போல் ஒக்டோபசானந்தா. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழுவதுமே தனது துல்லியமான கணிப்புகளால் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்து உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்த மகான். மனித குலம் முழுவதற்கும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்துக் கொடுத்து, இறைஞானம் தந்தருளவெனவே அவதரித்திருக்கும் அவதார புருஷர். மனதைக் கொண்டும், அதன் தர்க்கங்கள், கருத்துகள், பழைய நம்பிக்கைகள் வாத பிரதிவாதங்களைக் கொண்டும் இவரைப் புரிந்து கொள்ள முடியாது. அனுபவித்து ஆராதிக்க வேண்டிய அதிசயம் இவர்.
எங்கள் போல் ஒக்டோபசானந்தாவின் உயிர் மூச்சு ஒன்றேதான். போட்டிகளின் முடிவுகளை முன்னரே கணித்துச்சொல்லி, அதன்மூலம் போட்டியின் விறுவிறுப்பு நேரத்தில் ஏற்படும் தேவையற்ற டென்ஷனைத் தவிர்ப்பதும், நகத்தைக் கடித்து அதனால் ஏற்படும் கிருமித்தொற்றைத் தவிர்ப்பதும், தனது பக்தர்களை நோயற்ற வாழ்வு வாழ வழிசமைப்பதும்தான்.
இதோ, போல் ஒக்டோபசானந்தாவின் அற்புதங்களுக்கு ஒருசோறு பதமாக பதிவர் லோஷனின் கடிதம்.
என் பெயர் லோஷன். எனது விளையாட்டுப் பதிவுகளாலும், அது குறித்தான எதிர்வுகூறல்களாலும் பதிவுலகில் எனக்கென ஒரு தனித்துவமான முத்திரை பதித்தவன். எனது எதிர்வுகூறல்கள் எல்லாம் எதிர்மறையான முடிவையே தந்திருந்தாலும், எனது தொடர்ச்சியான வாசகர்களுக்கு அதுகுறித்துத் தெரிந்திருந்ததால் எனது வாடிக்கையாளர்களுக்கு குறையேதும் இருக்கவில்லை. இப்படியாக வெற்றிகரமான எனது எதிர்மறை எதிர்வுகூறல்களாக
- இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் எனக்கூறி அதைத் தோல்வியடைய வைத்தது
- ஆசியக்கோப்பையை இலங்கை கைப்பற்றும் எனக்கூறி இலங்கைக்கு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மரணஅடி வாங்கிக் கொடுத்தது
- நட்வெஸ்ட் தொடரில் ஆசிக்கு ஆதரவளித்து, யாருமே எதிர்பார்க்காதவகையில் கோப்பையை ஆங்கில தேசத்துக்கு அள்ளி வழங்கியது
போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதே பாணியை தொடர்ந்தும் கால்பந்தாட்ட உரக்ககிண்ணப் போட்டிகளிலும் பயன்படுத்தி, காலிறுதி வரை கலக்கியே வந்திருக்கிறேன். அனைவருமே எதிர்பார்த்த ஆர்ஜென்டீனா அணிக்கு எனது அமோக ஆதரவை அள்ளி வழங்கி, காலிறுதியோடு அதையும் மோசமாகக் கலைத்தவனும் நான்தான் என்றுதான் கடைசிவரை எண்ணிக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் போல் ஒக்டோபசானந்தா சுவாமிகளைப்பற்றி எனக்கு அறியக்கிடைத்தது. அவரது உலகப்புகழோடு போட்டியிட்டு உலகப்புகழ் பெறுவதற்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எனது வலைப்பதிவுகளில் சுவாமிகள் ஆதரவளித்த அணிக்கே எனது ஆதரவையும் வெளிப்படையாக அறிவித்து, அவற்றைத் தோல்வியடையச் செய்ய நான் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான்.
நேற்றய இறுதிப்போட்டியில் நான் ஆதரவளித்த ஸ்பெயின் அணியே நான் சற்றும் எதிர்பாராதவகையில் கோப்பையைத்தூக்கி, எனது பலகோடிக் கனவுக்கு ஆப்படித்தது. அப்போதுதான் போல் ஒக்டோபசானந்த சுவாமிகளின் மகிமையை உணர்ந்துகொண்டேன். எனது அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த போல் ஒக்டோபசானந்த சுவாமிகளுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
இறுதியாக சுவாமிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்.
போல் ஒக்டோபசானந்தா அடிப்பொடி
LOSHAN
http://arvloshan.com/
15 comments:
ஹா ஹா...
லோஷன் அண்ணாவின் ரவுசர் கழற்றப்படுகிறது....
ஒக்ரோபஸ் சாமியாரின் படம் அருமை...
உண்மையில் கலக்கல்.
// *
இந்த வருட Twenty 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் எனக்கூறி அதைத் தோல்வியடைய வைத்தது
*
ஆசியக்கோப்பையை இலங்கை கைப்பற்றும் எனக்கூறி இலங்கைக்கு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மரணஅடி வாங்கிக் கொடுத்தது
*
நட்வெஸ்ட் தொடரில் ஆசிக்கு ஆதரவளித்து, யாருமே எதிர்பார்க்காதவகையில் கோப்பையை ஆங்கில தேசத்துக்கு அள்ளி வழங்கியது //
கிர்ர்ர்ர்...
எல்லாம் இவரால தானா?
இனி நான் விரும்பிற அணிக்கு ஆதரவளிக்கட்டும் பாப்பம்.
கிர்ர்ர்ர்ர்.... #கொலைவெறியில்
// போல் ஒக்டோபசானந்தா அடிப்பொடி
LOSHAN
http://arvloshan.com/ //
ஒத்துக் கொள்ளுறன் இத அவர் தான் அனுப்பியிருக்கிறார்.
என்ன லோஷன் அண்ணா இந்தளவுக்கு கீழ இறங்கீற்றீங்கள்? :P
ஹா ஹா ஹீ லோஷன் அண்ணா எந்தக்கடையில் டவுசர் தைக்கிறவர். நடக்கட்டும் நடக்கட்டும்....இருந்தாலும் அடுத்தமுறை அக்டோபசுக்கு போட்டியாக நம்மவர் ஒருவர் களத்தில் என்னும் போது பெருமையாய் இருக்கு,.....இனி லோஷன் அண்ணா எந்த டீமுக்கு சப்போர்டோ எந்த டீம் வெல்லும் என்கிறாரோ அதுக்கு எதிராய் துணிந்து பெட கட்டலாம் போல இருக்கு
அடப் பாவி.. தான் பார்ட்டி வைக்கிறன்னு சொல்லிட்டன் தானே? அதுக்குப் பிறகு இது என்ன?
நான் ஆதரவு குடுத்த ஸ்பெய்ன் வென்றது என்ற சந்தோஷத்தில் இருக்கும்போது இது என்ன போலிக் கடிதம்? ;)
ஆனாலும் ஹா ஹா ரசித்தேன்..
நான் முன்பு மூக்குடைபட்ட வரலாறு எல்லாத்தையும் இந்தக் கால்பந்து உலகக் கிண்ணத்தில் துடைத்தெறிந்து விக்கிரமாதித்தன் ஆன வரலாறு தெரியாதா? (ஆர்ஜெண்டீனாவைப் பற்றி மட்டும் மறந்து விடவும்)
வரலாறு முக்கியம் தரங்கரே.. ;) oh sorry சுபாங்கரே.. ;)
இல்லாவிடில் வேதாளத்திடம் கேட்டு கீட்டு அறியவும் ;)
LOSHAN
http://arvloshan.com/ //
இது வேறயா? போலிகளிடம் ரொம்பவே கவனமா இருக்கணும் போல இருக்கே.
கார்ட்டூன்களை ரசித்தேன்.
அந்த சிம்மாசனப் படமும் இந்த அப்பாவி ஒக்டோபசிடம் சிக்கித் திணறும் படமும் சூப்பார்.
//போல் ஒக்டோபசானந்தா. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முழுவதுமே தனது துல்லியமான கணிப்புகளால் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்து உலகத்தையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்த மகான்//
மகானின் பெருமைகளை உணர்ந்து அவருக்கும் சீடனாக இணைய உத்தேசம்!!
//நேற்றய இறுதிப்போட்டியில் நான் ஆதரவளித்த ஸ்பெயின் அணியே நான் சற்றும் எதிர்பாராதவகையில் கோப்பையைத்தூக்கி, எனது பலகோடிக் கனவுக்கு ஆப்படித்தது. அப்போதுதான் போல் ஒக்டோபசானந்த சுவாமிகளின் மகிமையை உணர்ந்துகொண்டேன்//
ஐயோ ஐயோ அப்போ லோஷன் அண்ணாவும் நெதர்லாந்து சப்போர்ட்தானா? இது தெரியாமலா சின்ன பிள்ளைமாதிரி நெதர்லாந்து வின் பண்ணனும் எண்டு தேங்காய் உடைச்சு காச வேஸ்ட் பண்ணிட்டன்!!
//இறுதியாக சுவாமிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்//
சுவாமிகள் மறுபரிசீலனை செய்யவும்
ஒக்டோபசானந்தாவின் முன்னெச்சரிக்கை மாலை வழங்கும் வைபவம் இன்று நாடெங்கும் நடைபெறுமாம். அதற்கான மலை வழங்கும் இலங்கை பிரதிநிதியாக லோசன் அண்ணாவை ஒக்டோநெஸ் ஒக்டோபஸ் அமைப்பு அறிவித்துள்ளது..:P
மாலைபெற்றவர்கள் எதிர்காலத்தில் நீங்கள் வீட்டுக்குள் விளையாடும் கிறிக்கற், புட்பால் போன்றவை முதல் இன்டர்நெசனல் போட்டிகள் வரை ஒக்டோபஸ்சானந்தாவிடம் ஸ்கைப்பில் ஆசீர்வாதம் யார் வெற்றிபெறுவார்கள் என்பதையும் அறியலாம்.:P
ஹா..ஹா... ஹா.. தேவையான பதிவு என்னதான் இருந்தாலும் லோஷ சாஸ்திரம் சும்மா அல்ல உற்றப்பார்த்தால்தான் அதன் பவர் தெரியும் ...
1.அற்புதமாக விளையாடி கோல்கள் அடித்து கொண்டிருந்த டேவிட் வில்லா இவர் ஆதரவளிக்க தொடங்கிய பிறகு அப்பளமாக போய்விட்டார்
2. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் கோல்கள் அடிக்க கஸ்டப்பட்டதற்கும் லோஷசாஸ்திரம் தான் காரணம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது
ஆளாளுக்கு அடிக்க ரெடியாயிருக்காங்கப்பா:))
உந்த இரண்டு ஒக்டோபசும் 2011ல் நடக்கும் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது யார் எனச் சொல்வார்களா?
உந்த இரண்டு ஒக்டோபசும் 2011ல் நடக்கும் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது யார் எனச் சொல்வார்களா?
ஹா...ஹா...ரசித்து சிரித்தேன்
///தயவுசெய்து கிரிக்கெட் பற்றியும் எதிர்வுகூறி, உங்கள் பக்தனின் இமேஜை டேமேஜ் பண்ணிவிடாதீர்கள்///
ரிப்பீட்டு
ஒக்டோபசானந்தாவின் திறமைக்கு முன்னால் நமது விக்கிரமாதித்தனின் திறமை சற்று குறைவு தான் என்பதை கவலையுடன் ஏற்று கொள்கிறேன்.
வ்்்்்்்்வ்வ்வ்வ கண்டனங்கள்.. ஆனால் ரசித்தேன்.
அவ்வ் இப்படியெல்லாம் கிழிக்கிறாங்களே...
படங்களுக்கு பக்கத்திலிருந்து ஒரு சிறுக்கன் உதவியிருப்பார் எண்டு நெனைக்கிறன். (சும்மா )
தரங்கத்துக்குள்ளும் இது எப்படி இவ்வளவு நாளாய்..
ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்?
எனக்கு கிடைத்த தகவல்களின்படி படங்களின் பின்ணனியில் பவன் இருப்பதாக அறியமுடிகிறது!...
" உந்த இரண்டு ஒக்டோபசும் 2011ல் நடக்கும் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது யார் எனச் சொல்வார்களா?"
அன்பு சகோதரர்களே...
தயவுசெய்து உங்கள் ஆதரவை ஆசிய அணிகளுக்கு அளிக்கவேண்டாம்-பாவம் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லட்டும்.
நன்றி.
Post a Comment