வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட
ஊமல் கொட்டைகளினதும்
மண் கட்டிகளினதும்
எறி பிடி விளையாட்டு
தண்ணீர் நிரம்பிய
சதுரக் குழிகளுக்குள்
சறுக்கி விழுந்து அடித்த நீச்சல்
எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்
கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு
பேச நாதியின்றி
எமக்குள் பேசியபடி
நானும், இன்னுமொரு பொம்மையும்
பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்
15 comments:
ம்... :-)
ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ
அருமையாக இருக்கிறது சுபா.. வாழ்த்துக்கள்...
ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ
அருமையாக இருக்கிறது சுபா.. வாழ்த்துக்கள்...
ம்ம்! :)
//பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்//
எச்சுஸ்மீ இந்த பெருவிரல் வட்டம் நீங்க இட்டதா..? கொடுத்துவைச்சவங்க எதிர்ல நின்னவங்க :)
கட்டிக்கப்போறவங்கள பத்திகேட்டா மாமாவுக்கு வெக்கத்தை பாருன்னு மீனா பிரபுவை பார்த்து கேக்குற பட நினைப்பு சம்பந்தமேயில்லாம இப்ப வந்து தொலைக்குது ! :)
ஹிம்ம்..:)
ஹூம்ம்ம்:(.
//பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்//
ம்..ம்..
நான் செய்வதை நீங்கள் சொல்லிவிடீர்கள்.......:(
//ஃஃஃஃகையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சுஃஃஃஃ
"கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு"
அருமை..
ம்.. எனது தளத்திலும் தொடர்கிறது ;)
http://nizal-sinmajan.blogspot.com/2010/12/blog-post.html
ம் :)
ஆயில்ஸ் இவரும் சின்னமாமாதான் ஆகவே இந்தப் பிரபுவைப் பார்த்து வெட்கப்பட்ட மீனா யார் என்பதை எம் புலனாய்ப்புப் பிரிவு தேடிக்கொண்டிருக்கின்றது.
சுபாங்கு கவிதை கொஞ்சம் புரிகின்றது.
ம்ம்ம்... விட்ட பெருமூச்சுக்காற்று சுடவில்லை..சிலிர்க்கின்றதே!!
//கையாலாகாமல் இருந்துகொண்டு
இணையத்தின் முன்னால்
எறியப்படும் பெருமூச்சு//
எறியப்படும் பெருமூச்சிற்கும் உண்டு
எரிமலையாய் தகிக்கும் குணம்
காலப்போக்கில்!
பலர் அனுபவித்த வலி இது!
//எங்கேயோ கேட்ட
குட்டி ஒலிக்கும்
குளறி அடித்த அதிரினலீன்//
நோ கமெண்ட்ஸ்!
superb!
பெரிதாகத்தான் தெரிகிறது
குதிக்கால் ஊன்றிப் பெருவிரல் இட்ட
குட்டி வட்டம்
கூடுதலாக ரசித்த வரிகள்!
Post a Comment