Saturday, December 5, 2009

த(ல)லைக்கு விழுந்த ஆப்பு!

நுணலும் தன் வாயாற் கெடும் என்பார்கள். வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை இங்கே பதிவுசெய்கிறேன்.

பொதுவாகவே நான் தலைமுடி அலங்காரத்தில் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. சலூனுக்குப்போனோமா, ஏதோ முடியை வெட்டினோமா, வந்தோமா என்பதுதான் எனது வழமை. நேற்றுவரை இதுதான் தொடர்ந்தது.

இன்று காலை தலைமுடி வெட்டுவதற்காக கடைக்குள் நுளைந்தபோதுதான் என் நாக்கில் நரகாசுரன் ஏறி நர்த்தனமாடிவிட்டான்.  முடி திருத்துபவரிடம் ஏற்கனவே நான் திட்டமிட்டிருந்தவாறு எப்படி வெட்டவேண்டும் என்பதை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டு தலையைக் கொடுக்கத் தயாரானேன்.

நான் கூறியபடியே ஆரம்பித்தார் அவர். ஓரங்களை மெசினால் ட்றிம் பண்ணவா என்று கேட்ட அவருக்கு சரி என்று கூறியபோது நாக்கு மீண்டும் தன் வேலையைக் காட்டிவிட்டிருந்தது அப்போது எனக்குத் தெரியவில்லை. மெசினை எடுத்து, காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். செதுக்கி முடித்தபிறகுதான் கவனித்தேன். என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே ஏறத்தாள தெரியத்தொடங்கியிருந்தது. அடுத்தது என்ன செய்வது என்று யோசிக்குமுன்னரே அவரது கத்தரி உச்சி மண்டையையும் பதம் பார்த்திருந்தது.

இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்

அழாக்குறையாக வீட்டுக்கு வந்த என்னை, வீட்டிலிருக்கும் வாண்டு மொட்டை அண்ணா என்று அழைக்க, ஏனையோர் அதைப்பார்த்துச் சிரிக்க என்று இன்று வீட்டில் ஹீரோ நான்தான். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாக ஏறத்தாள பொலீசாரின் தலைவெட்டுப்போல் இருப்பதால் இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.

60 comments:

Unknown on December 5, 2009 at 7:00 PM said...

//வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் //

இதில் குழப்பம் இருக்கிறது....
வழக்கம் போல சும்மா இருக்காமல், வாயைக் கொடுத்ததால் என்றும் எடுக்கலாம், வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் என்றும் அதாவது எப்போதும் அமைதியாக இருந்து இன்று மட்டும் வாயைக் கொடுத்தீர்களா அல்லது வழமையைப் போல இன்றும் வாயைக் கொடுத்தீர்களா?

Unknown on December 5, 2009 at 7:01 PM said...

//பொதுவாகவே நான் தலைமுடி அலங்காரத்தில் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. சலூனுக்குப்போனோமா, ஏதோ முடியை வெட்டினோமா, வந்தோமா என்பதுதான் எனது வழமை. நேற்றுவரை இதுதான் தொடர்ந்தது.//

நேற்றும் சலூனுக்குப் போய் இண்டைக்கும் சலூனுக்கும் போனீங்களா?
என்ன நகைச்சுவையா விடுறீங்க?

Unknown on December 5, 2009 at 7:01 PM said...

//காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். //

களிமண்ணுக்கு மேல புல்லு வளர்றதில ஆச்சரியம் ஏதும் இல்லயே?

Unknown on December 5, 2009 at 7:02 PM said...

//இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்//

அப்ப அதில போட்டிருக்கிற படம் கேவலம் எண்டுறீங்களா?
அப்பிடி எப்பிடி நீங்கள் சொல்லலாம்?

Unknown on December 5, 2009 at 7:02 PM said...

// என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே //

எவ்வளவு லோட் களிமண்?

Unknown on December 5, 2009 at 7:04 PM said...

உங்கள் படத்தை தரவேற்றியிருந்தால் நகைச்சுவைப்பதிவாக மாறியிருக்குமே?

நாங்களும் சிரித்துவிட்டு வாக்களித்துவிட்டுப் போயிருப்பேமே?

Unknown on December 5, 2009 at 7:04 PM said...

// இன்று வீட்டில் ஹீரோ நான்தான். //
ஹி ஹி.... நீங்க வளரோணும்....
சின்னப் பிள்ளத் தனமாவே இருக்கிறீங்க.....

//ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாக ஏறத்தாள பொலீசாரின் தலைவெட்டுப்போல் இருப்பதால் இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.//

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

Bavan on December 5, 2009 at 7:12 PM said...

ஹாய்...மொட்டை அண்ணா...(நானும் கூப்பிட்டேன்...ஹிஹி)

//இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.//
இவ்வளவு நாளும் தெரியாம வித்தவுட்டு, இனி தெரிஞ்சு வித்தவுட்டு

//நரகாசுரன் ஏறி நர்த்தனமாடிவிட்டான்//
அந்த நரகாசுரன் வாழ்க..ஹிஹி

//த(ல)லைக்கு விழுந்த ஆப்பு//
இதுதாங்க தலைவிதி...

உங்களுக்கு இப்படி யாராவது முடி வெட்டியிருப்பாங்களோ..
http://www.youtube.com/watch?v=EoYAic35n0Y

Bavan on December 5, 2009 at 7:17 PM said...

எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே....
பதிவைப்படிக்கும்போதே சிரிச்சு..சிரிச்சு வயிறு வெடிச்சுடும்போல இருக்கு...
நேர்ல பாத்தா அவ்வளவுதான்..ஐயோ.. தாங்கமுடியலயே என்னால...

Unknown on December 5, 2009 at 7:17 PM said...

அடடே... நானா முதலாவது....?

கருத்துரைகளை உடன உடன வெளியிட்டாத் தானே யாரு முதலாவது எண்டு அறியலாம் தம்பி?

பழக்க வழக்கம் சரியில்லை.....

Bavan on December 5, 2009 at 7:24 PM said...

///இன்று வீட்டில் ஹீரோ நான்தான்///
ஆதவனில வடிவேலு மாதிரி....

////கனககோபி said...
// என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே //

எவ்வளவு லோட் களிமண்?////

அதுதானே எவ்வளவு லோட் களிமண்?

சி தயாளன் on December 5, 2009 at 7:30 PM said...

என்னுடைய தலையைக் கெடுத்த அனுபவத்தை படித்துமா இப்படி ஆயிச்சு....உங்களுக்கு அங்க மொழிப்பிரச்சினையும் இல்லை...பிறகு எப்படி..?

balavasakan on December 5, 2009 at 8:50 PM said...

மொட்டைன்னா என்ன பாஸ் நல்ல காத்தோட்டம் தலை ஜில் ன்னு இருக்கும்
அது சரி அப்பிடி என்ன அலங்காரத்தில் தலைமுடி வெட்ட திட்டமிட்டிருந்தீரகள்..
எங்காவது ஆணழகன் போட்டிக்கு செல்ல திட்டமோ..

நிலாமதி on December 5, 2009 at 8:54 PM said...

இருந்தால் முடி ...போனால் மொட்டை .....உங்க படத்தை ..பார்த்து சிரிக்க ஆசையாக் இருக்கு.

வேந்தன் on December 5, 2009 at 10:09 PM said...

//ஓரங்களை மெசினால் ட்றிம் பண்ணவா என்று கேட்ட //
ஹிஹிஹி... உதுக்குத்தான் நான் மெசின் போட விடுறதில்லை. :)

Anonymous said...

Post ur pic.. plsssssss.. if not kummal nadakkum

வந்தியத்தேவன் on December 5, 2009 at 10:45 PM said...

தம்பி சுபாங்கன் இளைஞர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். அதிலும் நாங்கள் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் இதை எல்லாம் பெரிதாக எடுக்ககூடாது. நான் எத்தனை முறை இப்படியான கஸ்டங்களை அனுபவித்து அம்மாவிடம் திட்டுவாங்கியிருக்கின்றேன்.

Unknown on December 5, 2009 at 10:46 PM said...

//எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.//

நீங்க சொன்ன படியா சொல்றன் சுபா அண்ணா....

பதிவர் சந்திப்பு டிசம்பர் 13ம் திகதி பின்னேரம் 2 மணிக்கு நடக்குதாம்....

Unknown on December 5, 2009 at 10:48 PM said...

// வந்தியத்தேவன் said...
தம்பி சுபாங்கன் இளைஞர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். அதிலும் நாங்கள் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் இதை எல்லாம் பெரிதாக எடுக்ககூடாது. நான் எத்தனை முறை இப்படியான கஸ்டங்களை அனுபவித்து அம்மாவிடம் திட்டுவாங்கியிருக்கின்றேன்.//

வந்தியண்ணா வர வர சீரியஸாக் கதைக்க வெளிக்கிடுறார்.... வந்தியண்ணாவ அந்த நுவரெலியாப் பயணம் கெடுத்துப் போட்டுது போல கிடக்குது,..

கலையரசன் on December 5, 2009 at 10:49 PM said...

முடிவெட்டிய பின்பு எடுத்த போட்டோவை போட்டிருந்தால் நாங்களும் சிரிச்சிருப்போமுல்ல..?

கலையரசன் on December 5, 2009 at 10:49 PM said...

முடிவெட்டிய பின்பு எடுத்த போட்டோவை போட்டிருந்தால் நாங்களும் சிரிச்சிருப்போமுல்ல..?

ilangan on December 6, 2009 at 10:38 AM said...

கனககோபி//
//காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். //

களிமண்ணுக்கு மேல புல்லு வளர்றதில ஆச்சரியம் ஏதும் இல்லயே?

கவனத்திற் கொள்க காய்ந்த புல்.....

பதிவர் சந்திப்பில் அந்த சிகை அலங்காரத்தை பார்க்க ஆவலுடன் இலங்கன

ilangan on December 6, 2009 at 10:44 AM said...

நானும் தல எண்ண தல அஜித்துக்கும் ஏதோ ஆப்பு வைச்சிட்டாங்களோ எண்ணு யோசித்தேன்.
இருந்தாலும் உங்கள் பதிவின் தலைப்பே போதும் ஒவ்வொருமுறையும் வாசிக்கத் தூண்டுகிறது.

யோ வொய்ஸ் (யோகா) on December 6, 2009 at 11:54 AM said...

யு ஆர் வெரி பாவம்,

செம் கும்மல் நடந்திருக்கு....

தலைக்கு உள்ளுக்கு உள்ளதும் தெரியும் அளவுக்கா முடி வெட்டிருக்கான“

சிங்கக்குட்டி on December 6, 2009 at 1:26 PM said...

//இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது//

இப்படி எல்லாம் பலன் இருக்கா? என்னா ஒரு நல்ல எண்ணம் !!!

Bavan on December 6, 2009 at 1:40 PM said...

///ilangan said...
பதிவர் சந்திப்பில் அந்த சிகை அலங்காரத்தை பார்க்க ஆவலுடன் இலங்கன///

சிகையே போய்விட்டது பிறகு என்ன அலங்காரம்?...ஹிஹி...

Bavan on December 6, 2009 at 1:45 PM said...

//// கனககோபி said...
உங்கள் படத்தை தரவேற்றியிருந்தால் நகைச்சுவைப்பதிவாக மாறியிருக்குமே?////

இப்ப மட்டும் என்ன...
நேற்று சிரிச்சு..சிரிச்சு..எனக்கு வயிறுவலி...

//// கனககோபி said...
நேற்றும் சலூனுக்குப் போய் இண்டைக்கும் சலூனுக்கும் போனீங்களா?////

இனி அந்தப்பக்கம் போகவேமாட்டார்..ஹிஹி

Anonymous said...

ada eenga machi romba feel pandra. intha mottai mathiriyaana hair cut thaam machchi inge canada vula lam phasion. naamma paya pullagallasm appidi otta mazichittu kathula kadukkan pottutu thriyuraynga. kadukaan maatikka machchi puth fashion aa podum.ithukku poi (alattik) illa illa aluvalaama?

Tech Shankar @ டெக்‌ஷங்கர் on December 7, 2009 at 7:16 AM said...

டெம்ப்ளேட் அருமை. நல்லா இருக்கு.

Subankan on December 7, 2009 at 8:45 PM said...

// கனககோபி said...
//வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் //

இதில் குழப்பம் இருக்கிறது....
வழக்கம் போல சும்மா இருக்காமல், வாயைக் கொடுத்ததால் என்றும் எடுக்கலாம், வழக்கம் போல சும்மா இருக்காமல் வாயைக் கொடுத்ததால் என்றும் அதாவது எப்போதும் அமைதியாக இருந்து இன்று மட்டும் வாயைக் கொடுத்தீர்களா அல்லது வழமையைப் போல இன்றும் வாயைக் கொடுத்தீர்களா?
//

நீங்கள் முதலில் சொன்னது

Subankan on December 7, 2009 at 8:45 PM said...

// கனககோபி said...
//பொதுவாகவே நான் தலைமுடி அலங்காரத்தில் பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை. சலூனுக்குப்போனோமா, ஏதோ முடியை வெட்டினோமா, வந்தோமா என்பதுதான் எனது வழமை. நேற்றுவரை இதுதான் தொடர்ந்தது.//

நேற்றும் சலூனுக்குப் போய் இண்டைக்கும் சலூனுக்கும் போனீங்களா?
என்ன நகைச்சுவையா விடுறீங்க?
//

லேபிளைப பாக்கலயா?

Subankan on December 7, 2009 at 8:46 PM said...

//கனககோபி said...
//காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். //

களிமண்ணுக்கு மேல புல்லு வளர்றதில ஆச்சரியம் ஏதும் இல்லயே?
//

அனுபவமோ?

Subankan on December 7, 2009 at 8:47 PM said...

// கனககோபி said...
//இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்//

அப்ப அதில போட்டிருக்கிற படம் கேவலம் எண்டுறீங்களா?
அப்பிடி எப்பிடி நீங்கள் சொல்லலாம்?
//

அப்ப இல்லையா?

Unknown on December 7, 2009 at 8:47 PM said...

// Subankan said...
//கனககோபி said...
//காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். //

களிமண்ணுக்கு மேல புல்லு வளர்றதில ஆச்சரியம் ஏதும் இல்லயே?
//

அனுபவமோ?//

ஓம் ஓம்....
உங்கள 2 தடவை இதுவரை சந்தித்த அனுபவம்....

Subankan on December 7, 2009 at 8:48 PM said...

// கனககோபி said...
// இன்று வீட்டில் ஹீரோ நான்தான். //
ஹி ஹி.... நீங்க வளரோணும்....
சின்னப் பிள்ளத் தனமாவே இருக்கிறீங்க.....

//ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லதாக ஏறத்தாள பொலீசாரின் தலைவெட்டுப்போல் இருப்பதால் இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது.//

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
//

ஆனாலும் ஆகலாம்

Subankan on December 7, 2009 at 8:49 PM said...

//கனககோபி said...
உங்கள் படத்தை தரவேற்றியிருந்தால் நகைச்சுவைப்பதிவாக மாறியிருக்குமே?

நாங்களும் சிரித்துவிட்டு வாக்களித்துவிட்டுப் போயிருப்பேமே?
//

என்னா ஒரு வில்லத்தனம்

Unknown on December 7, 2009 at 8:49 PM said...

//Subankan said...
// கனககோபி said...
//இப்படியல்ல, என் நிலமை இதைவிடக் கேவலம்//

அப்ப அதில போட்டிருக்கிற படம் கேவலம் எண்டுறீங்களா?
அப்பிடி எப்பிடி நீங்கள் சொல்லலாம்?
//

அப்ப இல்லையா? //

அதுக்குப் பேர் நாகரிகம்... Fashion.....

Subankan on December 7, 2009 at 8:50 PM said...

// Bavan said...
ஹாய்...மொட்டை அண்ணா...(நானும் கூப்பிட்டேன்...ஹிஹி)//

குரூப்பாத்தாய்யா கெளம்பியிருக்காய்ங்க

Subankan on December 7, 2009 at 8:51 PM said...

//கனககோபி said...
அடடே... நானா முதலாவது....?

கருத்துரைகளை உடன உடன வெளியிட்டாத் தானே யாரு முதலாவது எண்டு அறியலாம் தம்பி?

பழக்க வழக்கம் சரியில்லை.//

என்னது தம்பியா? பேராண்டி என்று சொல்லவும்.

Subankan on December 7, 2009 at 8:52 PM said...

//Bavan said...
எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே....
பதிவைப்படிக்கும்போதே சிரிச்சு..சிரிச்சு வயிறு வெடிச்சுடும்போல இருக்கு...
நேர்ல பாத்தா அவ்வளவுதான்..ஐயோ.. தாங்கமுடியலயே என்னால...
//

இதுக்காகவாவது நான் நேரில வரணும்

Subankan on December 7, 2009 at 8:53 PM said...

//Bavan said...
///இன்று வீட்டில் ஹீரோ நான்தான்///
ஆதவனில வடிவேலு மாதிரி....

////கனககோபி said...
// என் மண்டை மட்டுமல்ல, அதற்கு உள்ளாக இருக்கும் அனைத்துமே //

எவ்வளவு லோட் களிமண்?////

அதுதானே எவ்வளவு லோட் களிமண்?
//

அதிகமில்லை, உங்களைவிடக் குறைவுதான்

Subankan on December 7, 2009 at 8:54 PM said...

//’டொன்’ லீ said...
என்னுடைய தலையைக் கெடுத்த அனுபவத்தை படித்துமா இப்படி ஆயிச்சு....உங்களுக்கு அங்க மொழிப்பிரச்சினையும் இல்லை...பிறகு எப்படி..?
//

அனுபவம் போதாது

Subankan on December 7, 2009 at 8:56 PM said...

//Balavasakan said...
மொட்டைன்னா என்ன பாஸ் நல்ல காத்தோட்டம் தலை ஜில் ன்னு இருக்கும்
அது சரி அப்பிடி என்ன அலங்காரத்தில் தலைமுடி வெட்ட திட்டமிட்டிருந்தீரகள்..
எங்காவது ஆணழகன் போட்டிக்கு செல்ல திட்டமோ..
//

ஆனழகனா? குசும்பு?

Subankan on December 7, 2009 at 8:57 PM said...

// நிலாமதி said...
இருந்தால் முடி ...போனால் மொட்டை .....உங்க படத்தை ..பார்த்து சிரிக்க ஆசையாக் இருக்கு.
//

ஆகா, என்ன ஒரு தத்துவம். சிரிப்பீங்க, சிரிப்பீங்க

Subankan on December 7, 2009 at 8:58 PM said...

// வேந்தன் said...
//ஓரங்களை மெசினால் ட்றிம் பண்ணவா என்று கேட்ட //
ஹிஹிஹி... உதுக்குத்தான் நான் மெசின் போட விடுறதில்லை. :)
//

இனி நானும்தான் :)

Subankan on December 7, 2009 at 8:59 PM said...

//முகிலினி said...
Post ur pic.. plsssssss.. if not kummal nadakkum//

இதுக்கு மேலயுமா?

Subankan on December 7, 2009 at 8:59 PM said...

//வந்தியத்தேவன் said...
தம்பி சுபாங்கன் இளைஞர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். அதிலும் நாங்கள் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் இதை எல்லாம் பெரிதாக எடுக்ககூடாது. நான் எத்தனை முறை இப்படியான கஸ்டங்களை அனுபவித்து அம்மாவிடம் திட்டுவாங்கியிருக்கின்றேன்.
//

உங்களுக்குமாஆஆ

Subankan on December 7, 2009 at 9:00 PM said...

//கனககோபி said...
//எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.//

நீங்க சொன்ன படியா சொல்றன் சுபா அண்ணா....

பதிவர் சந்திப்பு டிசம்பர் 13ம் திகதி பின்னேரம் 2 மணிக்கு நடக்குதாம்...//

தகவலுக்கு நன்றி. எங்க நடக்குதாம்?

Subankan on December 7, 2009 at 9:02 PM said...

// கலையரசன் said...
முடிவெட்டிய பின்பு எடுத்த போட்டோவை போட்டிருந்தால் நாங்களும் சிரிச்சிருப்போமுல்ல..?
//

வேணாம், நான் அழுதுடுவன்

Unknown on December 7, 2009 at 9:02 PM said...

//தகவலுக்கு நன்றி. எங்க நடக்குதாம்?/

தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்திலயாம்......

Subankan on December 7, 2009 at 9:03 PM said...

// ilangan said...
கனககோபி//
//காய்ந்த புல்லை உளவாரத்தினால் செதுக்குவதுபோல செதுக்கத் தொடங்கினார். //

களிமண்ணுக்கு மேல புல்லு வளர்றதில ஆச்சரியம் ஏதும் இல்லயே?

கவனத்திற் கொள்க காய்ந்த புல்.....

பதிவர் சந்திப்பில் அந்த சிகை அலங்காரத்தை பார்க்க ஆவலுடன் இலங்கன
//

ஆகா, அங்கவேற வரணுமோ?

Subankan on December 7, 2009 at 9:04 PM said...

// ilangan said...
நானும் தல எண்ண தல அஜித்துக்கும் ஏதோ ஆப்பு வைச்சிட்டாங்களோ எண்ணு யோசித்தேன்.
இருந்தாலும் உங்கள் பதிவின் தலைப்பே போதும் ஒவ்வொருமுறையும் வாசிக்கத் தூண்டுகிறது.
//

நன்றி இலங்கன்

Subankan on December 7, 2009 at 9:05 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
யு ஆர் வெரி பாவம்,

செம் கும்மல் நடந்திருக்கு....

தலைக்கு உள்ளுக்கு உள்ளதும் தெரியும் அளவுக்கா முடி வெட்டிருக்கான“
//

அப்ப சந்தேகப்படுறீங்களா?

Subankan on December 7, 2009 at 9:05 PM said...

// சிங்கக்குட்டி said...
//இனி பேரூந்துகளில் டிக்கட் எடுக்கத் தேவை இருக்காது//

இப்படி எல்லாம் பலன் இருக்கா? என்னா ஒரு நல்ல எண்ணம் !!!
//

ஹா ஹா

Subankan on December 7, 2009 at 9:07 PM said...

// Anonymous said...
ada eenga machi romba feel pandra. intha mottai mathiriyaana hair cut thaam machchi inge canada vula lam phasion. naamma paya pullagallasm appidi otta mazichittu kathula kadukkan pottutu thriyuraynga. kadukaan maatikka machchi puth fashion aa podum.ithukku poi (alattik) illa illa aluvalaama?//

ஐ அப்ப நான் கனடா றிட்டேன் எண்டு சொல்லி சமாளிச்சுடலாம்

Subankan on December 7, 2009 at 9:08 PM said...

// Tech Shankar @ டெக்‌ஷங்கர் said...
டெம்ப்ளேட் அருமை. நல்லா இருக்கு.
//

நன்றி, revolution clutch template.

Thamira on December 7, 2009 at 9:27 PM said...

உங்க போட்டோவைத்தான் புரொபைலில் பார்க்குறோமே, நீங்க போலீஸா.. சரிதான். சமாளிக்கிறதுக்கு வேற ஐடியா கிடைக்கலியா? :-))

Subankan on December 7, 2009 at 9:30 PM said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்க போட்டோவைத்தான் புரொபைலில் பார்க்குறோமே, நீங்க போலீஸா.. சரிதான். சமாளிக்கிறதுக்கு வேற ஐடியா கிடைக்கலியா? :-))
//

ஆகா, நீங்களுமா?

மனோரஞ்சன் on December 11, 2009 at 9:40 AM said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்க போட்டோவைத்தான் புரொபைலில் பார்க்குறோமே, நீங்க போலீஸா.. சரிதான். சமாளிக்கிறதுக்கு வேற ஐடியா கிடைக்கலியா? :-))
//
போலிஸ் மாதிரி இல்லாட்டியும் சேது விக்ரம் அளவுக்காவது இருப்பீங்கத்தானே சுபாங்கன், So எப்புடியோ டிக்கட் Free தான்.
கவலைய விடுங்க...

மனோரஞ்சன் on December 11, 2009 at 10:04 AM said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்க போட்டோவைத்தான் புரொபைலில் பார்க்குறோமே, நீங்க போலீஸா.. சரிதான். சமாளிக்கிறதுக்கு வேற ஐடியா கிடைக்கலியா? :-))
//
போலிஸ் மாதிரி இல்லாட்டியும் சேது விக்ரம் அளவுக்காவது இருப்பீங்கத்தானே சுபாங்கன்,
So எப்புடியோ டிக்கட் Free தான்.
கவலைய விடுங்க...

Related Posts with Thumbnails
 
தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy