Wind turbines
காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.
Kitegen
பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.
இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.
இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.
இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!
இதன் தொழிற்பாட்டைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
12 comments:
நல்ல விடயம் தானே.... நடைமுறைக்கு வந்தால் நன்மையாக இருக்கும்....
பொறுத்திருந்து பார்ப்போம்....
தகவலுக்கு நன்றி சுபா (அண்ணா)...
ஐ... தொழில்நுட்ப பதிவு!! இதை பத்தி ஏற்கனவே செந்தில்வேலன் எழுதிட்டாரு.. நீங்களும் எழுதியிருக்கீங்க! ரைட்டு பாஸ்..
(தொடர்ச்சியா பதிவு எழுதலைன்னா யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.. அதுக்குன்னு இப்படி கிளம்பிட்டீங்க???)
நல்ல தகவல் பாஸ்....
நல்ல விடயம்தானே. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி சுபாங்கன்
என் மாணவர்களிடம் பகிர கிடைத்த ஒரு
நல்லத் தகவல்
உலகிற்கு பயன்படும் நல்ல தகவல் அன்புத் தம்பி. பகிர்விற்கு மிக்க நன்றிகள். தொடருங்கள்.
நன்றி கோபி
நன்றி கலை, ஒரு காலத்துல நாமல்லாம் டெக்னிகல் தான் தல, அதுக்காகவாவது அப்பப்ப எழுதிக்கறேனே
நன்றி பாலா
நன்றி சந்ரு அண்ணா
நன்றி தர்ஷன், பகிருங்கள்
நன்றி ரோஸ்விக் அண்ணா
நடத்துங்கோ..
@ புல்லட்
ம்.. நடக்குது, நடக்குது
நல்ல தொரு தகவலுக்கு நன்றி
அன்புடன்,
மென்தமிழ்.காம்
பட்டத்தில இவ்வளவு விசயம் இருக்குன்னு தெரியாமலேயே 20 வருசமா பட்டம் விட்டிருகனே! ஊரில!!
@ மென்தமிழ்.காம்; நன்றி
@ ரமேஷ்; தெரிஞ்சிருந்தா மட்டும்?
Post a Comment