Monday, December 7, 2009

கடவுளாக்கப்பட்ட கயவர்கள்

பகுத்தறிவு வளர்கின்றது, மூடநம்பிக்கை அகல்கின்றது என்று என்னதான் வாய்கிழியக் கத்தினாலும் உண்மையில் நடப்பதெல்லாமே நேர்மாறுதானா என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சியொன்றில் ஒரு குப்பைத்தொட்டிக்கு பட்டுக்கட்டி, பூச்சூடி அதை மங்களகரமாக மாற்றிவைக்க பலரும் அதை கும்பிட்டுவிட்டுப் போவதாகக் காட்டினார்களாம். இப்படிக் கண்டதையும் கடவுளாக்கி வணங்கும் மூடநம்பிக்கைகள் மற்ற மனிதர்களை கடவுளாக்கி, கோயில்கட்டிக் கும்பிடும் நிலையையும் தாண்டி நிற்கின்றது.

பல காலமாகவே தம்மை அவதாரம், கடவுள் எனக் கூறி அடுத்தவர்களை ஏமாற்றும் கூட்டம் இருந்துகொண்டே இருந்தாலும், அது பெரும்பாலும் அந்த ஊரோடு, அல்லது கிராமத்தோடே மட்டுப்படுத்தப்பட்டுவிடும். இந்த நிலமை இன்று மோசமாகி பல நாடுகளிலும் கிளை தொடங்கி சம்பாதிக்கும் நிலையில் வந்து நிற்கிறது. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதற்கும் ஒவ்வொரு ஊரிலும் கையூட்டுப் பெற்ற ஒரு கூட்டம், இவர்களின் பயப்பு வார்த்தைகளுக்கு மயங்கிச் செல்லும் கூட்டத்தை அப்படியே வளைத்துப்போட நன்கு பயிற்றப்பட்ட இன்னுமொரு கூட்டம் என்று இந்தக் கடவுள் வியாபாரத்துக்குப்பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இயங்குகிறது.

இப்படியானோரின் பிரார்த்தனைகளின் ஆரம்பத்தில் கண்டிப்பாக ஒரு தியானம் இருக்கும். எப்படிப்பட்ட மனதையும் தியானம் ஒருநிலைப்படுத்திவிடும் என்பது விஞ்ஞானம். மனம் ஒருநிலைப்பட்டு அமைதியடைந்தவுடனேயே பலர் இவர்களைக் கடவுளாக நம்பத்தொடங்கிவிடுவார்கள். அதன்பிறகு காண்பிக்கப்படுபவை எல்லாம் மேஜிக். கண்கட்டுவித்தை. இவற்றையெல்லாம் நம்பி, இவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பவர்களால் இன்று கோடிகளில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுள்கள்.

பார்ப்பதற்கு ஒரு கட்டணம், பேசுவதற்கு இன்னுமொரு கட்டணம் என அறவிடும் இந்தக் கயவர்கள், அவற்றை முதலிடுவதற்கு பிள்ளைகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் பல கல்லூரிகள், கட்டுமானக் கம்பனிகள் என வைத்து அரசாங்கங்களையும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்றய மனிதனுக்கு எதிலும் அவசரம். கோயில்களுக்குச் சென்று கடவுளை வளிபடுவது ஒருவழித் தொடர்பாடல். பதிலும் கிடைக்காது, நடக்குமா என்பதும் தெரியாது. பதிலாக இப்படியானவர்களின் சாந்தமான பேச்சும் நடத்தையும், பதிலும் மனதுக்கு நம்பிக்கையாக இருப்பதால்தான் இப்படியானவர்களுக்கும் கூட்டம் கூடுகிறது. இது மட்டுமா? மற்றவர்களைக் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு மனிதன் கையாளும் மார்க்கம்தான் மாந்திரீகம். இப்படி மனிதர்களுக்குள் வளரும் போட்டிகளால்தான் மனிதக் கடவுள்களும் வளர்க்கப்படுகிறார்கள்.

எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல.

இறுதியாக ஒன்று. எனக்கு இந்த மேஜிக் செய்பவர்களைக்கண்டால் தொன்றுவது, இப்படி மேடைக்கு மேடை மேஜிக் செய்வதை விட்டுவிட்டு பேசாமல் கடவுளாகியிருக்கலாம். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதை விடுத்து கோடிகளில் கூடிவாழ்ந்திருக்கலாமே.

70 comments:

கனககோபி on December 7, 2009 at 2:42 PM said...

நானா முதலாவது?

கனககோபி on December 7, 2009 at 2:49 PM said...

நல்ல பதிவு சுபா அண்ணா....

பகுத்தறிவு இங்கு எங்குமே வளரவில்லை...
புதிய தொழிநுட்ப வசதிகள் மூலமாக மூடநம்பிக்கைகள் தான் வளர்கின்றன...

இந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் தொல்லைக்காட்சிகளுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் முக்கிய இடமுண்டு.

அவதாரங்கள் எல்லோரும் சினிமா, பொழுதுபோக்குச் சஞ்சிகைகளில் விளம்பரம் போடுகிறார்கள். எங்கே போய்த் தலையை முட்டிக் கொள்ள?

ஆனால் இப்போது முன்பைப் போல் இலகுவாக ஏமாற்ற முடியாமல் இருக்கிறது.
மாஜாயால வித்தைகள் செய்து சிவலிங்கம் எடுக்கிறேன் என்று ஒருவர் மாட்டுப்பட இப்போது புதியவர்கள் அப்படியான மாஜாயால வித்தைகளை செய்வதில்லை....

தியானம் போன்றவற்றால் மன அமைதியையும், மனதைரியத்தையும் ஏற்படுத்திவிட்டு தங்கள் கடவுள் சக்தியால் வந்ததென்று சொல்லி இறுவட்டுக்களில் பதிந்து விற்கிறார்கள்.

படித்த பலரும் இந்த வித்தைகளில் மாட்டுப்பட்டு இருப்பது இந்த நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

என்னத் சொல்ல சுபா அண்ணா?

நல்ல பதிவு....

Bavan on December 7, 2009 at 3:01 PM said...

இவர்களை திருத்தவே முடியாது,
இவர்களுக்கும் ஏதோ மாலை போடுதல், பாதம் அசையுதாம்,வாயிலிருந்து லிங்கம் வருதாம், கையில விபூதி,மாலை எல்லாம் வருதாம் என்று என்னமோ எல்லாம் இருக்காம்,ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட்..

நேற்று ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகினவனெல்லாம் இன்று சாமியார்,
என்ன கொடுமை இது..

Bavan on December 7, 2009 at 3:01 PM said...

சாமி சாமி எண்டு எவனோ சொல்லுவதைக் கேட்கும் மக்கள் கூட்டம் நாளை கடவுளே வந்து நான்தாண்டா கடவுள் என்றாலும் நம்பாது..

Bavan on December 7, 2009 at 3:03 PM said...

சொல்ல மறந்திட்டன்.
நல்ல பதிவு..:)

Anonymous said...

பெயர் போட்டு எழுதாட்டியும் புரியுது. உந்த அம்மாக்களும் பகவான்களும் இருக்குமட்டும் உலகம் உருப்பட்டமாதிரித்தான்.

கோவி.கண்ணன் on December 7, 2009 at 3:19 PM said...

//மற்றவர்களைக் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு மனிதன் கையாளும் மார்க்கம்தான் மாந்திரீகம். இப்படி மனிதர்களுக்குள் வளரும் போட்டிகளால்தான் மனிதக் கடவுள்களும் வளர்க்கப்படுகிறார்கள்.//

ஒருவர் மந்திரம் மாயம் சூனியம் என்று நம்பத் தொடங்கினால் அவருடைய குடும்ப அமைதியே மங்கத் தொடங்கி நிம்மதி போய்விடும் என்று படித்திருக்கிறேன்.

சிறப்பான கட்டுரை சுபாங்கன். இளைஞர்கள் முற்போக்காக சிந்திப்பது சமூகத்திற்கு பயனளிக்கும்

Bavan on December 7, 2009 at 3:23 PM said...

/// கனககோபி said...
மாஜாயால வித்தைகள் செய்து சிவலிங்கம் எடுக்கிறேன் என்று ஒருவர் மாட்டுப்பட இப்போது புதியவர்கள் அப்படியான மாஜாயால வித்தைகளை செய்வதில்லை....///

ஆனால் மக்கள் மனதில் magic செய்பவன் போலிச்சாமி என்ற எண்ணம் வந்ததால் அது அவர்களுக்கு இன்னும் இலகுவாய்ப்போய்விட்டது, கஸ்ட்டப்பட்டு magic செய்யத்தேவையில்லையே..

*****
சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் என்கிறார்கள். ஆனால் இவர்களின் தியான மண்டபங்களைப்பார்த்தாலே தலைசுற்றுகிறது..

அதிலும் ஒருவர் சோபாவில் துணைவியுடன் அமர்ந்து அருள் வழங்குகிறார்,

திருவிழாக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மணிக்கூடு, மோதிரம் ஏன் செயின்களில் கூட இந்த மோசடிமன்னர்களின் படம்,

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... ஹிம்ம்...

கலகலப்ரியா on December 7, 2009 at 4:30 PM said...

:) நல்ல பதிவு..

யோ வொய்ஸ் (யோகா) on December 7, 2009 at 4:30 PM said...

நல்ல பதிவு, நம்மாக்கள போல முட்டாள் யாருமே இல்ல, கொஞ்சம் மேஜிக் தெரிஞ்சா கடவுளாக ஆக்கிடுவாங்க...

எப்பதான் நம்ம ஆட்கள் திருந்துவாங்களோ?

முழு திருடன்கள் அனைவரும் சமயத்தை வைத்தே பொழப்பை நடத்துறவனுங்கள்...

Anonymous said...

//எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல//

நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

உதவிசெய்யும் மனிதர்கள் கடவுள் என்றால் இவர்களைக் கடவுள்கள் என்பது தவறா?

கனககோபி on December 7, 2009 at 4:52 PM said...

// Anonymous said...
//எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல//

நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

உதவிசெய்யும் மனிதர்கள் கடவுள் என்றால் இவர்களைக் கடவுள்கள் என்பது தவறா?//

ஹி ஹி....
ஒரே நகைச்சுவை போங்கள்....

உதவிசெய்யும் மனிதர்களை கடவுள் என்பது அவர்கள் எதிர்பார்ப்பின்றி உதவிசெய்வதால் தான்...
அதன்படி பார்த்தால் உலகில் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்திலாவது கடவுளாக இருப்பர்...

ஆனால் அந்தக் கடவுள் வேறு, இங்கே கதைக்கப்படும் கடவுள் வேறு.
நீங்கள் சிறிது வளரவேண்டும் நண்பரே.

மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதில் மிக மிக சொற்பமான ஒரு பங்கை தாங்கள் நல்லவர்கள் என தங்களது ஏமாளிப்பக்தர்களுக்கு அவர்கள் செய்வதையும், பொதுநோக்குடன் உதவிசெய்பவர்களை நோக்கி சொல்லப்பட்ட கடவுள் என்ற வார்த்தையையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்....

ரோஸ்விக் on December 7, 2009 at 5:32 PM said...

//சிறப்பான கட்டுரை சுபாங்கன். இளைஞர்கள் முற்போக்காக சிந்திப்பது சமூகத்திற்கு பயனளிக்கும் //

அண்ணன் கோவி.கண்ணன் சொன்னதை உரக்க வழிமொழிகிறேன்.

Anonymous said...

//பாபா - மருத்துவமனை//

the biggest thief is baba.

முகுந்தன் said...

// Anonymous said...
//பாபா - மருத்துவமனை//

the biggest thief is baba.//

தேவையில்லாமல் இந்தக் கட்டுரைக்குள் பாபாவை இழுக்கவேண்டாம். அவர் அவதாரமாக பலராலும் மதிக்கப்படுபவர்.

கனககோபி on December 7, 2009 at 5:49 PM said...

//முகுந்தன் said...
// Anonymous said...
//பாபா - மருத்துவமனை//

the biggest thief is baba.//

தேவையில்லாமல் இந்தக் கட்டுரைக்குள் பாபாவை இழுக்கவேண்டாம். அவர் அவதாரமாக பலராலும் மதிக்கப்படுபவர்.//

என்னாது?
இந்தத் தொப்பி அளவாப் பொருந்திற ஆக்களில பாபா முக்கியமானவர் பாருங்கோ.....

எழுதின மனுசன் நல்லவரா இருக்கிறதாலயோ அல்லது பயத்தாலயோ (:P) ஆக்கள நேர தாக்காம பொதுப்படையா எழுதியிருக்கு.....

youtube இல போய் sai baba cheat எண்டு தேடிப்பாருங்கோ, கொத்துக் கொத்தா அவரப் பற்றிய வீடியோக்கள் வந்து சேரும்...

மாயையில இருந்து வெளிய வாங்கப்பா.....

Subankan on December 7, 2009 at 5:57 PM said...

// Anonymous said...
//எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல//

நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

உதவிசெய்யும் மனிதர்கள் கடவுள் என்றால் இவர்களைக் கடவுள்கள் என்பது தவறா?
//

இவர்கள் உதவிசெய்வதற்கு வந்தவர்களாயின் கடவுளாகவேண்டிய தேவையில்லையே? இதற்கு கோபி சொன்னதையே வழிமொழிகிறேன்

கலையரசன் on December 7, 2009 at 5:57 PM said...

மீடியாவும், நாலாவது எஸ்டேட்டும் இந்த போலிகளை கிழிகிழியென கிழித்து காயப்போட்டாலும்... அவனுங்களை பார்க்க அடிச்சுபிடிச்சு தூண்டை போடும் நாதாரிகளுக்கு வேண்டும் பகுத்தறிவு!!!

கனககோபி on December 7, 2009 at 6:04 PM said...

//கலையரசன் said...
மீடியாவும், நாலாவது எஸ்டேட்டும் இந்த போலிகளை கிழிகிழியென கிழித்து காயப்போட்டாலும்... அவனுங்களை பார்க்க அடிச்சுபிடிச்சு தூண்டை போடும் நாதாரிகளுக்கு வேண்டும் பகுத்தறிவு!!!//

சகோதரா....
நீங்கள் எம்பக்கம் இருந்தாலும் ஒருவிடயத்தை மறந்துவிட்டீர்கள்...
ஊடகங்களின் பலத்த ஆதரவு இவர்களுக்கு உண்டு.
இலங்கையில் எத்தனையோ தரம் இவர்களுக்கு சிறப்பு இடமகொடுத்து பத்திரிகைகள் புகழ்ந்து எழுதியதை வாசித்து எரிச்சற்பட்டிருக்கிறேன்....

இந்தியாவில் நிறைய பொழுதுபோக்கு சஞ்சிகைகளிலும் இவர்கள் விளம்பரம் கூடப் போடுகிறார்கள்....

மக்கள் திருந்தவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டும்....

Anonymous said...

Those who made use this article against amma and baba, this is for u

if you dont like them, get away. mind your own business. you will believe them, when you feel them. nobody is trying to convince others to follow them, that is a different feeling. try to feel it.

கனககோபி on December 7, 2009 at 7:15 PM said...

//Anonymous said...
Those who made use this article against amma and baba, this is for u

if you dont like them, get away. mind your own business. you will believe them, when you feel them. nobody is trying to convince others to follow them, that is a different feeling. try to feel it.//

I was waiting for you mate... I was waiting for this type of a comment.

Those who don't like this post, please go away.... Don't come and comment here.... This blogger isn't trying to convince you to read his post.... Please.....

BTW, we are talking for our people and we talking about some fraudsters. This is called koinotropy, care about society...

’டொன்’ லீ on December 7, 2009 at 7:39 PM said...

வழிமொழிகிறேன்...இந்த வித்தைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது

Bavan on December 7, 2009 at 7:40 PM said...

///நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

உதவிசெய்யும் மனிதர்கள் கடவுள் என்றால் இவர்களைக் கடவுள்கள் என்பது தவறா////

அடிக்கிற கோடிகள்ல, சில லட்சம் போனா என்ன..... எல்லாம் ஒரு கண்துடைப்புதான்...

///Anonymous said...
Those who made use this article against amma and baba, this is for u

if you dont like them, get away. mind your own business. you will believe them, when you feel them. nobody is trying to convince others to follow them, that is a different feeling. try to feel it.
///

மாயையில் மாட்டுப்பட்ட ஓர் அப்பாவி நீங்கள், உங்களைத்திருத்த முடியாது,
சாமி என்ற பெயரில் கொள்ளையர்கூட்டம் கொள்ளையடிக்கட்டும் நீங்களும் பணத்தை இந்தாங்கோ என்று எடுத்துக்கொடுங்கள்...

தர்ஷன் on December 7, 2009 at 7:49 PM said...

நல்ல பதிவு அவசியமானதும் கூட

நல்ல பதிலடி கோபி

Balavasakan on December 7, 2009 at 8:07 PM said...

"கடவுளாக்கப்பட்ட கயவர்கள்"
அருமையான தலைப்பு அருமையான பதிவு...

கனககோபி on December 7, 2009 at 8:11 PM said...

//தர்ஷன் said...
நல்ல பதிவு அவசியமானதும் கூட

நல்ல பதிலடி கோபி//

ஆகா.... பதிவர் சுபாங்கனப்பா....

என்ன அடிக்கிறதெண்டாலும் அவருக்கே அடியுங்கோ....

// Bavan said...
///நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

உதவிசெய்யும் மனிதர்கள் கடவுள் என்றால் இவர்களைக் கடவுள்கள் என்பது தவறா////

அடிக்கிற கோடிகள்ல, சில லட்சம் போனா என்ன..... எல்லாம் ஒரு கண்துடைப்புதான்...

///Anonymous said...
Those who made use this article against amma and baba, this is for u

if you dont like them, get away. mind your own business. you will believe them, when you feel them. nobody is trying to convince others to follow them, that is a different feeling. try to feel it.
///

மாயையில் மாட்டுப்பட்ட ஓர் அப்பாவி நீங்கள், உங்களைத்திருத்த முடியாது,
சாமி என்ற பெயரில் கொள்ளையர்கூட்டம் கொள்ளையடிக்கட்டும் நீங்களும் பணத்தை இந்தாங்கோ என்று எடுத்துக்கொடுங்கள்... //

தலைவா.... கலக்குகிறீர்கள்....
பதிவுகள் மூலம் விழிப்புணர்வுள்ள நிறைய நண்பர்களைப் பார்க்கிறேன்... மகிழ்ச்சியாக இருக்கிறது...

தொடர்ச்சியான பதிவுகள் கற்களையும் கரையப்பண்ணும்.... பதிவுகளால் மாற்றங்களை ஏற்படுத்துவோம்.....

Subankan on December 7, 2009 at 8:19 PM said...

// கனககோபி said...
நல்ல பதிவு சுபா அண்ணா....

பகுத்தறிவு இங்கு எங்குமே வளரவில்லை...
புதிய தொழிநுட்ப வசதிகள் மூலமாக மூடநம்பிக்கைகள் தான் வளர்கின்றன...//

உண்மைதான்

//இந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்பதில் தொல்லைக்காட்சிகளுக்கும், ஏனைய ஊடகங்களுக்கும் முக்கிய இடமுண்டு//.

எதிர்க்காவிட்டலும் பலவாயில்லை, ஆதரிக்காமல் இருக்கலாம்

//ஆனால் இப்போது முன்பைப் போல் இலகுவாக ஏமாற்ற முடியாமல் இருக்கிறது.
மாஜாயால வித்தைகள் செய்து சிவலிங்கம் எடுக்கிறேன் என்று ஒருவர் மாட்டுப்பட இப்போது புதியவர்கள் அப்படியான மாஜாயால வித்தைகளை செய்வதில்லை....//
இப்போது குறைவுதான்

//தியானம் போன்றவற்றால் மன அமைதியையும், மனதைரியத்தையும் ஏற்படுத்திவிட்டு தங்கள் கடவுள் சக்தியால் வந்ததென்று சொல்லி இறுவட்டுக்களில் பதிந்து விற்கிறார்கள்.

படித்த பலரும் இந்த வித்தைகளில் மாட்டுப்பட்டு இருப்பது இந்த நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.

//

உண்மை கோபி

Subankan on December 7, 2009 at 8:23 PM said...

// Bavan said...
இவர்களை திருத்தவே முடியாது,
இவர்களுக்கும் ஏதோ மாலை போடுதல், பாதம் அசையுதாம்,வாயிலிருந்து லிங்கம் வருதாம், கையில விபூதி,மாலை எல்லாம் வருதாம் என்று என்னமோ எல்லாம் இருக்காம்,ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட்..

நேற்று ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகினவனெல்லாம் இன்று சாமியார்,
என்ன கொடுமை இது..
//

:))

Subankan on December 7, 2009 at 8:23 PM said...

// Bavan said...
சாமி சாமி எண்டு எவனோ சொல்லுவதைக் கேட்கும் மக்கள் கூட்டம் நாளை கடவுளே வந்து நான்தாண்டா கடவுள் என்றாலும் நம்பாது//

ஆமாம், ஆமாம்

Subankan on December 7, 2009 at 8:24 PM said...

//Bavan said...
சொல்ல மறந்திட்டன்.
நல்ல பதிவு..:)
//

நன்றி

Subankan on December 7, 2009 at 8:25 PM said...

// Anonymous said...
பெயர் போட்டு எழுதாட்டியும் புரியுது. உந்த அம்மாக்களும் பகவான்களும் இருக்குமட்டும் உலகம் உருப்பட்டமாதிரித்தான்.//

புரிந்தால் சரிதான் :))

Subankan on December 7, 2009 at 8:26 PM said...

// கோவி.கண்ணன் said...

ஒருவர் மந்திரம் மாயம் சூனியம் என்று நம்பத் தொடங்கினால் அவருடைய குடும்ப அமைதியே மங்கத் தொடங்கி நிம்மதி போய்விடும் என்று படித்திருக்கிறேன்.

சிறப்பான கட்டுரை சுபாங்கன். இளைஞர்கள் முற்போக்காக சிந்திப்பது சமூகத்திற்கு பயனளிக்கும்
//

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நன்றி அண்ணா

Subankan on December 7, 2009 at 8:27 PM said...

// Bavan said...
/// கனககோபி said...
மாஜாயால வித்தைகள் செய்து சிவலிங்கம் எடுக்கிறேன் என்று ஒருவர் மாட்டுப்பட இப்போது புதியவர்கள் அப்படியான மாஜாயால வித்தைகளை செய்வதில்லை....///

ஆனால் மக்கள் மனதில் magic செய்பவன் போலிச்சாமி என்ற எண்ணம் வந்ததால் அது அவர்களுக்கு இன்னும் இலகுவாய்ப்போய்விட்டது, கஸ்ட்டப்பட்டு magic செய்யத்தேவையில்லையே..

*****
சாமியார் என்றால் முற்றும் துறந்தவர் என்கிறார்கள். ஆனால் இவர்களின் தியான மண்டபங்களைப்பார்த்தாலே தலைசுற்றுகிறது..

அதிலும் ஒருவர் சோபாவில் துணைவியுடன் அமர்ந்து அருள் வழங்குகிறார்,

திருவிழாக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மணிக்கூடு, மோதிரம் ஏன் செயின்களில் கூட இந்த மோசடிமன்னர்களின் படம்,

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... ஹிம்ம்//

நன்றாகக் கவனித்திருக்கிறீர்கள் போல, உண்மைதான்

Subankan on December 7, 2009 at 8:27 PM said...

//கலகலப்ரியா said...
:) நல்ல பதிவு.//

நன்றி கலகலப்ரியா

Subankan on December 7, 2009 at 8:28 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
நல்ல பதிவு, நம்மாக்கள போல முட்டாள் யாருமே இல்ல, கொஞ்சம் மேஜிக் தெரிஞ்சா கடவுளாக ஆக்கிடுவாங்க...

எப்பதான் நம்ம ஆட்கள் திருந்துவாங்களோ?

முழு திருடன்கள் அனைவரும் சமயத்தை வைத்தே பொழப்பை நடத்துறவனுங்கள்.//

அதேதான். நன்றி அண்ணா

Subankan on December 7, 2009 at 8:30 PM said...

// Anonymous said...
//எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல//

நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

//

நான் பதிவில் இவர்களைக் குறிப்பிடவில்லையே, நான் சொன்ன கடவுள்கள் வேறு

Subankan on December 7, 2009 at 8:31 PM said...

//Anonymous said...
//பாபா - மருத்துவமனை//

the biggest thief is baba.//

:))

Subankan on December 7, 2009 at 8:32 PM said...

//ரோஸ்விக் said...
//சிறப்பான கட்டுரை சுபாங்கன். இளைஞர்கள் முற்போக்காக சிந்திப்பது சமூகத்திற்கு பயனளிக்கும் //

அண்ணன் கோவி.கண்ணன் சொன்னதை உரக்க வழிமொழிகிறேன்//

நன்றி ரோஸ்விக்

கனககோபி on December 7, 2009 at 8:32 PM said...

//Subankan said...
// Anonymous said...
//எனவே மனிதர்களுக்கு மனிதர் மரியாதை செய்யுங்கள், விட்டு அவர்களை வணங்காதீர்கள். தெய்வம் மானுஷ்ய ரூபே என்பது உதவிக்குத்தான் என்பதைத்தவிர்த்து, உங்களிடம் இருப்பதைப் பிடுங்குவதற்காக அல்ல//

நீர் இங்கே குறிப்பிடும் கடவுள்கள்தான் பிறருக்கு உதவிகள் செய்வதிலும் முன்னிற்பதை மறக்கவேண்டாம்.
உ.ம் - பாபா - மருத்துவமனை,
கல்கி பகவான் - கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்.

//

நான் பதிவில் இவர்களைக் குறிப்பிடவில்லையே, நான் சொன்ன கடவுள்கள் வேறு //

சபாஷ்... சரியான பதில்.....

(அதுசரி... உந்த பகவானுக்கு ஏதோ சொந்தமா நிறைய நிறுவனங்கள் இருக்குதாமே? குடும்பத்துக்குள்ள குழப்பம் வந்து மகன் தனியாக் கடவுள் ஆகப்போறாராமே? )

Subankan on December 7, 2009 at 8:33 PM said...

//முகுந்தன் said...
// Anonymous said...
//பாபா - மருத்துவமனை//

the biggest thief is baba.//

தேவையில்லாமல் இந்தக் கட்டுரைக்குள் பாபாவை இழுக்கவேண்டாம். அவர் அவதாரமாக பலராலும் மதிக்கப்படுபவர்.
//

கோபியின் பதிலைப் பார்க்கவும்

Subankan on December 7, 2009 at 8:35 PM said...

// கலையரசன் said...
மீடியாவும், நாலாவது எஸ்டேட்டும் இந்த போலிகளை கிழிகிழியென கிழித்து காயப்போட்டாலும்... அவனுங்களை பார்க்க அடிச்சுபிடிச்சு தூண்டை போடும் நாதாரிகளுக்கு வேண்டும் பகுத்தறிவு!!//

உண்மை, ஆனால் அவர்களை வளர்த்துவிடும் ஊடகங்களும் உண்டு.

Subankan on December 7, 2009 at 8:38 PM said...

// Anonymous said...
Those who made use this article against amma and baba, this is for u

if you dont like them, get away. mind your own business. you will believe them, when you feel them. nobody is trying to convince others to follow them, that is a different feeling. try to feel it//

சரி, தேவைப்படும்போது உணர்ந்துகொள்கிறோம். மற்றபடி நீங்கள் சொன்னதை நான் உங்களுக்கே திருப்பிச் சொல்லலாம். இது எங்களுக்கும் பொருந்தும்.

Subankan on December 7, 2009 at 8:38 PM said...

// ’டொன்’ லீ said...
வழிமொழிகிறேன்...இந்த வித்தைக்காரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது
//

நன்றி அண்ணா

Subankan on December 7, 2009 at 8:40 PM said...

// தர்ஷன் said...
நல்ல பதிவு அவசியமானதும் கூட

நல்ல பதிலடி கோபி
//

நன்றி தர்ஷன்

Subankan on December 7, 2009 at 8:40 PM said...

//Balavasakan said...
"கடவுளாக்கப்பட்ட கயவர்கள்"
அருமையான தலைப்பு அருமையான பதிவு..//

நன்றி பாலா

Subankan on December 7, 2009 at 8:42 PM said...

// கனககோபி said...

(அதுசரி... உந்த பகவானுக்கு ஏதோ சொந்தமா நிறைய நிறுவனங்கள் இருக்குதாமே? குடும்பத்துக்குள்ள குழப்பம் வந்து மகன் தனியாக் கடவுள் ஆகப்போறாராமே? )
//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Bavan on December 7, 2009 at 8:54 PM said...

// கனககோபி said...

(அதுசரி... உந்த பகவானுக்கு ஏதோ சொந்தமா நிறைய நிறுவனங்கள் இருக்குதாமே? குடும்பத்துக்குள்ள குழப்பம் வந்து மகன் தனியாக் கடவுள் ஆகப்போறாராமே? )
//

முற்றும் துறந்தவருக்கு இனியும் என்ன குடும்பம்,குழந்தை,குட்டி, குழப்பம்...??

அதுசரி கடவுளாகிறதுக்குத்தான் எந்தப்படிப்பும் தேவையில்ல..
தின்மும் குளித்துவிட்டு, அமைதியாக நடக்கப்பழகினால் போதும்..(கொஞ்சம் பெளடரும் போடவேண்டும்)

கனககோபி on December 7, 2009 at 8:59 PM said...

//Bavan has left a new comment on the post "கடவுளாக்கப்பட்ட கயவர்கள்":

// கனககோபி said...

(அதுசரி... உந்த பகவானுக்கு ஏதோ சொந்தமா நிறைய நிறுவனங்கள் இருக்குதாமே? குடும்பத்துக்குள்ள குழப்பம் வந்து மகன் தனியாக் கடவுள் ஆகப்போறாராமே? )
//

முற்றும் துறந்தவருக்கு இனியும் என்ன குடும்பம்,குழந்தை,குட்டி, குழப்பம்...??

அதுசரி கடவுளாகிறதுக்குத்தான் எந்தப்படிப்பும் தேவையில்ல..
தின்மும் குளித்துவிட்டு, அமைதியாக நடக்கப்பழகினால் போதும்..(கொஞ்சம் பெளடரும் போடவேண்டும்)//

அது தான் குடும்பம் இல்ல எண்டு சொல்லி தனித்தனியா உழைக்கப்போயினமாம்...

என்னாது பெளடரா? அவங்கள் கஞ்சா குடிக்கிறத எப்பிஎ நீங்கள் இப்பிடிப் பொது இடத்தில சொல்லலாம் பவன்?

Bavan on December 7, 2009 at 9:12 PM said...

///அது தான் குடும்பம் இல்ல எண்டு சொல்லி தனித்தனியா உழைக்கப்போயினமாம்...

என்னாது பெளடரா? அவங்கள் கஞ்சா குடிக்கிறத எப்பிஎ நீங்கள் இப்பிடிப் பொது இடத்தில சொல்லலாம் பவன்?///

தனித்தனியா உழைச்சா டபுள் காசுதானே...இதுவும் ஒரு கண்துடைப்புத்தானே.....

உண்மைகள் கசப்பானவைதானே..

ஓ.அதுவும் அவர்களின் தொழில் ரகசியமோ? :p

கனககோபி on December 7, 2009 at 9:18 PM said...

//ஓ.அதுவும் அவர்களின் தொழில் ரகசியமோ? :p //

மனித உரிமையப்பா... அவங்கட தனிப்பட்ட வாழ்க்கையப் பற்றி நீ எப்பிடிக் கதைக்கலாம் எண்டு அண்ணே பெயரிலி வந்து கேப்பார்....

அண்ணே பெயரிலி....
அது மனித உரிமையண்ணே...

இவங்கதான் கடவுளாச்சே.....
கடவுள் உரிமை எண்டு ஒண்டும் இல்லையண்ணே......

வேந்தன் on December 7, 2009 at 9:31 PM said...

நல்ல பதிவு.

வந்தியத்தேவன் on December 7, 2009 at 10:10 PM said...

நல்ல பதிவு சுபாங்கன். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்களும் இருப்பார்கள்.

Hahoooo said...

இதை விட காமெடி என்னெண்டால் .. வித்யா மாலை, புத்தி மாலை எண்டெல்லாம் எதோ ஒண்டை சின்னப் பிள்ளைகளின்ட கழுத்தில கட்டிவிட்டு பிறகு பிள்ளை கொலசிப் பாஸ் பண்ணினா மாலைஇண்டை மகிமை எண்டு சொல்லுகினம்.. இதுக்கு ரோட்டில நோட்டிஸ் வேற ஒட்டியிருந்துது ... நானும் Business நீயும் Business...

Karthik on December 7, 2009 at 10:54 PM said...

good one dude...:)

ஹேமா on December 7, 2009 at 11:02 PM said...

தம்பி நல்ல கோவத்தில இருக்கிறார்.கவனம்.

இப்பிடியானவையளை வளர்த்து விடுறதே நாங்கள்தானே.முதல்ல நாங்க திருந்தப் பாக்கோணும்.

rajeepan on December 7, 2009 at 11:17 PM said...

சமூக அக்கறையுடன் கட்டுரையை எழுதி இருக்கின்றீர்கள்..இவார்களை எல்லாம் ஆன்மீகவாதிகள் என அழைக்க கூடாது.தொழிலதிபர்கள் என்றே அழைக்கவேண்டும்..அவங்க வியாபாரத்தை சிறப்பாக நடத்துறாங்க..

Kiruthikan Kumarasamy on December 8, 2009 at 4:27 AM said...

///எனக்கு இந்த மேஜிக் செய்பவர்களைக்கண்டால் தொன்றுவது, இப்படி மேடைக்கு மேடை மேஜிக் செய்வதை விட்டுவிட்டு பேசாமல் கடவுளாகியிருக்கலாம். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதை விடுத்து கோடிகளில் கூடிவாழ்ந்திருக்கலாமே.///

இது 'அவர்' தானே. அவருக்கு 'baba black sheep' பாட்டுப் பிடிக்கும்தானே. சத்தியமா இல்லை எண்டு சொல்லாதீங்கோ.

நேர்மையாக நீங்கள் குறிப்பிடும் நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம் என்றுதான் பின்னூட்டமிட வந்தேன் சுபாங்கன். ஆனால் ஏற்கனவே பலபேர் நீங்கள் பெயர் குறிப்பிடாமலிருக்கவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள் பாவம். நல்ல பதிவு. சரியாகத் தாக்கியிருக்கிறீர்கள்

சந்ரு on December 8, 2009 at 8:42 AM said...

நல்ல இடுகை...என்ன சொல்வது ஏமாறுவோர் இருக்கும்வரை எமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வர். அதற்கு துணை போபவர்களை முதலில் திருத்த வேண்டும்...

Subankan on December 8, 2009 at 11:35 PM said...

// வேந்தன் said...
நல்ல பதிவு//

நன்றி வேந்தன்

Subankan on December 8, 2009 at 11:35 PM said...

// வந்தியத்தேவன் said...
நல்ல பதிவு சுபாங்கன். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாத்துபவர்களும் இருப்பார்கள்//

நன்றி அண்ணா

Subankan on December 8, 2009 at 11:36 PM said...

//Hahoooo said...
இதை விட காமெடி என்னெண்டால் .. வித்யா மாலை, புத்தி மாலை எண்டெல்லாம் எதோ ஒண்டை சின்னப் பிள்ளைகளின்ட கழுத்தில கட்டிவிட்டு பிறகு பிள்ளை கொலசிப் பாஸ் பண்ணினா மாலைஇண்டை மகிமை எண்டு சொல்லுகினம்.. இதுக்கு ரோட்டில நோட்டிஸ் வேற ஒட்டியிருந்துது ... நானும் Business நீயும் Business.//

நோட்டீஸ் மட்டுமா? இன்னும் எத்தனையோ

Subankan on December 8, 2009 at 11:37 PM said...

// Karthik said...
good one dude...:)//

thanks buddy

Subankan on December 8, 2009 at 11:38 PM said...

// ஹேமா said...
தம்பி நல்ல கோவத்தில இருக்கிறார்.கவனம்.

இப்பிடியானவையளை வளர்த்து விடுறதே நாங்கள்தானே.முதல்ல நாங்க திருந்தப் பாக்கோணும்.
//

உண்மை அக்கா

Subankan on December 8, 2009 at 11:39 PM said...

// rajeepan said...
சமூக அக்கறையுடன் கட்டுரையை எழுதி இருக்கின்றீர்கள்..இவார்களை எல்லாம் ஆன்மீகவாதிகள் என அழைக்க கூடாது.தொழிலதிபர்கள் என்றே அழைக்கவேண்டும்..அவங்க வியாபாரத்தை சிறப்பாக நடத்துறாங்க..
//

அதே!

Subankan on December 8, 2009 at 11:41 PM said...

// Kiruthikan Kumarasamy said...

இது 'அவர்' தானே. அவருக்கு 'baba black sheep' பாட்டுப் பிடிக்கும்தானே. சத்தியமா இல்லை எண்டு சொல்லாதீங்கோ.

நேர்மையாக நீங்கள் குறிப்பிடும் நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கலாம் என்றுதான் பின்னூட்டமிட வந்தேன் சுபாங்கன். ஆனால் ஏற்கனவே பலபேர் நீங்கள் பெயர் குறிப்பிடாமலிருக்கவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்கள் பாவம். நல்ல பதிவு. சரியாகத் தாக்கியிருக்கிறீர்கள்//

ஆமாம், அவர்களே உளறிவிட்டார்கள். அவர்களுக்கே புரிந்திருக்கிறது.

Subankan on December 8, 2009 at 11:42 PM said...

// சந்ரு said...
நல்ல இடுகை...

என்ன சொல்வது ஏமாறுவோர் இருக்கும்வரை எமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வர். அதற்கு துணை போபவர்களை முதலில் திருத்த வேண்டும்..//

நன்றி அண்ணா, அதே!

மதுவர்மன் on December 9, 2009 at 12:29 AM said...

சுபாங்கன்,

இங்கே இடப்பட்டுள்ள பின்னூட்டங்களை பார்க்கும்போது தெரியவில்லையா, எத்தனை பேர் பகுத்தறிவுடன் சிந்திக்கின்றார்கள் என்று.

கண்முன்னே நடக்கும் முட்டாள் தனங்களை பார்த்து, சலித்துக்கொள்ளும் உங்களின் ஆதங்கம் புரிகின்றது.

நல்ல எழுத்து. என்ன செய்வது கடைசி மூடப்பழக்கம் இருக்கும்வரைக்கும் அவற்றிற்கெதிரான போராட்டம் ஓயாது. உங்கள் எழுத்துக்களும் அதன் ஒரு பகுதி தான்.

அறிவியல் வளர்ச்சி, பகுத்தறிவை நாள்தோறும் வளர்க்கின்றது என்பதில் ஐயமில்லை..

கனககோபி on December 9, 2009 at 10:49 AM said...

// மதுவர்மன் said...
சுபாங்கன்,

இங்கே இடப்பட்டுள்ள பின்னூட்டங்களை பார்க்கும்போது தெரியவில்லையா, எத்தனை பேர் பகுத்தறிவுடன் சிந்திக்கின்றார்கள் என்று.
. //

கொஞ்சப் பேர் தான் அண்ணா....
பதிவர்களில் பலர் சிந்தித்தாலும் வெளியில் உந்த நம்பிக்கைகளுக்கு ஆதரவானவர்களும், உதுகளைப் பற்றிக் கதைத்தால் பிரச்சினை வரும் என்ற பயமும் கொண்டவர்களே அதிகம்....

பதிவர்களிடையே ஏன் பகுத்தறிவு உள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று நானும் வியந்திருக்கிறேன்....

Sinthu on December 10, 2009 at 9:22 PM said...

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டு தானே இருப்பார்கள்....
நல்ல விளக்கம், நன்கே ரசித்தேன்...
எப்படியாவது பாக்கள் திருந்தத் தான் வேண்டும், அது எப்போ?

Related Posts with Thumbnails
 
தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy