Friday, January 1, 2010

வருடத்தின் முதல் மொக்கை



இன்னிக்கு நியூ இயர். இதுகூடத் தெரியாமலா இருக்கோம் என்பவர்களுக்காக பின்னூட்டப்பெட்டி திறந்துவிடப்பட்டுள்ளது. அதற்குமுதல் கடமையைச் செய்துவிடுகிறேன்.

ஐந்தறைப்பெட்டி வாசகர்கள் அனைவருக்கும்

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR




அப்படியே நம்ம சக பதிவர்கள், நண்பர்கள் எப்படியெல்லாம் வாழ்த்துச் சொல்லுவார்கள் என்று ஒரு சின்னக் கற்பனை


நேற்றய நீலநிற பூரணைச் சந்திரன், வருடத்தின் பதின்மூன்றாவது பூரணை தினம் என்ற கீர்த்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கையில் பிறந்துவிட்டது 2010. இவ்வாண்டிலே அனைவருக்கும் விர் விர் என்று விசா எடுத்து விமானத்தில் உயரப்பறப்பதுபோல, வாழ்க்கையின் உயரங்களை எட்டிவிட வாழ்த்துகள்!


2009ஆம் ஆண்டு எப்படி? கருத்துக்கணிப்பு முடிவு.. படு மோசம் 37.6% பரவாயில்லை 36.3% மிக சிறப்பு 9.8% மோசம் 9.75% நல்லது 8.3%

இப்படியெல்லாம் இருக்காமல் அடுத்த வருடமாவது இனிதாய் இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


பங்குச்சந்தையின் காளையும் கரடியும் போல் முட்டிக்கொள்ளாமல், சமாதானத்துடன் ஆரம்பிப்போம் 2010இனை!
இந்தமுறை புதுவருட 2010க் குறிப்பின் படி,அனைத்துப் பதிவர்களுக்கும் புதுவருடம் (HNY-HAPPY NEW YEAR) 100 சதவீதம் (100.00 புள்ளி) உயர்வை வழங்கவேண்டும் என வாழ்த்துகிறேன்

இன்றைய புதுவருடத்தின் மதிப்பு 2010.00 ஆகும்







வாழ்த்து எனப்படுவது யாதெனில்…

சிறிது பொறுங்கள். அதற்குமுன் வாழ்த்திவிடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இனித்தொடரலாம்..

(இதுக்குமேல நான் எஸ்கேப்..)


கும்மிருட்டில கள்ளன் வாறதுமாதிரி வாற புதுவருசத்துக்கு வாழ்த்தணுமான்னு கேக்கிறான் ஒரு மாங்கா மடையன். வருசமெண்டா இரவிலதான்டா வரும். குதிரை எண்டா விழுத்தத்தான்டா செய்யும் (நெடுந்தீவில இல்லை)

என் அன்புக்குரிய பதிவுலக பாச நெஞ்சங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)


மலர்ந்துள்ள ஆண்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி, மனிதர்கள் ஒற்றுமையாகவும், மனிதத்துவத்துடனும் வாழ எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.


டிவிட்டர் புகழ் கனககோபியின் டிவிட்டர் வாழ்த்து



படம் பதிவுக்காக உருவாக்கப்பட்டது




இரண்டு ரூபாய் SMS போதும்
வாழ்த்து ஒன்றை அனுப்பி முடிக்க
இவர்கள் அனுப்பும் பல SMSகளில்
முடிந்துபோகும் பல சில்லறைகள்…
பை நிறையப் பணமும்…  போன் நிறைய றீலோட்டும்
கொண்ட உனக்கென்ன பயம்?
தட்டிவிடு ஒரு SMSஐ!
பதிலுக்காய் உனக்கு ஒற்றை
மிஸ்டுகோல்தான் முடியும் என்னால்
அதற்கும் ஃபோனில் பேலன்ஸ் வேண்டும்.
வாழ்த்திவிடுகிறேன் இங்கேயே
இனிதாய் இருக்கட்டும்
இரண்டாயிரத்துப்பத்து!



Anaivatukum iniya angila puthandu valthukal. 2010il naan meendum pathivelutha thodankividiven.
(இவர் என்ன சொல்ல வாறாருன்னா அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். 2010இல் நான் மீண்டும் பதிவெழுதத் தொடங்கிவிடுவேன்)


புதிதாய்க் கிடைத்த நண்பர்களோடும், எனது புதிய தொலைபேசி இலக்கத்தோடும் பதிதாய்ப் பிறந்த ஆண்டை வரவேற்கிறேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


33 comments:

வந்தியத்தேவன் on January 1, 2010 at 9:19 AM said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

இந்த வாழ்த்துக்கள் கற்பனைபோல் தெரியவில்லை அவரவர்களிடம் கேட்டு அறிந்ததுபோல் தெரிகின்றது. அதிலும் கங்கோனின் வாழ்த்து கலக்கல்.

Atchuthan Srirangan on January 1, 2010 at 9:33 AM said...

அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

Bavan on January 1, 2010 at 9:49 AM said...

ஆஹா... நம்ம பிட்ட நம்மகிட்டயே போடுறீங்களே..ஹீஹீ

லோஷன் அண்ணா, பங்குச்சந்தை அச்சு அண்ணா,புல்லட் அண்ணா, கீர்த்தி அக்காவின் கவிதை மற்றும் கோபி அண்ணாவின் வாழ்த்துக்கள் கலக்கல்..ஹீஹீ

ஆரம்பமே மொக்கையா..அவ்வ்வ்..:)

யோ வொய்ஸ் (யோகா) on January 1, 2010 at 9:55 AM said...

puthu varusame kalakkalai thodangi irukkeenga nanba

wish you a happy new year

Unknown on January 1, 2010 at 10:15 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010
என்றும் நட்புடன்...
http://eniniyaillam.blogspot.com/

மாயாவி on January 1, 2010 at 10:24 AM said...

நிறைய மொக்கைகளுடன் பதிவுலகில் ஜெயிக்க,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அஸ்பர் on January 1, 2010 at 11:15 AM said...

தொடரட்டும் நண்பா...
வாழ்த்துக்கள்

balavasakan on January 1, 2010 at 11:45 AM said...

ஆமா சுபாங்கன் 2009 முடியும் போது ரொம்பவும் சந்தோசமாகவே முடிந்தது.
ஆரம்பமே ஒரு மொக்கை போட்டு அசத்தியுள்ளீர்கள்
ஹா..ஹா..ஹா...

ப்ரியமுடன் வசந்த் on January 1, 2010 at 11:52 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சுபாங்கன்,..!

உண்மைத்தமிழன் on January 1, 2010 at 11:55 AM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

இலங்கன் on January 1, 2010 at 11:56 AM said...

happy new year.

Admin on January 1, 2010 at 12:36 PM said...

மலர்ந்துள்ள ஆண்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி, மனிதர்கள் ஒற்றுமையாகவும், மனிதத்துவத்துடனும் வாழ எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.

KANA VARO on January 1, 2010 at 2:15 PM said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

vasu balaji on January 1, 2010 at 2:41 PM said...

சிரிக்க சிரிக்கத் தொடங்கிய புத்தாண்டு இனிக்க இனிக்க வளரட்டும் சுபாங்கன். புத்தாண்டு வாழ்த்துகள்.

Muruganandan M.K. on January 1, 2010 at 3:01 PM said...

இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கலையரசன் on January 1, 2010 at 7:33 PM said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சுபங்கன்... :)

ஆதிரை on January 1, 2010 at 7:44 PM said...

வாழ்த்து எனப்படுவது யாதெனில்...

இன்றைக்கு ஜனாதிபதி அனுப்பினதுதான்.

(சத்தியமாக ஒன்றும் விளங்கவில்லை... இறுதியாக இருந்த அவர் பெயரைத் தவிர...)

எல்லோருக்கும் என் புதுவருட வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா on January 1, 2010 at 9:28 PM said...

=)) happy new year subankan..!

Unknown on January 2, 2010 at 8:27 AM said...

ஹா ஹா.....
கலக்கல் சுபாங்கன் அண்ணா....

வந்தியண்ணாவின் வாழ்த்திலிருந்த உள்குத்தை ரசித்தேன்...

லோஷன் அண்ணாவின் வாழ்த்து புதிய ரகம்....

பங்குச் சந்தை அச்சுவையும் இப்போது மொக்கைகளுக்குள் இழுத்துவிட்டீர்களா..... என்றாலும் கலக்கல்....

உண்மையில் பவனின் வாழ்த்து அருமை...
எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்களோ.....

ஆதிரை அண்ணா... ஹி ஹி... ஹி ஹி....

புல்லட் அண்ணாவின் மொழியைப் பிடித்துவி்ட்டீர்களே.....
பெரிய மாங்கா மண்டையனா இருப்பீங்க போல? :P

சந்ரு அண்ணா.... அனைவரும் மற்றவர்களை ஏமாற்றமால் இருக்கவும் வேண்டுகிறேன்....

கனகோபியா? அவன் பாவம்.... அப்பாவி....

நான் அதிகமாக இரசித்தது யோகா அண்ணாவினுடையது தான்....
கலக்கல் சுபாங்கன் அண்ணா.....

பாலவாசகன் இலக்கம் மாற்றியதில் உள்குத்து ஏதும் இருக்குமோ?

கலக்கல் பதிவு....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

Subankan on January 2, 2010 at 10:48 AM said...

நன்றி வந்தி அண்ணா

நன்றி அச்சு

நன்றி பவன், நாங்களும் போடுவமில்ல

நன்றி யோ அண்ணா

நன்றி Mrs.Faizakader

நன்றி மாயாவி

நன்றி அஸ்பர்

Subankan on January 2, 2010 at 10:49 AM said...

நன்றி பாலா

நன்றி வசந்த்

நன்றி உ.த அண்ணாச்சி

நன்றி இலங்கன்

நன்றி சந்ரு அண்ணா

நன்றி வரோ

Subankan on January 2, 2010 at 10:51 AM said...

நன்றி வானம்பாடிகள் அண்ணா

நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்

நன்றி கலை

நன்றி ஆதிரை அண்ணா

நன்றி கலகலப்பிரியா அக்கா

நன்றி கோபி

யாழினி on January 2, 2010 at 11:18 AM said...

Wish u a happy New Year Subankan!

Post SuperV! :)

Nice start with Nice Mokkai!

Hi5 Hacker said...

புதுசு புதுசா ப்லேடு வாங்கி மொக்க போடுறாங்களே! ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ!
பதிவு அருமை, வருடத் தொடக்கத்தில் டாப் லிஸ்டையே கலங்கடித்துவிட்டீர்கள்.
உங்கள் பதிவுலக சே(ர்)விங்க் தொடரட்டும், வாழ்த்துக்கள் அண்ணா... என்றென்றும் அன்புடன் Hi5 Hacker.

Sinthu on January 2, 2010 at 2:55 PM said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

புல்லட் on January 3, 2010 at 8:38 PM said...

பிறகென்ன பயபுள்ள பிடிச்சிட்டான் நம்ம பாணியை.. இனி மாத்த வேண்டும் போல கிடக்கு.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாங்கன்...

S.M.S.ரமேஷ் on January 4, 2010 at 11:50 AM said...

வருஷ ஆரம்பமே மொக்கையா!!!!!!!!!!!

ஜோ.சம்யுக்தா கீர்த்தி on January 4, 2010 at 12:42 PM said...

என்ன கொடுமை சேர் இது ஆரம்பமே இப்படி போகுது? ஏன் ஏன் நல்லா தானே போயிட்டிருந்தது எதற்காக இந்த கொலைவெறி....? நடக்கட்டும் நடக்கட்டும் பிறந்திருக்கும் இந்த புதிய வருடத்தில் அனியவருமாய் சேர்ந்து மொக்கையால் உன்னை அபிஷேகிக்க வாழ்த்தும் உன் அன்பு அக்கா

ஹி ஹி ஹி அருமையான மொக்கைப்பதிவு

அனைவருக்கும் இனிய புது வருட நல் வாழ்த்துக்கள்

ஜோ.சம்யுக்தா கீர்த்தி on January 4, 2010 at 12:44 PM said...

வாழ்த்துக்கள் தம்பி

Subankan on January 5, 2010 at 4:45 PM said...

நன்றி யாழினி

நன்றி Hi5 Hacker, என்ன உங்க பெயரே பயமுறுத்துதே?

நன்றி சிந்து

நன்றி புல்லட் அண்ணா

நன்றி ரமேஷ்

நன்றி கீர்த்தி அக்கா

வினோத் கெளதம் on January 6, 2010 at 12:15 AM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..(கொஞ்சம் லேட் தான் )..:)

பூங்குன்றன்.வே on January 6, 2010 at 4:09 AM said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !!!

Subankan on January 8, 2010 at 10:55 AM said...

நன்றி வினோத்

நன்றி பூங்குன்றன்

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy