குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பிடித்த நடிகராக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வலம்வந்த விஜய் இப்போது குழந்தைகளுக்கு விஜய்கிட்ட புடிச்சுக் குடுத்துடுவன் என்று வெருட்டி பெண்கள் சாப்பாடு ஊட்டும் நிலைக்கு வந்துவிட்டார் என்றால் அதற்கு காரணம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விஜய் ஜோக்ஸ் என்ற பெயரில் எங்களுக்கும் கலகலப்பூட்டுகிறார் விஜய்.
வேட்டைக்காரனுக்கு வரும் எதிர்ப்பு என்ற பெயரிலான பிரச்சாரத்தையும், சன் குழுமத்தின் விளம்பரத்தையும் தாண்டி வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?
1. வேட்டைக்காரன் வெற்றிபெறப்போகிறது என்று எழுதிவரும் பதிவர்கள் இனி சுறா வெற்றிபெறும் என்று எழுதத் தொடங்குவார்கள். விஜயை வறுக்கும் பதிவுகள் அதிகமாகும்.
2. விஜயின் ஐம்பதாவது படத்துக்கு தியேட்டரே கிடைக்காது.
3. பழைய படப் பெயர்களை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.
4. ஜேம்ஸ் கமரூனின் அவதார் போன்ற படங்களை தவிர்த்து தமிழ்ப் படங்களைப் பார்க்கும் சாதாரண மக்கள் கூட வேறு மொழிப் படங்கள் மேல் காதல் கொள்வர்.
5. இயக்குனர் பாபு சிவனை யாருமே தேடமாட்டாரகள்.
6. எந்த மொக்கைப்படத்தையும் ஓடவைக்கலாம் என்ற சன் பிக்சர்சின் நினைப்புக்கு மரண அடி விழும்.
7. விஜய ஆன்டனி – விஜய் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள் என்பதுடன் அவர் இனி விஜய்க்கு இசையமைக்கவே வரமாட்டார்.
8. ஏற்கனவே படம் பாரக்காமல் விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதும் பதிவர்கள் குருவி பட விமர்சனத்தையே மீள்பதிவாக வேட்டைக்காரனுக்கும் இடுவார்கள்.
9. இந்தப் படக் கூட்டணியை யாருமே கவனிக்கமாட்டார்கள்.
10. விஜய் – த்ரிஷா ஜோடியால் த்ரிஷா ஓரங்கட்டப்பட்டது போல அனுஷ்காவும் ஓரங்கட்டப்படலாம்.
11. Blonde Jokes, Sartharji Jokes போல தமிழருக்கென தனியான நகைச்சுவையாக விஜய் ஜோக்ஸ் உருவாகலாம்.
12. வேட்டைக்காரன் ஓடும் என்று பதிவுபோட்டு ஹிட்ஸ் தேடிய பதிவர்களின் ஹிட்ஸ் குறையலாம்.
13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.
14. .நான் இந்த பதிவு போட காரணமாக இருந்த சதீஷ் வேட்டைக்காரன் வென்றுவிட்டால் என போட்ட பதிவினைப்போல சுராவிற்கு போடாமல் தப்பிக்கலாம்
15. தியேட்டர் திரைகள் விஜய் ரசிகர்களால் கிழிக்கப்படலாம்.
16. படத்தைப் புறக்கணிப்போம் என்ற பெயரால் படத்துக்கு மறைமுக விளம்பரம் செய்யும் சிலர்??? இதை நீங்களே சொல்லுங்கள் அவர்கள் கதி என்னாகும்
17. இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.
டிஸ்கி 1 – இந்தப்பதிவு சதீஷின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு அல்ல.
டிஸ்கி 2 – இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.
22 comments:
ஏனய்யா இந்தக் கொலைவெறி?
எவ்வளவு அடிச்சாரும் தாங்கிறார் விஜய் ரொம்ப நல்லவர்....:p
யார் சொன்னது விஜய்க்கு நடிக்கத்தெரியாதென்று எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கிறாரே...ஹிஹி
டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!
//வேட்டைக்காரன் தோற்றுவிட்டால்?//
விஜய் பொட்டிய தூக்கிகிட்டு வந்து சுபங்கன் வூட்டுல குந்திப்பாரு!!
அட பாவிங்களா படமே வரல அதுக்குள்ளேவா?
பாவம் எத்தினை விமர்சனம், ஜோக்.
// புல்லட் said...
டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!//
வழக்கம் போல சரவெடி.. விஜய் பாணியிலேயே..
//புல்லட் said...
டேய்...........!
சைலன்ஸ்... !
அழுதுக்கிட்டிருக்கமில்ல..!//
வந்திதிருக்கிற இடம் சூப்பர்… பட்டையைக் கிளப்பலாம்..
இந்தக் கிறிஸ்மஸ் எனக்கு செம கலெக்ஸன் மா..
ஆ ... இவ்வளவும் நடந்தால் என்ன?
எதிர்கால சந்ததி பாதுகாக்கப்படலாம். (விஜயிடமிருந்து...) .
சுபாங்கன் நீங்க சொன்ன 17இல் ஒன்று மட்டும் மாறாது
//13. நம்ம சதீஷ்க்கு விஜயைப் பிடிக்காமல் போகலாம்.//
ஏன் இந்த கொலை வெறி?
எல்லாம் தயாரா இருங்க, நாளை முதல் எவ்வளவு ஜோக்ஸ் எஸ்எம்எஸ் ல சுத்தப் போகுது பாருங்க. ஏற்கெனவே ஆரம்பிச்சிட்டாங்க. இப்படி மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விஜய்க்கு மிக்க நன்றி
##இதைவிடக் கொடுமை, இனி விஜய் இப்படிப் படங்களில் நடிக்காது விடுவதால் எமக்கு பதிவிட விசயமே கிடைக்காது போகலாம்.#
எல்லாவற்றிலும் விட இதுதான் கொடுமை மொக்கைகளுக்கு எங்கே போவது... ஐயோ..ஐயோ..
விஜய் நடித்து எங்களை சிரிக்கவைக்கிறார்..சண்டை பிடிக்கிறன் என்று கோமளித்தனம் செய்து சிரிக்கவைக்கிறார்..இடைக்கிடையில அரசியலலென்று சொல்லி விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கிறார்..அப்படிப்பட்ட மகாகலைஞர் வாழ்க....
சுப்பர் சுப்பர் சூப்பெரோ சூப்பர் ....நீங்க எழுதின பதிவுலையே எனக்கு புடிச்ச பதிவு இது தான் .........என்ன ஒரு கொலை சாரி கலை நயம் ...தமிழ் நாட்டுல அழுகுரல் கேக்க ஆரம்பிச்சிடுச்சு எனக்கென்னவோ இதுவும் காலி எண்டு தான் நினைக்கிறேன் .
இன்று காலையில் இருந்து பல தொலைபேசி அழைப்புகள், குறும்செய்திகள் வேட்டைக்காரன் பார்க்க வரச் சொல்லி ஆனால் நான் அசையவில்லை. சொந்த செலவில் சூனியம் வைக்க விரும்பவில்லை. துணிச்சலானவர்கள் படத்தைப் பார்த்து விமர்சித்த பின்னர் விரும்பினால் போய்ப் பார்க்கலாம்.
சுபாங்கன் கெப்பிட்டலில் திரையிடப்படுவதில் இருந்து வேட்டைக்காரனின் தரம் விளங்கவில்லையா? ;-)
se that annaaaaaa
http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_17.html
வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்லாம் நடக்கும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவது நிட்சயம். இது எதுவும் நடக்கப் போவதில்லை
நான் கொழும்புல இருந்து ஊருக்கு நேற்றே வந்திட்டன் வேறென்ன வேட்டைக்காரன் புடிச்சிட்டு போய்டுவான் எண்ட பயந்தான் .
நல்ல நக்கல் சுபாங்கன்
//சந்ரு said...
வேட்டைக்காரன் தொற்றால்தானே இது எல்லாம் நடக்கும். வேட்டைக்காரன் வெற்றி பெறுவது நிட்சயம். இது எதுவும் நடக்கப் போவதில்லை //
பார்த்துவிட்டு வந்த விஜய் இரசிகர்களின் விமர்சனங்களை வாசித்துவிட்டு வரவும் சந்ரு அண்ணா....
ஆட்டோ அனுப்பவா? இல்ல நானே வரவா?
பதிவுல எழுதுனது நடக்க போறது உறுதி.
"ஆட்டோ அனுப்பவா? இல்ல நானே வரவா".
ரெண்டுமே வேண்டாம்.முடிஞ்சா ஆம்புலன்ச தியேட்டருக்கு அனுப்பி வையுங்க.மூணு மணி நேர வேட்டையில செத்தவங்க போக உயிர் பொழைச்சவங்களை காப்பாத்துன புண்ணியமாவது கிடைக்கும்.
நன்றி கோபி, சும்மாதான்
நன்றி பவன், ஹி ஹி
நன்றி புல்லட், நல்லாருக்கு ;)
நன்றி கலை, நான் எஸ்கேப்
நன்றி இளந்தி, ஆமால்ல?
நன்றி வரோ, கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்களோ?
நன்றி இலங்கன் ;)
நன்றி ஹிஷாம் அண்ணா, ஆமாம்.
நன்றி யோ அண்ணா, ச்சும்மாதான்
நன்றி கவி
நன்றி பாலா
நன்றி ரஜீபன்
நன்றி அப்பாவித்தமிழன்
நன்றி வந்தி அண்ணா, விளங்குகிறது. விமர்சனங்களைப்படிக்கும்போது இன்னும் விளங்குகிறது ;)
நன்றி அஸ்வின், படித்தேன் ;)
நன்றி சந்ரு அண்ணா, விமர்சனங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே
நன்றி சிவசங்கர், தப்பிட்டீங்க போங்க
நன்றி ரமேஷ், ஏதோ உங்க வசதி
நன்றி சிவா, ஹா ஹா
நடக்கட்டும் நடக்கட்டும் எனக்கு போட்டியா? அண்ணே ஹிஷாம் அண்ணே நீங்கள் சொன்னது தப்பில்லை. நாங்கள் மாறமாட்டோம். அதுசரி வேட்டைக்காரன் வேட்டை ஆடப்பட்டாலும் வசூலும் ஒபிநிங்க்க்கும் நல்லா இருக்காமே வேண்ருவிடுமோ? தாமதத்திற்க்கு மன்னிக்கவும் சுபாங்கன். கலக்கல் பதிவு ரசித்தேன்.
Post a Comment