Wednesday, June 30, 2010

கொஞ்சம் ஆறுதலாக …


 

இஞ்சியை மென்று விழுங்கிய ஃபீலிங்கில் தொடர்ந்து கொஞ்சநாள் பதிவெழுதிவிட்டேன் போலிருக்கிறது. பதிவெல்லாம் ஒரு மாதிரி இருக்கிறது, ஏதாவது பிரச்சினையா என்று கேட்டே விட்டார் ஒரு பதிவர். அதற்காகத்தான் இன்று கொஞ்சம் ஆறுதலாக. அவ்வப்போதாவது மரணமொக்கைப் பதிவுகளும் எழுதவேண்டும். இல்லாவிட்டால் யாழில் இலக்கியவாதியாக ஆக்கப்பட்டுவிடும் அபாயம்வேறு இருக்கிறது.

 

FILE4998 இப்போதெல்லாம் மூன்றுநாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வந்தாலே வீட்டுக்குப் பயணப்பட்டுவிடுகிறேன். ஊரில் சந்திப்பதற்கு இதுவரைகாலமும் பதிவராக பாலவாசகன் மட்டுமே இருந்தநிலையில் இப்போது ஜெனாவும், Cool Boy கிருத்திகனும் இணைந்திருக்கிறார்கள். ஒருபுறம் Cool Boy தனது யதார்த்தமான கருத்துக்களால் கவர்கிறார் என்றால் மறுபுறம் பதிவர் ஜெனா எங்கள் ஆச்சரியத்தையும், பொறாமையையும் சேர்த்தே வாங்கிக்கொள்கிறார். முதலாவது சந்திப்பில் சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசளித்தார். மனிதர் வீட்டில் பெரிய லைப்ரரியே வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகளுக்குச் சாக்லெட் கொடுப்பது போலவாவது ஒருமுறை உள்ளே நுளைந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

 

அண்மைக்காலமாக அதிக நூல்கள் படிக்கக்கிடைக்கிறது. முக்கியமாக மூன்றைப்பற்றிக்  குறிப்பிட்டே ஆகவேண்டும். முதலாவது த. அகிலனின் மரணத்தின் வாசனை. எமது ஈழத்து மொழிவழக்கில் எங்கேயோ கண்ட, கேட்ட போரின் வடுக்களைப்பற்றிப் பேசிச்செல்லும்போது அந்த வாசனையை உண்மையிலேயே உணரமுடிகிறது. அகிலனைச் சந்திக்கும் வாய்ப்பை அனியாயமாகத் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக சந்தித்தே தீரவேண்டும்.

 

kolaiyuthirkaalam அடுத்தது சுஜாதாவின் கொலையுதிர்காலம். நீண்டகாலம் தேடியலைந்த புத்தகம். இப்போதுதான் கிடைத்தது. விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து மனிதர் கதகளியே ஆடியிருக்கிறார். வழமைபோலவே விபரிக்கும் காட்சிகள் அனைத்தும் மனதில் திரைபோல விரிய, எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. அதிலும் கதாநாயகி லீனா குளிக்கும் காட்சியில் அவரது வர்ணிப்பு

“மார்பகங்கள் இரண்டு வெண்புறாக்கள் போல, இரண்டு ஷம்பேன் கோப்பைகள் போல – மிகக் கொஞ்சம் ஊதா தொட்டுத் தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.

கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும்.

 

மூன்றாவது புத்தகம் என்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவி. இரண்டு பாகங்களைக்கொண்ட கொஞ்சம் பெரிய நாவல். அவர் கதைகளில் உறவுகளைச் சித்தரிக்கும் பாங்கை முன்னர் வாசித்த சில நாவல்களிலேயே உணர்ந்திருந்தாலும், இதில் கொஞ்சம் அதிகமாகவே உணர்வுகளோடு விளையாடியிருக்கிறார். அதிலும் கதாநாயகியின் பாத்திரம் மனதைவிட்டு அகல மறுக்கிறது. ஏறத்தாள முழுக்கதையின் பெரும்பாலான பகுதிகளை ஒரே மூச்சில் படித்துவிட்டுப் படுத்த நேரத்தில் பெரும்பாலும் ஊரில் பலர் எழுந்துவிட்டிருப்பார்கள். அதற்கடுத்தநாள் ஸீரோ டிகிரி படிப்பதற்காய்த் திறந்து சிறிது நேரத்தில் லேசாகத் தலை வலிக்கத்தொடங்கியது. அனேகமாக முதன்நாள் சரியாக நித்திரை இல்லாததுதான் காரணமாக இருக்கவேண்டும்.

 

ravana4325423-4 ராவணன் படத்தை அனேகமானோர் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டனர். அவற்றில் பெரும்பாலானவற்றை வாசிக்கமுதலேயே படத்தைப் பார்த்துவிட்டதாலோ, அல்லது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாத்தாலோ என்னவோ படத்தை ரசிக்கமுடிந்தது. ஆங்காங்கே உறுத்தல்கள் இருந்தாலும், படமாக்கப்பட்ட இடமும், கேமராவும், விக்ரமின் நடிப்பும் அபாரம். கேமராவுக்காகவே தியேட்டரைவிட்டு ஓடமுதல் இந்தியிலும் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறேன். படம் பார்த்த அடுத்த நாளே மழை தூறிக்கொண்டிருக்க மலையேறும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் பாதிப்பில் நன்றாகவே ரசிக்க முடிந்தும் ஒரே குறை, பக்கத்தில் ஐஸ்தான் இல்லை.

43 comments:

கன்கொன் || Kangon on June 30, 2010 at 7:07 PM said...

இஞ்சி மென்று தின்ற உணர்வு - :)))
பொதுவாக அனைவருக்குமே என்று நம்புகிறேன். ;)

விடுமுறை - ம்...
யாழ்ப்பாணத்தில் 'ஏதோ' பார்த்துக் கொண்டிருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் கிடைத்தன.

நூல்கள் - அடப்படுபாவிகளா....

// கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.

கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும். //

இந்தப் பதிவை வைத்து எதிர்காலத்தில் ஆப்படிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
மார்க்கமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். :P

ராவணன் - பார்க்கவில்லை....

அமர்ந்து, இளைப்பாறி, வாசித்தேன். :D

கன்கொன் || Kangon on June 30, 2010 at 7:07 PM said...

இஞ்சி மென்று தின்ற உணர்வு - :)))
பொதுவாக அனைவருக்குமே என்று நம்புகிறேன். ;)

விடுமுறை - ம்...
யாழ்ப்பாணத்தில் 'ஏதோ' பார்த்துக் கொண்டிருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் கிடைத்தன.

நூல்கள் - அடப்படுபாவிகளா....

// கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.

கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும். //

இந்தப் பதிவை வைத்து எதிர்காலத்தில் ஆப்படிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
மார்க்கமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். :P

ராவணன் - பார்க்கவில்லை....

அமர்ந்து, இளைப்பாறி, வாசித்தேன். :D

Ramesh on June 30, 2010 at 7:10 PM said...

///மகளுக்குச் சாக்லெட் கொடுப்பது போலவாவது ஒருமுறை உள்ளே நுளைந்துவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.///

அட இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கப்போறானுகளே... (ஐடியா நல்லாத்தான் இருக்கு போலோ பண்ணுவோமோ)

யோ வொய்ஸ் (யோகா) on June 30, 2010 at 8:01 PM said...

ஆறுதலாய் எழுதினாலும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

சுஜாதாவின் கொலையுதிர் காலம் என்றுமே கலக்கலான புத்தகம்.

என்ட மூரி வீரேந்திரநாத்தின் எழுத்தை சுசீலா கனகதுர்கா அருமையாக மொழி பெயர்த்திருப்பார். அவரது ஒரு நாவல் எனது ஆல்டைம் பேவரைட்

maruthamooran on June 30, 2010 at 8:09 PM said...

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆறுதலான இயல்பான பதிவு.

////அண்மைக்காலமாக அதிக நூல்கள் படிக்கக்கிடைக்கிறது. முக்கியமாக மூன்றைப்பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். முதலாவது த. அகிலனின் மரணத்தின் வாசனை. எமது ஈழத்து மொழிவழக்கில் எங்கேயோ கண்ட, கேட்ட போரின் வடுக்களைப்பற்றிப் பேசிச்செல்லும்போது அந்த வாசனையை உண்மையிலேயே உணரமுடிகிறது. அகிலனைச் சந்திக்கும் வாய்ப்பை அனியாயமாகத் தவறவிட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக சந்தித்தே தீரவேண்டும்.



அடுத்தது சுஜாதாவின் கொலையுதிர்காலம். நீண்டகாலம் தேடியலைந்த புத்தகம். இப்போதுதான் கிடைத்தது. விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து மனிதர் கதகளியே ஆடியிருக்கிறார். வழமைபோலவே விபரிக்கும் காட்சிகள் அனைத்தும் மனதில் திரைபோல விரிய, எதிர்பாராத திருப்பங்களுடன் கதை நகர்கிறது. அதிலும் கதாநாயகி லீனா குளிக்கும் காட்சியில் அவரது வர்ணிப்பு

“மார்பகங்கள் இரண்டு வெண்புறாக்கள் போல, இரண்டு ஷம்பேன் கோப்பைகள் போல – மிகக் கொஞ்சம் ஊதா தொட்டுத் தெரிய கணேஷ் எச்சிலை விழுங்கினான்”.

கூடவே வாசித்துக்கொண்டிருக்கும் நானும்.////


ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுபாங்கன் வாழ்க. அகிலனின் மரணத்தின் வாசனை மற்றும் கொலையுதிர் காலம் இரண்டு புத்தகத்தில் ஒன்றையேனும் மிகவிரைவில் படிக்க தருவீர்கள் என்று 200 வீதம் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால், புத்தகத்தை தங்கள் எப்போது எனக்கும் படிக்கத் தருவீர்கள் என்று அறிவிக்கவும்.

Bavan on June 30, 2010 at 8:23 PM said...

ஹாஹா.. மொக்கைப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்..:P

கொலையுதிர்காலம் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கும் வேண்டும்..:)))

ராவணா - ஐஸ் அழகாக இருக்கிறார்..:P

balavasakan on June 30, 2010 at 8:39 PM said...

எல்லாம் சரி கொலையுதிர் காலத்தை எனக்கும் ரொட்டேட் பண்ணிவிடுங்கோ.....

vasu balaji on June 30, 2010 at 9:18 PM said...

அடடா! புத்தகம் லவட்ட இப்படி ஒரு வழியிருக்கோ:)). உங்களுக்கும் எண்டமூரி பிடிக்குமோ.ம்ம். அதேனோ நம்ம மாதிரி சாதாரணர்களுக்கு ராவணன் பிடிச்சிதானிருக்கு, குறையிருந்தாலும்.

ARV Loshan on June 30, 2010 at 10:44 PM said...

ம்ம்ம்..புரிகிறது.

இது மரண மொக்கையா?
யோவ் யாராவது மொக்கைன்னா என்னான்னு வரைவிலக்கணம் கொடுங்கப்பா..

ஆகா,, என்னுடைய வாசிப்பு ரசனையுடன் ஒத்துப் போகிறது சுபாங்க்ஸ்..

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எண்டமூரியின் நூல் நான் வாசிக்கவில்லை.

படத்தின் பாதிப்பில் நன்றாகவே ரசிக்க முடிந்தும் ஒரே குறை, பக்கத்தில் ஐஸ்தான் இல்லை.//

புதுசா யாரையாவது யோசிங்க தம்பி.. அந்த டீ ஆறிவிட்டது ;)


கங்கோன் - விரைவில் ஒரு மரண மொக்கைப் பதிவு எதிர்பார்க்கிறேன் ;)

LOSHAN
http://arvloshan.com/

Subankan on June 30, 2010 at 10:47 PM said...

உங்க கால்குலேஷன் ரொம்பத் தப்பு, இது மரண மொக்கை என்று சொல்லியிருக்கேனா?

Bavan on June 30, 2010 at 10:52 PM said...

//யோவ் யாராவது மொக்கைன்னா என்னான்னு வரைவிலக்கணம் கொடுங்கப்பா..//

எந்தப்பதிவைப்பார்த்தால் கெக்க பிக்கே கெக்க பிக்கே என்று சிரிப்பு எழுந்து வயிற்றுக்குள்ளிருந்து சிரிப்பு அப்படியே வாய்வழியே வெடித்து கபாலத்தில் இருக்கும் முடியேல்லாம் பிய்த்துக்கொண்டு சிரிக்க வைக்கிறதோ அதுவே மொக்கை எனப்படும்.

ப்ரியமுடன் வசந்த் on July 1, 2010 at 1:21 AM said...

//அவ்வப்போதாவது மரணமொக்கைப் பதிவுகளும் எழுதவேண்டும். இல்லாவிட்டால் யாழில் இலக்கியவாதியாக ஆக்கப்பட்டுவிடும் அபாயம்வேறு இருக்கிறது.//

congrats..

:)

ஹேமா on July 1, 2010 at 3:10 AM said...

//இஞ்சியை மென்று விழுங்கிய ஃபீலிங்கில் தொடர்ந்து கொஞ்சநாள் பதிவெழுதிவிட்டேன் போலிருக்கிறது//

இல்லையே சுபா.இந்தப் பதிவும் சரி ஈழத்துமுற்றத்தில் பதிவும்கூட நல்லாத்தானே இருக்கு.

வந்தியத்தேவன் on July 1, 2010 at 3:56 AM said...

கொலையுதிர்காலம், லீனா என் கண்ணுக்குள் இப்பவும் நிற்கின்றார். (இந்த வரியை வைத்தே என்னை கும்ம ஒரு கூட்டமே நிற்கும்).

"நிறைய அழகிகளை கணேஷ் பார்த்திருக்கின்றான் எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் மூக்கில்,உதட்டோரத்தில், பற்களில், குரலில், உடலமைப்பில் பருமனில், வாசனையில் தலைமயிரில் எங்கையோ ஒரு சின்ன தப்பிருக்கும், இவளிடம் இல்லை" என்ற வரிகளில் பெண் தேடுகின்றேன் இன்னும் கிடைக்கவில்லை. லீனா போல் இல்லாவிட்டால் பிரிவோம் சந்திப்போம் மதுமிதா போலாவது பார்க்கின்றேன் சரிவரவில்லை.

படவரவல்குல் என்பதன் அர்த்தம் கண்டுபிடித்தீர்களா?

மற்ற இரண்டும் வாசிக்கவில்லை. மரணத்தின் வாசனை லண்டனில் எங்கே கிடைக்கும், இல்லையென்றால் எனக்கு போஸ்ட் செய்யவும்.

இது மொக்கையா? அப்படியென்றால் மொக்கைப் பதிவை எப்படி அழைப்பது.

Karthick Chidambaram on July 1, 2010 at 11:37 AM said...

கொலை உதிர் காலம் சென்னை தொலைகாட்சியில் தொடராக வந்த போது பார்த்தது.
அருமையான பதிவு. இதுக்கு பேரு மொக்கயாங்க ?

Jana on July 1, 2010 at 12:28 PM said...

சம்யுக்தாவுக்கு (என் மகள்) சாக்லேட் இன்னும் கொடுக்கத்தொடங்கவில்லை.
She is Just 8th month Baby

பதிவு நன்றாக இருக்கு..எழுத்துக்கள் மெருகேறிவருவது தெரிகின்றது...

ஆதிரை on July 1, 2010 at 3:01 PM said...

பகிர்வுக்கு நன்றி

Subankan on July 1, 2010 at 6:09 PM said...

@ கன்கொன் || Kangon

//விடுமுறை - ம்...
யாழ்ப்பாணத்தில் 'ஏதோ' பார்த்துக் கொண்டிருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் கிடைத்தன.//

புலனாய்வுப்பிரிவை மாற்றிவிடுங்கள். தவறான தகவல்

//நூல்கள் - அடப்படுபாவிகளா....//

அது நாங்க சொல்லவேண்டியது

//இந்தப் பதிவை வைத்து எதிர்காலத்தில் ஆப்படிக்கத் திட்டமிட்டுள்ளேன்.
மார்க்கமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். :P//

அடப்படுபாவிகளா....

//ராவணன் - பார்க்கவில்லை....//

மற்றுமொரு ஐந்தாண்டுகாலத் திட்டம்?

//அமர்ந்து, இளைப்பாறி, வாசித்தேன். :D//

நன்றி

Subankan on July 1, 2010 at 6:10 PM said...

@ றமேஸ்-Ramesh said...

//அட இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கப்போறானுகளே... (ஐடியா நல்லாத்தான் இருக்கு போலோ பண்ணுவோமோ)
//

கவனமாப் பாத்துப் பண்ணுங்க

Subankan on July 1, 2010 at 6:12 PM said...

@ யோ வொய்ஸ் (யோகா)

//ஆறுதலாய் எழுதினாலும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.//

நன்றி

//சுஜாதாவின் கொலையுதிர் காலம் என்றுமே கலக்கலான புத்தகம்.//

அதே

//என்ட மூரி வீரேந்திரநாத்தின் எழுத்தை சுசீலா கனகதுர்கா அருமையாக மொழி பெயர்த்திருப்பார். அவரது ஒரு நாவல் எனது ஆல்டைம் பேவரைட்
//

ஆமாம், மொழிபெயர்ப்பு என்பதை விட கதையை உணர்ந்து, தமிழில் எழுதியிருப்பார். அவ்வளவு நேர்த்தி.

Subankan on July 1, 2010 at 6:13 PM said...

@மருதமூரான்.
//
ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுபாங்கன் வாழ்க. அகிலனின் மரணத்தின் வாசனை மற்றும் கொலையுதிர் காலம் இரண்டு புத்தகத்தில் ஒன்றையேனும் மிகவிரைவில் படிக்க தருவீர்கள் என்று 200 வீதம் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால், புத்தகத்தை தங்கள் எப்போது எனக்கும் படிக்கத் தருவீர்கள் என்று அறிவிக்கவும்//

நிச்சயமாகத் தருகிறேன்.

Subankan on July 1, 2010 at 6:14 PM said...

@ Bavan .
//
கொலையுதிர்காலம் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கும் வேண்டும்..:)))//

ஓகே

//ராவணா - ஐஸ் அழகாக இருக்கிறார்..:P
//

தகவலுக்கு நன்றி

Subankan on July 1, 2010 at 6:15 PM said...

@ Balavasakan
//எல்லாம் சரி கொலையுதிர் காலத்தை எனக்கும் ரொட்டேட் பண்ணிவிடுங்கோ....//

போய் வரிசையில் நிற்கவும்

Subankan on July 1, 2010 at 6:16 PM said...

@ வானம்பாடிகள் .
//அடடா! புத்தகம் லவட்ட இப்படி ஒரு வழியிருக்கோ:)). உங்களுக்கும் எண்டமூரி பிடிக்குமோ.ம்ம். அதேனோ நம்ம மாதிரி சாதாரணர்களுக்கு ராவணன் பிடிச்சிதானிருக்கு, குறையிருந்தாலும்//

ஆகா, உங்களுக்குமா?

Subankan on July 1, 2010 at 6:18 PM said...

@ LOSHAN said...

//ஆகா,, என்னுடைய வாசிப்பு ரசனையுடன் ஒத்துப் போகிறது சுபாங்க்ஸ்..//

ஆகா :)


//புதுசா யாரையாவது யோசிங்க தம்பி.. அந்த டீ ஆறிவிட்டது ;)//

சூடாக்கவேண்டியதுதான்.


//கங்கோன் - விரைவில் ஒரு மரண மொக்கைப் பதிவு எதிர்பார்க்கிறேன் ;)//

ம்க்கும், போட்டுட்டா மட்டும் :p

Subankan on July 1, 2010 at 6:19 PM said...

@ ப்ரியமுடன்...வசந்த் said...
//
congrats..

:)//

இது வேறயா? நன்றி :)

Subankan on July 1, 2010 at 6:20 PM said...

@ ஹேமா
//
இல்லையே சுபா.இந்தப் பதிவும் சரி ஈழத்துமுற்றத்தில் பதிவும்கூட நல்லாத்தானே இருக்கு//

நன்றி

Subankan on July 1, 2010 at 6:25 PM said...

@ வந்தியத்தேவன் said...
//கொலையுதிர்காலம், லீனா என் கண்ணுக்குள் இப்பவும் நிற்கின்றார். (இந்த வரியை வைத்தே என்னை கும்ம ஒரு கூட்டமே நிற்கும்).

"நிறைய அழகிகளை கணேஷ் பார்த்திருக்கின்றான் எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும் மூக்கில்,உதட்டோரத்தில், பற்களில், குரலில், உடலமைப்பில் பருமனில், வாசனையில் தலைமயிரில் எங்கையோ ஒரு சின்ன தப்பிருக்கும், இவளிடம் இல்லை" என்ற வரிகளில் பெண் தேடுகின்றேன் இன்னும் கிடைக்கவில்லை. லீனா போல் இல்லாவிட்டால் பிரிவோம் சந்திப்போம் மதுமிதா போலாவது பார்க்கின்றேன் சரிவரவில்லை//

அதுதான் லேட்டாகுதோ?

//
மற்ற இரண்டும் வாசிக்கவில்லை. மரணத்தின் வாசனை லண்டனில் எங்கே கிடைக்கும், இல்லையென்றால் எனக்கு போஸ்ட் செய்யவும்.//

தெரியவில்லை. நேரில் வந்தால் பெற்றுக்கொள்ளலாம்

//இது மொக்கையா? அப்படியென்றால் மொக்கைப் பதிவை எப்படி அழைப்பது//

லேபிளில்கூட மொக்கையென்று நான் போடவில்லையே

Subankan on July 1, 2010 at 6:26 PM said...

// Karthick Chidambaram said...
கொலை உதிர் காலம் சென்னை தொலைகாட்சியில் தொடராக வந்த போது பார்த்தது.//

எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை

//அருமையான பதிவு.//

நன்றி

// இதுக்கு பேரு மொக்கயாங்க ?
//

இல்லேங்க

Subankan on July 1, 2010 at 6:27 PM said...

@ Jana
//சம்யுக்தாவுக்கு (என் மகள்) சாக்லேட் இன்னும் கொடுக்கத்தொடங்கவில்லை.
She is Just 8th month Baby//

ஆகா, அப்படியானால் முதலாவது பிறந்தநாளின்போது பார்த்துக்கொள்ளலாம்.

//பதிவு நன்றாக இருக்கு..எழுத்துக்கள் மெருகேறிவருவது தெரிகின்றது..//

மிக்க நன்றி

Subankan on July 1, 2010 at 6:28 PM said...

@ ஆதிரை
//பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கன்கொன் || Kangon on July 1, 2010 at 6:31 PM said...

// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி //

ஆதிரை அண்ணாவிற்கு மட்டும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சொல்லிவிட்டு எனக்கு வெறுமனே 'நன்றி' என்று சொல்லியிருப்பது போலிருக்கிறது. ;)

நான் உங்களைப் புறக்கணிக்கப் போகிறேன்.
பொதுவில் மன்னிப்புக் கேட்கவும். :P

Subankan on July 1, 2010 at 6:34 PM said...

@ கன்கொன் || Kangon

//நான் உங்களைப் புறக்கணிக்கப் போகிறேன்.
//

Go ahead ...

ஆதிரை on July 1, 2010 at 6:47 PM said...

ஆதிரைதான் மெல்லக் கிடைத்த அவலா?

Bavan on July 1, 2010 at 6:47 PM said...

////கங்கோன் - விரைவில் ஒரு மரண மொக்கைப் பதிவு எதிர்பார்க்கிறேன் ;)//

ம்க்கும், போட்டுட்டா மட்டும் :p ////

ROFL...

கன்கொன் || Kangon on July 1, 2010 at 6:50 PM said...

//
ஆதிரைதான் மெல்லக் கிடைத்த அவலா? //

இல்லை...
அவர் வெறோரு உணவுக்குத்தான் பிரபலம்.
பதிவு வேறு போட்டிருந்தாரே?
பு**?

ஆதிரை on July 1, 2010 at 6:55 PM said...

நட்சத்திரக்குறிகள் எப்போதும் உள்ள பொருள் தருவதில்லை...

சயந்தன் said...

வந்தியத்தேவன் on July 1, 2010 3:56 AM said... //

மற்ற இரண்டும் வாசிக்கவில்லை. மரணத்தின் வாசனை லண்டனில் எங்கே கிடைக்கும், இல்லையென்றால் எனக்கு போஸ்ட் செய்யவும். //


ஒரு எழுத்தாளனுக்கு செய்ய வேண்டிய உதவி. அவனது புத்தகத்தைப் படித்து ஊக்கப்படுத்துவது தான். இணையத்தில் கிடைக்கும் அகிலனின் நூல் பற்றிய விபரம்.

http://vadaly.com/shop/?page_id=231&category=27&product_id=42

இந்த முகவரியில் இலகுவாக வாங்கலாம்.

கன்கொன் || Kangon on July 1, 2010 at 6:59 PM said...

// நட்சத்திரக்குறிகள் எப்போதும் உள்ள பொருள் தருவதில்லை... //

அவர் அவர் மனதின் நீளத்தைப் பொறுத்து அவரவருக்கு அர்த்தப்படும்.
உங்களுக்கு எப்படி என்று யோசித்துக் கொள்ளுங்கள். :P

Karthik on July 1, 2010 at 8:21 PM said...

நல்ல பதிவு தல. அழகான ராட்சஸி அருகில் இல்லையா? :) ஏதாவது டெக் பதிவு எழுதுங்க. எதிர்பார்க்கிறேன். :)

SShathiesh-சதீஷ். on July 6, 2010 at 10:05 PM said...

//இப்போதெல்லாம் மூன்றுநாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை வந்தாலே வீட்டுக்குப் பயணப்பட்டுவிடுகிறேன். ஊரில் சந்திப்பதற்கு இதுவரைகாலமும் பதிவராக பாலவாசகன் மட்டுமே இருந்தநிலையில் இப்போது ஜெனாவும், Cool Boy கிருத்திகனும் இணைந்திருக்கிறார்கள்.//

யோவ் பொய் சொல்லப்படாது....அவாவை பார்க்கப்போயட்டு இப்பிடியா சொல்றது...பிச்சு புடுவன் பிச்சு

பாசமுள்ள துருவி said...

ராவணன் பற்றிய பிழையான நோக்கே அதன் தோல்விக்குக் காரணம். மணியின் திரைப் படங்களின் பாணியை அறியாதவர்களின் விமர்சனத்தை மனதில் நிறுத்திக் கொள்ளாமல் படத்தை ஒரு முறையாவது பாருங்கள், நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கும்.

பதிவு சூப்பருங்கண்ணோ.....வ்

ம.தி.சுதா on October 14, 2010 at 6:09 PM said...

சுபா உங்க ஆரம்பக் கலக்கல் ஒனறு பார்க்கக் கிடைத்துள்ளது... இப்பவும் அப்படியே தான் இருக்கிறீர்கள்...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy