அவளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஐந்தாவது முறையாகவும் தானாகவே துண்டிக்கப்பட்டிருந்தது. மனத்திற்கும், புத்திக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக்கொண்டு என்னால் தொலைபேசியை வெறிக்க மட்டுமே முடிகிறது. நல்ல ஒரு நண்பியாய், ஒரு தேவதையாய், ராட்ஷசியாய் அறிமுகமாகிவிட்டிருந்த அவளது ஆறாவது அழைப்பிற்காய் சிணுங்கத்தொடங்குகிறது தொலைபேசி.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
“ஹலோ, இஸ் நிதின் ஓவர் தேர்?”
“யெஸ்”
“ஐம் ம்ருதுளா ப்ரம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மன்ட்”
அவள் குரலைக் கேட்ட அந்த முதற்கணம் இன்னும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. அலுவலகத்தில் சேர்ந்த முதல்நாளின் முதல் அழைப்பு. நல்ல சகுனம். வந்த தகவலால் அல்ல, கேட்ட அவள் குரலால்!
அவளுடன் முதல் சந்திப்பு, அலுவலகத்தில்தான். அவளைக் குரலைக்கொண்டு அவளை வடித்துவைத்திருந்த எனது கற்பனை என்னை ஏமாற்றியிருக்கவில்லை. அன்று அவள் அணிந்திருந்த வெள்ளை டீ – ஷர்ட்டும், அவளிடமிருந்து வந்த மெல்லிய பர்ஃப்யூம் வாசனையும், இன்ன பிறவும் தேவதைக்கான வரைவிலக்கணங்களைப் பூர்த்திசெய்துகொண்டிருக்க, மிருதுவாகக் கைகுலுக்கிக்கொண்ட அவளது ஸ்பரிசத்தில் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன், ம்ருதுளா!
தேவதை நெருங்கிய நண்பியாகிவிட்டாள். அலுவலக ஓய்வு நேரங்கள் மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே அவளுடன்தான் கழிகின்றன. அதிகமாகப் பேசுகிறாள். பேசுவதா? நானா? கை ஒதுக்கும் கன்னத்து முடியையும், உதட்டோரச் சிரிப்பையும், தலையோடே ஆடும் காது வளையத்தையும் ரசிக்கவே நேரம் சரியாகிவிடுகிறதே எனக்கு!
திமிர் பிடித்தவள்! இதுதான் அவளைப்பற்றிய அதிகம்பேரின் விமர்சனம். எமக்குள்ளான நட்பு உடைத்துவிட்ட தடைகளால் நானும் அதை உணரத்தொடங்கியிருந்தேன். அதிகம் பேசியவள், அதிகமாக ஏசத்தொடங்கியிருந்தாள். சின்னச்சின்னத் தவறுகளுக்கும் சீறிவிழுந்தாள். அவளுடனான சந்திப்புக்கள் பெரும்பாலும் சண்டையில்தான் முடிகின்றன. ஏற்படுத்திக்கொள்ளும் சமாதானங்களும் நீடிக்க மறுக்கின்றன. என் தேவதையின் ராட்ஷசி அவதாரம்!
அன்றும் அப்படித்தான். ஒன்றுமே இல்லாத விடயத்துக்காய் அவளுடன் ஒருமணிநேரச் சண்டை. வலிந்து ஏற்படுத்திய யுத்தநிறுத்த உடன்படிக்கையின்பின் சொல்லிவிட்டுப் போனாள்
“ஏதடா ஒன்றுமில்லாத விடயம்? உன் சின்னத் தவறுகளையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ எனக்கு நண்பனுக்கும் மேலேயடா!”
வாயடைத்து நின்றுவிட்டேன். விழித்துக்கொண்டுவிட்ட என் காதலை போய் சொல்லடா என்றது மனம். இந்தத் கோபக்காரியிடம் மாட்டிக்கொள்ளப்போகிறாயா என்றது புத்தி. இந்தக் குழப்பத்திலேயே கடந்துவிட்ட ஒருவாரத்தின்பின்தான் அவளின் இந்தத் தொடர் அழைப்பு. ஒருவழியாக குழப்பத்திற்கு முடிவு கண்டுவிட்டவனாய் ஆறாவது அழைப்பை எடுத்துக் காதில் வைக்கிறேன்.
ஆம், காதல் மனது சம்பந்தப்பட விடயம்!
30 comments:
கதை/அனுபவம் அருமை.....
மொழிநடை நன்றாக இருக்கிறது...
அண்மைக்காலமாக இயல்பான மொழிநடையில் வாசித்த இரண்டாவது காதல் சிறுகதை இது...
அருமை சுபா அண்ணா...
சொல்ல மறந்துவிட்டேன்,
பெயரெல்லாம் மாற்றி கலக்குகிறீர்கள்...
அழகான பெயர், தரங்கம்... ;)
அந்த மூன்றாவது பந்தி ... மிகஅருமை..மொத்தத்தில் சிறுகதையுந்தான்.. நல்ல ஒரு செய்தி இருக்கிறது..இறுதியில்...
நடை, உடை, பாவனை எல்லாமே கதையில் வரும் பெண்ணுக்கு அழகாக இருப்பதுபோல் உங்கள் கதையின் (உங்கள் அனுபவக் கதையின்) மொழிநடை அழகாக இருக்கின்றது. தெகடர்ந்தும் இது போன்ற கதைகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
முதலில் வாழ்த்துக்கள்... காட்டுச்சிறுக்கிற கைக்குக்கிடைக்க..:P
அனுபவம் அருமை...
அடுத்த அனுபவம் நிகழ்ந்ததும் எழுதுவீர்களென எதிர்பார்க்கிறோம்..:P
உங்கள் எண்ண அலைகளின் அரங்கத்தை அழகாக தரங்கத்தில் ஏற்றியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..:)
அண்ணா கதை அருமை! அனுபவித்து எழுதி இருக்குமாப் போல இருக்கு!
எனக்கு பிடித்து இருக்கிறது! இந்த வாரத்தில் இரண்டாவது சூப்பர் ஹிட் சிறுகதை!
அசத்தல் சுபாங்கன்:)
ஆம், காதல் மனது சம்பந்தப்பட விடயம்!
எழுத்துநடை நன்றாக உள்ளது பாராட்டுக்கள்...
////“ஹலோ, இஸ் நிதின் ஓவர் தேர்?”
“யெஸ்”
“ஐம் ம்ருதுளா ப்ரம் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மன்ட்”
அவள் குரலைக் கேட்ட அந்த முதற்கணம் இன்னும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. அலுவலகத்தில் சேர்ந்த முதல்நாளின் முதல் அழைப்பு. நல்ல சகுனம். வந்த தகவலால் அல்ல, கேட்ட அவள் குரலால்!
அவளுடன் முதல் சந்திப்பு, அலுவலகத்தில்தான். அவளைக் குரலைக்கொண்டு அவளை வடித்துவைத்திருந்த எனது கற்பனை என்னை ஏமாற்றியிருக்கவில்லை. அன்று அவள் அணிந்திருந்த வெள்ளை டீ – ஷர்ட்டும், அவளிடமிருந்து வந்த மெல்லிய பர்ஃப்யூம் வாசனையும், இன்ன பிறவும் தேவதைக்கான வரைவிலக்கணங்களைப் பூர்த்திசெய்துகொண்டிருக்க, மிருதுவாகக் கைகுலுக்கிக்கொண்ட அவளது ஸ்பரிசத்தில் ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன், ம்ருதுளா! ////
மறைக்காமல் சொல்லிவிடுகிறேன். சுஜாதாவின் சிறுகதைகளில் வருகிற பெயர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான வர்ணனை. அதுவும், வெள்ளை ரீ சேர்ட் சுஜாதாவின் பல பாத்திரங்களில் வந்தது. அதிகம் சுஜாதாவின் எழுத்துக்களினால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது.
ஆனாலும், அதனைத் தாண்டி தங்களுடைய ஆசையும், வயதும் இந்தக் கதையில் வெளிப்படுகிறது. காதல் எல்லோருக்கும் சரியான தருணங்களில் வசப்படாமல் போனாலும், மனதுக்குள் ஆயிரம் காதல் கதைகளுடனேயே பயணிக்கிறார்கள். அதற்கு சுபாங்கனும் நல்ல உதாரணம்.
இலகு நடையில் மிகவும் மெல்லிய உணர்வுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த ‘காட்டுச்சிறுக்கி’. எனக்கென்னவோ இந்தக் கதைக்கு ‘காதல்ச்சிறுக்கி’ என்று தலைப்பிடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
கதை நல்லாயிருக்கு சுபாங்கன்..
தரங்கம் என்னும் பெயரை பார்த்து வேறு எங்கோ வந்துட்டேனோ என யோசித்தேன்
நல்லா இருக்கு சுபாங்கன். பெயரும் அருமை. தவறி வந்துட்டேனோ எண்டு பார்த்தன். அனுபவம் ??? மது வரிசையிலா???
நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்
கிளாஸ்...........மிக நன்று...........
//வாயடைத்து நின்றுவிட்டேன். விழித்துக்கொண்டுவிட்ட என் காதலை போய் சொல்லடா என்றது மனம். இந்தத் கோபக்காரியிடம் மாட்டிக்கொள்ளப்போகிறாயா என்றது புத்தி.
-------------------- மிக பிடித்த இடம்.....
(Raja theater Singam yapakam thaane)
@ கன்கொன்
அனுபவம் என்று நான் லேபிள் போடவே இல்லையே, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ பாலவாசகன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ சந்ரு
கதை மட்டும்தான். அனுபவம் எல்லாம் இல்லை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ பவன்
கிடைச்சாப்பிறகு பாத்துக்கலாம். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ அனுதினன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ வானம்பாடிகள்
நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்
@ ஜெனா
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ மருதமூரான்
இப்போதுதானே சிறுகதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். போகப்போக அவரின் பாதிப்புகள் குறையும் என நம்புகிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ யோ வொய்ஸ் (யோகா)
இந்தப்பெயர் பிடித்துவிட்டதால் மாற்றிவிட்டேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ றமேஸ்
அதே இடம்தான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
@ தனா
நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. உங்கள் பிளாக்கைப்பார்த்தேன். வணக்கத்துடனேயே நிற்கிறதே, நேரம் கிடைத்தால் எழுதுங்களேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
மருதமூரானை கொஞ்சம் வழிமொழிகின்றேன்.
காரணம் சுபாங்கனின் வர்ணனையில் அந்தப் பெண்ணை சுஜாதாபோல் அல்லாமல் அடக்கியே எழுதியிருக்கின்றார். பாராட்டுவதா கண்டிப்பதா என்பது புரியவில்ல்லை (அறியாத வயசு)
சிறுகதை எழுதுகின்றவர்கள் எல்லோரும் ஏன் காதலைத் தான் அதிகம் கருவாக எடுக்க என்ன காரணம்.
உங்கள் அனுபவம் நன்றாக இருக்கின்றது.
சுபா சில வரிகள் கண் முன் காட்சிகளாக வருகிறது வாழ்த்துகள் மச்சி.. ம்ருதுளா நிஜமா யாரு?
வலைத்தள பெயரில் வித்யாசம் இருக்கு ஐந்தறைப்பெட்டி என்னாச்சு?
தரமான குறுங்கதை.
பாராட்டுக்கள்... அப்புறம் ஏன் அந்த தலைப்பு?
அருமையிலும் அருமை சுபங்கன்,
இதை உமது கற்பனை வளம் என்பதா அல்லது சொந்த அனுபவம் என்பதா?
எழுத்து நடையும், வர்ணனைகளும் வில்லங்கப்படுத்தாமலே நகர்கின்றன.
வாசிக்கும்போது கதை இந்தியாவில் ஏதோவொரு அலுவலகத்தில் நடக்கிறது போன்ற உணர்வை நீக்க முடியவில்லை.
காதல் மிகு உணர்வுகள் எழுத்துக்களில் சுகந்தம்.
@வந்தி,
நாவில் அடுத்தது ஒரு டெடர் கதை இறங்குகிறது. :)
//“ஏதடா ஒன்றுமில்லாத விடயம்? உன் சின்னத் தவறுகளையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ எனக்கு நண்பனுக்கும் மேலேயடா!”//
இந்த வரி அருமை.
அருமையான கதை - ஏதோ தேர்ந்த எழுத்தாளரின் கதை மாதிரி உள்ளது. நல்லா மொழி நடை. வாழ்த்துக்கள் சுபாங்கன்!
வாசிக்கும் போது பல இடங்களில் இடிக்கிறதே. வாழ்த்துக்கள் அண்ணே இது சொந்த கதை தானே..
அருமை.. கதையின் தலைப்பு மிக அருமை
அழகிய மொழிநடையில் "காட்டுச்சிறுக்கி".
இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சா? ஸப்பா. வாழ்த்துக்கள் தல. "கதை" நல்லாருந்துச்சு. :)
@ வந்தியத்தேவன்
எதை வர்ணிக்கச்சொல்லுறீங்கள் எண்டு தெரியுது மாம்ஸ், ஹீ ஹீ
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ வசந்த்
நல்ல பெயர் தேடிட்டிருந்தேன், கிடைத்ததும் மாற்றிவிட்டேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ கருணாகரசு
தலைப்புக்குக் காரணம் பதிவர் மதுவின் பதிவும், அந்தப் பாடலும்தான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ அஜித்
என்னாது சொந்த அனுபவமா? நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ மது
மருதமூரான் சொன்ன அதே பாதிப்புத்தான். அதிலிருந்து விலகிக்கொள்ள முயல்கிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ கார்த்திக் சிதம்பரம்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ சதீஷ்
எங்கயப்பா இடிக்குது? நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ உழவன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ மாதேவி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ கார்த்திக்
இங்கேயும் கிரிக்கெட்டா? ஸப்பா
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
அருமை...அருமை...
அழகிய கதை..
ஐந்தறைப் பெட்டி தரங்கமாக மாறியதும், மிருதுளா-நிதினுக்கும் இடையில் காதல் பற்றியதுக்கும் ஏதாவது லிங்க்?
வந்தி,மது,மருதமூரான் நான் நினைத்த ஏனைய விஷயங்களை சொல்லிவிட்டார்கள்.
அதுசரி காட்டு சிறுக்கிக்கும் அலுவலக அரக்கிக்கும் இடையில் என்ன தொடர்பு?
@ இரவீ
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
@ லோஷன்
//ஐந்தறைப் பெட்டி தரங்கமாக மாறியதும், மிருதுளா-நிதினுக்கும் இடையில் காதல் பற்றியதுக்கும் ஏதாவது லிங்க்?//
கோபியைக்கேட்டாலாவது ஏதாவது விக்கிப்பீடியா லிங்க் கிடைக்கலாம்
//அதுசரி காட்டு சிறுக்கிக்கும் அலுவலக அரக்கிக்கும் இடையில் என்ன தொடர்பு?
//
தொடர்பு படுத்திக்கவேண்டியதுதான் :)
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)
Post a Comment