இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிராச்சரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. அதையெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? நானும் என்பங்குக்கு எனது பிராச்சரத்தையும் செய்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். தமிழ்மண விருதுக்காக நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவில் பதிவு எழுதிப்பார் என்ற பதிவையும், சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் இயற்கையின் வட்டமும், மதங்களும், மனிதர்களும் என்ற பதிவையும் நாமினேட் செய்திருக்கிறேன். நமக்குள்ள எதுக்கு வாக்குறுதி எல்லாம் குடுத்துகிட்டு? ஏதோ பாத்து செஞ்சிடுங்க மக்கா
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுனாமியின் ஐந்தாவது நினைவுதினம் வந்து போய்விட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத அனர்த்தம் அது. சுனாமி வந்தவுடன் ஏதோ கடல் ஊருக்குள் புகுந்துவிட்டதாம் என்று டியூசனை மூடிவிட்டார்கள். அப்பாடா என்று வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்தபிறகுதான் தெரிந்தது நிலமையின் உச்சம். அதன்பிறகு நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றபோது கண்ட காட்சிகள் மறக்கவே முடியாதவை. பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து செய்த முதல் நல்ல காரியம் எனக்குத் தெரிந்து நிவாரணப்பணிக்குச் சென்றதுதான். ஆனால் அன்று நாங்கள் சென்ற பகுதிகள் எல்லாம் இன்று அதைவிட மோசமாக அழிவடைந்துவிட்டன. இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கிரிக்கெட்டில் அண்மையில் ரசித்த ஒரு விடயம் அவுஸ்திரேலிய வீரர் வட்சனின் ஆட்டமிழப்பு. பொதுவாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும்போது அவர் ஆட்டமிழந்தாரா இல்லையா என்பதற்கே மூன்றாவது நடுவரின் உதவி நாடப்படும். ஆனால் இங்கே வட்சன், ஹட்டிச் இருவரில் யார் ஆட்டமிழந்தார் என்று அறிய மூன்றாவது நடுவரின் உதவி நாடப்பட்டதும், இறுதியில் ஒரு நொடிக்கும் குறைவான நேர வித்தியாசத்தால் ஹட்டிச் முந்திக்கொள்ள வட்சன் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும்தான் சிறப்பு. அந்தக் காட்சியை இங்கே சென்று பாருங்கள். கிரிக்கெட்டில் பலகாலங்களுக்கு பேசப்படப்போகும் விடயம் இது.
கடுப்பாக்கிய விடயம் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கைவிடப்பட்ட நேற்றய போட்டி. இந்திய ஆடுகளங்கள் ஒன்றில் தட்டையாக, அல்லது இந்தமாதிரி அபாயகரமாக இருப்பது விளையாட்டின் சுவாரசியத்தையே குறைத்துவிடுகிறன.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இணையத்தில் படித்த செய்திகளில் கோபப்படுத்திய செய்தி ருச்சிகா கிர்கோத்திரா என்கிற பெண்ணின் மீது பாலியல் வன்முறை செய்த ரத்தோர் என்றவனுக்கு, 19 வருடங்களின் பின்னர் ஆறுமாத சிறையும், ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, உடனே பெயிலும் கொடுத்த நீதிபதிகள்(?) பற்றியது. 14 வயதுப்பெண்ணைக் கற்பழித்தவனை 19 வருடங்கள் வெளியில் விட்டுவைத்த்தும் அல்லாது, கொடுக்கப்பட்ட கேவலமான தீர்ப்பு நீதித்துறையின் கேவலம். இப்போது எனது பார்வையில் அந்த நீதிபதிகளும் குற்றவாளிகளே. இந்தியச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னும் பேசப்படாத எத்தனையோ செய்திகள் இங்கேயும் கிடந்து உறுத்துகின்றன.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
இந்த வருடத்தில் எனது இறுதிப் பதிவு அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். எனவே இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒரு வார்த்தையில்லாக் கவிதை - இரக்கம்
11 comments:
வாழ்த்துக்கள் தோர்தலில் வெற்றி பெற..:)
****
///இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?///
உண்மைதான்
****
ஆமாம் அந்த வாட்சன் மாட்டர் செம காமடி..::D
இந்தியா என்றுதான் திருந்துமோ?
****
//கொடுக்கப்பட்ட கேவலமான தீர்ப்பு நீதித்துறையின் கேவலம். இப்போது எனது பார்வையில் அந்த நீதிபதிகளும் குற்றவாளிகளே//
அதுதானே நீதி தேவதையின் கண்ணைக்கட்டிவிட்டார்கள்
****
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!//
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா..:)
//ஒரு வார்த்தையில்லாக் கவிதை - இரக்கம் //
அருமை..:)
தமிழ் மணத் தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள். சுனாமி வந்த போது நாங்களும் கல்வியியற் கல்லூரி நண்பர்களுடன் நிவாரண பணிகளுக்கு வந்திருந்தோம். ம்ம் உண்மையில் அந்தக் காட்சிகள் மனத்தை விட்டு அகலாதவைத்தான் .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
சைடிஸ் மட்டும்தான் இருக்கு? சரக்கை கானாமே?-??
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!!
##இயற்கை எவ்வளவோ பரவாயில்லை இல்லையா?##
உண்மைதான் சுபாங்கன்..
கிரிக்கெட்டில் இந்த மாதம் ஒரே சுவாரசியந்தான்...
அந்த படம் சூப்பர்... பாஸ்..
நல்ல தொகுப்பு சுபாங்கன். புத்தாண்டு வாழ்த்துகள்.
wish u a happy 2010 dude...
நன்றாக இருக்கிறது சுபாங்கன்!
புத்தாண்டு வாழ்த்துகள் சுபாங்கன். இது கொஞ்சம் பாருங்கோ.
http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.html
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
நன்றி பவன்
நன்றி தர்ஷன்
நன்றி கலையரசன்
நன்றி பாலா
நன்றி வானம்பாடிகள் அண்ணா, படித்தேன். உங்கள் அன்புக்கு நன்றிகள்
நன்றி யோ அண்ணா
நன்றி யாழினி
நன்றி சந்ரு அண்ணா
தமிழ்மணப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....
உங்கள் வாக்கு எங்களுக்கே என்று தட்டி, பிரச்சாரப் பலகைகளைத் தயார் செய்யுங்கள்....
சுனாமி.... மனிதர்களின் இறப்பில் தான் மனிதம் உயிர்க்கும் என்று காட்டியதும் சுனாமி தான், மனிதர்களின் இறப்பிலும் பிணந்தின்னிப் பிசாசுகள் கொள்ளையடிக்கும் என்று காட்டியதும் சுனாமி தான்...
5 வருடங்கள் முடிவடைந்துவிட்டன.... இன்றும் அந்தப் பாதிப்பு அந்த மக்களிடத்தில் உளவியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இருக்கிறது....
என்ன செய்ய....
வொட்சன் பாவம் ஐயா....
நானெல்லாம் வொட்சன் .ரசிகர்கள் ஆச்சே....
மனுசன் அடுத்த போட்டியில தட்டுத்தடுமாறி சதமடிச்சிற்று....
ஆடுகளம்.... இந்தியக் கிறிக்கெற் சபையின் கவனயீனமும், பணத்திமிரும்....
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று,...
மக்கள் நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கையிழக்கச் செய்யும் இவ்வாறான சம்பவங்கள் பெரும் ஆபத்தானவை...
இப்படியான வன்புணர்வுக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும்...
6 மாதம் என்பது நகைப்புக்கிடமானது....
6 வருடம் கொடுத்தாலே அது கொஞ்சமும் காணாது என்பேன்....
சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்....
படம் அருமை....
எங்களுக்கும் இதயமுண்டு என்கிறது படம்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
சரக்கு அருமை.....
Post a Comment