிரிக்கெட்

22 comments
பதிவர் பவன் என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்த அழைப்பை எனது கிரிக்கெட் அறிவுக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். பவனுக்கு கோனானுகோடி நன்றிகள்.

  • பிடித்த கிரிக்கெட் வீரர்
19462_1332843593889_1014992031_1008973_2545287_n



சூப்பராப் பிடிச்சுட்டாரே









  • பிடிக்காத கிரிக்கெட் வீரர்
8


சரியாப் பிடிக்கவே தெரியல இவருக்கு










  • பிடித்த பந்துவீச்சாளர்
mahela-jayawardene-2009-11-5-3-13-16



எம்மாம்பெரிய பந்துப்பா












  • பிடிக்காத பந்துவீச்சாளர்
fun21-large



பாத்து, பாத்து, கவனம்











  • பிடித்த துடுப்பாட்டவீரர்
109491


என்னா அடி, என்னா அடி








  • பிடிக்காத துடுப்பாட்டவீரர்
pvw_20090914_2029_18620


பேட்டைக்கூடச் சரியாப் பிடிக்கத் தெரியல இவருக்கு







  • பிடித்த களத்தடுப்பாளர்
Shane-Bond_NZ-Aus_2006-7_Wellington_1



வாவ், சூப்பர்ப்பிடி









  • பிடிக்காத களத்தடுப்பாளர்
catch



பிடிக்கலயே








  • சிறந்த ALL-Rounder
funny-cricket-pictures-3
funny-cricket-pictures-4



வாவ்










  • பிடித்த நடுவர்
fun3-large



பிடிச்சுட்டாருப்பா










  • பிடிக்காத நடுவர்
taufel-in-action_dVjr2_17022



பின்னாடி பிடிக்கலயே








  • பிடித்த அணித்தலைவர்
fun123



தலலலல










  • பிடிக்காத அணித்தலைவர்
1a502f46ceccd29912a1394fc3ae-grande


வட போச்சே







  • சிறந்த opener
102036



என்னாமா திறக்கறாரு










  • சிறந்த TEST வீரர்
cth4


TEST எழுதுறாரப்பா







  • கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
Untitled-1
45646456654
இவருக்குத்தான் ஊண், உறக்கம் எல்லாமே கிரிக்கெட்



இந்தத் தொடர்பதிவைத் தொடர நான் அழைப்பது
யோ, நில்லுங்கப்பா ஓடாதீங்க.
  
  

Wednesday, January 13, 2010

பதிவுகளில் கும்மி அடிப்பது எப்படி?

81 comments






405 பின்னூட்டங்கள் இட்டு என்னைக் கதறக்கதறக் கும்மி எடுத்ததன் அறுபத்தெட்டாவது நாள் நிறைவாக இந்தப் பதிவு வெளியாகிறது. அன்று கும்மியடித்த பலரும் கும்முவதில் கைதேர்ந்துவிட்ட்ட நிலையில், கும்முவதற்கு புதியவர்களையும் தயார்படுத்துவதே இந்தப்பதிவின் நோக்கம்.

கும்மியின் நோக்கம் 


வெட்டியாக இருக்காமல் பொழுதுபோக்கல்

கும்மிக்குத் தேவையானவை



  • வெட்டியாக இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர்
  • மொக்கைப்பதிவு
  • கொலைவெறி
  • கணினி
  • இணைய இணைப்பு


கும்மி அடிக்கும் முறை


முதலில் பதிவைப் படிக்காமல் மீ த பஸ்ட்டு, செகண்டு எனப் பின்னூட்டிவிடவேண்டும். பின்பு பதிவைப் படித்துவிட்டு, அது கும்முவதற்கு ஏற்றதாக இருந்தால் வேறு யாராவது அப்போது வெட்டியாக இருக்கிறார்களா என அறிய எனிபொடி ஹியர்? எனப் போட்டுவிடலாம். நிச்சயமாக ஒருவராவது வந்து யேஸ் ஐ ஆம் ஹியர் எனப் பின்னூட்டுவார். அவ்வளவுதான், உடனடியாக ஸ்ரார்ட் தி (சங்கு) மீசிக் என பின்னூட்டிவிட்டு கும்மியை ஆரம்பிக்கலாம்.

கும்மியின் ஆரம்பத்தில் சில பின்னூட்டங்கள் பதிவைச் சார்ந்து இருப்பது கட்டாயமாகிறது. தொடரும் பின்னூட்டங்களை வேண்டியவாறு வசதிப்படி இட்டுக்கொள்ளலாம். கும்மியடிப்போர் தமக்குள் பேசிக்கொள்ளும் களமாகவும் பின்னூட்டங்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறான கும்மிகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அவசியம். கும்மப்படும் விடயங்களல்ல.

கும்மும்போது கவனிக்கவேண்டியவை



  • பதிவின் சொந்தக்காரர் கும்மியடிப்போருக்கிடையில் சிண்டு முடியப் பார்க்கலாம். எனவே கும்முபவர்களுக்கிடையே புரிந்துணர்வு அவசியம்.
  • கும்மி முடியும்வரை வேலை ஏதும் வந்துவிடாது வெட்டியாக இருப்பது பயன்தரும்.
  • கும்மப்படும் பதிவர் மூச்சு விடாத அளவுக்கு கும்மியின் வேகம் இருப்பதை உறுதிசெய்துவிடவேண்டும்.
  • பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அறிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் முக்கிய இலக்கங்களான ஐந்நூறு, ஆயிரமாவது பின்னூட்டங்களை யார் இடுவது என்ற போட்டி கும்முவர்களுக்கிடையே ஏற்பட்டு, கும்மி ஆரோக்கியமானதாக இருக்கும்.


கும்மியின்போதான அவதானங்கள்



  • பதிவை வாசிக்க வருவோர் தலைதெறிக்க ஓட்டமெடுப்பர்
  • கும்மப்படும் பதிவர் கும்மியை நிறுத்துமாறு கதறுவார்
  • பின்னூட்ட எண்ணிக்கையைக் காட்டுவதில் பிளாக்கருக்கே குழப்பம் ஏற்படும்
  • கும்மியவர்களின் Keyboard இலுள்ள எழுத்துகள் அழிந்திருக்கும்
  • பதிவுக்கு மொக்கை அந்தஸ்து கிடைக்கும்
  • கும்மி அடிப்பவர்களின் பெயர்கள் திரட்டிகளில் பெரிய எழுத்தில் தெரியும்


கும்மியின் முடிவு


கும்மி அடிக்கப்பட்டவர் மயங்கிச் சரிந்தபிறகு, அல்லது சரணாகதி அடைந்தபிறகு கும்மியை நிறுத்திக்கொள்ளலாம்.

கேள்வி நேரம்


கும்மி தொடர்பான உங்கள் சந்தேகங்களை பின்னூட்டங்களில் கேட்கலாம். வெட்டியாக இருக்கும்போது விடையளிக்கப்படும்.


  



Thursday, January 7, 2010

தமிழ்மண விருதும் பதிவர்களும்

30 comments
தமிழ்மண விருதுகள் 2009 க்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நான் தெரிவுசெய்த இரு பதிவுகளுமே இரண்டாம் கட்டத்துக்கு வந்துவிட்டன. ஓட்டிட்ட அனைவருக்கும் நன்றிகள். இதில் போட்டியிடும் பதிவர்கள் போட்டியின் ஒவ்வொரு காலத்திலும் என்னேன்ன பாடியிருப்பார்கள் என்று ஒரு ஜாலி கற்பனை

அறிவிப்பு வரும்போது








தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்

போட்டிக்காகப் பதிவுகள் தெரியும்போது







பொதுவாக என்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்

உடன் போட்டியிடும் பதிவுகளைப் பார்த்தபோது







வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்




பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு

வெற்றிபெறாவிட்டால்




போனால் போகட்டும் போடா

இரண்டம்கட்டத்துக்கு ஓட்டுக்கேட்கும்போது



ஆண்டவன பாக்கணும், ஓட்டு ஒண்டு கேக்கணும்

முடிவுக்காக்க் காத்திருக்கும்போது




இதயமே..இதயமே.. உன் மெளனம் என்னைக்கொல்லுதே.. இதயமே..

இரண்டாம் கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்





வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்

வெற்றிபெறாவிட்டால்




எங்கே செல்லும் இந்தப் பாதை


முடிவில் இது தொடர்பாக பதிவிடும்போது


வென்றுவிட்டால்




நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு


வெற்றிபெறாவிட்டால்



இதெல்லாம் டூப்பு


    

Friday, January 1, 2010

வருடத்தின் முதல் மொக்கை

33 comments

இன்னிக்கு நியூ இயர். இதுகூடத் தெரியாமலா இருக்கோம் என்பவர்களுக்காக பின்னூட்டப்பெட்டி திறந்துவிடப்பட்டுள்ளது. அதற்குமுதல் கடமையைச் செய்துவிடுகிறேன்.

ஐந்தறைப்பெட்டி வாசகர்கள் அனைவருக்கும்

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR




அப்படியே நம்ம சக பதிவர்கள், நண்பர்கள் எப்படியெல்லாம் வாழ்த்துச் சொல்லுவார்கள் என்று ஒரு சின்னக் கற்பனை


நேற்றய நீலநிற பூரணைச் சந்திரன், வருடத்தின் பதின்மூன்றாவது பூரணை தினம் என்ற கீர்த்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கையில் பிறந்துவிட்டது 2010. இவ்வாண்டிலே அனைவருக்கும் விர் விர் என்று விசா எடுத்து விமானத்தில் உயரப்பறப்பதுபோல, வாழ்க்கையின் உயரங்களை எட்டிவிட வாழ்த்துகள்!


2009ஆம் ஆண்டு எப்படி? கருத்துக்கணிப்பு முடிவு.. படு மோசம் 37.6% பரவாயில்லை 36.3% மிக சிறப்பு 9.8% மோசம் 9.75% நல்லது 8.3%

இப்படியெல்லாம் இருக்காமல் அடுத்த வருடமாவது இனிதாய் இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


பங்குச்சந்தையின் காளையும் கரடியும் போல் முட்டிக்கொள்ளாமல், சமாதானத்துடன் ஆரம்பிப்போம் 2010இனை!
இந்தமுறை புதுவருட 2010க் குறிப்பின் படி,அனைத்துப் பதிவர்களுக்கும் புதுவருடம் (HNY-HAPPY NEW YEAR) 100 சதவீதம் (100.00 புள்ளி) உயர்வை வழங்கவேண்டும் என வாழ்த்துகிறேன்

இன்றைய புதுவருடத்தின் மதிப்பு 2010.00 ஆகும்







வாழ்த்து எனப்படுவது யாதெனில்…

சிறிது பொறுங்கள். அதற்குமுன் வாழ்த்திவிடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இனித்தொடரலாம்..

(இதுக்குமேல நான் எஸ்கேப்..)


கும்மிருட்டில கள்ளன் வாறதுமாதிரி வாற புதுவருசத்துக்கு வாழ்த்தணுமான்னு கேக்கிறான் ஒரு மாங்கா மடையன். வருசமெண்டா இரவிலதான்டா வரும். குதிரை எண்டா விழுத்தத்தான்டா செய்யும் (நெடுந்தீவில இல்லை)

என் அன்புக்குரிய பதிவுலக பாச நெஞ்சங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)


மலர்ந்துள்ள ஆண்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி, மனிதர்கள் ஒற்றுமையாகவும், மனிதத்துவத்துடனும் வாழ எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.


டிவிட்டர் புகழ் கனககோபியின் டிவிட்டர் வாழ்த்து



படம் பதிவுக்காக உருவாக்கப்பட்டது




இரண்டு ரூபாய் SMS போதும்
வாழ்த்து ஒன்றை அனுப்பி முடிக்க
இவர்கள் அனுப்பும் பல SMSகளில்
முடிந்துபோகும் பல சில்லறைகள்…
பை நிறையப் பணமும்…  போன் நிறைய றீலோட்டும்
கொண்ட உனக்கென்ன பயம்?
தட்டிவிடு ஒரு SMSஐ!
பதிலுக்காய் உனக்கு ஒற்றை
மிஸ்டுகோல்தான் முடியும் என்னால்
அதற்கும் ஃபோனில் பேலன்ஸ் வேண்டும்.
வாழ்த்திவிடுகிறேன் இங்கேயே
இனிதாய் இருக்கட்டும்
இரண்டாயிரத்துப்பத்து!



Anaivatukum iniya angila puthandu valthukal. 2010il naan meendum pathivelutha thodankividiven.
(இவர் என்ன சொல்ல வாறாருன்னா அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். 2010இல் நான் மீண்டும் பதிவெழுதத் தொடங்கிவிடுவேன்)


புதிதாய்க் கிடைத்த நண்பர்களோடும், எனது புதிய தொலைபேசி இலக்கத்தோடும் பதிதாய்ப் பிறந்த ஆண்டை வரவேற்கிறேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy