முஸ்கி – இந்தப் பதிவில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. தெரிந்தோ, தெரியாமலோ யார் மனதாவது புண்பட்டால் மருந்து போடுவதற்கு மருத்துவர் பாலவாசகனை அணுகவும்.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்பு தேசிய கலை இலக்கியப் பேரவையில் பதிவர் நிரூஜாவின் அறிமுக உரையோடு ஆரம்பமாகியது.
இலங்கையின் மூன்றாவது பதிவர் சந்திப்புக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கங்கள். பதிவுகளின் மூலம் சந்தித்துவந்திருக்கும் நாம், இன்று நேரில் சந்தித்திருக்கிறோம். இணையம் என்பதே ஒரு மாயை. அதில் கவற்சியான பெயர்கள் மற்றும் சம்பவங்கள் கொண்டு யாரையும் ஏமாற்றிவிடலாம் என்பதாலேயே இப்படியான சந்திப்புகள் அவசியமாகின்றன. முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். நான் நிரூஜா என்று ஆரம்பிக்க முன்னாள் பதிவர் புல்லட் வாய்க்குள் ஈ புகுந்தது கூடத் தெரியாமல் அவரையே வெறித்துப்பார்க்கின்றார்.
அடுத்ததாக தன்னை அறுமுகப்படுத்த வருகிறார் பதிவர் மதிசுதா.
‘எனக்குத்தான் சுடுசோறு, இரண்டாவதாக பேசினாலும் சோறு இன்னும் ஆறேல்லை, சூடாத்தான் கிடக்கு’ என்றவர், ‘ நான் மதிசுதா, நனைவோமா என்ற தளத்தில் எழுதிவருகிறேன்’ என்று முடித்தார்.
அடுத்ததாக கன்கொன் கோபியின் முறை வர, அதைக் கவனிக்காமல் தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். பின்னாலிருந்து யாரோ கோபிக்கண்ணா என்று செல்லமாக அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
‘நான் கோபிகிருஷ்ணா, கன்கொன் என்ற பெயரில் ….. பெயரில் ….. ‘என்று சிறிதுநேரம் யோசித்தவர், ‘தளத்தின்ட பெயர் எனக்கே மறந்துபோச்சு, அடுத்தமுறை வரேக்கை பாத்துக்கொண்டுவாறன்’ என்று சிரித்துக்கொண்டிருந்தார்.
அடுத்ததாக பதிவர் ஜனா
‘நான் ஜனார்த்தனன். Cheers with Jana என்ற தளத்தில் எழுதி வருகிறேன். இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்.... ஜப்பானிய இலக்கிய எழுத்தாளர் ஹருகி முரகாமி தனது யசுநாரி கவபாட்டா என்ற நாவலில் கூறியிருக்கிறார் நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று. அவ்வாறான எனது தேடல்கள்தான் பதிவுலகுமூலம் வெளிப்படுகின்றன. பதிவர் சந்திப்புக்கு நன்றி’ என்று முடித்தார்.
அடுத்ததாக மைக்கைப்பிடித்தார் பதிவர் மது
‘அன்பின் பதிவர் எல்லாருக்கும் வணக்கம், நான் தான் மது’. எல்லோரும் குறுகுறுன்னு யாரோ புதியவரைப் பார்ப்பது போல பார்க்க, ‘ஆங்.. என்ன அப்பிடிப் பாக்கீங்க எல்லாரும் நான்தான் மதுயிசம் மது’ என்றார். அனைவரின் முகத்திலும் ஒரு பிரகாசம் தோன்ற அப்பாடா என்று உட்காந்தார்.
அடுத்து சிவப்பு டீசர்ட் கையில் கறுப்பு ஜாக்கட், டீசர்ட் கழுத்தில் டீசர்ட்டை ஈய்த்துக்கொண்டிருக்கும் கறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்
‘அனைவருக்கும் வணக்கம் நான்தான் வந்தி வித்தின் பிரக்கட்ஸ் லண்டன் என் உளறல்களி்ல் சூப் வழங்கி வருகிறேன். இப்பதான் லண்டனில இருந்து ஃபிளைட் பிடிச்சு நேரா வாறேன்’. என்று முடித்தார்.
அடுத்ததாக சிரித்துக்கொண்டே மைக் பிடித்தார் கூல்போய் கிருத்திகன்.
‘வணக்கம். நான் கிருத்திகன். மதிசுதா அண்ணைக்கு சுறுசோறு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் பதிவு எழுதாவிட்டாலும் பதிவுலகத்தை கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பொழுது போக்கு எண்ட தளத்தில எழுதுறன். யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ ஆம் ஆல்வேய்ஸ் பிசி’ என்று காதுவரைக்கும் சிரித்தார்.
அடுத்ததாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பதிவர் ஆதிரை
‘நான்தான் ஆதிரை. கடலேறி என்ற தளத்தில எழுதினான். திடீரென்று பார்த்தால் அது என் பார்வையினூடு… என்று மாற்றப்பட்டிருக்கு. எனக்கு அடிக்கடி பதிவெழுத ஆசைதான். ஆனாலும் சில கடவுச்சொல் பிரச்சினைகளால் எழுதமுடியாமலிருக்கு’ என்று கவலையுடன் அமர்ந்தார்.
அடுத்து எழுந்த அனுதினன்
‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்.
அடுத்ததாக எழுந்த பதிவர் லோஷன்
‘நான்தான் லோஷன் அலைஸ் விக்கி அலைஸ் விக்கிரமாதித்தன்’ என்று தொடங்க குறுக்கிட்ட நிரூஜா,
‘அண்ணே கோவிக்காதைங்கோ, உங்களைத்தெரியாதாக்கள் யாராவது இருப்பினமோ? இப்ப இடைவேளை நேரம்’ எனச்சொல்ல கன்கொனும், அஸ்வினும் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பதிவர் வதீஸ் கையில் பக்கோடாவுடன் வர, லண்டனில குளிர் -17. சூடா பக்கோடா சாப்பிட்டா இதமா இருக்கும் என்றவாறே சதீஷ் எழுந்துகொள்ள இடைவேளைக்காக அறிமுகம் இடைநிறுத்தப்பட்டது.
22 comments:
சிரிச்சுக்கொண்டிருக்கிறன். முடிச்டிட்டு மிச்சம்
அப்படியா இடைவேளைக்கு அப்புறம் என்ன...??? காணத்தவறாதிர்கள் உங்கள் தரங்கம் வலைப்பதிவில்...
ஹா ஹா.. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திட்டுது..
குறிப்பாக நிரூஜா+புல்லட் லிங்க்..
கோபிக் கண்ணா ;)
ஆதிரையின் கவலை
வந்தியின் சிவப்பு நிற ஆடை..
மதிசுதாவின் சுடு சோறு
ஜனாவின் ஜப்பான் லிங்க்..
யோவ் விக்கியை ஏன்யா லீக் பண்ணினீர்?
ஃஃஃஃஃகறுப்புக்கண்ணபடி, காலில் கன்வஸ் சப்பாத்து,கைகளில் கறுப்பு கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்ஃஃஃஃ
சுபா இது நீங்க எழுதினது ஆனால் இந்த கமாக்களை கொஞ்சம் இடம் மாற்றட்டுமா...???
கறுப்புக்கண்ணபடி காலில், கன்வஸ் சப்பாத்து கைகளில், கறுப்பு கிளவுஸ் தலையில் குரங்கு குல்லா என ஒரு மனிதர்.....
(சும்மா ஒரு கடாசல் தான் )
பதிவர்?!சந்திப்பு முடிஞ்சுதோ?நான் வரோணுமெண்டு நினச்சன்!சரியான ஸ்பீட்டாத் தான் போறியள்!
//யாரும் எனக்குக் கோல் எடுத்துப்போடேதைங்கோ, ஐ
ஆம்
ஆல்வேய்ஸ் பிசி//
அவ்வ்வ்வ்வ்.........!!
உறைப்பான
உள்குத்துகள்
ஊமைக்குத்துகளாய்
உலாவருகிறதுபோல்
உள்ளதே..!!!
:D
ஆஹா....
கூட்டம் சேர்ந்திட்டாங்களே...!!!
அப்பாடா.. என்னைக் கலாய்க்காமல் விட்டதுக்கு நன்றி..:P
கோபிக்கண்ணா, கூல், வந்தியண்ணா, அனு,ஆதிரை அண்ணா மதுயிசம் எல்லாத்தையும் படிச்சு சிரிச்சுச் சிரிச்சு முடியல..:D
ம் இனியென்ன ஸ்டார்ட் த மியூசிக்..
இடைவேளைக்குப் பிறகு பாகம் இரண்டு யார் எழுதப்போறீங்க???
பாகம் 2 எழுதலாம்னு நினைக்கறேன்..
ஆகாலும் பாகம் 1 மாதிரி சுவாரசியமாயிருக்குமோ தெரியாது..
நன்றி
//Cool Boy கிருத்திகன். said...
பாகம் 2 எழுதலாம்னு நினைக்கறேன்..
ஆகாலும் பாகம் 1 மாதிரி சுவாரசியமாயிருக்குமோ தெரியாது..
நன்றி//
எதிர்பார்க்கிறோம்.. அண்ணே..:D:D:D #யார்யார்_டவுசர்_டர்ர்ர்ர்ர்ர்ர்_ஆகப்போகுதோ..:-o
//ம.தி.சுதா said...
அப்படியா இடைவேளைக்கு அப்புறம் என்ன...??? //
இடைவேளை நேரத்தில் ஆறிய சோறு, அதுக்குப்பிறகு குளிர்சோறு..:P:P #ச்சும்மா
அட...கலக்கலா எழுதி இருக்கீங்க
கலக்கல் சுபாங்கன், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்ட்டது,
சிரிச்சி சிரிச்சி அலுவலகத்தில் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள்...
நன்றி பவன்
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – நேரடி றிப்போட் 2
http://tamilpp.blogspot.com/2010/12/2.html
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............
ஸப்பா.....சிரிச்சு சிரிச்சு வயிறு நோகுது.......
கலக்கல் லொள்ளுகள்.....
இடைவேளைக்கு பின்.....நடந்தது என்ன....??
வழக்கமான தமிழ் சினிமா போல இல்லாம 2ம் பாகம் இன்னும் கலக்கலாய் இருக்கோணும்...என்ன....
இனி எல்லாம் இப்படித்தான். திடீர் என இலங்கைப்பதிவர்களின் தளங்கள் எல்லாம் சிரிப்பு சனல்கள் ஆகிவிட்டனவே. அதுவும் ஆரோக்கியம்தான்.
//அடுத்து எழுந்த அனுதினன்
‘ஹாய் எவ்ரிபொடி, ஐம் அனு சுருக்கமா என்னை அனுதினன் அனுதினன்னு கூப்பிடுவாங்க, ஆடுகளம் என்ற பெயரில வலைப்பதிவை எழுதி வருகிறேன். சுத்தவர இருக்கிற 205 பட்டிக்கும் or பியூட்டிக்கும் நானே ராஜா, ஒரு நாள் நான் திருகோணமலையில இருந்து ரெயினில வந்துகொண்டிருந்த போது…..’ என ஆரம்பிக்க பவன் வாயைப்பொத்திக்கொண்டு சிரிக்கத்தொடங்கினார்//
என்ன ஒரு வில்லத்தனம்....
எனினும் நன்றிகள்!!!
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிதாங்க முடியவில்லை.
பதிவர் சந்திப்பு 2010 சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பிற்காக யாழ்ப்பாண பயணத்தையும் cancel செய்து விட்டேன். அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கின்றேன்..
பதிவர் சந்திப்பு - 2010 சும்மா அதுருதில்ல...:PP
சிரி சிரி சிரி என சிரித்தேன். அப்பு சின்ன மாமா அதென்ன -17 வரணும் எண்டு ஆசையோ. பிழைத பிடிச்சு வந்து அடிப்பேன். ஆமா சொல்லிப்புட்டேன்.
Post a Comment