தேர்தல்
விதை விதைத்தவன் தெரியாமல்
வேர் நீர் நனைத்தவன் அறியாமல்
கல் எறிபவனுக்கெல்லாம் - தன்
காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது
மரம் - மக்கள்
வழங்கும் வாக்குப் போல..!
பெரிசு
எரிந்து முடித்தவனின் அஸ்தி கரைத்து,
தாகத்து விலங்கின் நா தழுவி,
ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,
வழிப்போக்கன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,
ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்
பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு
ஆக்கப்படுகிறது தண்ணீர்
பெரிசு ஆக்கப்படும் தாய்போல…!
மாற்றம்
ஆதி அடி மரத்தின் அருமை அறியாது
வெட்டி ஒட்டிவிட்ட வெள்ளைப் பூவையே
பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்
சிவப்புச் செவ்வரத்தை..!
.
‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!
26 comments:
// மாற்றம்
ஆதி அடி மரத்தின் அருமை அறியாது
வெட்டி ஒட்டிவிட்ட வெள்ளைப் பூவையே
பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்
சிவப்புச் செவ்வரத்தை..! //
அருமை....
மிகவும் பிடித்திருக்கிறது.
மீண்டும் உங்களிடமிருந்து அருமையான கவிதைகள் சுபா அண்ணா...
வாழ்த்துக்கள்....
அருமை கவிதைகளை ரசித்தேன்!!!
கவி அவதாரம் எடுத்தமைக்கு காரணம் என்னவோ????
:-)))
அருமை. அருமை. தொடர்கவே......
பூ சிரிக்குது
வேர்களைத்தேடாமல்........
பிடித்திருக்கு
தேர்தல் கவிதை மிக அருமை... பாராட்டுக்கள்.
இரண்டும், மூன்றும் ஒன்றும் என் தேர்வு சுபாங்கன். அருமை.
தேர்தல் கவிதை அருமை.
தேர்தல் - பெரிசு
மிக மிக அருமை
மனதை நெருடும் நிஜங்களை பேசுகின்றன கவிதைகள்
too Good..
wow
மூன்றையும் ரசித்தேன்.
அடிக்கடி எழுதவும்.
அருமை சுபாங்கன்
குறிப்பாக ஒரு கவிதையை சொல்லலாமென மீள் மீள வாசித்தும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்றுமே அருமை
தரங்கம் கவிதைகளின் அரங்கமாகி வருகிறது..
சந்தோஷம்
அழகான வரிகள் அருமை..
முன் பின் அறிமுகமில்லாமல் பின்னூட்டமிடுகிறேன் - காரணம் எனக்கு இவை மிக தரமான கவிதைகள் - நன்றிகள்.
அனைத்தும் அருமை...
வேர்களை அறியாத பூக்கள்
பிடித்திருக்கு.
இன்னும் வரட்டும்....
//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//
இங்கும் அதே....
//கன்கொன் || Kangon said...
மீண்டும் உங்களிடமிருந்து அருமையான கவிதைகள் சுபா அண்ணா...
வாழ்த்துக்கள்....
//
நன்றி கன்கொன்
// Anuthinan S said...
அருமை கவிதைகளை ரசித்தேன்!!!
கவி அவதாரம் எடுத்தமைக்கு காரணம் என்னவோ???//
நன்றி அனு, சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு காரணமும் இல்லை
//Bavan said...
:-)))//
:)))
// றமேஸ்-Ramesh said...
அருமை. அருமை. தொடர்கவே......
பூ சிரிக்குது
வேர்களைத்தேடாமல்........
பிடித்திருக்கு
//
:), நன்றி
// சி. கருணாகரசு said...
தேர்தல் கவிதை மிக அருமை... பாராட்டுக்கள்//
நன்றி :)
// வானம்பாடிகள் said...
இரண்டும், மூன்றும் ஒன்றும் என் தேர்வு சுபாங்கன். அருமை.
//
நன்றி ஐயா
//மருதமூரான். said...
தேர்தல் கவிதை அருமை.//
நன்றி
//ஈரோடு கதிர் said...
தேர்தல் - பெரிசு
மிக மிக அருமை
//
மிக்க நன்றி
// Balavasakan said...
மனதை நெருடும் நிஜங்களை பேசுகின்றன கவிதைகள்//
:)), நன்றி
// LOSHAN said...
too Good..
wow
மூன்றையும் ரசித்தேன்.
அடிக்கடி எழுதவும்.
//
நன்றி அண்ணா, உங்கள் கவிதைக்காக வெயிட்டிங் ;)
// தர்ஷன் said...
அருமை சுபாங்கன்
குறிப்பாக ஒரு கவிதையை சொல்லலாமென மீள் மீள வாசித்தும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்றுமே அருமை
//
நன்றி தர்ஷன்
//யோ வொய்ஸ் (யோகா) said...
தரங்கம் கவிதைகளின் அரங்கமாகி வருகிறது..
சந்தோஷம்
//
எனக்கும் சந்தோஷம் :)
// சிநேகிதி said...
அழகான வரிகள் அருமை..
//
நன்றி சினேகிதி
// ஆதிரை said...
அனைத்தும் அருமை...
வேர்களை அறியாத பூக்கள்
பிடித்திருக்கு.
இன்னும் வரட்டும்....
//
நன்றி அண்ணா
// Jana said...
//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//
இங்கும் அதே..//
சேம் பிளட்? :)
மூன்றுமே சிந்தனை அருமை சுபா.தேர்தலும் பெரிசும் முதல் தரமாய் இருக்கு.பாராட்டுக்கள்.
//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//
உண்மைதான்.
பலாப்பழங்களை விட இந்த ஈச்சம்பழம் மிகவே பிடித்துப்போய் விட்டது..
இன்றிலிருந்து ரசிகனாகிவிட்டேன் உங்கள் படைப்புகளுக்கு... அருமை..
அருமையான கவிதைகள். ரசித்தேன். தரங்கம் இனி மேல் கவியரங்கமாகுமோ???
//வெட்டி ஒட்டிவிட்ட வெள்ளைப் பூவையே
பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்
சிவப்புச் செவ்வரத்தை..!//
ஆகா.. என்ன அருமையான வரியிது. எம் தமிழருக்காய் எழுதியது போல உள்ளது சுபாங்கன். வளர்ந்து வரும் ஒரு வலைப்பதிவனின் மனதில் பட்ட எண்ணம் இது. நேரம் கிடைத்தால் என் ஓடையிலும் ஒரு முறை நனைந்து பாருங்க.
mathisutha.blogspot.com
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :-)
உங்கள் கவிதைகள் மிக அருமை.. இரத்தினச் சுருக்கமாக, அழகாக கருத்தை வெளிப்படுத்துகிறது... வாழ்த்துக்கள்...
கொலைக் காற்றும் வாசித்தேன்... அருமை... தொடருக்காக் காத்திருக்கிறேன்..
Post a Comment