Saturday, December 19, 2009

வேட்டைக்காரன், பதிவுலகம், இன்னபிற…



வேட்டைக்காரன் விமர்சனங்கள் பலவற்றைப் படித்தபின்பும், வேட்டைக்காரனைப் பார்த்துவிட்டு வந்த விஜய் ரசிகராக இருக்கும் நண்பனைக் கேட்டுவிட்டும் முடிவெடுத்துவிட்டேன். படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் போவதில்லை என்று. வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். படத்தைப்பார்த்து, விமர்சனம் எழுதி என்னைக் காப்பாற்றிய அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றிகள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பதிவு எழுதுவதால் அது வருங்காலத்தில் சோறு போடப்போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. பின்னூட்டங்கள், ஓட்டுக்கள், ஹிட்ஸ் எல்லாவற்றையுமே அதிகமாகப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கின்றன. ஆனால் பதிவு எழுதுவதால் கிடைக்கும் ஒரே பிரதிபலன் நண்பர்கள்தான். இப்படிக் கிடைக்கும் நண்பர்களுக்கிடையேயே ஆப்பு வைக்க யாராவது முகம்தெரியாதவர்கள் முயலும்போது ஆத்திரம்தான் வருகிறது.  இப்படிக் குறுக்கு வழிகளால் இவர்கள் சாதிக்க நினைப்பது எதனை என்றுதான் புரியவில்லை.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

A9 வீதியினூடான யாழ்ப்பாணத்திற்கான பயணம் இலகுவாக்கப்பட்டிருக்கிறதாம். இதன் பின்னாலிருக்கும் அரசியல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கலாம். ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை 20000 ரூபா செலவுசெய்து வீட்டிற்குச் சென்று ஒருமாதம் இருந்துவிட்டு வரும் என்னைப்போன்றோருக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே? சனி, ஞாயிறோடு இரண்டு தினங்கள் கம்பஸ்சை கட் அடித்துவிட்டால் போதும். வீட்டுக்குச் சென்றுவந்துவிடலாம்.  இதற்கு அரசியல்களைக் கலந்து பின்னூட்டங்கள் வேண்டாமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த்து. இது தொடர்பாக பலரும் பதிவிட்டுவிட்டதால் இனிமேல் நானும் பதிவிடுவது கூறியது கூறலாக அமையும் என்பதால் இங்கே இடுகிறேன். சந்திப்பு தொடர்பாக அறிவித்தல்களை வெளியிட்ட திரட்டிகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்திற்குமே நன்றிகள். கலந்துகொண்ட பதிவர்கள் அனைவருக்குமே ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் நன்றிகள். அன்று ஏற்பாட்டு வேலைகள் சிலவற்றில் கவனம் செலுத்தவேண்டி இருந்ததால் கலந்துரையாடல்களில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியவில்லை. வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது. இருந்தாலென்ன, இறுதியில் பதிவர்கள் நன்றிகூறி விடைபெறும்போது பெற்ற மகிழ்ச்சிக்கு இணையே இல்லையே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்தப் பதிவோடு எனது வலைத்தளத்தைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை 150 ஆக மாறியுள்ளது. நன்றி நண்பர்களே!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வழமையாக திங்கட்கிழமைகளில் வரும் சரக்கு வித் சைடிஸ் தான் இது. சிலபல காரணங்களுக்காக இன்று இடவேண்டி வந்துவிட்டதால் வேறு பெயரில்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

உண்மைக் காதல்





18 comments:

Unknown on December 19, 2009 at 4:40 PM said...

வேட்டைக்காரன விடுங்கப்பா....
அம்மாடி..... எத்தின பதிவு பாத்து வேட்டைக்காரன் எண்ட பெயரக் கேக்கவே யாரையாவது வேட்டையாடோணும் போல கிடக்குது....

பதிவு எழுதுதல் பற்றி நீங்கள் குறிப்பிடுவது என்னுடைய கருத்தும் தான்....
எல்லாம் ஒரு நட்புக்கும், சும்மா மன மகிழ்ச்சிக்காகவும் தான்....


ஏ9 பற்றிக் கேள்விப்பட்டன்...
போற திட்டமும் இருக்கு...
யார் குற்றினா என்ன நெல்லு அரிசியானாப் போதும்....
உத நான் வரவேற்கிறேன்...
உள்நோக்கங்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை....


நானும் பதிவர் சந்திப்பில் கருத்து எதையும் தெரிவிக்காவிடினும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது...
நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததும், அதற்குள் நானும் ஒருவன் என்றதும் மகிழ்ச்சியே....


காதல் படம் அருமை...
உப்பிடி எங்கயாவது ஒன்று இரண்டு இருந்து தான் காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....

சரக்கு அசத்தல் மச்சி...
(ஏறினா இப்பிடித் தான்... ஹி ஹி... :P )

Bavan on December 19, 2009 at 4:57 PM said...

///படத்தைப்பார்க்க தியேட்டருக்குப் போவதில்லை///

நானும் கூடுதலாக அப்படித்தான், காசு குடுத்து நோய வாங்கணுமா..ஹிஹி

******

///A9 வீதியினூடான யாழ்ப்பாணத்திற்கான பயணம் இலகுவாக்கப்பட்டிருக்கிறதாம்///

நல்ல செய்தி..:)

******

///இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்த்து///

ஆமாம் பல புதிய பதிவர்கள் கூட உருவாகலாம்...:)

*****

உண்மைக்காதல் வாழ்க..:)

Anonymous said...

// வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்//

உமக்கு ஓவர் குசும்புஓய்

Anonymous said...

apdeenna engayo oru idaththila nirai yamakkal pokamudiyaamal thaduththu neenda neram vachchirukkaangalaame...!!athaippatri ondum solla maaddeengalaa?

Subankan on December 19, 2009 at 5:33 PM said...

// Anonymous said...
apdeenna engayo oru idaththila nirai yamakkal pokamudiyaamal thaduththu neenda neram vachchirukkaangalaame...!!athaippatri ondum solla maaddeengalaa?//

நான் எழுதியதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எங்கே யார் எழுதுவான் குற்றம் கண்டுபிடிக்க என்று வருகிறீர்களா? வேண்டுமானால் அவற்றை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்.

இலங்கன் on December 19, 2009 at 5:40 PM said...

//பதிவு எழுதுவதால் அது வருங்காலத்தில் சோறு போடப்போவதில்லை. பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது.//

சத்தியமான கருத்து.

மற்றப் பக்கம் சரியான யுத்தம் போல கிடக்குது. சந்ரு அண்ணன் பக்கமுமா?

உமா on December 19, 2009 at 5:54 PM said...

//வரும் பொங்கலுக்கோ, இல்லை மாட்டுப் பொங்கலுக்கோ சன் டீவியில் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.//

இதுதான் சரியான முடிவு...உங்களை பாராட்டுகிறேன்...

கடைசிப்படம் சிம்ப்லி சூப்பர்....

Nimal on December 19, 2009 at 6:02 PM said...

எப்பிடியோ வேட்டைக்காரன் பாக்கத்தேவையில்லை என்றத தான் எல்லாரும் சொல்றாங்கள் (அரசியல்), அதுவும் கடும்போக்கு விஜய் ரசிகர் அல்லாதோர் எப்பவும் உலக (அரசியல்) தொல்லைக்காட்சிகளில் முதல் முறையாக பாக்கிறது தான் நல்லம்.

(இது அரசியல் கலந்த பின்னூட்டம், பிரசுரிக்கப்படுமா...?)

balavasakan on December 19, 2009 at 6:06 PM said...

இங்கு மனோகரா தியேட்டரில் முதல் நாள் ஆறு மணிக்கே நெரிசல் கே.கே.எஸ் ரோடு நிரம்பி வழிந்தது பின்னர் ரீல்ஸ் வரவில்லை எண்டாங்கள்.. இப்ப வந்துதோ ஓடோதோ தெரியாது...

யாழ்ப்பாணம் விஜய் ரசிகர்களின் ஒரு கோட்டை வாய் திறந்தால் சரி பியத்து விடுவார்கள்.
நானும் போவதாக இல்லை...

Subankan on December 19, 2009 at 6:20 PM said...

@ இலங்கன்

தவறான புரிதல் இலங்கன். எனது பெயரைப் பயன்படுத்தி சந்ரு அண்ணாவின் தளத்தில் பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. அதற்காக எழுதியதுதான் இது.

ASFER on December 19, 2009 at 7:09 PM said...

படம் பார்க்கவில்லை.விமர்சிக்கவும் தெரியாது.எங்க பார்த்தாலும் வேட்டைக்காரன் தான்.

விட்டுட்டு நம்புட வேலைய பாருங்க.

ஆனா பாடல்கள பாக்க ஆவலா இருக்கன்

விபு on December 19, 2009 at 7:49 PM said...

என்ன எல்லாரும் இப்படி விஜயை அறுக்கிறீங்க? (அதுக்காக நான் விஜய் ரசிகை என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல...)

நல்லபடியாக ஊருக்கு போய் வாங்க........... (விடுமுறை நாட்க்களின் என்று சொல்ல வந்தேன்...)

வாழ்த்துக்கள்... ( 150 பின்தொடர்வோருக்காக..)

ஜெட்லி... on December 19, 2009 at 9:40 PM said...

விஜய் மேல அவ்ளோ நம்பிக்கையா??
வில்லுக்கு வேட்டைக்காரன்
பரவாயில்லை பாஸ்

KANA VARO on December 19, 2009 at 10:05 PM said...

//பக்கத்து வீட்டுக்காரனுக்கே எங்களை அடையாளம் தெரியாத இன்றய அவசர உலகத்தில் பதிவு எழுதிப் பிரபலம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது.//

ha ha ha....
sampanthappaddavarkalukku vilankinaal sari....

Ramesh on December 19, 2009 at 10:25 PM said...

வேட்டைக்காரன் - தவிர்க்கிறேன்
பதிவெழுதுதல்- பயனுறப்பதிவெழுதுதலை ஏற்றுக்கொள்ளலாம்.பிரபல்யம் என்பதைத் தவிர்த்து நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்பதில் திருப்தி காண்போம். காய்க்கும் மரம் கல்லெறி வாங்கும்.
ஏ9 திறப்பு - சொந்தங்களின் இணைப்பு
150- வாழ்த்துக்கள்
சுபாங்கன்
போட்டோ அருமை.

வந்தியத்தேவன் on December 19, 2009 at 10:53 PM said...

வேட்டைக்காரன் பார்க்கும் எண்ணம் இல்லை,

பதிவுலகில் யார் பிரபலமோ இல்லையோ இதன் மூலம் நிறைய நல்ல நண்பர்கள் உலகளாவிய ரீதியில் கிடைத்திருக்கின்றார்கள்( என் வீட்டில் இருந்து சில மீற்றர்கள் தூரத்தில் இருக்கும் சுபாங்கன் உட்பட).

வீதியால் செல்லும் பஸ்சுக்கு முன்பதிவு செய்ய கடந்த வியாழக்கிழமை நான் பட்ட கஸ்டத்தை எழுத இருந்தேன் ஆனால் இனித்தேவையில்லை, காரணம் போக்குவரத்து இப்போ ஒழுங்காக நடக்கின்றதாக அறிந்தேன்.

சந்திப்பை ஒழுங்கு படுத்தியவர்கள் எவரும் இதுவரை இது பற்றி விரிவான பதிவு இடவில்லை என்ற விடயத்தை கவலையுடன் தெரிவிக்கின்றேன்.

இதுதான் உண்மைக் காதல்.

150 பிந்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Subankan on December 22, 2009 at 3:30 PM said...

நன்றி கோபி, போய் வாருங்கள்

நன்றி பவன், புதிய பதிவர்கள் இருவர் உருவானதாகத் தெரிகிறது

நன்றி உமா

நன்றி நிமல் அண்ணா, பிரசுரித்தாகிவிட்டது. என்னா ஒரு வில்லத்தனம்?

நன்றி பாலா

நன்றி ASFER

நன்றி விபு

Subankan on December 22, 2009 at 3:33 PM said...

நன்றி ஜெட்லி, அப்ப பாத்துடலாம்கறீங்களா?

நன்றி வரோ, ம்...

நன்றி றமேஸ்-Ramesh ரமேஸ் எண்ட பெயரில பதிவர்கள் கூடிப்போச்சில்ல?

நன்றி வந்தியண்ணா

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy