சரியாக ஒரு வருடம் ஏழு நாட்களுக்கு முந்தய ஒரு இனிய பொன்மாலைப்பொழுதில் ஆமர்வீதி 176ம் இலக்க பேருந்து நிறுத்தத்தில்தான் இவருடனான எனது முதலாவது சந்திப்பு. அன்று கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தள்ளாடி ஆரம்பித்த எங்கள் நட்பு அதன்பின்னரான மின்னஞ்சல் கும்மிகளால் ஸ்டெடியானது.
இவர் ஒரு தாவர போஷணி. எக்காலத்திலும் மாமிசத்தை ருசிக்கவே மாட்டேன் என்று தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்திருக்கும் இவர் ஒரு முருங்கைக்காய்ப் பிரியர் என்பது கூடுதல் தகவல்.
பெரிதாக நண்பர்கள் இல்லாது இலண்டனில் தனிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைச் சிரிப்புக்குச் சொந்தக்காரர். சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் விண்ணர். சிரிப்பிலும், சொ. செ. சூ வைத்துக்கொள்வதிலும், ஏன் இவரது எல்லாத் தனித்துவங்களிலுமே இவருக்குப் போட்டியாக இளவல் ஒருவர் உருவாகிவந்தாலும்கூட இவருக்கு நிகர் இன்னும் இவரேதான்.
தன்னைப் பச்சிளம் பாலகனாக அறிவித்துக்கொள்ளும் இவர் அதற்கேற்ப தனது நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்பவர். லோஷன், ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்!
இவர் ஒரு கமல் பைத்தியம். உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.
இவர் ஒரு சங்கீதப்பிரியர். இளையராஜாவின் இசை ரசிகர். எக்காரணம் கொண்டும் இசைஞானியின் பாடல்களைத் தாண்டிப் பெரிதாகக் கவராத இவரது ரசனையை எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன. காரணம் ஒரு தொலைபேசி அழைப்பாம்.
யாழில் பிறந்து, கொழும்பில் வளர்ந்து, தற்போது இலண்டனில் உயர்கல்வி கற்றுவரும் இவர் தனது எதிர்காலத்தை குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்.
நீச்சல், ஜிம் என்று தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் ஒரு கராத்தே ஸ்பெசலிஸ்டும் கூட. மின்னஞ்சல் கும்மிகளில் தனது (மான்)கராத்தே கலையை அடிக்கடி காண்பித்து அசத்துவார்.
பெற்றோரின் செல்லப்பிள்ளை. வீட்டின் இளவல். உறவினர்களுக்கு இவர் என்றாலே ஆவல். நண்பர்களின் கும்மிக்கோ இவர் ஒரு அவல்.
இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வந்தியரே...
அனைவருக்கும் சுடச்சுட சூப் கொடுக்கும் இவருக்காக எனது பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl
19 comments:
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வந்தியாரே! :))))
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் ரேஞ்சுக்கு போட்டோஸ் போடப்போறீங்களோன்னு டவுட்டு பட்டேன் :) - இல்லை ! :)
// அன்று கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தள்ளாடி ஆரம்பித்த எங்கள் நட்பு //
ஹி ஹி....
ஆரம்பமே அசத்தலான, ஒருவருக்கொருவர் உதவும் வகையில் நட்பு ஆரம்பித்திருக்கிறது. ;-)
// எக்காலத்திலும் மாமிசத்தை ருசிக்கவே மாட்டேன் //
மாமிசம் எது என்பதில் தங்கியுள்ளது.
எங்கள் மாமா தேவையானால் மாறுவார், இல்லை மாமிசத்தை தாவர உணவாக அறிவிப்பார். ;-)
// னிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக //
இலண்டன்? தடை? #கோவிந்தாகோவிந்தா
// லோஷன், ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்! //
ஆமாம் ஆமாம்.
எங்கள் புதிய நட்பு ஹர்ஷூ தான். ;-)
// இவர் ஒரு கமல் பைத்தியம். உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும். //
இது smart copy இல்லை, இது அச்சு அசல் பிரதி... ;-)
// இவர் ஒரு சங்கீதப்பிரியர். //
அச்சும்.... ;-)
// எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன //
எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்....
// குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார். //
ஆகா ஆகா...
வாழ்த்துக்கள் மாம்ஸ்....
சொல்லவே இல்ல? ;-)
// மின்னஞ்சல் கும்மிகளில் தனது (மான்)கராத்தே கலையை அடிக்கடி காண்பித்து அசத்துவார். //
இது பச்சைப் பிழை.
மாமா மான் கராத்தேயைப் பயன்படுத்துவதில்லை.
எவ்வளவு அடித்தாலும் நின்று வாங்குவார்.
தலைவரைப் பற்றி பிழையாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
// சுடச்சுட சூப் கொடுக்கும் இவருக்காக எனது பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl //
ஆகா ஆகா...
இதுவல்லவோ பரிசு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்....
கலக்குங்கோ.... ;-)
கலக்கல் சி.மா சுபாங்கன்.. :)
வாழ்த்துக்கள் வந்தி :)
சில வரிகள்,சொற்கள் மிக ஆழமானவை ;)
வந்தியர் கண்ணீர் வடிக்கக் கூடும்..
ஐ மீன் ஆனந்தக் கண்ணீர்.
இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்!//
வாசித்துக் காட்டினேன்.. ஹர்ஷு கடுப்பாகி நிற்கிறான்.. "அப்பாவுக்கே இவர் மாமா என்றால் எனக்கு இவர் வந்தித் தாத்தா" என்கிறான்.
தாத்தாவோடு நட்பு முடியாது என்கிறான் ;)
சொந்த செலவில் சூனியம் வைபவருக்கு உங்க செலவில் சிரட்டை வாங்கிக் குடுதிருக்கீன்களே.. இதுக்காகத் தானா யாழ்ப்பாணம் போயிருந்தீங்க?
அருமை சுபாங்கன் ;)
வந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடியாது போலிருக்கே ;)
அதெல்லாம் சரி .. முன்னாள் பதிவர் சுபாங்கன் நீங்கள் ஓய்வு பெறவில்லையா?
கவிஞராக நீங்கள் மாறியதாக செய்தி உலாவியதே.. அது வெறும் வந்தியா? சாரி வதந்தியா? ;)
மாமிசத்தை தாவர உணவாக அறிவிப்பார். ;-)//
அப்போ இதுவரை இல்லையா? ;)
இலண்டன்? தடை? #கோவிந்தாகோவிந்தா//
அங்கே தடை இல்லைத் தானே?
மது கவனி ;)
எங்கள் புதிய நட்பு ஹர்ஷூ தான். ;-)//
அதென்ன எங்கள்?
ஹர்ஷு உன் முகவரி கேட்கிறான் தம்பி.. அவனிடமும் ஒரு வாகனம் இருக்கு.. ஒரு gang உம் இற்கு ;)
எவ்வளவு அடித்தாலும் நின்று வாங்குவார்.//
அதானே.. சொ.செ.சூ வுக்கு அர்த்தமே இதானே.. ;)
தலைவரைப் பற்றி பிழையாக வதந்திகளைப் பரப்பாதீர்கள்.//
ஒ.. நீங்கள் தான் அந்த வாரிசு/இளவலா? ;)
மூத்த பதிவர் ஒருவரை கௌரவப்படுத்தியமைக்கு நன்றி சுபாங்கரே! வாழ்த்துக்கள் இருவருக்கும்!
பச்சிளம் பாலகனை பற்றி பல அரிய தகவல்களை தந்தற்கு நன்றிகள் பல கோடி சுபாங்கன்
///இவர் ஒரு முருங்கைக்காய்ப் பிரியர் என்பது கூடுதல் தகவல்////
பாக்கியராஜும் ஒரு முருங்கைக்காய் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும், காரணமும் தெரியும்
////தன்னைப் பச்சிளம் பாலகனாக அறிவித்துக்கொள்ளும் இவர் அதற்கேற்ப தனது நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்பவர். லோஷன் ஆதிரை, கோபி, பவன் என்று விரிவடைந்த இவரது நட்பு இப்போது வந்து நிற்பது லோஷன் அண்ணாவின் குட்டி மகன் ஹர்ஷுவில்////
இவர் அறிவித்து கொள்வார், சரி ஹர்ஷு இவரை அவரது கேங்கில் சேர்த்து கொள்வாரா?
////இவரது ரசனையை எந்திரன் பாடல்கள் கவர்ந்துள்ளன. காரணம் ஒரு தொலைபேசி அழைப்பாம்////
புதிதாக கேள்விப்படுகிறோம், தகவலுக்கு நன்றி சுபாங்ஸ்
////இவர் தனது எதிர்காலத்தை குஜராத்தில் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்/////
சொல்லவேயில்ல
/////நீச்சல், ஜிம் என்று தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் ஒரு கராத்தே ஸ்பெசலிஸ்டும் கூட./////
இது வேறயா.... அவ்வ்வ்வ்
////பிறந்தநாள் பரிசு சிரட்டையால் செய்யப்பட்ட இந்த soup bowl////
ஆஹா கிளம்பிடாங்கையா கிளம்பிடாங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வந்தியத்தேவன்!
// அப்போ இதுவரை இல்லையா? ;) //
எங்கள் குரு அப்பாவி என்று உங்களுக்குத் தெரியாதா?
// அங்கே தடை இல்லைத் தானே? //
தடை இல்லாவிட்டாலென்ன, சட்டரீதியாக மாற்றப்படவில்லையே... ;-)
// மது கவனி ;) //
ஐயோ, இப்பிடிச் சொல்லாதயுங்கோ.
அவருக்கு குபீர் எண்டு சிரிப்பு வந்திடும். ;-)
// அதென்ன எங்கள்? //
என்னுடையதும், மாமாவினுடையதும். ;-)
// ஹர்ஷு உன் முகவரி கேட்கிறான் தம்பி.. அவனிடமும் ஒரு வாகனம் இருக்கு.. //
ஐயயோ, என் நண்பனை நானே வந்து பார்க்கிறேனே.
எதற்கு சிறுபையன் வீணாக என் வீட்டுக்கு வருவான்.
நண்பர்கள் என்றால் புரிந்துணர்வு வேண்டும். நான் வருகிறேன்.
// ஒ.. நீங்கள் தான் அந்த வாரிசு/இளவலா? ;) //
வதந்தி...
நான் அவரது இரசிகர். அவ்வளவும் தான். :-)
கராத்தேKID வந்தியண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:D
வாழ்த்துக்கள் வந்தியரே... ஒரு சூப் அனுப்ப முடியுமா..??
பழைய நண்பர்கள் எல்லோரையும் ஒருமிக்க வைத்து எனக்க அறிமுகப்படுத்திய சுபாவிற்கும் மிக்க நன்றி... (மன்னிக்கணும் பழைய நண்பர்கள் என்று சொல்வது என்னை வைத்துத் தான் குறிப்பிடுகிறேன்.)
வந்தியத்தேவனுக்கு வாழ்த்துகள்.
நல்லாய் இருங்கோ வந்தி. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
==============
மது கவனி :) //
ஏனையா இதுக்குள்ள நான் ? :D
சிரட்டை கோப்பை வந்திக்கா... அதுக்கு சண்டை வராதுதானே?
தாத்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்னை மதித்து மிகவும் நெகிழ்வான வாழ்த்தினைப் பதிவாக எழுதிய அன்புத் தம்பி கைகொடுப்பான் தோழன் சின்னமாமா எனச் செல்லமாக அழைக்கப்படும் சாவகச்சேரி மாம்பழம், ஈழத்து சுஜாதா சுபாங்கு அல்லது சுபாங்கனுக்கு இதயம் நுரையீரல் கலந்த நன்றிகள்.
எங்கள் நட்பின் ஆரம்பம் ஆமர்வீதியில் தொடங்கி இப்போ முகப்புத்தகம் வரை தொடர்கின்றது.
என்னைப் பற்றிய சில உண்மையான விடயங்களையும் சில சுவாரசியமான கற்பனைகளையும் கலந்து தனக்கே உரிய எளிய நடையில் தந்தமைக்கு மீண்டும் நன்றி. (இவர் தம்பி என்.பவன் திருமலையில் நல்ல வெயில் என்பதால் உஷா ஃபேனின் கீழ் நல்ல குறட்டை விட்டுத் தூங்கியதால் போட்டோ காமெண்டில் இருந்து தப்பிவிட்டேன், கோணேஸ்வரநாதருக்கு நன்றிகள்)
இந்தப் பதிவில் வாழ்த்தி என்னை வைத்து காமெடி கீமடி செய்த சின்னப்பாண்டி ஆயில்ஸ், சிஷ்யன் கோபி, என் ஆனந்தக்கண்ணீரை நக்கலடித்த அன்பு அங்கிள் லோஷன், முகுந்தன் அண்ணா, எனது பிறந்தநாள் வாழ்த்தினை குழுமத்திலும் வானொலியிலும் வழங்கிய யோகா(மவனே தங்களுக்கும் பிறந்தநாள் வரும் தானே புனைவு நிச்சயம்), ப்ரியமுடன் வசந்த், என்னைக் குழந்தையாகவே பாவனை செய்யும் பவன், நண்பர் மதிசுதா மற்றும் வாணம்பாடிகள் ஐயா அனைவருக்கும் நன்றிகள்.
அடடா ஜஸ்டு மிஸ்ஸு ;) எங்கள் ஆம்பிளை அசின், கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//எங்கள் ஆம்பிளை அசின்,//
ஆகா.. இது வேறயா?
அசின் பாவம் அய்யா.. வேண்டுமானால் ஆம்பிளை த்ரிஷா என்று சொல்லலாம்..
;) வந்தியின் ரசனைப் பிரகாரம் இருப்பவர் அவர் தான்..
ஆதாரம் -முன்னைய சூப்புக்கள் ;)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தியதேவன்
உங்கள்
அண்ணாச்சி
ஜாக்கிசேகர்..
//பெரிதாக நண்பர்கள் இல்லாது இலண்டனில் தனிமையில் தவித்துவந்த இவர் சதீஷின் இலண்டன் விஜயத்துக்குப் பிறகு மகிழ்ச்சியில் திளைப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன//
இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ?
வேற என்ன வாழ்த்துக்கள் மாமா. ஆமா சின்ன மாமா சாவகச்சேரி எப்பிடி இருக்கு. மாம்பழம் நல்லாய் இருக்கா?
Post a Comment