Tuesday, December 8, 2009

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல!






சில பாடல்களைக் கேட்கும்போது எங்களை இருந்த இடத்திலிருந்து இன்னுமொரு உலகத்திற்குத் தூக்கிச்சென்றுவிடும். எமக்குள்ளும் இயக்குனர்கள் உருவாகியது போல பாடலின் வரிகள் மனதில் காட்சிகளாக விரியும். பாடலை மீண்டுக் மீண்டும் கேட்கவேண்டும் போல இருக்கும். அனுபவித்திருக்கிறீர்களா?

அப்படியாக நான் அனுபவித்த ஒரு பாடல் சர்வம் படத்தின் சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

பாடலின் ஆரம்ப இசையே பாடலைக் கண்ணைமூடி ரசிக்கவைத்துவிடுகிறது.

உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!

காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும், பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும், பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்.

ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

இந்த வரிகளைக் கேட்கும்போது இனம்புரியாத ஒரு உணர்வு. ஆற்றில் சலனமில்லாது ஓடும் நீரின் நடுவில் தத்தளிக்கும் சிறு எறும்பின் உணர்வு. ஆழ்மனத்து அமைதியை ஒருமுறை தட்டிப்பார்க்கிறது.

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அற்புதமாகக் காதலின் உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறது வரிகள். பிரிவின் வலியும் அதனூடே காதலியை உணர்வதும் அழகு.

உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

இந்த வரிகளும், அதைத் தொடரும் இசையும் கண்ணை மூடிக் கேட்டால் ஒரு வித்தியாசமான உணர்வுக்குத் தள்ளப்படுகிறேன். காற்றில் மிதப்பது போன்ற உணர்வு. அற்புதமான வரிகள். அதற்கேற்ற இசை.

உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!

காதலின் உணர்வுகள். வேறென்ன சொல்ல?

அமைதியான நேரத்தில் நீங்களும் கேட்டுப்பாருங்கள். எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.



41 comments:

Anonymous said...

//உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!//

இந்த வரிகளில் நானும் மயங்கியதுண்டு

Anonymous said...

உங்களுக்கும் காதல் வந்துவிட்டதோ?

யோ வொய்ஸ் (யோகா) on December 8, 2009 at 5:59 PM said...

சுபாங்கனுக்கு காதல் வந்திருச்சி...

Mathuvathanan Mounasamy / cowboymathu on December 8, 2009 at 6:06 PM said...

எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.////

யாருடைய காதலியை?

KANA VARO on December 8, 2009 at 6:24 PM said...

ஆகா! பிரமாதம் பிரமாதம்.
Hindu College ல பார்த்த சுபாங்னா இது? நம்பமுடியவில்லை… இல்லை… இல்லை… (அட! பாட்டுங்க. இழுத்து பாடிப்பாருங்க)

Unknown on December 8, 2009 at 6:26 PM said...

//மதுவதனன் மௌ. / cowboymathu on December 8, 2009 6:06 PM said...
எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.////

யாருடைய காதலியை? //

தன்னை மறுபடி மறுபடி நிரூபிக்கிறார் மது அண்ணா....
ஹி ஹி.....


புதுசா வித்தியாசமா தலைமுடி வெட்டின அதிர்ஷ்டம் எங்கள் ப.பாலகர் சங்கத்திலிருந்து நீங்கள் அடித்துக் கலைக்கப்பட்டு காதலிப்போர் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள் என காதலிப்போர் சங்கத்தின் தலைவர் வந்தியண்ணா சொல்லியிருக்கிறார்.....

Unknown on December 8, 2009 at 6:27 PM said...

சொல்ல மறந்துவிட்டேன்....
நல்ல பாடல் தான்....

காட்சியமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்....

maruthamooran on December 8, 2009 at 6:52 PM said...

யுவனின் இசையும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும்…… அற்புதம். அண்மைக்காலத்தில் நான் விரும்பிய பாடல்களில் முதன்மையானது.

balavasakan on December 8, 2009 at 7:05 PM said...

:-)
யுவன் எப்பாவது இருந்திட்டு தான் இப்பிடி பாடலகளை தருகிறார்
வரிகள் அருமை
வரட்டா....

வந்தியத்தேவன் on December 8, 2009 at 7:26 PM said...

யுவனின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று என் மனதுக்குப் பிடித்த பாடல் இது.

Unknown on December 8, 2009 at 7:39 PM said...

//வந்தியத்தேவன் said...
யுவனின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று என் மனதுக்குப் பிடித்த பாடல் இது. //

உங்களுக்கு இப்போது இப்படியான பாடல்கள் தான் பிடிப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
காரணம் என்ன வந்தியண்ணா?

Subankan on December 8, 2009 at 7:41 PM said...

// Anonymous said...
//உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!//

இந்த வரிகளில் நானும் மயங்கியதுண்டு
//

சேம் பிளட்

Subankan on December 8, 2009 at 7:43 PM said...

// Anonymous said...
உங்களுக்கும் காதல் வந்துவிட்டதோ?
//

பதிவு போட்ட உடன உங்களுக்கு மட்டும் எப்படி ஐயா தகவல் வருது?

Subankan on December 8, 2009 at 7:43 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
சுபாங்கனுக்கு காதல் வந்திருச்சி.//

அப்படியா?

Subankan on December 8, 2009 at 7:46 PM said...

// மதுவதனன் மௌ. / cowboymathu said...
எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்.////

யாருடைய காதலியை?
//

உங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் தோணுது? அடுத்தவன் காதலியும் ஆண்களும் அழகல்ல :P

Subankan on December 8, 2009 at 7:47 PM said...

// VARO said...
ஆகா! பிரமாதம் பிரமாதம்.
Hindu College ல பார்த்த சுபாங்னா இது? நம்பமுடியவில்லை… இல்லை… இல்லை… (அட! பாட்டுங்க. இழுத்து பாடிப்பாருங்க)
//

அம்மா சத்தியமா நான் அவன்தான். நம்புங்கப்பா

நன்றி வரோ

Subankan on December 8, 2009 at 7:48 PM said...

// கனககோபி said...

புதுசா வித்தியாசமா தலைமுடி வெட்டின அதிர்ஷ்டம் எங்கள் ப.பாலகர் சங்கத்திலிருந்து நீங்கள் அடித்துக் கலைக்கப்பட்டு காதலிப்போர் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள் என காதலிப்போர் சங்கத்தின் தலைவர் வந்தியண்ணா சொல்லியிருக்கிறார்.....
//

அவர் இருக்கும் எந்த சங்கத்திலும் சேர இந்த இளவல் தயார்.

Subankan on December 8, 2009 at 7:50 PM said...

// கனககோபி said...
சொல்ல மறந்துவிட்டேன்....
நல்ல பாடல் தான்....

காட்சியமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று நம்புகிறேன்.//

எனக்கு காட்சியமைப்பும் பிடித்திருக்கிறது. இன்னும் சொன்னால் திரிஷா இந்தப் பாடலில் இன்னும் அழகாகத் தெரிகிறார்.

Unknown on December 8, 2009 at 7:50 PM said...

//Subankan said...
// கனககோபி said...

புதுசா வித்தியாசமா தலைமுடி வெட்டின அதிர்ஷ்டம் எங்கள் ப.பாலகர் சங்கத்திலிருந்து நீங்கள் அடித்துக் கலைக்கப்பட்டு காதலிப்போர் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள் என காதலிப்போர் சங்கத்தின் தலைவர் வந்தியண்ணா சொல்லியிருக்கிறார்.....
//

அவர் இருக்கும் எந்த சங்கத்திலும் சேர இந்த இளவல் தயார். //

தான் காதலிப்பதை சுபாங்கன் எற்றுக் கொண்டிருக்கிறார்.....

வரும் பதிவர் சந்திப்பில் குடும்ப சமேதரமாய் கலந்து கொள்வீர்களா?

Subankan on December 8, 2009 at 7:51 PM said...

// மருதமூரான். said...
யுவனின் இசையும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவும்…… அற்புதம். அண்மைக்காலத்தில் நான் விரும்பிய பாடல்களில் முதன்மையானது//

உண்மைதான். ஒளிப்பதிவு எனக்கும் பிடித்திருந்தது.

Unknown on December 8, 2009 at 7:52 PM said...

//எனக்கு காட்சியமைப்பும் பிடித்திருக்கிறது. இன்னும் சொன்னால் திரிஷா இந்தப் பாடலில் இன்னும் அழகாகத் தெரிகிறார். //

இருக்கலாம்...
த்ரிஷா பற்றித் தெரியாது...
பாடற் காட்சியின் பின்புறமும் பிடித்திருக்கிறது....
எனினும் ஏதோ குறை இருப்பதான உணர்வு....

எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்று நியதில்லைத் தானே... அது தான் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லையோ தெரியவில்லை....

Subankan on December 8, 2009 at 7:52 PM said...

// Balavasakan said...
:-)
யுவன் எப்பாவது இருந்திட்டு தான் இப்பிடி பாடலகளை தருகிறார்
வரிகள் அருமை
வரட்டா..//

உண்மைதான். சரி வாங்கோ

Subankan on December 8, 2009 at 7:53 PM said...

// வந்தியத்தேவன் said...
யுவனின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று என் மனதுக்குப் பிடித்த பாடல் இது//

சேம் பிளட் அண்ணா

Subankan on December 8, 2009 at 7:53 PM said...

// கனககோபி said...
//வந்தியத்தேவன் said...
யுவனின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று என் மனதுக்குப் பிடித்த பாடல் இது. //

உங்களுக்கு இப்போது இப்படியான பாடல்கள் தான் பிடிப்பதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
காரணம் என்ன வந்தியண்ணா?//

காரணம் நல்ல பாடல்

ஹேமா on December 8, 2009 at 8:34 PM said...

சுபாங்கன்,நானும் ரசிக்கும் பாடல்.
நல்ல ரசனை உங்களுக்கும்.

Admin on December 8, 2009 at 8:41 PM said...

எனக்கும் பிடித்த பாடல்தான்..... சுபாங்கன் காதலில் விழுந்து........... என்று எனக்குத் தெரியும்....

Admin on December 8, 2009 at 8:46 PM said...

அதுசரி நண்பர்களே காதல் பாடல்களை கேட்பவர்களும், இரசிப்பவர்களும், காதல் கவிதை எழுதுவோரும் காதலிப்பவர்களா?

Anonymous said...

சுபாங்கா, நீயுமா? ஹி ஹி.... சந்ருண்ணாவின் கேள்விக்கு என்ன பதில் சகோதரர்களே...

Unknown on December 8, 2009 at 10:27 PM said...

//சந்ரு said...
அதுசரி நண்பர்களே காதல் பாடல்களை கேட்பவர்களும், இரசிப்பவர்களும், காதல் கவிதை எழுதுவோரும் காதலிப்பவர்களா? //

நிச்சயமாக இல்லை....

ஆனால் திடீரெண்டு ஒருவர் தனக்குப் பிடித்த பாடல் என்று காதற்பாடலை சொல்லுவதும், அதை விளக்கமாக பதிவிடுவதும், காதலைப் பற்றி விளக்கங்கள் கொடுப்பதும் சாதாரணமானதல்ல...

அத்தோடு தொடர்ந்து பழகும் நண்பர்களுக்கு ஒருவரில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் புரியும்....

அதனால் தான் சுபா அண்ணாவுக்கு காதல் வந்திற்றுது எண்டுறம்...

அவர் அதை எதிர்க்காதது சந்தேகத்துக்கு வலுச்சேர்க்கிறது....

தமிழன்-கறுப்பி... on December 8, 2009 at 11:06 PM said...

அட! அப்ப நிறையப்பேருக்கு இந்தப்பாட்டு பிடிச்சிருக்கு...
ஒரே நாள்ள 23 தரம் கேட்டிருக்கிறன்.

50 தரத்துக்கு மேல கேட்ட பாட்டுகளும் இருக்கு.

Subankan on December 8, 2009 at 11:27 PM said...

// ஹேமா said...
சுபாங்கன்,நானும் ரசிக்கும் பாடல்.
நல்ல ரசனை உங்களுக்கும்.
//

நன்றி அக்கா

Subankan on December 8, 2009 at 11:28 PM said...

// சந்ரு said...
எனக்கும் பிடித்த பாடல்தான்..... சுபாங்கன் காதலில் விழுந்து........... என்று எனக்குத் தெரியும்....//

அப்படியா?

Subankan on December 8, 2009 at 11:29 PM said...

/ சந்ரு said...
அதுசரி நண்பர்களே காதல் பாடல்களை கேட்பவர்களும், இரசிப்பவர்களும், காதல் கவிதை எழுதுவோரும் காதலிப்பவர்களா?
//

நல்லாக் கேளுங்கோ அண்ணா

Subankan on December 8, 2009 at 11:30 PM said...

//முகிலினி said...
சுபாங்கா, நீயுமா? ஹி ஹி.... சந்ருண்ணாவின் கேள்விக்கு என்ன பதில் சகோதரர்களே//

ஆமா, ஆமா

Subankan on December 8, 2009 at 11:32 PM said...

// தமிழன்-கறுப்பி... said...
அட! அப்ப நிறையப்பேருக்கு இந்தப்பாட்டு பிடிச்சிருக்கு...
ஒரே நாள்ள 23 தரம் கேட்டிருக்கிறன்.

50 தரத்துக்கு மேல கேட்ட பாட்டுகளும் இருக்கு//

அட!, சேம் பிளட்!

நிலாமதி on December 9, 2009 at 4:01 AM said...

பாடல் மிக்க நன்று ....கடல் நொடியினில்......என்று வராது கடல் மடியினில் தான் சரி. (கடற்கரையினில் கண்ட கனவுகள்.) இனிய நினைவுகள் என்றும் வாழட்டும். வாழ்த்துக்கள்.

கலையரசன் on December 9, 2009 at 2:29 PM said...

எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருடே!!

கலையரசன் on December 9, 2009 at 2:29 PM said...

எல்லாம் காதல் படுத்தும் பாடு... நல்லாயிருடே!!

ilangan on December 10, 2009 at 1:40 PM said...

//காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும்இ பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும்இ பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமேஇ அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்.//


ஆகா கலக்குறீங்க போங்க.

காதலிக்கிற உங்களைப் போன்றவர்களால் தான் இதை உணரமுடியும்.

Anonymous said...

very nice....

Sinthu on December 10, 2009 at 9:17 PM said...

"காதலர்கள் சந்தித்து மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருந்தாலும், பிரியும்போது வரும் ஏக்கமும் வெறுமையும், பாடல் வரிகளினூடே உணர முடிகிறது. காதலி விலகிச் சென்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது ஒருவித சிலிர்ப்பு ஏற்படுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இந்த வரிகளில்."

என்ன அனுபவம் இல்லை; கவலையாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிட்டு, இப்படியும் சொல்றீங்களே...

"அமைதியான நேரத்தில் நீங்களும் கேட்டுப்பாருங்கள். எதிராபாராத நேரத்தில் காற்றில் கலைந்த முடியைக் கோதிவிட்டுச் சிரிக்கும் காதலியைக் கண்ட உணர்வு நிச்சயம்."

காதலனைக் கண்ட உணர்வு வராதா?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy