Thursday, December 16, 2010

மீண்டு'ம்...'


96776343_4efe3075ff_b

ஆழம்

ஆழி அடி இருளில்
அமிழ்ந்திருந்து, அலைக்கழிந்து மேல்வந்து
ஆர்ப்பரிந்த மேற்பரப்பின் ஓரத்தில்
வெளிச்சத்தின் கிறக்கத்தில் - இவன்
அறிவுக்கெட்டிய ஆழத்தின் தேடுதலில்
இன்னும்
அதே இருளில்
அது...!

நம்பிக்கை

பொத்தி விரிந்த கரங்களில்
ஒட்டிக்கொண்ட மஞ்சள்பற்றி
லஜ்ஜையற்றுக் கிளம்பியது
இரசாயணத்தில் இறக்கப்போகும்
இறுதிப் பட்டாம்பூச்சி..!

அன்பு

தொடங்கலிலும், முடிவிலுமாக
கடிதங்களில் மட்டும் தொங்கியிருந்ததைக்
கலைத்தெறிந்துவிட்டது காலம்
சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி - இன்னும்
பாட்டியின் பார்வைக்கு மட்டும் இழைத்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு சந்திப்பிற்கிடையிலும்…!

14 comments:

கன்கொன் || Kangon on December 16, 2010 at 8:52 PM said...

:-)))

Bavan on December 16, 2010 at 9:06 PM said...

:-)))

Ramesh on December 16, 2010 at 9:23 PM said...

அன்பில் துவண்டேன்
அருமை.

vasu balaji on December 16, 2010 at 9:30 PM said...

class:)

ம.தி.சுதா on December 16, 2010 at 10:11 PM said...

/////சங்கேதச் சுருக்கங்களையும்
அடைப்புக்குறிப் புன்னகைகளையும் தாண்டி /////

அருமையான உவமிப்பு வரிகள் சுபா... வாழ்த்துக்கள்...

தர்ஷன் on December 17, 2010 at 12:17 AM said...

மூன்றாவது அருமை சுபாங்கன்
தினமும் எழுதுங்கள்

Kiruthigan on December 17, 2010 at 5:46 AM said...

பதிவு அருமை அண்ணா...



http://tamilpp.blogspot.com/2010/12/super-star-10.html
அடுத்து எந்திரனில் குற்றமும் பின்னணியும் சிறப்பாக ஆராய்ந்த சுபாங்கன் அண்ணாவை ரஜினியின் சிறந்த 10 படங்களை பற்றி எழுத அழைக்கிறேன்.

Ajith on December 17, 2010 at 8:10 AM said...

அருமையான வரிகள் நண்பா,

அனால் கவிதையின் பொருள் மணக்க என் தமிழ் தடுமாறுகிறது . . .

யோ வொய்ஸ் (யோகா) on December 17, 2010 at 8:59 AM said...

கவிஞர் சுபாங்கன் அசத்துகிறார்.

Jana on December 17, 2010 at 10:52 AM said...

இறைவனின் "ஆழம்" எதுவென்று இறையோரே தேடிக்கண்டுபிடிக்காத போது, "நம்பிக்கை"யோடு தேடி அது "அன்பு" என்ற தும்பிக்கைதான் என்று உணர்ந்தேன்.
இது எப்படி இருக்கு????

ஆழமான நம்பிக்கையூட்டும் அன்பான எழுத்துக்கள் உங்களது சுபாங்கன். வாழ்த்துக்கள்.

டிலீப் on December 17, 2010 at 12:24 PM said...

அருமையான வரிகள் அண்ணா
:)

Sivatharisan on December 17, 2010 at 4:10 PM said...

பதிவு அருமை அருமையான வரிகள்

balavasakan on December 18, 2010 at 6:35 AM said...

superb !

ARV Loshan on December 25, 2010 at 5:20 PM said...

அருமை சுபாங்கன். ஆழமான அர்த்தங்கள் :)

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy