குணம்
காவலர் வரிசைக்கும்
கள்வர்கள் கயமைக்கும்
புணர்வதற்காய்ப் போட்டிக்கும் – இன்னும்
இல்லாத காரணங்களையும் இறுக்கப் பிடித்தபடி
குரைத்துக்கொண்டுதான் இருக்கின்றன
இரவில் தெருநாய்கள்
தெளிவு
வேகமான பயணம்.
கூடவே ஓடுகிறது நிழல்..!
சற்றே தெளிவற்றுத்தான் தெரிகிறது
நிஜம்..!
கணக்கு
கூட்டலும் பெருக்கலும்
கணினிக்கு மாறிவிட்டபிறகும்
மனதிலேயேதான் நடக்கிறது
பிரித்தலும்! கழித்தலும்!!
எல்லை
ஒருகல் தொலைவில் இருக்கிறது
இன்னுமொரு கல்..!
ஏலவே…
வகுக்கப்பட்ட எல்லையில்
இதுதான் இறுதிக்கல்..!
17 comments:
//////கணக்கு
கூட்டலும் பெருக்கலும்
கணினிக்கு மாறிவிட்டபிறகும்
மனதிலேயேதான் நடக்கிறது
பிரித்தலும்! கழித்தலும்!!//////////
ரொம்பவே ரசித்தோன் சுபாங்கன்!!!!!
:)))
அழகிய கவிதைகள்...
ஒரு குட்டி கவிஞ்ஞன் உள்ளே குடியிருக்கிறான் போல...
குணமும் கணக்கும் அருமை சுபாங்கன்:(
:)))
எல்லை பற்றிய
ஒரு தெளிவான
கணக்கு வைத்திருக்கும்
குணம்
கொண்டவை தெரு நாய்கள்..
எல்லாக் கவிதைகளும் அருமை அண்ணே...
ம்.... கணக்கு நல்லாயிருக்கு.
அருமையான எளிமையான கவிதைகள்.
கணக்குக் கவிதை மிகப்பிடித்திருக்கிறது.
அருமை....
உங்களுக்குள் ஒழிந்திருக்கின்ற ஒரு கவிஞன் அண்மைக்காலமாக அருமையாக வெளிப்படுகிறான்.
வெளியில் எப்படியோ தெரியபாது, ஆனால் வலைப்பதிவுகளில் அண்மைக்காலமாகத்தான் அருமையான கவிதைகளை எழுதுகிறீர்கள்.
அருமை....
கவிதைகள் அருமை அண்ணா!!
எனக்கு இதுதான் ரொம்பவே பிடித்து இருக்கிறது
//தெளிவு
வேகமான பயணம்.
கூடவே ஓடுகிறது நிழல்..!
சற்றே தெளிவற்றுத்தான் தெரிகிறது
நிஜம்..!//
//
கூட்டலும் பெருக்கலும்
கணினிக்கு மாறிவிட்டபிறகும்
மனதிலேயேதான் நடக்கிறது
பிரித்தலும்! கழித்தலும்!!
//
உண்மை உண்மை
அனைத்து கவிதைகளும் அருமை
nice subangss
அருமை..
சுபாங்கன் கவிஞனானது எப்போதோ தெரியாது . அனால் அருமையான கவிஞனானது அண்மையில் தான் போலும்..
:)
கணக்கையும்,நிழலையும் அதிகமாக ரசித்தேன்..
அடிக்கடி கவிதை பொழியுங்கள்..
ம்ம் அருமை. அழகாக இருக்கிறது. பிந்தி வந்திருக்கேன்... ஆழமாய் ரசிக்கிறேன் :))
தொடருங்கள் சுபாங்கன்
எல்லா கவிதைகளும் அருமை. நிழல் - அருமை
அதிகம் எழுதுங்கள்.
அருமை சுபாங்கன்
வாழ்த்துக்கள்
கணக்கையும், குணத்தையும் மிகவும் ரசித்தேன் சுபாங்கன். வாழ்த்துக்கள்!
கவிதைகளை மிகவும் ரசித்தேன்.
Post a Comment